நீண்ட காலம் பழகியவர்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
முதல் வெளியீடு: 1981
இணைய வெளியீடு: November 15, 2026
பார்வைகள்: 238
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தம்பிப்பிள்ளை வியாபாரத்தில் மிக மும்முரமாக ஈடுபட்டிருந் தார். கடையில் வேலைபார்க்கும் பணியாளர்கள். போட்டுத் தரும் ரசீதுகளைச் சரிபார்த்துப் பணத்தைப்பெற்றுக்கொண்டு, மிகுதியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, அப்பணியாளர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை உபசரித்து, வியாபாரத்தைக் கவனிக் கிறார்களா என்பதையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். 

“வாருங்கள் மாஸ்ரர். இந்தப்பக்கம் வந்து கனகாலம். சபாபதி, மாஸ்ரருக்கு என்ன வேணுமெண்டு கேட்டுக் குடு”. இடை யிடையே முக்கியமான வாடிக்கையாளர்களை இப்படித் தானே வரவேற்று உபசரிக்கவும் அவர் தவறவில்லை. 

அவருடைய இந்தத்திறமைதான் “எஸ்.ரி.பிள்ளை அன்சன்ஸ்” என்ற அவருடைய அந்தக் கடையை யாழ்ப்பாணத்திலேயே புகழ்பெற வைத்திருந்தது. 

“ஐயா!” 

நாற்பத்தைந்து சதம் மிகுதி கொடுக்கச் சில்லறை தேடிக் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை பழகிய குரலொன்றைக் கேட்டு நிமிர்ந்தார். 

“ஓ தம்பி கந்தசாமியே? என்ன இந்தப் பக்கம்?”

நேர்த்தியான உடையும் மென்சிரிப்புமாக நின்ற அந்த இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவித பவ்வியத்துடன் கதைத்தான். 

“பாங்குக்கு ஒரு அலுவலாக வந்தனான். உங்களிட்டை ஒரு உதவி தேவைப்படுகுது.” 

தயக்கமும் மரியாதையுமாக கந்தசாமி கேட்டபோது ‘ஏதேனும் காசு தேவையோ?’ என்றொரு சந்தேக நினைவோட்டம் தம்பிப்பிள்ளையின் மனத்தில் மின்னலிடுகிறது. 

“என்ன உதவியெண்டு சொல்லுங்கோ தம்பி”. சில்லறையையும் ரசீதையும் பணியாளிடம் கொடுத்தபடியே தம்பிப்பிள்ளை கேட்டார். 

“ஒண்டுமில்லை ஐயா. ஒரு செக் மாத்தவேணும். பத்தாயிரம் ரூபா செக் எண்டதாலை அடையாள அட்டை கேட்டினம். நான் கொண்டுவரேல்லை. நீங்களொருக்கா அறிமுகப்படுத்திவிட்டீர்க ளெண்டால் உதவியாயிருக்கும்.” 

தம்பிப்பிள்ளை கடையைப்பார்க்கிறார். ‘வியாபாரம் மும்முர மாக நடக்கிற நேரம் கடையை எப்படி விட்டுப்போவது? என்று சிந்திக்கிறார். ‘கந்தசாமிக்கு உதவி செய்ய வேண்டும். எவ்வளவு உதவிசெய்த பெடியன்!. இப்ப நான் மாட்டனெண்டு சொல்ல லாமே?’. மனம் கந்தசாமியின் உதவியை நினைத்துக்கொள்கிறது. 

நீர்வேலியிலிருந்து தினமும் அதிகாலையிலேயே யாழ்ப் பாணம் வந்து, கடை வேலையைத் தொடங்கும் அவருக்கு அட்டமத்திலை சனியன் வந்ததோ என்னவோ கார் பழுதாகி விட்டது. கராச்சுக்குப்போன கார் ஒரு மாதத்திற்குப் பின்தான் வந்து சேர்ந்தது. 

காலையிலே பஸ்ஸுக்காகத் தவமிருந்தால் நிற்பவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பஸ் போய்விடும். அந்த வேளையிலே தான் தனது மோட்டார் பைக்கில் உதவிக்கு வந்து சேர்ந்தான் இந்தக் கந்தசாமி. 

முதல் நாள் முன்பின் பழக்கமில்லாத அவன் “யாழ்ப்பா ணம் போறதெண்டால் வாங்கோ” என்று அழைத்த போது அவர் ஆச்சரியப்பட்டார். 

அவருக்கு அவனைத் தெரியாவிட்டாலும் பெரிய வியாபாரப் புள்ளியான அவரைக் கந்தசாமி தெரிந்து வைத்திருந்தான். 

தினமும் அவரை நேரத்திற்கு அழைத்துச் சென்று உதவிய அவனைப்பற்றி தம்பிப்பிள்ளையும் சிறிது சிறிதாக விசாரித்து அறிந்து கொண்டார். 

நெல்லியடியைச் சேர்ந்த கந்தசாமி யாழ்ப்பாணத்தில் ரியூட்டரி ஒன்றில் கல்வி கற்பித்து வந்தான். அவனுடைய பண்பும் மரியாதையும் தம்பிப்பிள்ளையை மிகவும் கவர்ந்து விட்டன. தான் அரசாங்க உத்தியோகம் இனிச் செய்யப் போவதில்லை என்றும் தனக்கு ரியூட்டரி மூலம் மாதாந்தம் பத்தாயிரம் ரூபா அளவு கிடைப்பதாகவும், ஓய்வுநேரங்களில் மட்டும் தோட்டம் செய்வதாக வும். அதன் மூலம் மாதாந்தம் ஐயாயிரம் ரூபா அளவு கிடைப்பதாகவும், இது தனக்கு வாழ்க்கைச்செலவுக்கு போது மென்றும், இந்த வகையில் சம்பளம் கிடைக்கக்கூடிய அரசாங்க த்தியோகம் ஒன்றுமில்லை என்றும் தன்னைப் பற்றி ஒரு நாள் கந்தசாமி கூறியதை ‘டேப்’ செய்து வைத்திருப்பதைப் போல் அவர் மனம் மீட்டல் செய்தது. 

தம்பிப்பிள்ளை காரில் வர ஆரம்பித்த பின்னரும் கந்தசாமி கடையில் வந்து இடையிடையே கதைத்துவிட்டுச் செல்வான். 

“இந்தப் பாங்காரருக்கு இவ்வளவு பேரோடை பழகியும் ஆர் நல்லவை, ஆர் கெட்டவை எண்டு பார்த்துத் தெரிஞ்சு கொள்ளத் தெரியாது. இந்தப் பெடியனைப் பார்த்தா ஆரும் கள்ளன் காடனெண்டு சொல்ல முடியுமே?” தம்பிப்பிள்ளை மனத்திற் குள்ளேயே நினைத்துக் கொண்டார். தொழில் துறை இல்லாத பெடியனென்டாக்கூட பரவாயில்ல. நல்ல வருமானமுள்ள பெடியன். 

“தம்பி, வியாபாரம் மும்முரமாயிருக்கு நான் பாங் மனேச்சருக்கு ஒரு கடிதமும் தந்து இந்தச் செக்கிலையும் உம்மை அறிமுகப்படுத்தி விடுகிறன். அவை நேர வரச்சொல்லித்தான் கேப்பினம். அப்பிடியெண்டால் பிறகு பாப்பம்.” 

“அதோடை ஐயா இந்த அடகு ரிக்கரிலும் ஒரு கையெழுத் துப் போட்டுத்தாறீர்களே? அடைவெடுக்கவும் அடையாள அட்டை கேப்பினம்” விநயமாகக் கேட்கிறான் கந்தசாமி. 

“அதுக்கென்ன. தம்பிக்குச் செய்யாமல்”. தம்பிப்பிள்ளை அவசர அவசரமாக ஒரு கடிதமும் எழுதி, காசோலையிலும் அடகு ரசீதிலும் சாட்சிக் கையொப்பமிட்டு கந்தசாமியிடம் கொடுக்கிறார். “பெரிய உதவி ஐயா. நான் வரட்டுமே” கந்தசாமி வணக்கம் கூறிவிட்டு நடக்கிறான். 

“டிரிங் டிரிங்” தொலைபேசி மணியோசை கேட்கிறது. 

ரசீதிலுள்ள கணக்கைக் கூட்டிச் சரிபார்த்துக் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை அது முடிய, தொலைபேசியை எடுக்கிறார். 

“ஹலோ எஸ். ரி. தம்பிப்பிள்ளை அன் சன்ஸ் ஹியர்”. 

“மிஸ்ரர் தம்பிப்பிள்ளைதானே கதைக்கிறீர்கள்?. பாங் மனேஜர் கதைக்கிறேன். நீங்கள் கந்தசாமி என்றொருதரை அறிமுகப்படுத்தி அனுப்பியிருக்கிறீர்கள்”. 

“ஓமோம் கடையிலை வியாபாரம் கொஞ்சம் கூட அது தான் நேர வரமுடியேல்லை. நேர வரவேணுமோ?” 

“உங்களுக்கு அவரை நல்லாய்த் தெரியுமோ?” 

“ஓ நல்லாய்த் தெரியும். ரொம்ப நல்ல பெடியன்” 

“நாங்கள் அவர் கந்தசாமி இல்லை என்று சந்தேகப்படு கிறம். நீங்கள் பாங்குக்கு உடனடியாக வந்தால் நல்லது” 

“என்ன மனேஜர் சொல்லுறீங்கள்?” 

தம்பிப்பிள்ளைக்குப் பேச்சு வரவில்லை. 

“மூன்று மாதங்களுக்கு முன் களவு போனதாக எங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட செக்கையும் அடகு ரிக்கற்றையும் அவர் கொண்டு வந்திருக்கிறார். எங்களுக்கு முறைப்பாடு செய்த நெல்லியடியைச் சேர்ந்த கந்தசாமியை எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் எங்கள் வங்கியின் நீண்டநாள் வாடிக்கையாளர்” 

“என்ன இது நெல்லியடியிலையிருக்கிற கந்தசாமி இல்லையா?” தம்பிப்பிள்ளை மூச்சுவிட மறந்து நின்றார். 

– வங்கியும் நீங்களும், தை 1981.

– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *