Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 15, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

தேர்வு

 

  ஒரு குடுவையில் இரண்டு அமிலங்களைக் கலந்தால் என்ன ஆகும் என்பதற்கும் குமாஸ்தா வேலைக்கும் என்ன சம்மந்தமிருக்க முடியும் என்பது தெரியவில்லை ரகுவுக்கு. வணிகவியல் பட்டதாரியான அவனுக்கு அந்த வேதியியல் வினா கூட வினையாகத்தான் விடிந்தது. பதில் தெரிந்தும் தேர்வு செய்ய முடியாத படி கீழே இருந்த நான்கில் இரண்டு சாய்ஸ்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியும் அதே சமயம் மிகநுண்ணிய வேறுபாடுகளுடன் இருந்தன . இது கூட பரவாயில்லை அதிகம் கேள்விப்படாத தொலை தூர தேசமொன்றில் ஆண்டுக்கு


சந்தேக வலை

 

 (ஒரு துளி,ஒரு அலகு நீதி நிகழ்ந்தால் கூட அதை வெளிச்சம் போட்டு காட்டப்பட வேண்டியது அவசியம். ) அன்றைய நாள், இப்படி அகோரமாக முடியும் என யார் தான் நினைத்திருப்பார்கள் ? உயிரை உறைய வைக்கும் பலவித ஆடவர்களின் குக்குரல்களைக் கேட்ட அயலவர்கள் வேலணையில் சற்று தள்ளி உள்ளே இருந்த முல்லை இயக்க காம்பிலிருந்த பெடியள்களிடம் பதற்றமாக சொல்லிய போது…சரிவர விளங்கவில்லை.”ஐய்யோ,போய்க் காப்பாற்றுங்கள் ,பிசாசுகள்,மண்டைதீவுக் கடற்கரையில் படுகொலை செய்கிறார்கள்,கெதியாய் போங்கள்”எனக் கூறிய போது அவசரமாக ஆயுதங்களுடன் தாகுதல்க்


ப்ரியாவின் விபத்து

 

 அது ஒரு ஆவணி மாதத்து வெள்ளிக்கிழமை. வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த ப்ரியா, அவசர அவசரமாக சமையல் வேலைகளை முடித்துவிட்டு, வெளியில் புறப்படத் தயாரானாள். நானும் வருகின்றேன் என்று அடம்பிடித்தான் ஏழு வயதான மகன். இதோ அரை மணித்த்கியாலத்தில் வந்து விடுகின்றேன் என்று சொல்லி அவனை சமாதானப் படுத்திவிட்டு, வாசலில் நின்ற சுசுக்கி இக்னிஷ்( Suzuki ignis) மகிழூந்தை (CAR) எடுத்துக்கொண்டு பக்கத்து தெருவிலிருந்த கடைமாளிகை( shopping mall ) நோக்கி விரைந்தாள், ப்ரியா. நாளைக்கு சனிக்கிழமை.


கானக விதி

 

 ஆப்ரிக்கா டன்ஸானியா நாட்டில் வடக்கு செரங்கட்டிப் பூங்கா பகுதியில் இருக்கிறது இக்கிராமம். மனிதனை வேட்டையாடிய விலங்கைப் பழி தீர்க்கும் எண்ணம் உடையவர் இங்குள்ள மக்கள். ‘வில்டர் பீஸ்ட்’ என்கிற மாடுகள் இடம் பெயரும் காலம் அது. செரங்கட்டிப் பூங்காவின் தெற்கு பகுதியில் ஆரம்பித்து வடக்கு நோக்கி செல்லும் பாதையில் இருக்கும் புல்வெளியில் அவை மேயும். ஓய்வு கொள்ளும். அவைகளின் இனப்பெருக்கம் நடக்கும் இடமும் இதுதான். மாமிசப் பட்சிணியான காட்டு விலங்குகள் மாடுகளை வேட்டையாடும். அச்சமயத்தில் மனிதன் குறுக்கே


வளையல்

 

 முன்னொரு காலத்தில் கமலாபுரம் என்னும் ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் வெளியூர் சென்று கை வினை பொருட்களை வாங்கி வந்து ஊர் ஊராய் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தான். அவனுக்கு ஒரு மனைவி. அவள் வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு, தினமும் இவன் வாங்கி வரும் கைவினை பொருட்களை தரம் வாரியாக பிரித்து கொடுத்து அவனுக்கு உதவி செய்வாள். அதன் பின் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பண்டம் என்று விலை வைப்பார்கள். (குட்டீஸ்