கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 6, 2026
பார்வையிட்டோர்: 81 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளிக்கூட விடுமுறை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அன்னை எனக்கு கடிதம் எழுதியிருந்தாள். எல்லோரது நலன்களையும் எழுதியிருந்தாள். பார்வதியக்கா வுக்கு இரண்டு யார் பட்டுப் புடவை எடுத்து வரும்படி ஆணையிட்டிருந்தாள். 

பள்ளிக்கூட விடுமுறைவிட்டு வீடு திரும்பும்போது மற வாமல், அந்த பட்டுப் புடவையை வாங்கிக் கொண்டேன். வீட்டுக்கு வந்ததும் வராததுமாக பார்வதியக்காவைப் பற்றித் தான் விசாரித்தேன். 

இரண்டு மூன்று நாட்களாக வீட்டுப் பக்கமே வரவில்லையென்றும் உடல் நலக்குறைவான காரணத்தால், தான் போய் பார்வதியைப் பார்க்கவில்லையென்றும் அன்னை கூறினாள். 

அன்னையிடம் விடை பெற்றுக்கொண்டு பார்வதி யக்காவின் வீடு நோக்கிக் கிளம்பினேன். 

“யாரது தம்பியா! வந்துட்டீங்களா?” என்றபடி உள்ளி ருந்து பார்வதியக்காதான் வந்தாள். அழகிய அவள் உருவம் அடியோடு மாறியிருந்தது. விசாலமான விழிகளில் ஒளியே யில்லை. வலது காலை நொண்டியபடி மெல்ல வந்தாள். 

“தம்பி, பரீட்சையெல்லாம் நல்லா எழுதுனீங்களா? ரொம்பவும் மெலிஞ்சிட்டீங்களே! நல்ல சாப்பாடு கிடைக்க வில்லையா?” 

எனக்கு அவள் கேட்டது ஒலிக்கவில்லை. அவள் வலது கால் பக்கமே பார்த்தேன். 

“ஒண்ணுமில்லே தம்பி! அன்னிக்கி பைப்படிக்குப் போன போது வழுக்கி விழுந்துட்டேன். காலில் அடிபட்டு விட்டது. எல்லாம் சரியாயிடும்; நீங்க ஒன்னும் யோசிக் காதீங்க, நேற்றுத்தான் எண்ணெய் பூசினேன் தம்பி!” 

அவள் பேசிக்கொண்டே உள்ளே சென்றாள். திரும்பி வரும்போது சுவையான தேனீர் கொண்டு வந்து தந்தாள். நான் அதை வாங்கிக் கொண்டு என் கையிலிருந்த சிறு பார்சலை அவளிடம் நீட்டினேன். அதில் இரண்டு யார் பட்டுப்புடவையுடன், தின்பண்டங்களும் இருந்தன. அதைப் பிரித்துப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள். கண்களில் எடுத்து ஒற்றிக் கொண்டாள், 

எனக்கு அக்காமார் யாரும் கிடையாது. என் பெற்றோர் களுக்கு நான் ஒரே பிள்ளை, தோட்டத்திலே வேலை பார்த்து வந்த பெற்றோர்களுக்கு என்னைப் படிக்கப் போட்டு, ஆளாக்க வேண்டுமென்று பெரும் ஆசை. தோட் டத்தில் கல்வி கற்று முடிந்ததும், பக்கத்திலேயுள்ள பட்டி னத்துப் பள்ளியொன்றில் சேர்ந்து கல்வி கற்று வந்தேன். 

பார்வதி எனது உடன் பிறவா தமக்கை. பக்கத்து லயத்து சாமிநாதனுக்கும், அவளுக்கும் மணம் நடந்த போதுதான் நான் அவளைப் பார்த்தேன். பார்வதி தோட் டத்துப்பெண். ஏழைதான்; ஆனால் அழகிலே செல்வி. அறிவும், பண்பும் இவள் முகத்திலே மிளிர்ந்ததைக் கண்டு வியந்தேன். மக்குகளுக்கெல்லாம் இப்படிப் பெண்கள் எங்கி கருந்துதான் கிடைக்கிறார்களோ! என்று அப்போது வியந்தேன். 

திருமணம் முடிந்து தம்பதிகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். எனது பெற்றோர் அவர்களை வாழ்த்தினர். அப்போது என் பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்கி, வாழ்த்துப் பெற்று எழுந்த பார்வதி ஒரு மூலையில் ஒதுங்கி நின்று கொண்டிருந்த என் முகத்தைப் பார்த்தாள். சில விநாடிகள் கவனித்தாள். அவளது விரிந்து சுழன்ற கண் களில் நீர் மல்கியதைக் கண்டு எல்லோருமே வியந்துதான் போனோம். 

சில நாட்களுக்குள்ளாகவே பார்வதி எங்கள் வீட்டைப் பெரிதும் கவர்ந்து விட்டாள். அன்னை மீது அளவற்ற அன்பை அள்ளிச்சொரிந்தாள். என் அன்னைக்கும் பெரு மகிழ்வு, எனக்கோ அக்காள் ஒருத்தி கிடைத்ததில் எல்லை யற்ற மகிழ்ச்சி. “தம்பி! தம்பி!!” என்று என்னை வளைய வந்த அவள் பாசப் பிடிப்பிலே திணறிப்போனேன். ஒருநாள் பார்வதியக்கா என் அன்னையிடம் கூறியதைக் கேட்டேன். 

“எனக்கொரு தம்பியிருந்தாம்மா, நம்ப ராஜா மாதிரியே; எனக்கு ஒரு தம்பிதாம்மா அவன். என் கண்ணுபோல பார்த்தேன். ஆனா….? போன வருஷம் காய்ச்சல்லே படுத்து அவன் செத்துட்டாம்மா? நம்ப ராஜாவை பார்க்கும் போதெல்லாம், அவன் நினைவுதாம்மா வருது….!” 

அவள் தேம்பினாள். அன்னை தேற்றினாள். எனக்கோ 

மணவிழா சமபத்தில் பார்வதியக்கா என்னைப் பார்த்து கண்ணீர் துளிர்த்ததன் காரணம் புரிந்தது. 

இரவு ஆகாரத்தை முடித்துக் கொண்டு படுக்கையிலே சாய்ந்து மெல்ல கண்களை மூடினேன். எங்கிருந்தோ ஒரு விகார சப்தம் வந்து என்னை எழுப்பியது. காதுகளை கூர்மையாக்கினேன். 

அது உடுக்கின் ஒலி. 

இரண்டு மூன்று உடுக்குகள் ஒன்று சேர்ந்து எழுப்பிய கர்ண கடூர சப்தத்தில் சுழன்று நின்றன. அவற்றுக்கிடையே சலங்கைகளின் நாதம் மிதந்து வந்தது. 

நான் அளவு மீறிய வியப்பால் வெளியே வந்தேன். பார்வதியக்காவின் வீட்டுப் பக்கமிருந்து வந்தது அந்த சப்தம். என் நெஞ்சு துடித்தது. 

“ம்… ரீங்காரி….ஓங்காரி…. மாரியாயி….! ஓடிவா….? தாயே….ஓடிவா….?” 

ஒரே மந்திரக் குரல். எழுந்து சப்தம் வந்த திசை நோக்கி ஓடினேன். 

பார்வதியக்காவின் வீட்டையடைந்த போது பெரிய நிகழ்ச்சியொன்றினைக் கண்டேன். பேரிடி விழுந்தது போலிருந்தது. 

அங்கே….! 

கிழிந்து ஓட்டை விழுந்த பாயின் மீது கூந்தல் அவிழ்ந்து கிடந்த நிலையில் பேயாக ஆடிக்கொண்டிருந்தாள் பார்வதி யக்காள், ஒளியிழந்த முகத்தால் ஜீவனற்ற உடலை.. வைத்துவெறி பிடித்து ஆடினாள். 

கையிலே உடுக்கு ஏந்தி, மயிர்கள் குத்திட்டு நிற்க, பம்பரமாய் ஆடிக்கொண்டிருந்த அந்த பூசாரியைப் பார்த் தேன். அந்த பூசாரிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த விபூதிப் பொட்டலம், சூடம், சாம்பிராணி பல்வேறு தின் பண்டங்கள் இத்யாதி-ஊதுபத்தியின் மணம் நிரம்பி விளக்கொளி மங்கி மங்கி வழிந்தது. உயர்ந்தோங்கிய விரிந்தது. அவற்றின் சிருஷ்டிகர்த்தாக்களான – தோட்டத்துப் பெரியவர்கள். கரங்களில் உடுக்கையேந்திய சிஷ்பர்கள். 

ஐயோ….! இதென்ன கொடுமை என்று உள்ளே பாய்ந் தேன். என்னைத் தடுத்து நிறுத்திய சாமிநாதன், மெல்ல என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

“ஜாமா….? இதென்ன கொடுமை….?” என்றேன். அவன் என் முகத்துக்கு நேராக முதுகைத் திரும்பிக்கொண்டு பயபக்தியால் உடம்பெல்லாம் ஆட பதிலளித்தான். 

“நான் என்ன செய்யிறது தம்பி….! எல்லாம் அந்த ஆத்தா செயல்….! பார்வதிக்கு பேய் பிடிச்சுக்கிட்டு இப்படி ஆட்டுகிறான். இப்பதான் விஷயம் புரிந்தது. பூசாரி வைச்சு பேய் ஓட்டுகிறோம்’ 

அன்றிரவு நான் தூங்கவேயில்லை. அழகே உருவான அக்காள்; அவலத்தால் பேயானவள். இரு உருவங்களும் மாறி மாறி என் மனத்தை வாட்டின. 

காலையிலே எழுந்த எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. இரவு நடந்த நிகழ்ச்சிகளின் சாயல் எதுவுமேயில்லை. ஒரு வேளை எல்லாம் கனவுதானா? 

பார்வதியக்காவின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டில் யாருமேயில்லை. இரவு கண்ட அவலம் அப்படியேயிருந்தது. மூலையிலே வளைந்து சுருண்டு படுத்திருந்த உருவத்தைக் கண்டேன்; எலும்புக்கூடாக பார்வதியக்கா கிடந்தாள். 

‘‘அக்கா….! அக்கா….!” 

அவள் விழித்தெழுந்தாள். கண்களை விரித்து கசக்கி விட்டுத் திரும்பினாள். தட்டுத்தடுமாறி எழுந்தாள். சுவரைப் பிடித்துக் கொண்டு தள்ளாடி வெளியே வந்தாள். 

வெளியே என்னைக் கண்டாள். 

என் கால்களைப் பிடித்துக் கொண்டாள். ஆதரவாக என் தலையை கோதினாள். ‘“அக்கா….!” என்று கண்ணீரோடு அழைத்தேன். 

“தம்பி….! இந்த அநியாயத்தை என்ன சொல்வேன்….? என் கொடுமையை பாருங்க தம்பி! எனக்கு பேய்பிடிச்சிருக் காம். பட்டமரத்து முனி பிடிச்சிருக்காம்..! இந்த பாவிக என்னைப் போட்டு அடிச்சிக் கொல்றானுக. என்னைப் பாருங்க தம்பி…. என் முகத்த பாருங்க…! எனக்கு பேயா பிடிச்சிருக்கு….?’’ 

நெஞ்சின் மீது கரங்களால் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டாள். 

“உண்மையை சொல்லுங்கக்கா. உங்களுக்கு என்ன தான் நடந்தது….?” 

“தம்பி அண்ணைக்கு ஒங்கக்கிட்டே பைப்படியிலே விழுந்து அடிபட்டேன்னு சொன்னேனே…. அதுதான் தம்பி நடந்தது. அன்னைக்குபட்ட அடி பெரிய அடி தம்பி….! பெரிய அடி ! கால் சரிஞ்சே போச்சி. வலி பொறுக்க முடியாம நடுங்கினேன். அன்னைக்கி ஒங்கக்கிட்டகூட உண்மையை மறைச்சேன். இந்தப் பாவிக எனக்கு பேய் பிடிச்சிருக்கின்னு பூசாரியை வைச்சு ஆட்டுறானுக. எவ்வளவோ சொல்றேன்…… என்னைப்போட்டு வதைக்கிறானுக தம்பி! என் ஒடம்பப்பாருங்க…. ஒடம்ப பாருங்க….!”

அவள் ஆவேசத்தில் எழுந்தாள். மேலாடையை நகர்த்தி ரவிக்கையை கிழித்தெறிந்தாள். தன்னையே மறந்து சிறிதும் வெட்கமில்லாமல் மேலுடம்பை சுற்றிச் சுற்றிக்காட்டினாள். 

சாட்டையடிகள் பட்டு இரத்தம் கட்டி தழும்பேறிப் போயிருந்தது. 

எனக்கு மயக்கம் வந்தது. சாய்ந்து கீழே விழப் போனேன். அப்போதுதான் உள்ளே நுழைந்த சாமிநாதன் என்னை தாங்கிப் பிடித்தான். அவனையடுத்து எங்கோ வெளியே சென்றிருந்த அந்த மனிதப் பேய்கள் உள்ளே நுழைந்தன. பார்வதியக்காளின் வெறிபிடித்த கோலம் பூசாரியின் வெளிறிய கண்களுக்குப்பட்டது. அவனது கரம் சாட்டையைத் தூக்கியது. உடுக்கைகளை எழுப்பி சிஷ்யர் கள் அதில் மொய்த்து நின்றனர். 

“அடே முனி……..? மறுபடியும் வந்துட்டாண்டா– ஓட்டுடா – அம்மா மாரி தாயே….! ஓடி வா……..!” 

பார்வதியக்காவை கீழே தள்ளி ஓங்கியோங்கி அடித்தான் பூசாரி. 

மயக்கம்வரும்வரை அடித்தான். நான் உணர்வு பெற்று எழுந்தேன். பொங்கினேன். பாய்ந்து சென்று பூசாரியின் கரத்தைத் தடுத்து நிறுத்தினேன். என்னை கீழே தள்ளி தனது கரத்தை மேலே உயர்த்திப் பிடித்தான் பூசாரி. 

“அடே….! இவனுக்கும் பேய் பிடிச்சிருக்கடா. முனி புடிச்சிட்டான். கொண்டுவா. உடுக்கை! மாரி தாயே ஓடிவா.” 

என் பிஞ்சு உடம்பிலும் சில அடிகள் விழுந்தன. காலை உடம்பு வலியோடு மெல்ல எழுந்தேன். அன்னை பக்கத் திலே அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த முகத்தை கண்ணீர் மறைத்து சோகம் கப்பியிருந்தது. 

எங்கோ பறையொலி கேட்டது. 

அதைத் தொடர்ந்து அழுகையும் புலம்பலும் ஒப்பாரியும் எழுந்தது. 

“என்னம்மா…அது?” என்றேன் என் நெஞ்சு வேக. மாக அடித்துக் கொண்டது. அவன் கரத்தை சுட்டி பார் வதியக்காவின் வீடு நோக்கிக் காட்டினாள். எனக்குப் புரிந்து, விட்டது. 

“அவ போயிட்டாப்பா….! பார்வதி போயிட்டாப்பா! பாவிக அடிச்சே கொன்னுட்டானுக. உடம்பெல்லாம் ஒரே இரத்தக் காயம். பிழைப்பாளா….?” 

என் இதயத்தை ஈட்டிகள் பிளப்பது போலிருந்தது. நொந்த உள்ளத்திலேயிருந்து நைந்த சொற்கள் என்னை மீறி வந்தன. 

“அக்கா….! காயம் உங்க உடம்பிலே மட்டுமல்ல எங்க சமுதாயத்திலே கூடத்தான். உடல் காயத்தால், உள்ளக் காயத்தால் நீங்க ஒரேயடியாக செத்துட்டீங்க! இந்த மூட சமுதாயம் அணு அணுவாக சாகிறது….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *