கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 11, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஸிம்பலின்

 

 முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A Midsummer Night’s Dream), சிம்பலின் (Cymbeline), கார்காலக் கதை (The Winter’s Tale), ஒதெல்லோ (Othello) ஆகிய நான்கு கதைகளும் வெளிவருகின்றன. இப்பதிப்பில், சிறுவர்கட்குக் கதைகள் நன்றாய் மனத்திற் பதியும் பொருட்டுக் கதை உறுப்பினர்களையும்


முன்கோபி ராஜா

 

 வெங்காயபுரம் ராஜாவுக்கு எப்போதுமே முன் கோபம் அதிகம். அதனாலே அவரை எல்லோருமே ‘முன் கோபி ராஜா’, ‘முன்கோபி ராஜா’ என்றே அழைப்பார்கள். அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எவருக்குமே தெரியவில்லை. ஆகை யால், நாமும் அவரை முன் கோபி ராஜா’ என்றே அழைப்போமா? சரி. முன்கோபம் மிக அதிகமாக இருந்தாலும், அவ ருக்கு மூளை மிகக் கொஞ்சமாகவே இருந்தது. அவருக்கு ஒரு மந்திரி இருந்தார். அவர் பெயர் அறிவொளி. பெயருக்கு ஏற்றபடி நல்ல அறிவாளி யாக


வசந்தங்கள் வரும் நேரம்

 

 பொன் அந்தி மாலையும் தென்றல் காற்றை மெதுவாக பூமிக்கு அனுப்பி வெப்பம் குறைந்துள்ளதா என வேவுபார்த்து வர அனுப்பியது. ஆதவன் தன் வேலை நேரம் முடிந்து விட்டதென ‘டாட்டா’ காட்டி விட்டு பூமிக்குள் ஓடி ஒளிய முயற்சி செய்து கொண்டிருந்தது. தன்னருகே கதிரவன் வருவதாக கற்பனை செய்து நீல வானமும்மேகக் கூட்டங்களும் செம்மை படர்ந்த கன்னத்தோடு சொக்கி நின்றது. இன்னும் வீட்டிற்கு சரியன நேரத்தில் திரும்பி வராத மகனைத் தேடி எங்கே போவது என யோசித்துக் கொண்டிருந்தாள்


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 அந்த ‘மானேஜர்’ மிகவும் சந்தோஷப் பட்டு “காசிக்குப் போய் இருந்து வரப் போறேளா.எல்லாரு க்கும் இந்த மாதிரி வயசு ஆன காலத்லே காசிக்குப் போய் இருக்கும் ’பாக்கியம்’ கிடைக்காது.என் அம்மாவும் அப்பாவும் காசிக்குப் போய் இருந்துட்டு ‘பிராணனே’ விடணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டா.என்னமோ காரணத்தாலே அவா காசிக்குப் போறது தடைப் பட்டுண்டே வந்தது.காசிக்குப் போக அவளுக்கு ‘ப்ராபதமே’ இல்லே.இங்கேயே அவா ரெண்டு பேருக்கும் உடம்பு வந்து,ஒருத்தரு க்கு அப்புறம் ஒருத்தரா


தனிமை

 

 கச கச..வென்ற மக்களும்,வாகனங்களும் சென்று கொண்டிருக்கும் பாதையை சிரமப்பட்டு கடந்து வரும்போது அப்படியே அமைதியாக காட்சியளிக்கும், பெரிய பெரிய பங்களாக்களாக அமைந்துள்ள இப்பகுதியை கடக்கும்போது, நம் மனம் “வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும்” என்று மனதில் கண்டிப்பாய் தோன்றும். இதில் அதோ இரண்டாவது வரிசையில் நான்காவதாக இருக்கும் அந்த பங்களாவில் ! தலை சுற்றுகிறது, மயக்கம் வருவது போல இருக்கிறது. வயதானாலே எல்லா தொந்தரவுகளும் வந்து விடுகிறது, மனதுக்குள் சிரிப்பு வந்தது. வயசாயிடுச்சுன்னு சொன்னா அவ்வளவுதான் வீட்டுக்காரருக்கு அப்படி


சித்த இங்க வரேளா…?

 

 ‘சித்த இங்க வரேளா…!’ சன்னமான குரல்ல , கஸ்தூரி , அவர் காதுக்கு மட்டும் கேக்கறாப்படி கூப்படற சத்தம் கேட்டு சுவாமிநாதன் ஒடம்பெல்லாம் அப்படியே சிலுத்து போறது… ‘இதோ ..வரேண்டி…தங்கம்…’ வாய்தான் முணுமுணுக்கறதே தவிர ஒரு அனக்கமும் இல்ல… வெறும் காத்து தான் வரது… “என்ன தாத்தா…?? மறுபடியும் கனவா…??பாட்டியம்மா கூப்பிடுதா…??மொகத்தில என்ன சந்தோஷம் பாரு…!” ட்யூட்டி நர்ஸ் அமலா லேசா கிழவர் கன்னத்தை தட்டிக்குடுத்துட்டு போர்வைய நன்னா இழுத்து போத்திட்டு , எல்லா ட்யூபும் ஒழுங்கா


சுவர்

 

 இந்த நேரம் யார்? இப்படித் தட்டுவது? வீட்டில் இருந்த எங்கள் எல்லோரது மனதுக்குள்ளும் தூண்டி லில் செருகிய புழுவாய் துடித்து நெளிந்து கொண்டிருந்தது இந்த ஒரே கேள்விதான். இந்த நேரம் யார்… இப்படித் தட்டுவது…! போலீஸ் ரிப்போர்ட், அடையாள அட்டை இத்தியாதிகளை மனம் நினைவுபடுத்திக் கொள்கின்றது. இரவு பத்துப் பதினொரு மணிக்கு மேல், இப்படி ஒரு அதிகாரத் துடன் கேட் ஆட்டப்படுகிறது என்றால் யாராக இருக்க முடியும். ஆர்மியாக இருக்கும். அல்லது போலீசாக இருக்கும். அல்லது ஆர்மியும்


மலையின் தனிமை

 

 கருகிய காகித அடுக்குகள் கிணற்றடியில் புரண்டு கொண்டிருந்தன. உடைந்த சில காகிதத்துண்டுகள் காற்றில் நகர்ந்து, காம்பவுண்டு சுவரில் ஏறமுயன்று பின் கீழே விழுந்து சிதறின. ஒரு குச்சியால் பிரிசில்லா காகித அடுக்குகளைப் புரட்டினாள். கறுப்புத் துகள்கள் குபுக்கென்று எழுந்தன தீய்ந்த நாற்றத்தோடு. அடுக்குகளுக்கு அடியில் நீலநிற டைரி ஒன்றும், வேறு இரண்டு நோட்டுகளும் ஓரங்கள் எரிந்த நிலையில் கிடைத்தன. நோட்டுப்புத்தகங்களில் கிரேசுக்கு எழுதிக் காண்பித்தவை இருந்தன தேதி வாரியாக. 2013 டைரியில் திறந்தாள். மார்வெல்ஸ் செல்வநாயகம் என்று


வியாசர் விருந்து – அகஸ்தியர்

 

 பாண்டவர்கள் அருச்சுனனத் தவம் செய்ய அனுப்பிவிட்ட பிறகு ஒரு நாள் லோமசர் என்கிற பிரம்மா அவர்களைக் காண வந்தார். இந்திரப் பிரஸ்தத்தில் புதிஷ்டிரனைப் பூஜித்து வந்த பிராமணர்களின் கூட்டம் வனவாசத்திலும், கூடவே இருந்து கொண்டு வந்தது. இது ஒருவிதத்தில் கஷ்டமாகவே இருந்தது. “லகு பரிவாரமானால் தான் இஷ்டப்படி பிரயாணம் செய்ய முடியும். இந்தப் பரிகாரத்தைக் குறைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரை செய்யுங்கள்” என்று லோமச முனிவர் சொன்ளதை ஒப்புக்கொண்டு யுதிஷ்டிரன் அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டான்: “ஆயாசம் தாங்க


ஈருடல் ஓருயிர்

 

 (இதற்கு முந்தைய ‘அர்த்தநாரீஸ்வரர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). கணவன், மனைவி உறவு பல பிறப்புகளிலும் தொடர்ந்து வரும் என்று நம்பினர். இந்தக் கருத்தை வேறு எங்கும் காணமுடியாது. சங்ககாலத் தமிழர்கள் சொல்லிலும், செயலிலும் இந்துக்களாக வாழ்ந்தனர். காளிதாசன் என்ற மாபெரும் வடமொழிக் கவிஞன் கூறிய அதேகருத்தை குறுந்தொகைப் பாடலிலும் காணலாம். சீதாதேவியைப் பற்றி ஒரு சலவைத் தொழிலாளி பழிச்சொல் கூறியவுடன் அவளை ராமன் காட்டிற்கு அனுப்பி விடுகிறான். உடனே சீதை “நான் என்