போதனைகள் வாழுகின்றன

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 274 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உங்களிடம் இரண்டு ஆடைகள் இருந்தால் ஒன்றை ஒரு ஏழைக்குக் கொடுத்து விடுங்கள்” 

யேசுவால கூறப்பட்ட அந்த வாக்கியத்தைப் பாதிரியார் கூறுகின்றார். அவரு டைய பேச்சில் கனி வும் அந்தக் கனிவில் ஒரு தெய்வீக சக்தியையும் காண முடிகிறது. 

… கிட்டத்தட்ட ஐந்தடி உயரமான யேசுவின் சிலை. சிலுவையில் அறையப்பட்ட நிலையில்… முள்முடி தரித்து நிலத்தை நோக்கியும் – நோக்காத நிலையில் சரிந்து, கையும் காலும் அறையப்பட்டு, இரத்தம் தோய்ந்த உடலாக…. 

பலிபீடம். 

இங்கு நின்றுதான் பாதிரியார் போதிக்கின்றார். கடவுளின் வாரிசு அவர். போதனை தொடர்கிறது. 

….இன்று புதுவருட ஆரம்பம், முதல் நாள் புது ஆண்டில் நுழைகிறோம். கடந்த ஆண்டுகளில் நாம் தவறு செய்திருக்கலாம். 

மனிதன் தவறு விடுவது இயற்கை அவன் தான் விட்ட பிழைகளை உணர்ந்து திருந்தும் போது தான் பூரண மனிதனாக மாறுகின்றான். 

செய்த தவறுக்காக… வருந்துங்கள் மன்னிக்கப்படும்… இப்படி யேசு கூறியிருக்கின்றார். ஏழைகளைக் கண்டு இரங்குங்கள், உங்களுக்கு என்னென்ன ஆசைகள் இருக்கின்றதோ அந்த ஆசை கள் ஏழைகளுக்கும் உண்டு அவர்களுக்கு உதவி செய்யுங்கள். 

காலை ஆறு மணி. லூர்து மாதா தேவாலயத்தில் பூசை நடந்து கொண்டிருக்கின்றது. வழமையான பூசை தான் இருந்தாலும் வருடம் பிறந்து, முதலாவதாக நடக்கின்ற பிரத்தியேக பூசை இதில் ஏதோ புதுமையைக் கண்டோ, என்னவோ, வழக்கத்தை விட அமைதியையும் புனிதத்தையும் இன்று காண முடிகின்றது. 

அங்கு பாதிரியாருடைய போதனை முடிகின்றது. எங்கும் பக்தி கலந்த அமைதி. நானும் நண்பன் தம்பிமுத்துவும் கோவில் வாசலில் நிற்கின்றோம். 

தம்பிமுத்து எனது நெருங்கிய நண்பன். இவன் கிறீஸ் தவனல்ல சைவசமயத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் அவன் எந்தச் சமயத்தையும் அடிவருடுவதில்லை! பல சமயக் கொள்கைகளில் ஒரு பொதுமையைக் கண்டு அதற்காக வாதாடுபவன். ஆனால் அதற்காகப் போராடுபவனுமல்ல. 

எனது பேச்சுத் துணைக்காக இங்கு வந்து நிற்கின்றான். கோயிலுக்கு வந்து நின்ற கூட்டத்தின் இறுதியில் நாம் நிற்கின்றோம். 

தம்பி முத்துவின் தோளில் பிடித்து எனது கால் பெருவிரலில் நின்று உள்ளிருப்பவர்களைப் பார்க்கின்றேன். 

எங்கும் ஒரே சோடனைகள் அநேகமாக எல்லோரும் புது ஆடைகளை உடுத்தியிருக்கின்றனர். நாகரீக உற்சாகமும் காணப் படுகின்றது. 

பெருவிரலில் தம்பி முத்துவின் தோளைப் பிடித்து நின்ற நான் எனக்குள் தோன்றிய தாழ்வு மனப்பான்மையால் பார்வையை விடுவித்துக் கொண்டு நிதானமாகப் பாதங்களில் நிற்கின்றேன். 

ஒரு கோடன் சாறம் வெள்ளைச் சேட் எனது உடை. 

ஒரு நாலு முழம், சேட் தம்பி முத்துவின் உடை. எனது மனம் கூசுகின்றது. 

“முத்து” இரகசியமாகக் கூப்பிடுகின்றேன். 

“என்ன..” 

“உள்ளை பாத்தியா…” 

“என்னத்தை..” 

“என்ன மாதிரி உடுப்பெல்லாம் போட்டிருக்கிதுகள்…”

“அதுக்காக நீயேன் பொறாமைப்படுகிறாய்..” 

“நான் பொறாமைப்படயில்லை. வெக்கமாயிருக்கு…” 

“ஏன்…” 

“இதுக்கு இந்த உடுப்போட நாங்கள்…” 

பக்திக்கும் உடுப்புக்கும் என்ன சம்பந்தம்? என்ரை தோளைப் பிடிக்க உன்ரை பெருவிரல்லை நிண்டு பாத்தாலை வந்த வினை…! உன்ரை கால்லை நிதானமாய் நில்… உந்த வேதனை ஒண்டும் தெரியாது… இதாவது கிடைக்கிறதே எண்டு ஆறுதல்படு…” 

“மனிதன் பலவீனன் தானே…” 

“அதாலைதான் சொந்தக் காலிலை நில் எண்டு சொல்றன். நான் எப்பவும் எனக்குக் கீழை உள்ளவைகளைத்தான் பாப்பன்… கீழை போகவேணுமெண்ட ஆசையில்லை… மன ஆறுதலுக்காக எங்களுக்கு மேலை உள்ளவையளைப்பற்றி யோசித்தால் எப்பவும் கவலைதான். நீ உந்த நாகரீகப் பிறவியளைப் பார்த்து பெரூமூச்சு விடுகிறாய்… நான் இவ்வளவு கூட்டத்திலையும் ஒருத்தனைத்தான் பாக்கிறன்.. எனக்கு மன நிம்மதி..” 

“அது ஆர்…?” 

“திரும்பிப் பின்னாலை பார்…” 

நான் தலையைத் திருப்பிப் பின்புறமாகப் பார்க்கிறேன். 

அவன் நிற்கிறான். 

அவன் குரூஸ். 

முழங்காலில் இருக்கிறான். வெள்ளைச் சறம் ஒன்று. வெளுக் கப்பட்டது தான். இதயத்தோடு ஒட்டிய கதை போல் இடையிடையே நிரந்தரமான சில வடுக்கள்…. கழுத்தில் ஒரு கறுத்தக் கயிறு. அதில் ஒரு அங்குல நீளமான சிலுவை… ஒட்டியுலர்ந்த மேனி.. 

ஆலய வாசலில் நிற்கின்ற சனங்களின் பின்புறத்தைத்தான் பார்க்க முடியும். பார்க்கின்றான். எனது கண்களில் மட்டும் தெய் வத்தைக் காணுகின்ற உணர்வு நிலை தென்படுகின்றது!. 

மானசீகமாக அவன் காண்கிறானா?. 

அவன் பிச்சைக்காரன் – இருபத்தைந்து வயதிருக்கும். 

இதே ஊரைச் சேர்ந்தவன். எனக்கு நன்கு பழக்கமானவன். அன்றாடம் உழைத்துச் சீவித்து வந்த அவன் தற்செயலாக இவனது உள்ளங்கையில் குத்திய முள்ளொன்று தசைக்குள்ளையே கிடந்து, இவனது கவலையீனத்தால் புற்றுப்போல் நீண்டு முழங்கைவரை வளர்ந்துவிட்டது. முழங்கையில் நசித்தால் உள்ளங்கை புண்ணால் சீழ் வடியும் நிலை!. 

வலது கை, இதுவரை அவனது உயிரைப் பற்றி வைத் திருந்ததொரு பற்றுக்கொடி. 

ஆஸ்பத்திரிக்கு ஓடினான். 

முழங்கையோடு கையைக் கழட்டி விட்டனர். 

வயிற்றுப் பசிக்குத் தீனி போட்ட வலது கை மொட்டை மர மாகிவிட்டது. வயித்துப் பசி… அதன் இயக்கம் நின்று விடுவ தில்லையே!. என்ன செய்வான் மொட்டை மரத்தைக் காட்டி, முழு கரத்தை நீட்டினான். 

பிச்சைக்காக! 

கருணைக்காகக் மொட்டை மரமாகிவிட்ட குறைக்கை! காசுக்காக முழுக்கை! 

“குரூஸ்…” அவனருகில் சென்ற தம்பிமுத்து அழைக்கின்றான்.  

“ஓ. நீங்களா….. நான் கவனிக்கவில்லை…” குரூஸ் கூறுகிறான். 

“என்ன உலகத்தையே மறந்திட்டாய்…” 

“என்னையே நான் மறந்தாப் பிறகு… உலகம் எப்படி ஞாபகமிருக்கும்…” 

“ஏன் உப்பிடியெல்லாம் கதைக்கிறாய்…” 

“புதுவருடம் நல்லாய் இருக்க வேணும் எண்டு எல்லாரும் ஆண்டவனிட்டை வேண்டுகினம்… நான் இண்டைக்கு எப்பிடியும் என்ரை கால்வயிறாவது நிறைய கஞ்சிக்கு வழிகாட்டு….. எண்டு வேண்டிறன்…” 

“கவலைப்படாத குரூஸ்.. உனக்கும் ஒரு எதிர்காலம் இல்லாமலா போகும்….” 

“இரண்டு கைகளும் உள்ள பலபேற்றை எதிர்காலமே நிர்ண யிக்கப்படுவதில்லை… கையில்லாத என்ரை எதிர்காலம் எப்படி நிர்ண யிக்கப்படும்…” இவனது பேச்சுக்களில் நமக்கு ஆச்சரிய மில்லை. இவன் எப்போதும் இப்படித்தான் பேசுவான். அனுபவிக்க வேண்டிய வயதில், அனுபவிக்காமல் அனுபவிக்கத் துடித்ததில் கண்டு விட்ட பெரும் அனுபவங்கள். அவற்றின் தொகுப்பு, நிதானமாக அவன் பேசிவிடுவான். 

பாதிரியார் பிரசங்கத்தை முடித்து விட்டுப் பூசையைத் தொடர்கிறார். பாதிரியாரின் பூசைக்கு உதவ நின்ற இரு சிறுவர் களில் ஒருவன் காணிக்கைத் தட்டை எடுத்துக் கொண்டு சனங்களி டம் வருகின்றான். 

புதுவருஷம்… முதல் காணிக்கை!. 

வழக்கமாகச் சதக்காசுகள் தான் தட்டை நிறைக்கும். இன்று ரூபா நோட்டுக்கள் தான் அதிகம். அநேகமானவர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். 

தட்டு நிறைகிறது. 

குரூசிடம் தட்டு நீட்டப்படவில்லை! ஏன் நீட்டப்படவில்லை யென்பது அந்தச் சிறுவனுக்குத் தான் வெளிச்சம்!. 

பூசை முடிகிறது. பாதிரியார் தன் ஆடைகளை ஒவ்வொன் றாகக் கழட்டுகிறார். 

சனங்கள் ஒவ்வொருவராக வெளியே வர ஆரம்பிக்கின்றனர். நான் தம்பி முத்து, குரூஸ் மூவரும் வாசலில் நிற்கிறோம். 

ஐயா… அம்மா… கையில்லாத ஊனமுங்க… புது வருஷம்… காலங்காத்தாலை… புண்ணியங் கிடைக்கும்… ஏதாவது குடுங்கையா… 

எனது செவிப்பறை அதிர்ந்து, உணர்வு நரம்புகள் அறுத்து, இதயம் சுக்கு நூறாய் வெடிக்கிறது… அவன் தான் குரூஸ், பிச்சை கேட்கிறான். 

மொட்டை மரத்தைக் காட்டி முழு மரத்தை நீட்டி! “ஐயா அம்மா கருணை காட்டுங்கோ…. ஊனமுங்க… புண்ணியமுண்டு ஏழைக்கு இரங்குங்கோ” 

ஓவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவன் கேட்டுக் கொண்டேயிருக்கின்றான். வெறுங்கை வெறுங்கைத்தான். 

இறுதி ஆளும் போகிறான். 

உட்கோயிலைப் பார்க்கிறேன். யாருமில்லை. பாதிரியார் மட்டும் இரு கைகளையும் அகல நீட்டி, முளந்தாளில் நின்று யேசுவின் சிலையை நோக்கி தனிமையில் மன்றாடுகிறார். 

எனது இதயம் துடிக்கிறது. ஏதோ ஒரு வித உணர்வு! வலிப்பு, அதிர்வு உள்ளுக்குள் சில வார்த்தைகள், அவை….?. 

“உங்களிடம் இரண்டு ஆடைகள் இருந்தால் ஒன்றை ஒரு ஏழைக்குக் கொடுத்து விடுங்கள்” 

நான் தம்பிமுத்து… மனமுண்டு. நமது சேட் பைகள் வெறுமை….! களங்கமில்லை! 

– ஈழநாடு, 1.9.1974.

– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *