கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 12, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

காவல் கருத்தான்

 

 2013 டிசம்பர் திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் நீந்தி வந்து கொண்டிருந்தது அந்த இன்னோவா கார்! உள்ளே முன் இருக்கையில் இருப்பவர்தான் கருப்பையா, சொந்த ஊரான காரைக்குடி அருகில் உள்ள கண்டனூரை விட்டு பிழைப்புக்காக திருச்சியில் குடியேறியவர். ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்று கடந்த வாரம் திருமணம் முடிந்த தன் மகனையும் மருமகளையும் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட தன் கிராமத்துக்கு அழைத்துப் போய்க்கொண்டிருப்பவர். மகன் விடுமுறை முடிந்து அடுத்தவாரம் மீண்டும் அமெரிக்கா செல்லவிருப்பதால்


மனிதத்தை உணர்ந்த தருணம்

 

 பொதுநலன் விரும்பும் நல்ல மனிதர் ஒருவர் அதிகாலை வேளையில் தன்னுடைய அவசர வேலையாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வீட்டில் இருந்து கிளம்பினார். தெருமுனையைத் தாண்டிச் செல்லும்போது அந்தக் குறுகலானச் சந்தில் இருந்த ஒரு வீட்டின் வெளியே அந்த காட்சியைக் காண்கிறார். சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மனிதர் ஒருவர், “தான் தங்கியிருந்த வீட்டின் எதிரே உள்ள சிறிய கழிவுநீர் ஓடை ஒன்றில் தடுமாறி விழுந்து கிடந்தார்”. ஒற்றைத் துணியை மட்டும் போர்த்திக்கொண்டு அவர் வீட்டின்


கண்ணீரின் வலிகள்

 

 அதிகாலை 5.00 மணி கடிகாரத்தில் அலாரம் ட்ரிங்…. ட்ரிங் என ஒலித்துக் கொண்டிருந்தது. அலாரத்தின் சத்தத்தைக் கேட்டு வேகமாக எழுந்தாள் நதியா. அதிகாலை எழுந்தது முதல் வாசல் தெளித்து கோலம் போட்டு, காபி வைத்து தனது கணவன் ராம்கியை எழுப்பினாள். என்னங்க…. என்னங்க எழுந்திருங்க. இந்தாங்க காபி என்றாள். நதியாவிற்கு இரண்டு பெண் பிள்ளைகள். பெரியவள் தேவி 10 ம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்து வருகிறாள். சிறியவள் தீபா 4 ம் வகுப்பு படித்து


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 டாக்டர் வேறு ஒரு ‘பேஷண்டை’க் கவனிக்கப் போய் விட்டார். அக்காவும்,அத்திம்பேரும் ‘பாங்கு’க்கு வந்ததும் மூவரும் ‘பஸ் ஸ்டாண்டுக்கு’ வந்து ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிதமபரம் வந்து ‘ஹாஸ்பிடலு’க்கு வந்தார்கள். சாம்பசிவன் அப்பாவிடம் அவன் ‘பாங்க்லே’ இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஒரு லக்ஷ ரூபாயைக் கொடுத்தான்.ராமசாமி அந்தப் பணத்தை தன் கைப் பையில வைத்துக் கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து ‘நர்ஸ்’ பத்மா ரத்த பரிக்ஷ ‘ரிப்போர்ர்ட்டை’


வண்ணார வீரம்மாள்

 

 சித்தூர் சமஸ்தானத்தில் புளியந்தோப்பு என்று ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் புளிய மரங்கள் மிகவும் அதிகம். அதனாலேதான் ஊருக்கு புளியந்தோப்பு என்று பெயர் வந்தது. புளியந்தோப்பு, கிராமமானதால், வீடுகள் அதிகமில்லை . அந்தணர்களின் வீடுகள் சில. அவர்கள் தனித்தெருவில் வசித்து வந்தார்கள். வியாபாரிகள் சிலர். அவர்களுக்குப் பெருத்த வியாபாரம் கிடையாது. குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான உப்பு, மிளகாய் முதலியன அவர்கள் விற்று வந்தார்கள். அதிகமான ரூபாய் நாணயங்கள், அவர்களுக்குத் தினசரி வியாபாரத்தின் மூலமாய்க் கிட்டுவதில்லை. செப்புக்


ஒரு பொய்யாவது சொல்…! – ஒரு பக்க கதை

 

 நள்ளிரவு.  மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான்.. காதலித்து ஏமாந்துபோன குமார். சுதாரித்துக் கொண்டவள்,  தைரியத்தை வர வழைத்துக் கொண்டு ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘நில்..! நெருங்காதே, என்னைக் கொல்லப் போகிறாயா?’  என்றாள். ‘ஆமாம்! எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாத்!  நீ உயிரோடு இருக்கக் கூடாது!’ நெருங்கினான். ‘இதோ பார், நான் கொரானாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப் பட்டிருக்கேன்…! உனக்கும் தொற்று பரவிவிடப்  போகிறது…!  உன் கையால் சாவது எனக்கு சந்தோஷம்தான். 


தர்மத்தின் வாழ்வுதனை…

 

 திருவான்மியூர் குளக்கரையைக் கடந்து வரும்போது என்னைத்தாண்டி சென்ற ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினேன். ஆளும் கட்சிக்கொடி உச்சியில் பறந்து கொண்டிருந்தது எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது. ஆட்டோ ஓர் சில அடிகள் தாண்டி நின்றது. நான் போக வேண்டிய இடத்தைச் சொல்லிக் கேட்டதும். அதற்கு அவர் கேட்ட தொகையும் நியாயமானதாக இருந்ததால், ஏறி அமர்ந்து கொண்டேன். ஆட்டோ கிளம்பி வேகம் பிடித்த ஓர் சில நொடிகளை அவனுக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் என் முகத்தை பார்த்த அந்த ஓட்டுநர்


காதல்..காதல்…காதல்..!

 

 புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடி பால்கனிக்கு வந்து நாற்காலியில் அமர்ந்து நான் படிக்க அமர்ந்தபோதுதான் எதிர் வீட்டு பவானி அவள் வீட்டு பால்கனியில் பளீரென்று தோன்றினாள். இடையில் சாலை. போக்குவரத்து. !! ‘சே…! படித்தாற்போலத்தான் ! ‘மனம் சளித்தாலும் பார்வை அவளை அப்பியது. நல்ல களையான உருண்டை முகம். செக்கச் செவேர் தர்பூசணிப் பழத்தைப் போல் எப்போதும் ஈரப்பூச்சுள்ள கடித்துத் தின்னச் சொல்லும் உதடுகள். அங்கே இங்கே நில்லாது குறுகுறுத்து அலைபாயும் மறைந்த ஸ்ரீவித்யா நடிகை கண்கள். மொழு


அருக்காணி

 

 சைக்கிளை வீட்டருகே நிறுத்திவிட்டு வெளியே கால் கழுவினார் அவர்.. அவருடைய தினசரி பழக்கம் அது.. அந்த ஆடு அவரைப் பார்த்து திரும்பியது.. இரண்டு நாளைக்கு முன்னாடிதான் வாங்கி வந்திருந்தார்.. இரண்டு மாதம் கழித்து விற்றுவிடுவார்.. இதை விற்பதா இல்லை வளர்ப்பதா என்று இப்போதே கணக்கு போட ஆரம்பித்து விட்டார்.. காரணம் அது பெட்டை ஆடு.. குட்டிக்கு விட்டால் விருத்தி ஆகும்.. அவருக்கு பட்டியில் ஆடுகள் இருக்க வேண்டும்.. இப்போது இது மட்டும்தான் இருக்கிறது.. “என்னா..?” என்றார்.. அது


கர்ம பலன்கள்

 

 நம் வாழ்க்கையில் பல அதிசயங்களை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அதில் ஒன்று தற்செயல் ஒற்றுமை. “உன்னைத்தான் நினைத்தேன்… நீ வந்து எதிரில் நிற்கிறாய். உனக்கு நூறு வயுசு என்று நாம் அனைவருமே ஒரு தடவையாவது சொல்லி இருப்போம். நினைத்தது நடப்பதில்லை. நடப்பது மிகவும் கஷ்டம் என்று நாம் நினைக்கும் சில காரியங்கள் மிக எளிதாக நடக்கிறது. நாம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொருளை, அதைப்பற்றி பேசி வாங்க முடிவு செய்தபோது, அதே பொருளை