கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 7 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூங்கோதை அழகான ஒரு பெண். அவள் அன்பும் அறிவும் உடையவள். அவள் ஒருபொழுதும் கர்வம் கொள்வதில்லை. அவள் எப்போதும் சுறுசுறுப்பாகவே காணப்பட்டாள், அவள் பார்வையில் கனிவும் பொலி வும் நிறைந்திருந்தன. அப் பெண்ணை அவள் தாய் கண் இமை காப்பதுபோலக் காத்துவந்தாள். பூங்கோதை பெற்றோர்க்குச் செய்யவேண்டிய பணி விடைகளை எல்லாம் விருப்பத்தோடு செய்து.வந்தாள். பெற்றோர் அவளைச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். 

அன்பு நிறைந்து மகிழ்ச்சி பொங்கிய அவர்கள் குடும்பத்தில் சொல்ல முடியாத ஒரு துன்பம் ஏற்பட்டது. ஒரு நாள் திடீரெனப் பூங்கோதையின் தாய் காய்ச்ச லாகப் படுத்தாள். எள்ளளவும் இரக்கம் என்பதே இல்லாத எமன் அவள் உயிரைக் கவர்ந்து சென்றான். தந்தையும் மகளும் துன்பக் கடலில் சிக்கித் தவித்தனர். காலப்போக்கில் இயற்கை அவர்கட்கு அமைதியை அளித்தது. 

பூங்கோதையின் தந்தை வேம்பு என்னும் பெண்ணை மறுமணம் புரிந்து கொண்டார். பூங்கோதை, சிற்றன் னையின் சொற்படி நடந்துவந்தாள். வேம்பு எப்பொழுதும் அவளைக் கடுமையாக வேலை வாங்கிக் கொண்டிருந்தாள். சிறுமி அவள் இட்ட வேலையைத் தட்டாமல் செய்துவந்தாள். வேம்புக்குப் பெண் குழந் தைகள் இருவர் இருந்தனர். ஒருத்திக்கு நங்கை என்று பெயர். மற்றொருத்திக்கு மங்கை என்று பெயர். நங்கையும் மங்கையும் எந்த வேலையையும் செய்யாமல் செல்வமாக வளர்ந்தார்கள். 

பூங்கோதை காலை எழுந்ததுமுதல் இரவு படுக்கும் வரையிலும் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே இருந்தாள். பூங்கோதைக்கு நல்ல ஆடை எதுவும் இல்லை. கிழிந்து தொங்கும் அழுக்கு உடையையே அவள் உடுத்திவந்தாள். பூங்கோதை சமையல் செய்து து கொண்டே தன் தாய் உயிரோடு இருந்தபொழுதுதான் மகிழ்வுடன் இருந்ததை எண்ணிப் பார்ப்பாள். அந்த நல்ல காலம் இனிவருமா? என ஏங்கிக்கொண்டிருப்பாள். ஒவ்வொரு நாளும் படுக்கையைவிட்டுக் காலையில் எழும்பொழுதும் இரவில் படுக்கும்பொழுதும் அன்னையை மறவாமல் வழிபட்டுவருவாள். 

பூங்கோதை வாழ்ந்த நகரில் இளவரசன் ஒருவன் இருந்தான். அவன் நல்ல அழகுடையவன். தனக்கு விருப்பமான ஓர் அழகியை மணந்து வாழவிரும்பினான். அவன் தன் நாட்டிலுள்ள அழகிகளை எல்லாம் நாட்டியம் ஆட அழைத்திருந்தான். அந்நாட்டு மங்கையர் பலர் அழகுக்கு அழகு செய்துகொண்டு கவர்ச்சியாகச் சென் றனர். இளவரசன் அனைவரையும் வரவேற்று உப சரிக்க ஏற்பாடு செய்திருந்தான். வேம்பு தான் பெற்ற இரண்டு பெண்களையும் ஒப்பனை செய்துகொண்டு நாட்டிய அரங்குக்கு அழைத்துச் சென்றாள். தாயற்ற பூங்கோதைக்குக் கிழிந்த ஆடையன்றி வேறு இல்லை. 

நங்கையும் மங்கையும் பூங்கோதையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே தாயுடன் சென்றனர். பூங்கோதைக்குத் தானும் அந்த நாட்டியத்தைக் காண வேண்டும் என்று விருப்பம். விருப்பம் இருந்தால் மட்டும் போதுமா? “தாயற்றுப் போனால் சீரற்றுப் போச்சு’ என்னும் பழமொழியின் உண்மையை அவள் அப்பொழுதுதான் உணர்ந்தாள். நங்கையும் மங்கையும் தாயுடன் வண்டியிலேறிச் சென்றனர். 

பூங்கோதை சமயலறைக்குச் சென்றாள். தன் தாயை நினைத்து அழத்தொடங்கினாள். திக்கற்ற வர்க்குத் தெய்வமே துணை” அன்றோ? அங்கே ஒரு தேவதை தோன்றியது. பூங்கோதையின் தாயே தெய்வ மாக வந்தாள். ”அம்மா! அழாதே; எழுந்து உனக்கு என்னவேண்டும் சொல்” என்றாள். பூங்கோதை தன் விருப்பத்தைத் தெரிவித்து, ‘தாயே! எனக்குச் துணை யாக வந்த தெய்வமே! உனக்கு நன்றி” என்று கூறி வணங்கினாள், 

தேவதை ஒரு மந்திரக்கோலை எடுத்து அவள்மீது தடவியது. உடனே பூங்கோதை பேரழகு வாய்ந்த இளவரசி போல் ஆடை அணிகலன்களுடன் விளங்கினாள்; தனக்குத் தானே அடையாளங் காணமுடியாத அளவுக்கு அழகுடன் மிளிர்ந்தாள். அத் தேவதை அவளைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே நான்கு சுண்டெலிகளும் ஒரு பூசனிக்காயும் இருந்தன. அவற்றின்மீது அத்தேவதை மந்திரக்கோலால் தடவி யது. உடனே, பூசனிக்காய் ஒரு வண்டியாயிற்று. நான்கு சுண்டெலிகள் இருந்த இடத்தில் இரண்டு குதிரைகளும் இரண்டு சேவகர்களும் காணப்பட்டனர். அவர்கள் இருவரும் அரண்மனை ஆள்களைவிடப் பெரிய உருவமுடையவர்களாகவும் பளபளப்பான சட்டை போட்டுக் கொண்டும் இருந்தனர். குதிரைகள் இரண்டும் அரசனின் குதிரையைவிட நன்றாக இருந்தன. அப் பொழுது தேவதை பூங்கோதையை வண்டியில் ஏறச் சொன்னது. பூங்கோதை வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். ‘பெண்ணே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள். மறந்துவிடாதே. என் சொல்லை மீறி நடக்காதே! நீ அரண்மனைக்கு போய் இளவரசனுடன் நாட்டியத்தில் ஈடுபட்டு இருந்தாலும் சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கெல்லாம் அந்த இடத்தைவிட்டு வந்துவிட வேண்டும்” என்று தேவதை கூறியது. 

பூங்கோதை தேவதைக்கு நன்றிகலந்த வணக் கத்தைச் செலுத்தினாள். வண்டியை அரண்மனைக்கு ஓட்டச் சொன்னாள். குதிரைகள் இரண்டும் விரைந்து சென்றன. வண்டி அரண்மனை வாயிலை அடைந்தன. பூங்கோதை வண்டியிலிருந்து இறங்கினாள். கண்ட வர்கள் எல்லாரும் வியந்தனர். அவளைப் போன்ற அழகுடைய மங்கை எவரையுமே அவர்கள் கண்டிலர். ளவரசன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளுடன் சேர்ந்து நடனமாடினான். வந்திருந்த பெண்கள் எல்லாரும் பூங்கோதையைப் பார்த்துப் பொறாமை கொண்டனர். ‘இவள் மண்ணுலக மகளோ? விண்ணுலக மகளோ? என்று ஐயங்கொண்டனர். இளவரசனையும் பூங்கோதையையும் ஒருசேரக் கண்ட பெரியவர்கள், இருவரும் மணந்துகொள்ளப் பொருத்த மானவர்கள் என்று பேசிக்கொண்டார்கள். 

வேம்புவின் மகளிரான நங்கையும் மங்கையும் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இளவரசன் அவர் களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அங்கு வந்து ளவரசனுடன் கைகோத்து ஆடிய அந்தப் பெண்ணை அவர்களால் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. எனினும் அவர்கள் அவ்வழகியின் மீது பொறாமை கொண்டனர். 

பூங்கோதையும் இளவரசனும் ஆடிப்பாடிக்கொண்டு இருந்தமையால் நேரம் கடந்ததே தெரியவில்லை. அப் பொழுது அரண்மனையில் பன்னிரண்டு மணி அடிக்கத் தொடங்கினார்கள். முதல் மணியோசை கேட்டதும் பூங்கோதை திடுக்கிட்டாள். உடனே அங்கிருந்த அவள் வேகமாக ஓடினாள். அவ்வாறு ஓடும்பொழுது அவள் பாதங்களில் அணிந்திருந்த காலணி ஒன்று தவறிவிட்டது. இருந்தாலும் அதற்காக அவள் தரமதிக்கவில்லை. தேவதையின் சொற்படி வண்டியில் ஏறி அமர்ந்தாள். முன்போலவே குதிரைகள் வேகமாகச் சென்றன. 

இளவரசன் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்த முயன்றான். ஆனால் முடியவில்லை. வண்டி காற்றை விடச் கடுவேகமாகப் பறந்துசென்றதைக் கண்டான். வண்டி மறைந்ததும் இளவரசன் மண்டபத்திற்குத் திரும்பினான். வரும்வழியில் படிக்கட்டின்மேல் அவள் அணிந்திருந்த கண்ணாடியினாலான காலணி ஒன்று கிடக்கக் கண்டான். அந்தக் கண்ணாடிக் காலணியை எடுத்து வைக்குமாறு ஆணையிட்டான். 

பூங்கோதை தன் வீட்டினை நெருங்கினாள். வண்டி யிலிருந்து இறங்கினாள். உடனே வண்டி பூசனிக் காயாக மாறியது. வேலைக்காரர்களும் குதிரைகளும் சுண்டெலிகளாக உருமாறின. அவள் திரும்பவும் பழைய தோற்றத்தை அடைந்தாள். அரண்மனையி லிருந்து வேம்புவும் அவள் மகளிரான நங்கையும் மங்கையும் ஒரு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அனைவர் முகத்திலும் புறப்படும்போது காணப் பட்ட மலர்ச்சி இல்லை; மிகவும் கோபமாக இருந்தனர். எவ்விதப் பேச்சும் இல்லாமல் அவரவர் படுக்கையில் படுத்து உறங்கினர். 

மறுநாள் இளவரசன் அந்தக் கண்ணாடிக் காலணிக்கு உரியவர் யார் என்பதைக் கண்டறிய ஆள்களை அனுப்பினான். பணியாளர்கள் கண்ணாடிக் காலணியை எடுத்துக்கொண்டு வீதிதோறும் வீடுவீடாகச் சென்றனர். அந்தக் காலணி எவருடைய காலுக்கும் பொருத்தமானதாக இல்லை. கடைசியாக அவர்கள் பூங்கோதையின் வீட்டிற்கு வந்தனர். மாற்றாந்தாய்ப் பெண்கள் அந்தக் காலணியைத் தங்கள் பாதங்களில் நுழைத்துப் பொருத்த அரும்பாடுபட்டனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை. அப்பொழுது ஒரு பணியாள் தோட்டத்திலிருந்து தண்ணீர்க் குடத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த பூங்கோதை யைப் பார்த்தான். அவளிடம் அந்தக் கண்ணாடிக் காலணியைக் கொடுத்து அணியச் சொன்னான். பூங் கோதையின் காலிற்கு அது பொருத்தமாக இருந்தது. 

காவலர்கள் பூங்கோதையைப் பார்த்து, “நீ எங்க ளுடன் அரண்மனைக்கு வரவேண்டும். எங்கள் இள வரசரின் ஆணை இது. உடனே புறப்படவேண்டும்” என்றார்கள். வேம்பு வேறு வழியின்றி பூங்கோதையை அனுப்பிவைத்தாள். பூங்கோதை அரண்மனையை அடைந்தாள். இளவரசன் பூங்கோதையைக் கண்டதும் பெரிதும் மகிழ்ந்தான். தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பூங்கோதையை மணந்து இல்லறமாம் நல்லறத்தை நன்கு நடத்தி மக்கட்பேறு பெற்று இனிதே வாழ்ந்தான். 

“மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டா.” – உலகநீதி 

“மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.” – கொன்றைவேந்தல் 

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *