கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 12, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

சிறுபிழையால் நேர்ந்த பெருந் தொல்லை

 

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (Much Ado About Nothing) கதை உறுப்பினர் ஆடவர் 1. லியோனதோ: மெள்ளினாத் தலைவன் – ஹீரோ தந்தை – பீயாத் ரிஸ் மாமன். 2. கிளாடியோ: பிளாரென்ஸ் நகரத்துப் பெருமகன் – ஹீரோவின் காதலன். 3. பெனிடிக்: பாதுவா நகரத்துப் பெருமகன் பீயாத்ரிஸை வெறுத்தெதிர்த்துப் பின் காதலித்தவன். 4. தான் பெத்ரோ : ஆரகன் இளவரசன் – கிளாடியோ, பெனிடிக் ஆகிய


மாப்பிள்ளை பெஞ்ச்

 

 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. பனங்காட்டுப்புரம் என்கிற ஒரு குக்கிராமம். மதிய ஆராதனைக்கு 12 மணி க் கு , முதல் மணி அடித்தது. தெருத்திண்ணையிலிருந்த ஒரு பாட்டி, “அன்னா, கோயிலுக்கு மணி அடிச்சிட்டாகளே, சீக்கிரம் குளிச்சிச் சாப்பிட்டுப் புறப்படுங்க” என்று விரட்டும் சத்தம் வீதியில் கேட்டது. பன்னிரண்டரை மணிக்கு இரண்டாம் மணி அடித்தது. உடனே ஆலய ஒலிப்பெருக்கியின் சத்தம் ஊர் முழுவதும் கேட்டது. “சபை மக்களுக்கு ஓர் அன்பான அறிவிப்பு. இன்று நமது ஆலயத்திற்கு வெளிநாட்டுப் பிரசங்கியார்


நஷ்டம்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜனவரி 1, 1993: அப்பா! இந்த சுமித்ராவின் முகம்தான் எவ்வளவு வசீகரம் நிறைந்தது! அழகும், புத்திசாலித்தனமும் ஒருங்கே அமைந்ததனால் வந்த வசீகரமது. நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவளுடைய சுபாவமும் இனிமையானது. எல்லோரிடமும் சகஜமாகப் பழகுகிறாள். வேலையில் கெட்டிக்காரி. எத்தனை சீக்கிரம் முடிவெடுக்கிறாள்! இவ்வளவு தெளிவாக சிந்தித்து. தைரியமாக செயல்படும் பெண்ணை நான் இதுவரை கண்டதில்லை. இந்த சிறுவயதிலேயே அஸிஸ்டெண்ட் மானேஜர்


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 சாயங்காலம் மீரா வந்ததும், ‘நர்ஸிங்க் ஹோமில்’தான் பட்ட கஷ்டத்தை சொன்னாள் ராதா. மாமியார் சொன்னதைக் கேட்ட மீரா மிகவும் வருததப் பட்டாள். ராகவன் தவறாமல் அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரெண்டு வேளையும் BP மாத்திரை களையும்,சக்கரை ‘லெவல்’ குறைய மாத்திரைகளையும் கொடுத்து வந்தார். “நாங்க இத்தனை வருஷமா ரெண்டு வேளையும் ‘காபி’லே சக்கரைப் போட்டு குடிச்சுண்டு வந்தோம்.ரெண்டு வேளையும் சாம்பார் சாதமும்,ரசம் சாதமும் தயிர் சாதமும் சாப்பிட்டுண்டு வந்தோம்.இந்த கோதுமை


கில்லாடி திருடன்கள்

 

 டேய் ராகவ் பாத்து குதி டா வாட்ச்மென் பாக்க போறேன்,சரிடா சுதீப்,நா என்ன வச்சு கிட்டா வச்சகம் பண்ணுறேன்,கடவுள் எனக்கு 6 அடி தான் உயரம் குடுத்து இருக்காரு,உன்ன மாரி 7 அடியா உயரம் குடுத்து இருந்தா சீக்கிரம் குதிச்சு இருப்பேன் என்றான்.உடனே சுதீப் இந்த பேச்சுக்கு ஒரு குறையும் இல்ல வேமா குதி ராகவ் என்றான்.இருவரும் குதித்து வீட்டிற்குள் சென்றனர். உடனே ராகவ், என்ன டா மச்சான் வீட்டுல ஒன்னும் இல்ல,பணம்,நகை எதையும் காணாம் நம்ம


தமிழ்த் தாத்தா

 

 யார் வீட்டிலாவது பழைய நகையோ, பாத்திரமோ இருந்தால் அதை லேசில் அழிக்க மனசு வராது. “எங்கள் தாத்தாவுக்குத் தாத்தா காலம் முதல் இது எங்கள் வீட்டில் இருக்கிறது; ஆகிவந்தது” என்று பெருமையாகச் சொல் லிக்கொள்வார்கள். இப்படியே, “இந்த நிலம் நூறு வருஷத்துக்கு மேலாக எங்கள் குடும்பத்தில் இருக்கிறது” என்று சொல்லுவார் கள். நூறு வருஷம் கிடக்கட்டும். இருநூறு வருஷம் , முந்நூறு வருஷம் ,நானூறு வருஷமாக இருந்து வரும் அருமையான சொத்து நமக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 “அஞ்சு மணிக்கு ஏர் இண்டியா விமானம் வருதாம். கலைஞரை வரவேற்க ‘நரிடா’ போகணுமே! எல்லாரும் புறப்படுங்க” என்று இரண்டு மணிக்கே அவசரப்படுத்தினார் விழாவேந்தன். “கோபாலகிருஷ்ணனும், அரசு உயர் அதிகாரிகளும், சக்ரவர்த்தியின் அந்தரங்கச் செயலர் யோஷினாரியும் இப்பவே புறப்பட்டுப் போறாங்க. சேர்ந்தாப்ல அம்பது கார் போகப் போகுதாம்” என்றார் நன்னன். “நாமகிரிப்பேட்டை?” “அவங்களுக்கு ஸ்பெஷலா டொயாட்டா வேன் போகுது!” “டோக்கியோவே வெறிச்சினு ஆயிட்ட மாதிரி இருக்கே! அவ்வளவு பேருமா ஏர்போர்ட் போறாங்க?”


நிறை – குறை குடங்கள்

 

 கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. காரம் சாரம் குறையாமல் அலமேலு முகம் சிவந்து ‘ புசு புசு ‘ வென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும், அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. எழுந்து போய் கதவைத் திறந்தவளுக்குச் சின்ன அதிர்ச்சி , திடுக் !!. “வா… வா… ‘’ கடுகடு குறையாமல் அதிக மலர்ச்சி இல்லாமல் உள்ளே நுழைந்தவளை ஒரு மாதிரியாக வரவேற்றாள். அதே நொடி… “பேரப்பையன் தூங்கிட்டானா..?” என்று கேட்டு மகள் தோள் மீது


கிளிஞ்சல்கள்

 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளுக்கு மணம் ஆகவில்லை. அவளை அடுத்து இந்தக் கேள்விக் குறி எழுகிறது. வாக்கியத்தின் முடிவில் அமைவது இது. அவளோடு பேசுகிறவர்கள் இதைத் தவறாமல் பயன்படுத்துகின்றனர். எப்பொழுது என்பது அவளைப் பற்றிய வினா வயதானவர்கள் அவர்களைப் பற்றி விசாரிக்கும் போது எழுவது “எப்படியிருக்கிறீர்கள்? உடம்புக்கு ஒன்றும் இல்லையே?” என்பது. இந்த வைத்தியர்களுக்கு அவர்கள் வழக்கமான பதில் சொல்ல வேண்டி நேருகிறது. சர்க்கரை இருநூற்று ஐம்பது


நேர்மை

 

 மணியாச்சி ரயில்வே ஸ்டேஷன். காலை ஆறரை மணிக்கு பொலபொலவென நன்கு விடிந்து ஸ்டேஷன் மரப் பறவைகள் ஒருசேர கிறீச்சிட்டன. ரயிலில் திருநெல்வேலி சென்று கொண்டிருந்த நானும் என் மனைவி சரஸ்வதியும் மெதுவாக அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்துகொண்டோம். சரஸ்வதி பாத்ரூம் போய் பல்லைத் தேய்த்துவிட்டு வந்து “என்னங்க, எனக்கு காபி சூடா வேணுங்க…” என்றாள். நான் வெளியே எட்டிப்பார்த்து, ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காபி விற்றுக் கொண்டிருந்த ஒரு முதியவரிடம் இரண்டு காபிகள் சொன்னேன். அவர் உடனே அவசர