Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 20, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஜமால்

 

 “இந்த விரலை இனி நோண்ட பயன்படுத்தலாம்…” நடுவிரலை நீட்டியும் மடக்கியும் ஜமால் செய்த ஆபாசமான கையசைவையும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாத என் முகபாவனையையும் மேற்பார்வையாளர் அமீர் கவனிக்கிறார் என எங்கள் இருவருக்குமே தெரியும். பதிலுக்கு நான் ஏதும் சொல்வேன் என ஜமால் காத்திருக்கலாம். வேறு வழியில்லாமல்தான் ஒரு மாதத்திற்கு முன் அங்கு வேலைக்குச் சேர்ந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்த அந்தத் தொழிற்பேட்டையில் அங்கு மட்டும்தான் கேட்டவுடன் வேலை கிடைத்தது. வயதை வைத்து நான் நீண்டநாள்


நேர்காணல்

 

 பேப்பர்கார பையன் வீசிய அன்றையச் செய்தித்தாள் ராமின் காலடியில் வந்து விழுந்தது. கையில் வைத்திருந்த காபியை உதட்டின் நுனியின் உறிஞ்சியபடியே செய்தித்தாளின் கடைசிப்பக்கத்திலிருந்து ஒவ்வொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கத்தில் விளம்பரக் கட்டம் ஒன்று இருந்தது. அவ்விளம்பரத்தில் “ஒப்பாரி” பற்றிய சிறந்த கட்டுரைக்கு ஐந்து இலச்சம் பரிசுத்தொகை மற்றும் இரண்டாம் மூன்றாம் பரிசுகளும் இலட்சத்தில் போடப்பட்டிருந்தன. ராம் மனம் மகிழ்ந்தான். எப்படியாவது ஒப்பாரி பற்றிய ஆய்வை மேற்கொண்டு கட்டுரையைத் தர வேண்டும். பரிசுகள் கிடைக்காவிட்டாலும் கட்டுரையை


குழந்தை

 

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 கமலா எல்லா சர்விஸ் கமிஷன் பா¢¨க்ஷகளையும் எழுதி வந்தாள்.சிலவற்றில் ‘பாஸும்’ பண்ணினாள்.ஆனால் நேர்முக தேர்வில் கமலா அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லியும் இவள் ‘மூனாம் க்ளாஸ்’ பாஸ் என்பதால் இவளை தேர்வு பண்ணவில்லை.எல்லா நேர்முக தேர்வுகளிலும் இதையே சொல்லி இவளை நிராகரித்து விட்டார்கள். சரோஜாவுக்கும் சிவலிங்கத்துக்கும் மிகவும் கவலையாகி விட்டது. ஆறு மாதம்


சிந்தித்தெள்ளிய…

 

 போய் விட்டதா பேருந்து எனக்கேட்க நினைத்த கணத்தில் வந்து நிற்கிறது பேருந்து இளம் செவ்வந்துப்பூ நிறம் காட்டி, புழுதி படர்ந்த சாலைகளில் இது போலான கலர்களில் பேருந்து ஓட்ட தனி தைரியம் வேண்டும்தான்,அது அவர்களுக்கு இருந்தது போலும் என்கிற எண்ணத்துடன் பேருந்தில் ஏறுகிறான், வரட்டுமா அப்ப, எனக் கேட்ட நேரத்தில் தோசை சுட்டுக் கொண்டிருந்தாள் மனைவி. தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை அரிசி மாவும் உளுந்தமாவும் கொஞ்சம் கோதுமை மாவும் கலந்து சுட்ட தோசை,,,,,என பிள்ளைகள்


நுாறு ருபாய் நோட்டு

 

 டேய் சிவா என்ற குரல் அத்தனை வாகன இரைச்சல்களையும் கடந்து என்னைத் தாக்கியது. திரும்பிப் பார்த்தேன். எதிர் திசையில் கோபால். பால்யத்தில் என் பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள். நில்லு. நானே அங்க வர்றேன். சாலையைக் கடந்து அருகில் வந்து என்ன சிவா எப்படியிருக்க என்ற கோபாலின் கன்னங்கள் ஒட்டியிருந்தன. இடுங்கின கண்கள். வியர்வையில் ஊறிய முகம். நல்லாயிருக்கேன்.நீங்க எப்படியிருக்கீங்க என்றேன். ஏதோ இருக்கேன். பாச்சலுர்லதான் இருக்கேன். பழனிக்கு வந்தா உன்னை விசாரிப்பேன். வீட்ல அப்பா எல்லாம் நல்லாருக்காங்களா?


மலர்க்கொத்து

 

 நண்பன் பார்த்தா என்னிடம் அடிக்கடி சொல்வதுண்டு. “நாம எழுதணும், அப்புறம் நம்மளைப் பார்த்து நாலு பேர் எழுத வரணும்” என்று அப்போது நான் கிண்டலாகக் கேட்பேன், “இவனெல்லாம் எழுதறானே நாம எழுதினா என்னன்னு நாலு பேர் எழுத வறணுமா?” என்று. இங்கே நான் இதை எதற்காகக் குறிப்பிட்டேன் என்றால், ‘மலர்க்கொத்து’ என்ற சிறுகதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். சென்னையிலுள்ள கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் சார்பில் சிறிய அரங்கில் ஆரவாரமின்றி மிக எளிமையாக நடந்த


பொக்கிசம்

 

 தம்பிமுத்துவுக்கு இப்போது அறுபத்து எட்டு வயது. கண்பார்வை மங்கிக் கலங்கலாக உருவங்கள் உருகித் தெரிகிறது. அவசரமாய் கண்ணாடியை மாட்டினால் மட்டும் அவை உருப்படியாக மீண்டும் தெரிகின்றன. நினைவுகள் பல கனவுகள்போல தூரத்தில் நிற்கின்றன. சில ஞாபகங்கள் சில வேளைகளில் மட்டும் வருகின்றன. பல நினைவுகள் ஞாபகத்தில் இருந்து நிரந்தரமாய் மறைந்தே போயின. முதுமை மீண்டும் மழலைப் பருவத்தை வலுவில் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. அவரை இயற்கை தன்விருப்பில் வலுவாகத் தழுவ எண்ணிய காலம் இது. அவரது


பூக்களுக்கும் போட்டி உண்டு

 

 குட்டீஸ் நீங்கள் பூங்காவிற்கு சென்றிருக்கிறீர்களா? அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள் அதை பார்த்து இரசித்திருப்பீர்கள்.அப்பொழுது அங்குள்ளதிலேயே எந்த பூ அழகு என்று பேசிக்கொண்டிருப்பீர்களா?கண்டிப்பாக செய்திருப்பீர்கள். இப்படித்தான் ஒரு நாள் குழந்தைகள் கூட்டம் ஒன்று பூங்காவை சுற்றிப்பார்க்க வந்தது. அங்குள்ள மலர்களை பார்த்து ஒரே சந்தோச கூச்சலிட்டன.மலர்களுக்கும் குழந்தைகளை பார்த்தவுடன் மகிழ்ச்சி தாங்கவில்லை. என்னைப்பார் என்னைப்பார், என்று காற்றில் தலை சாய்த்து தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தின.எல்லாம் பார்த்துவிட்டு செல்லும்போது


மாணவியா?!… மனைவியா..?!

 

 நவீன் கல்லூரி ஓய்வறையைவிட்டு கடைசியாக வெளியே வந்த போது வாசலில் காயத்ரி. இவனுக்குள் லேசான மின்னதிர்ச்சி. அவளுக்குள்ளும் சின்ன சங்கடம், சங்கோஜம். ”…..நா..நான் உங்ககூட கொஞ்சம் பேசனும்…..” தட்டுத்தடுமாறி மென் குரலில் சொன்னாள். நவீனுக்குள் இவள் என்ன பேசப்போகிறாள் ?! என்பது புரிந்தது. அது நேற்று நடந்தக் கதை. அன்னபூரணி மகன் நவீனுக்குச் சல்லடைப் போட்டு பெண் தேடுகிறாள். அது என்னவோ இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் மாப்பிள்ளைக்குப் பெண் கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. பெண் சிசுக்களையெல்லாம்


வினோத மனிதர்கள்

 

 இருபது நாட்களுக்கு முன்னால் என்னுடைய ஈஸ்வரிப் பாட்டி தன்னுடைய எண்பதாவது வயதில் இறந்துவிட்டாள். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ரகசியமாக என்னிடம் மட்டும் பாட்டி சொன்ன செய்தியைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாகப் போய்விட்டது எனக்கு. அதுவரைக்கும் என்னுடைய தாத்தா கைலாசம்தான் சில விஷயங்களில் ஒரு மாதிரியான ஆசாமியாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் என் தாத்தா அப்படியொரு வினோதமான மனிதர். ஆனால் தாத்தாவையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டாள் என் பாட்டி. பாட்டி என்னிடம் சொன்ன அந்த ரகசியத்தில், வினோதமான