நினைப்பதுவும் நடப்பதுவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 3,948 
 

விமானத்தில் அமர்ந்ததும் “குளிர்கிறது” என்று சின்னப் பெண் நிதியாவை போர்வையால் போர்த்தி விட்டு பெரியவள் நிவேதிதாவிற்கு தண்ணீர் கொடுத்தபின் தொலைபேசியில் தொடர்புகொண்டு கணவன் சேகருடன் பேசினாள். ”இன்னும் சில நிமிடங்களில் விமானம் புறப்பட்டு விடும். இரண்டரை மணி நேரத்தில் நாங்கள் துபாய் ஏர்போர்ட் வந்து விடுவோம். டெர்மினல் ரெண்டுல பிளைட் வந்து இறங்கும்” என்றாள் கீதா.

எதிர்முனையில் “நானும் அபுதாபியில் இருந்து கிளம்பி விட்டேன். நீங்கள் இறங்குமுன் நான் அங்கே ஏர்ப்போர்ட்டுக்கு வந்து விடுவேன்.” என்றான் சேகர்.

விமானத்தில் முதலில் ஸ்வீட் கொடுக்க நித்யாவும், நிவேதிதாவும் போட்டிப் போட்டு வாங்கிக் கொண்டு முதல் விமான பயணத்தை இரசிக்க ஆரம்பித்தனர்.

கீதாவிற்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது. முதன்முதலாக வெளிநாடு போகிறோம் என்னும் போது அடி வயிற்றில் சந்தோசத்தோடு கூடிய திகில் பந்து சுருண்டு கொண்டிருந்தது. உணவு பறிமாற ஆரம்பித்தவுடன் “நித்யா முதலில் எனக்கு? என்றாள்

நிவேதிதா “எனக்குதான்” என்றாள்.

பணிப்பெண் இருவர் கன்னத்திலும் முத்தம் கொடுத்து விட்டு உணவுப் பொட்டலங்களை கொடுத்து விட்டுப் போனாள்.

கீதா இருவரையும் சாப்பிடச் சொல்லி விட்டு சாப்பிட முடியாமல் மூடி வைத்து விட்டு டிவியில் சினிமாவை ஆரம்பித்தாள்.

சேகர் வந்த காரில் ஏதோ பிரச்சினையாகி ஷேக் சையத் ரோட்டில் மெதுவாக ஓரங்கட்டினான். திடீரென்று வந்த போலீஸ் “சரியில்லாத காரை நீ எப்படி ஓட்டி வரலாம்” என்று தண்டம் கட்டச் சொல்லி ரிசீப்ட் கொடுத்து விட்டுச் சென்றான்.

கோபத்தில் காரில் ஏறி உட்கார்ந்து மனைவியும் பிள்ளைகளும் விமானத்திலிருந்து இறங்கி வெளியே வருவதற்குள் கண்டிப்பாக டெர்மினல் இரண்டிற்கு போய்விட வேண்டுமென்று காரை ஸ்டார்ட் செய்தான்.

போலீஸ் மேலுள்ள கோபத்தை ஆக்ஸிலேட்டரில் காட்ட ஆரம்பித்தான்.

விமான நிலையம் வந்ததும் கணவனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற கீதாவிற்கு “நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தொடர்பு எல்லைக்குள் இல்லை” என்று அராபிய மொழியில் ‘எட்டி சாலெட்’ தொலைத் தொடர்பு நிலையத்தில் இருந்து அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு எமிக் ரேஷன் வந்து பாஸ்போர்ட் விசா செக்கப் எல்லாம் முடிந்து பெட்டிகளை எடுப்பதற்காக கன்வேயர் பெல்ட் அருகில் வந்து நின்றார்கள்.

டிராலி எடுப்பதில் இரண்டு குழந்தைகளையும் போட்டி ஏற்பட அவர்களை கண்டித்து விட்டு தங்களுடைய லக்கேஜுயுடன் காத்திருந்தாள் கீதா.

கார் வேகமாக ஓட எதிர்பாராமல் அருகில் வந்த பஸ் டிரைவர் அடுத்த டிராக்கிற்கு மாற சேகர் கவனமாக தப்பித்து விமான நிலையத்திற்குள் நுழைந்தான்.

கார் பார்க்கிங்கில் திரும்பிய போது எதிரே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வேகமாக மோதிவிட்டு செல்ல காரோடு சுக்கு நூறாக நொறுங்கிப்போனான் சேகர்.

கீதாவும் குழந்தைகளும் வேகமாக வெளியே வந்து சேகருக்காக காத்து நிற்க, கீதா திரும்பத் திரும்ப செல்போனில் அவனைக் கூப்பிட முயன்று ஏமாந்து போய், சேகரின் நண்பனைக் கூப்பிட்டாள்.

போனை எடுத்த கருணாகரன் “அங்கேயே இருங்க சிஸ்டர். அவன் மொபைலிலே ஏதோ பிரச்சினை போலிருக்கு, வந்து விடுவான்” என்று சொல்லி விட்டு விபத்து நடந்த இடத்திற்கு வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.

கீதாவும் குழந்தைகளும் அங்கேயே நின்று…நின்று கொண்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *