Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 9, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

மார்ஸ் ட்ரிப்

 

 2061 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது, சென்னை நகரெங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதியோரம் ஆடவர்களும், இளம் நங்கைகளும் மகிழ்ச்சி உலா சென்று கொண்டிருந்தனர். மெரினா கடற்கரை சாலையில் சில இளைஞர்கள் அதி நவீன 400 cc மோட்டார் பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தனர். முதன்மை சாலைக்கு மாற்றாக புதிதாக அமைக்கப் பட்ட பாலம் பொது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்திருந்தது. ஆங்காங்கே உயர் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்சுகளும்,


புதிய வெளிச்சம் தெரிகிறது

 

 தூக்கம் இல்லாமல் போன இரவுகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. திடுக்கிட்டு எழுந்த போதுதான் அதிகாலையில் சற்று நேரம் அயர்ந்து தூங்கியிருந்தது தெரிந்தது. என்றுமில்லாதவாறு அதிகாலையில் காதுக்குள் கேட்ட அந்தக் குயிலின் ‘கூக்கூ’ குரல்தான் எனது தூக்கம் கலைந்ததற்குக் காரணமாய் இருந்திருக்க வேண்டும். அந்தக் குயிலின் குரல் எனக்குள் ஒருவித புத்துணர்வை மீட்டுக் கொண்டு வந்தது போல என்னால் உணர முடிந்தது. யுத்தம் ஓய்ந்துவிட்டாக அறிவித்திருந்தார்கள். யுத்த சூழ்நிலையால் இயற்கை அழிக்கப்பட்டபோது மரங்கள் செடிகள் மட்டுமல்ல விலங்குகள் பறவைகள்


குழந்தை

 

 அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 ‘இவங்க ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்களே ஒழிய கமலாவும் ‘எங்க வூட்டு வேலை செய்யறயான்னு’ கேக்கலேயே,ராணீயும் ‘நான் பழையபடி இந்த வூட்லே வேலை செய்யட்டுமா ங்கன்னும் ‘கேக்கலேயே. குழந்தை ‘பிஸ்கெட்’ சாப்பிட்டு கிட்டு இருக்கு.கொஞ்சம் நேரம் ஆனா கமலாவுக்கு முதுவலி வந்தா அவள் படுக்கப் போய் விடுவா.’நான் வரேணுங்க’ ன்னு ராணீ சொல்லிட்டு குழந்தையை எடுத்துக் கிட்டு போயிட்டாள்ன்னா நாம என்ன செய்யறது’ என்ற கவலை வந்து விட்டது


பச்சை மனிதன்

 

 ஒரு மரத்தைக் கடந்து போகும் போது உனக்குள்ளேயே ஹலோ சொல்லிக் கொள்ளத் தவறாதே. அதைக் கரிசனத்தோடு பார்க்காமல் போகாதே. இதில் செலவு ஏதுமில்லை. நீ மரத்தை சந்தோசப் படுத்தினால் மரம் உன்னை சந்தோசப்படுத்தும். மரத்தை வசப்படுத்துவது அவ்வளவு சுலபலமல்ல. மனிதர்கள் மிக மோசமாகத்தான் மரத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். அவற்றிற்கு மனிதனைக் கண்டாலே பயமாகப் போய்விட்டது. நீ நெருங்கினால் உலகத்திலேயே அபாயமான ஜந்து இவன் தான் என எண்ணுகிறது. ஒரு மரத்துப் பக்கம் போ. மரத்தோடு பேசு. மரத்தை


நகர்வு

 

 பிபிஆர் பிளட்சின் 15-வது மாடியில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து ஆண் குரலில் ஒருவன் பலமாக கத்திக் கொண்டிருந்தான். சண்டை நடந்துக் கொண்டிருக்கும் வாசற்படியை மலாய்கார குடும்பம் ஒன்று அமைதியாக கடந்து போனது. கீழ் மாடியில் குடியிருக்கும் சாந்தி சத்தம் கேட்டு வேகவேகமாக படியேறி மேலே வந்தாள். மனிதனை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு. மலேசிய தமிழர்கள் சுமார் 250 வருடங்களுக்கு