கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்!
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 89
(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிற்றிதழ்கள் என்ன தலையங்கங்கள் எழுதினாலும், கும்பமுனி பதவிப் பிரமாணம் செய்விக்கப்பட்டு எம்.பி. ஆனது ஆனதுதான். கோமாளி நடிகர், கடத்தல்காரர், களவு – கற்பழிப்பு – கொலைக் குற்றங்கள் சாட்டப்பட்டவர் எம்.பி ஆனால் உங்களுக்கு சகித்துக் கொள்ள முடியும். ஆனால் கும்பமுனி போன்ற முதுபெரும் நவீனத்துவ எழுத்தாளர் எம்.பி. ஆனால் பொறுக்காது என்றால் எப்படி? நேர்காணல் வேண்டாம், வாழ்த்து வேண்டாம், அட்டைப் படம் வேண்டாம். ஆனால் வயிற்றெரிச்சல் படாமல் இருக்கலாம் அல்லவா?
கும்பமுனி எம்.பி என்றொரு பித்தளைத் தகட்டைத் தனது மேல்துண்டால் துடைத்துக்கொண்டிருந்தார் கண்ணுபிள்ளை. பித்தளைத் தகடு முன்படிப்புரை வாசலில் நின்ற பனைமரத்தூணில் அறையப்பட்டிருந்தது.
கும்பமுனி பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கும் முன்பான பரம்பரை வீட்டை இதுவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தியது நினைவில் இல்லை. முற்றம், முக்கோணத்தின் – சமபக்க முக்கோணம் எனக் கொள்க – முதல் தலையில் தெருவாசல் எனில் மற்ற இரு தலைகளும் வீட்டின் முகப்புப் படிப்புரைக் கோடிகள், தென்வடலாக, அதாவது கிழக்குப் பார்த்த வீடு. களிமண் குழைத்து, கை கையாக உருட்டிப் பிடித்து அடைந்த பிள்ளைமண். பிள்ளைமண் எனில் கட்டைமண். அதாவது குட்டிச்சுவர். அங் கிருந்து கிளைத்ததுதான் கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற பழமொழியும். ‘நீ குட்டிச்சுவராகப் போவாய்’ என்றெவரும் சபித்தால் அதன் பொருள் நாசமாய்ப் போவாய் என்பது.
முற்றத்தில் இரண்டு நெடிது வளர்ந்த, தலை மூத்த தென்னம் பிள்ளைகள். பிள்ளைப்பட்டம் மரங்களில் தென்னைக்கு எனில் பறவைகளில் கிளிக்கு, பிராணிகளில் அணிலுக்கும் கீரிக்கும். அவ்விரு தென்னம்பிள்ளைகளில் ஏறித் தேங்காய் பறிக்க எந்தத் தேங்காய் வெட்டுக்காரனுக்கும் துணிச்சல் இல்லை. மேலும் தொலித்துப் போட்டால் கொய்யாப்பழ தரத்தில் இருக்கும் தேங் காய், பிள்ளைக்கு ஆறு என வெட்டுக்கு விழும். கள்ளியங்காட்டு நீலி மீதும் மண்டைக்காட்டு பகவதி மீதும் மேலாங்கோட்டு அம்மன் மீதும் ஆணை, தேங்காயைத் தொலித்து உடைத்தால் முறி யினுள், திருவலைக்குத்தி நுழையவே நுழையாது. முறியை உடைத்துக் கீறி, துண்டை அம்மிமீது வைத்து, குழவியால் சதைத்து சதைக்கும் வேகத்தில் தேங்காய்க் கீற்று மறுபடியும் துள்ளி ஏறும் மரத்துக்கு – கண்ணுபிள்ளை கறிக்கு அரைப்பார். மேலும் பத்து ரூபாய்க்கு நான்கு என விற்கும் பன்னிரண்டு காய்களுக்கு சந்தை விலை முப்பது ரூபாய். அதில் வெட்டுக்கூலி மரத்துக்குப் பத்து என இருபது ரூபாய் கொடுத்தால் கட்டுபடி ஆகுமா?
எனவே தேங்காய் வெட்டுவது கிடையாது. எப்படியும் நெற்றுப் பட்டால் தேங்காய் பூமியில் தானே வீழ்ந்தாக வேண்டும். ஆர்க்கிமெடீஸ் தத்துவப்படி.
“தேங்கா நெத்து உச்சியிலே விழுந்து ஒரு நா சாகப்போறேரு என்றார் தவசிப்பிள்ளை ஒருநாள். மீண்டும் வாசகருக்கு நினைவூட்ட; தவசிப்பிள்ளை என்பது பெயரல்ல; அவர் பெயர் கண்ணுபிள்ளை. சமையல் செய்யும் பிள்ளைமாருக்கு தவசிப் பிள்ளை என்பதும் கணக்கு எழுதும் பிள்ளைமாருக்கு கணக்குப் பிள்ளை என்பதும் குமஸ்தா வேலைபார்க்கும் பிள்ளைமாருக்கு குமஸ்தாப்பிள்ளை என்பதும் பலசரக்குக் கடை வைத்திருக்கும் பிள்ளைமாரை செட்டிப்பிள்ளை என்பதும் வழக்கு.
ஆகா கா என்று சிரித்தபடி கும்பமுனி சொன்னார். “வே, இந்தத் தேங்கா தலையிலே விழுந்தா அவயான் கூடச் சாகாது.”
ஆனால் முன்படிப்புரைக் கூரையின் சில ஓடுகள் உடைந் திருந்தன – தேங்காய் விழுந்தும், தென்னைமடல் விழுந்தும், குண்டிமட்டை விழுந்தும், தென்னம்பாளை விழுந்தும்.
படிப்புரை, முகப்பில் பணி செய்த ஆளுயர முழுப் பனைமரத் தூண்களும் இரு கையிலும் ஓராள் உட்காரும்படியான கைப்பிடிச்சுவர் திண்ணையும் கொண்டது. பின்பு வீட்டு நடை. நுழைந்தால் மங்களா அல்லது கூடம் அல்லது தாய்வீடு அல்லது செம்மொழியில் ஹால் என்றும் அழைக்கப்படும் லிவ்விங் ரூம். இடதுபுறம் சாய்ப்பும் கக்கூசும். பலமுறை கும்பமுனி தமக்குள் கேட்டதுண்டு, கக்கூசு என்பது எம்மொழிச் சொல் என? வலப் புறம் அரங்கு எனப்படும் உக்கிராணம். சாய்ப்பு பேற்று முறி எனில் உக்கிராணம் தாம்பத்ய முறி. கும்பமுனி தலையெடுத்த பின் ரண்டும் பயனற்றுப் போய்விட்டன. மங்களாவைத் தாண்டி நேராகச் சென்றால் அடுக்களை, தொடர்ந்து புறவாசல்.புறவாச லில் இடப்புறம் விறகுப்புரை, வென்னீர் போடும் கிடார அடுப்பு, குளிமுறி.
வலப்புறம் ஆட்டுரல் பதிக்கப்பெற்ற மேடை, அம்மி பதித்த மேடை, கல்லுரல், குப்பிப் பூண் உலக்கை, தீட்டும் உலக்கை, திருவை, அற்றத்தில் ஓராள் கால் நீட்டிப் படுக்கும் தோதில் நீண்ட படிப்புரை, புறவாசலைத் தாண்டினால் நாழிக்கிணறு.
கும்பமுனியின் தாத்தா கட்டிய வீடு. வெள்ளையடித்தே வெகுகாலம் ஆயிற்று. ஒரு காலத்தில் பொங்கலுக்கு வெள்ளை அடிப்பதும் முன்வாசலில் பொங்கல் விடுவதும் மூடநம்பிக்கை என்பதவர் இறைக் கொள்கையாக இருந்தது.
மறுபடியும் முன்வாசலுக்கு வருவோம். இரண்டு தென்னம் பிள்ளைகள் அன்றியும் ஒரு பிச்சிப்பூ மூடு – இந்த மலரை இலக் கியம் பித்திகை, செம்மல், தளவம், செம்முல்லை,தளா, தளவு என்கிறது. கவிமணி, “பின்னி முடித்திடம்மா, பிச்சிப்பூ சூடி டம்மா” என்றும் ஆசிய ஜோதியில் புத்தரைக் காண வீட்டுக்குள்ளி ருந்து ஓடிவந்த பெண்களைச் சொல்லும்போது,
“கன்னியொரு மகள் மையெழுதி இரு
கண்ணும் எழுதுமுன் ஓடிவந்தாள்
பின்னுமொரு மகள் கூந்தலிலே சூடும்
பிச்சிமலர் கையில் சுற்றி வந்தாள்”
என்றும் பாடினார். கும்பமுனியின் வியப்பு, செம்மல் என்றழைக் கப் பெறும் பிச்சி, மராத்தியில் ஏன் செமேலி என்றழைக்கப் படுகிறது என்பதில் பலகாலம் நிலை கொண்டிருந்தது. வீட்டு வாசலில் பிச்சி மூடு இருந்தால் பாம்பு அடையும் என்று பல காலம் கண்ணுபிள்ளை சொல்லிப் பார்த்தார். யார் பொருட்படுத்துவது?
மேலும் முற்றத்தில் காய்க்காத நாரத்தை. ஒளவை கூழைப்பலா தழைக்கப் பாடியது போல, கும்பமுனியின் மலட்டு நாரத்தை காய்க்கவும் பாடவேண்டும். மனமே மலடாகிப் போயிற்று மானுடர்க்கு, நாரத்தை மலடானால் என்ன என்பார் கும்பமுனி. கொத்தாய்க் காய்க்கும் கொழும்பு சாட்டை முருங்கை ஒன்றும் நின்றது. தவசிப் பிள்ளைக்கு அதன்மீது தனியான பாசம். குழம்பில் பாதிக்காய் போட்டால் போதும், நல்ல வாசம், சோற்று முருங்கைக்காய். பசிய கீரை அவ்வளவு இனிப்பாக இருக்கும் என ஏகமாகப் பாராட்டுரை படிப்பார்.
ஏற்கனவே கும்பமுனிக் கதைகளில் மேற்சொன்ன தகவல் கள் மாற்றி எழுதப்பட்டிருந்தால் தற்போது திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள். கதாசிரியன் நினைத்தால் வீட்டை எப்படி வேண்டு மானாலும் இடித்து மாற்றிக் கட்டலாம். மேலும் இந்தக் கதாசிரியனோ, கதைசொல்லியோ, படைப்பாளியோ ஏதோ ஒரு இழவு – தாலியறுப்பு… அறுபது வயதாகியும் வாடகை வீட்டில் தான் குடியிருப்பு. புத்தகங்கள் புலம்புகின்றன, தமக்கோர் மரி யாதையான இடம் வழங்கப்படலாகாதா என! அதற்கு இன்று என்ன செய்ய இயலும்?
கும்பமுனி எம்.பி. எனும் பித்தளைத் தகட்டைத் துடைத்து விட்டு உள்ளே நுழைந்த தவசிப்பிள்ளை சொட்டுப்போலத் தேங்காய் எண்ணெய் கொணர்ந்து தகட்டில் தடவினார்.
“வே, கண்ணுபிள்ளை, தேங்கா எண்ணெய் லிட்டர் நானூற்றிப் பத்து ரூவாயாக்கும். நிதிமந்திரி காலம்பற பிரஸ் மீட்லே சொன்னதைக் கேட்டேருல்லா? விலைவாசிப் புள்ளி 37.79 சதமானம். மார்ஜினல் இன்க்ரீஸ் தான். இன்னும் ஆறு மாசத்திலே கட்டுப்பாட்டுக்கு வந்திரும்னு”.
“ஆறு மாசத்திலே யாரு இருக்காளோ, யாரு சாவுகாளோ?” “அதுக்காச்சுட்டி பித்தளைத் தகட்டுக்கு எண்ணெ தடவ முடியுமா?”
“நீரு ஒண்ணு..நம்ம எம்.எல்.ஏ.க்கு மகன் தன் கார் டயர் நாலுக்கும் தெனமும் முக்கால் லிட்டர் தேங்கா எண்ணெ தடவுகானாம்…”
“அவன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மகன் ஓய். நம்ம அப்பிடியா?”
“என்னத்துக்கு இப்பிடி நக்கித்தனம் காணிக்கேரு? முன்ன தான் தாரித்திரியம். இப்பம் சம்பளம், பஞ்சப்படி எல்லாமாட்டு துட்டு நடமாடுகுல்லா?”
”அது சரி… நாளைக்கு பதவி இல்லேண்ணா மிச்சமுள்ள காலத்துக்கும் வேண்டாமாடே?”
“அதுக்கு இன்னும் நூறு வருசம் இருக்கப் போறேரா? அதுமில்லாம, எம் பியா இருந்தா, எந்தப் பழியும் ஏக்காம, எவனுக்கும் முந்தி விரிக்காம, கடைசியிலே கணக்குப் பாத்தா பத்திருவது கோடிக்குப் பஞ்சமில்லேங்கானுகோ! நீரு கேட்டுக் கூட வாங்காண்டாமாம். அது பாட்டுக்கு உள்ள வீதம் தன்னப் போல வீட்டுக்கு வந்து சேருமாம்…”
“அது எப்பிடி வே? எவனாம் என்னத்தையாம் எழுதுவான்.. நீரு அதைப் போட்டு நம்புகேரே!”
“உள்ளதுதாம் பாட்டா… பஞ்சாயத்து நெம்பராட்டு இருந்தாலே அஞ்சு வருசத்திலே நாலஞ்சு லெச்சம் தேத்தீருகான். அவனவன் தண்ணி தெளிஞ்சாப்ல தெளிஞ்சிருகான். போட்டுப் பேசுகேரே! பின்னே, தொகுதி மேம்பாட்டு நிதிண்ணு அஞ்சு கோடி உண்டும்லா? அதுல ரெண்டு பஸ்டாப்பு. ரெண்டு சுடுகாடு கெட்டி, பேரெழுதிய கல்லு பதிச்சிற்றா, மிச்சப் பணம் நமக்குத் தாலா?”
“சர்க்காரியா கமிசன் மாதிரி கண்ணுபிள்ளை கமிசன் ஒண்ணு போடச் சொல்லீருவோம். கடுத்த பத்தியமாட்டுல்லா இருக்கு!”
“அதுக்கு மத்ததுலே மறுவு வேண்டாமா? உமக்கு பல்லாக் குலே போகப்பட்ட யோகம். நமக்கு பல்லாக்கு செமக்கப்பட்ட யோகம்….என்னத்தைச் சொல்ல?”
“தாய்ளி, திருக்குறளாட்டுல்லா வருகுடே!”
“பாட்டா வேற ஒரு காரியம். எல்லா பயக்களும் தொகுதி மேம்பாட்டு நிதியிலே ஒண்ணு பஸ்டாப்பு கெட்டுகான். இல் லாட்டா சுடுகாடு கெட்டுகான். வேற ஒண்ணுமே மேம்பாட்டுக் குக் கெடையாதா? நீராவது வித்யாசமாட்டு வேற என்னமாம் செய்யும்.”
“எனக்கு ரெண்டு காரியம் மனசிலே இருக்கு பாத்துக்கோ!”
“என்னது பாட்டா?”
“தாழக்குடி போற பாதையிலே, சின்னப்பிள்ளையிலே நாம மோருத்தண்ணி வேண்டிக் குடிச்ச மோருமடம் உண்டுல்லா? அது இடிஞ்சு கெடக்கு பாத்துக்கோ. அதை எடுத்துக் கட்டணும். பின்னே நம்ம ஆலமூட்டுச் சொள்ளமாடனுக்க ஓலைக்கூரையை மாத்திட்டு காங்கிரீட் போடணும். மூணாமத்த காரியம் ஒண்ணும் உண்டும். வீராணமங்கலத்திலே நாம படிச்ச பள்ளிக்கொடத்துக்கு பொம்பளைப் பிள்ளையளுக்கு ஒரு மூத்திரப்பெரை கெட்டணும்”
“அதுக்கு, படிக்கதுக்கு பிள்ளையோ வராண்டாமா? கூடிய சீக்கிரம் அதை மூடிட்டு, கோப்பரேட்டிங் பேங்குக்கு உரக் கெடங்கு ஆக்கப் போறாளாம்!”
“அதும் அப்பிடியா? அப்பம் அது வேண்டாம்கே!”
“அதுக்குப் பதிலா, நம்ம பிள்ளையோ சாத்தாங் கோயிலுக்குப் பொறத்த புளியமரத்து மூட்லே இருந்து குலாம் களி, கழுதை, ரம்மி,நாயும் புலியும், தாயம் எல்லாம் போடு காள்ளா… மழைக்கும் வெயிலுக்கும் கஷ்டமாட்டு இருக்கு.. அதுக்கு ஒரு காங்க்ரீட் கெட்டடம் கெட்டிக் குடுக்கச் சொல்ல லாம்… பாட்டா கோவப்பட மாட்டேள்ணா ஒரு சம்சயம் உண்டும், கேக்கேன்…”
“சும்ம கேளுடே! ரொம்பத்தான் படம் வய்க்கே…தினசரி காலம்பற இனிமேல் கேள்வி நேரம் ஒதுக்கீரலாம்.”
“இப்பம் இந்த மராமத்துத் துறை எல்லாம் மூடிட்டாளா? எங்க பாத்தாலும் எம்.எல்.ஏ.யும் எம்.பி.யும் பஸ்டாப் கெட்டுகான்.”
“மூதேவி, அவனவன் குடிக்கப்பட்ட கஞ்சியிலே கண்டாங் கிப் பாச்சாவைத் தூக்கிப் போடுகேரே!”
“அதுக்கு கஞ்சி குடிச்சாப் பரவால்லே… பாலடைப் பிரதமன்லா பாட்டா குடிக்கானுவோ!”
தவசிப்பிள்ளை தெருவில் இருந்து நொச்சிச் செடிப் படல் கதவைத் தள்ளித் திறந்து இறங்கி வந்த காய்கறிக்காரியின் பனை யோலைக் கடவத்தை ஒரு கை பிடித்து இறக்கினார்.
“பாட்டா கத்திரிப் பழம் இருக்கு, வேண்டட்டா?”
“என்னத்துக்கு உரிச்சுத் திங்கவா?”
“இல்ல பாட்டா, சுத்தியலு வச்சுத் தல்லி, வித்துப்போக அலசிக் கழுவி, புளி விட்டு அவிச்சு, காறல் போக, புளிக்கறி வய்க்கலாம். கூட ஒரு பொரிகடலைத் துவையலும் அரைப்பேன்.”
“என்ன எளவாங் கொண்டாடு! செறுக்கி விள்ள, ஒரு பார்லிமெண்ட் மெம்பர்கிட்டே கேக்கப்பட்ட கேள்வி?”
வாசகர் வசதியைக் கருத்தில் கொண்டு, ஈங்கோர் ஒத்தி வைப்புத் தீர்மானம். அதெப்படி சற்றே சாய்வான சூரல் நாற் காலியில் காலைத் தூக்கி வைத்துக்கொண்டு உள்மூலம் பரா மரித்து, வெற்றிலை குதப்பிய கும்பமுனி நாடாளுமன்ற உறுப் பினர் ஆனார் என்று நீங்கள் யோசித்து, புனைவு இலக்கியத்தில், அதுவும் பின்னவீனத்துவக் கதையாடலில் எல்லாம் சாத்தியம் தான் எனும் முடிவுக்கு தள்ளப்பட்டு இருப்பீர்கள். பனைமரம் பாட்டுப் பாடலாம் எனில், பரட்டை நாய் பட்டினத்தார் பாடல் சொல்லிக் குரைக்கும் எனில், மாக்கிறித் தவளை மந்தகாசம் செய்தவாறு, ‘மஞ்சள் தான் எனக்குப் பிடித்த சாயம்’ எனப் பாடக் கூடுமெனில், கும்பமுனி எம்.பி. ஆக இயலாதா? அதுவும் யாருக்கு வேண்டுமானாலும் கோளடிக்கிற மாநிலங்களவை எம்.பி அல்ல, மக்களவை எம்.பி.கும்பமுனியைக் குறுக்குவழி யில் தந்தை, தாய், மாமன், மச்சான் கெடுபிடியில் மாநிலங் களவைக்கு அனுப்ப எமக்கு உடன்பாடில்லாத காரணத்தால் சில தகவல்கள்…
2008 ஏப்ரலில் நடந்த நாவலந் தீபகற்பத்தின் பொதுத் தேர்தலில் கும்பமுனி போட்டியிட்டார். எப்படி அவர் அரசிய லுக்கு வந்தார், என்ன கட்சி, சாதிப் பெரும்பான்மை உண்டா, பணபலம் உண்டா, மோருபாய் கல்பானி குழுமத்தின் ஆதரவு இருந்ததா என்பதை எல்லாம் நீங்கள் நம்பச் செப்புவது எமது இலக்கியக் கடமை.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் வழக்கமான தேர்தல் தான். அது வந்து கொண்டே தான் இருக்கும். எல்லா இந்து, இஸ் லாமிய, கிறித்துவப் பண்டிகைகள் போல. ஒரே வேறுபாடு, மற்ற பண்டிகைகள் எனில் அவரவர் சொந்தக்காக செலவு செய்ய வேண்டும். பண்டம், பலகாரம், துணிமணிகள், பட்டாசு என தேர்தலோ எனில் நீங்களே அறியாமல் உங்களிடம் களவாடிய செல்வத்தை உங்களுக்காக எவரோ செலவு செய்வார். அன்பளிப் பாகக் குடம், வெள்ளிக் குங்குமச் செப்பு, வேட்டி சட்டை புடவை, பொற்காசு, காக்கி நிறக் கவரினுள் தேசப்பிதா உங் களைப் பார்த்து நகைக்கும் ஊதா நிறமுள்ள காகித நாணயம் வாக்குக்கு ஒன்று என, சீமைச்சாராயம், தாலிக்குத் தங்கம், வெளிநாட்டு உள்பாடி…
மூன்று வலுவான அணிகள் தேர்தலில் கடும் போட்டி. முதலணி தர்மத்தாய், வெளுத்த கத்ரீனா தலைமையில் -பாரத் மாதா கீ ஜே ஆளும் கூட்டணி. இரண்டாவது கூட்டணி பீஷ்மப் பிதாமகர் தலைமையில் அமைந்த ஜெய்ராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம் -ஆண்ட கூட்டணி. மூன்றாவது பூலோக வீராங்கனை சாலன் ராணிஇந்துஸ்த்தான் ஹமாரா – தலைமையில் அமைந்த ஆள ஆசைப்பட்ட கூட்டணி. சாலன்ராணியின் கீழே நடுசாரிக் கட்சிகள் நான்கு, கொங்கண தேசம், துளு நாடு, முப்பது மாநிலங்களின் பெயரில் தொடங்கி மோர்ச்சா, பரிஷத், சேனா, மண்டல் என முடியும் பெயரிலுள்ள நூற்றிருபது கட்சிகள். மேல் மூன்று அணிகளிலும் இடம் இல்லாமற் போனவர் எல்லாம் சேர்ந்து நான்காம் அணியொன்று அமைத்தனர். யேல் பல்கலைக் கழகத்தில் படித்தவரும், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரும் விதர்பாவில் பிறந்தவரும், பஞ்ச கச்சம் வேட்டி கட்டி கொச்சையாகத் தமிழ்பேசும் தமிழருமான வைகுந்த நாத சுவாமி தலைவராக அமைந்தார். கழகம் என்று ஈற்றுச் சீர் கொண்ட – இது வெண்பா இலக்கணத்தில் ஈற்றசையான நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்ப்பாடுகளில், பிறப்பு எனும் வாய்ப்பாட்டு வகையில் படும் கட்சிகள் இருபத்து ஆறும் நான்காவது அணி. மேற்சொன்ன இருபத்தாறு கழகங்களில் நமது மக்கள் எம்.ஜி.ஆர் கழகம், நமக்கு நாமே எம்.ஜி.ஆர் கழகம், எங்கள் வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர். கழகம், மாட்டுக்கார வேலன் எம்.ஜி.ஆர். கழகம் என்பவை அடங்கும். வைகுந்த சுவாமியின் இடங்கையாக எம்.ஆர்.மாரப்பனும், வலங்கையாக பக்தவத்சல நாயுடுவும். இடங்கை கட்சியில் பதினேழு வயது வரை கும்பமுனி இளைஞரணியில் இருந்தார். அப்போது அவர் பூரண வளர்ச்சி பெற்றிராத லார்வா பருவத்தில் இருந்தார். அவரது கட்சியின் பெயர் நா.ந.மு.க விரித்தால் நாட்டு நடப்பு முன்னேற் றக் கழகம் என்று பெயர் தரும்.
572 தொகுதிகளிலும் நான்காவது அணியும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். காப்பீட்டுத் தொகையை சீமைச்சாராயக் குழுமம், ரஜாய் புல்லையா நிறுவனம் வழங்கியது.
கும்பமுனி வாழ்கிற குமரி பகவதி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய செந்தில்வேள் பாராளுமன்றத் தொகுதியில், நான்காம் அணி வேட்பாளராக நா.ந.மு.க வேட்பாளர் அறிவிக்கப் பட்டபோது, அவருக்கு டம்மியாக மனுக்களில் கும்பமுனியின் கையெழுத்து வாங்கி, தாக்கல் செய்தனர்.
அதிகாரப்பூர்வமான நான்காவது அணி வேட்பாளர் கடைசி நேரத்தில் விலகிக்கொள்ள – சாதிக் காரணம்தான், வேறென்ன – கும்பமுனி அதிகாரபூர்வ வேட்பாளரானார். அவரது சொத்துக் கணக்கு குடியிருக்கும் பரம்பரை வீடு, பத்துமரக்கால் விதைப் பாடு வயல் மடத்தாம் பத்தில், கூட்டுறவு வங்கியில் நிலுவைத் தொகை ரூ.117-64, சட்டை வேட்டிகள். கோவணங்கள், கொழும்புக் குடை.
ஆங்காங்கே நவீன தமிழிலக்கிய நாயகன் எனும் தலைப்பில், கலைந்த சிகையும் பொக்கைச் சிரிப்புடன் கும்பமுனி முகமும் அவர் சின்னமான சுருட்டும் காட்டி போஸ்டர்கள், தட்டிகள், பேனர்கள் காட்சி தந்தன. ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒலிபெருக்கி கட்டிய மூன்று ஆட்டோக்கள் பிரச்சாரம் செய்தன. கும்பமுனி அலைந்து திரிந்து வாக்குப் பொறுக்கும் பருவம் தாண்டிப்போன படியால் தொகுதியில் இருந்த அனைத்துச் சாதிச் சங்கங்களின் உறுப்பினர் முகவரி வாங்கி ஆயிரக்கணக்கில் அஞ் சலட்டைகள் எழுதிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவருக்கும் மேலும் இருவருக்கும் அஞ்சலட்டை இலக்கியவாதிகள் எனும் (அப) கீர்த்தி உண்டு. நாகர்கோயில் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலட்டை தட்டுப்பாடாகி, திருநெல்வேலிக்கும், திருவனந்த புரத்துக்கும் ஆள் அனுப்ப வேண்டிதாயிற்று.
தேர்தல் நடந்து வாக்களித்தவர் விபரம்:
தொகுதியில் மொத்த வாக்காளர் 6,73,649
வாக்குச் சாவடிக்கே போகாதவர் 4,21,108
பதிவான சாக்குகள் (சாவடிகளில்) 2,52,541
செல்லாத வாக்குகள் (கல்வி சிறந்த மாவட்டம்) 41,736
போஸ்டல் வாக்குகள் 1,442
பதிவான வாக்குகளில் செல்லும் வாக்குகள் 2,12,247
வேட்பாளர் பெற்ற வாக்குகள் விபரம்:
வைகுந்த சுவாமி வட்டணி வேட்பாளர் கும்பமுனி 44,349
தர்மத்தாய் வெளுத்த கத்ரீனா கூட்டணி 43,238
பீஷ்மப் பிதாமகர் கூட்டணி 41,117
பூலோக வீராங்கனை சாலன் ராணி கூட்டணி 39886
சுயேச்சைகள்:
ஆறுமுகப் பெருமாள் நாடார் 6,739
சங்கரநயினார் பிள்ளை 5,254
முத்துக்கருப்பத் தேவர் 2,153
ராமசாமிக் கோனார் 948
ஜான் செபாஸ்டியன் தங்கராஜ் 9,865
அமானுல்லா கான் 9,865
லூர்து கிறிஸ்டி மரியாள் 11,201
கிருஷ்ணமணி ஐயர் 13
கும்பமுனி 1111 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், இலக்கியப் பெரும் இதழ்கள், சிற்றிதழ்கள் என்ன தலையங்கங்கள் எழுதினாலும், கும்பமுனி பதவிப் பிரமாணம் செய்விக்கப்பட்டு எம்.பி.ஆனது ஆனதுதான். கோமாளி நடிகர், கடத்தல்காரர், களவு – கற்பழிப்பு – கொலைக் குற்றங்கள் சாட்டப்பட்டவர் எம்.பி ஆனால் உங்களுக்கு சகித்துக் கொள்ள முடியும். ஆனால் கும்பமுனி போன்ற முதுபெரும் நவீனத்துவ எழுத்தாளர் எம்.பி. ஆனால் பொறுக்காது என்றால் எப்படி? நேர்காணல் வேண்டாம், வாழ்த்து வேண்டாம், அட் டைப் படம் வேண்டாம். ஆனால் வயிற்றெரிச்சல் படாமல் இருக்கலாம் அல்லவா?
கோமாளி நடிகர், கடத்தல்காரர், களவு – கற்பழிப்பு- கொலைக் குற்றங்கள் சாட்டப்பட்டவர் எம்.பி ஆனால் உங்களுக்கு சகித்துக் கொள்ள முடியும். ஆனால் கும்பமுனி போன்ற முதுபெரும் நவீனத்துவ எழுத்தாளர் எம்.பி. ஆனால் பொறுக்காது என்றால் எப்படி? நேர்காணல் வேண்டாம், வாழ்த்து வேண்டாம், அட் டைப் படம் வேண்டாம். ஆனால் வயிற்றெரிச்சல் படாமல் இருக் கலாம் அல்லவா?
எப்படி பெர்முட்டேஷன் – காம்பினேஷன் போட்டுப் பார்த் தும் நான்காவது அணிக்கு அரசு அமைக்கும் வாய்ப்பு கிட்ட வில்லை. எதிர்க்கட்சி வரிசையில் கடைசிப் பெஞ்சில் கும்ப முனிக்கு இருக்கை தரப்பட்டது.
கடைசி பெஞ்சில் இருக்கை அமைந்த உறுப்பினருக்கு கொட்டாவி அல்லது ஏப்பம் விடுவதற்கு மட்டுமே வாய்திறக்க வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தமது அணித் தலைவர்கள் கை தூக்கும்போது தாராளமாகக் கை உயர்த்தலாம்.
கும்பமுனிக்கு உதவியாளர், மெய்காப்பாளர், தோட்டக் காரர், தவசிப்பிள்ளை, துணி துவைப்பவர், முதுகு தேய்ப்பவர், சந்தைக்குப் போகிறவர் என்ற பலவற்றுக்கும் உற்ற சொந்தமும் ரத்த பந்தமும் ஆன கண்ணுபிள்ளை மாத்திரம்தான் என்பதால் எல்லா இந்திரப்பிரஸ்த பயணங்களிலும் அவர் உடன் இருந்தார். சுருக்கமாகச் சொன்னால் கும்பமுனிக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது. கண்ணுபிள்ளைக்கு இல்லை. என்றாலும் தான் அவைக்கு வர முடியாமற் போகும் தருணங்களில் தனக்குப் பகரமாக கண்ணுபிள்ளை தனது நாற்காலியில் அமர அனுமதிக்க வேண்டும் என்ற தனிநபர் தீர்மானம் ஒன்று கொண்டுவந்தார். வெளிநாட்டுப் பயணங்களின் தனது சொந்த மனைவி பாஸ் போர்ட்டிலும் விசாவிலும் மாற்றான் மனையாட்டியைக் கூட்டிக் கொண்டு திரிந்த முன்மாதிரிகளையும் தனது தீர்மானத்தில் எடுத்து ஆண்டிருந்தார் கும்பமுனி.
சபாநாயகர் பாரிஸ்டராக இருந்தவர். ஐம்பதாண்டு காலம் தொடர்ந்து எம்.பி.ஆக இருப்பவர். இடதுசாரி இன்டலச்சுவல். அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளை மேற்கோள் காட்டி அனுமதி மறுத்து விட்டார். உண்மையில் கும்பமுனி கொணர்ந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப் பட்டிருந்தால், தீர்மானம் கட்சிப் பாகுபாடு இன்றி ஆதரிக்கப் பட்டு வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. Dr. வேணு கோபால் எனும் AIIMS இயக்குனராக தனிமனிதருக்கான ஆறு மாதப் பதவிகாலம் குறித்து இந்தியப் பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றிய முன்மாதிரி இருந்தும் நாவலந் தீபகற்பத் தின் பாராளுமன்றம் கும்பமுனியின் தீர்மானத்தை அனுமதிக்க வில்லை.
வழக்கம் போல, வீட்டுப் படிப்புரையில் வந்து அமர்ந்தார் கும்பமுனி எம்.பி. வாசலில் துவக்குப் பிடித்தபடி ஆயுதப்படை பிரிவுக் காவலர் ஒருத்தர் நின்றுகொண்டிருந்தார் – தான் பிறந்த நாளை, நேரத்தை, நட்சத்திரத்தை, கோளை, ஜன்ம சனியை நொந்தவாறு.
சாலையோரம் அரசு ஜீப் ஒன்று கிடந்தது. டிரைவர், சீட்டில் சாய்ந்து நல்ல உறக்கத்தில் இருந்தார்.
கும்பமுனி அமரும் வராந்தாவில் சில மாற்றங்கள் தெரிந்தன. வாசலின் இடதுவசம் நாலைந்து பிளாஸ்டிக் நாற்காலிகள், பானையில் தண்புனல், கவிழ்க்கப்பட்ட தம்ளர், டீப்பாய், அதன் மீது தினகரன், தினமலர், தினத்தந்தி,
கும்பமுனியின் இடதுபக்கம் முக்காலி மீது கும்பமுனி எம்.பி. என்று அரசு முத்திரையுடன் அச்சடிக்கப்பட்ட லெட்டர் பேட், பேனா, ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவை. எப்போதும் யாராவது கூட்டுறவு வங்கிக் கடன், ரேஷன் கடை சீமெண்ணெய், புன்னை மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே கிடக்கிறது, பத்தரை மணி பஸ் இன்னும் வரவில்லை, முட்டை வரத்து இல்லை என்று பற்பல தகவல்களுடனும் பிராதுகளுடனும் சிபாரிசுக் கடிதம் கேட்டும் வந்து கொண்டிருந்தனர். தலையாயது ஜனநாயகக் கடமை. எதை யும் கும்பமுனி புறக்கணித்ததில்லை – அவை நடக்கும் போது கை தூக்குவதையும் சேர்த்து கும்பமுனி அறியாதவாறு, சீனி, தேயிலைத்தூள், பால் பாக்கெட், தேங்காய், காய்கறி, கீரைக் கட்டு, வாழைப்பழ சீப்பு என கண்ணுபிள்ளை யாசகம் பெற்று வந்தார். வருகிறவருக்கு ஒரு மடக்கு தேயிலை தரவேண்டாமா?
சபையில் கும்பமுனிக்கு இடைஞ்சல் இல்லாத மூலை இருக்கை. சமச்சீரான 22°C குளிர்பதனம். தோதாக ஒரு சால்வை கொண்டுபோனார். உயர்நிலைப்பள்ளி பாராட்டு விழாவில் போர்த்தியது. கருப்பு, சிவப்பு, காவி, மஞ்சள், நீலம், பச்சை, ஊதா நிறங்கள் அரசியல் சாயம் ஏற்றுவது, அவருக்கு உவப்பானதல்ல.
அவரது சால்வை எப்போதும் சாம்பல் நிறம். அதைத்தானே போர்த் தினார்கள். கூட்டநேரம் நீண்டுகொண்டே போனால் அவருக்கு அலுப்பாக இருக்கும். வெளியேற்றம், வெளிநடப்பு, ஒத்திவைத் தல் உவப்பானவை. செலவாதிக்குப் போக, வெற்றிலை போட, சாய் பருகத் தோது இருக்கும்.
ரேஷன் கார்டுக்கு இலவச டி.வி. ஒன்று கிடைத்த காரணத் தால், அது அடுக்களை மேடையில் ஒரு மூலையில் இருந்தது, தவசிப்பிள்ளை கீரை ஆய்ந்து கொண்டோ, உள்ளி உரித்துக் கொண்டோ பார்க்கும் தோதில் உள்ளி என்றால் வெங்காயம், தமிழ்ச் சொல்தான், மலையாளமில்லை. ஈருள்ளி, வெளுத்துள்ளி, வெள்ளுள்ளி என்பனவும் தமிழ்தான். வேண்டுமெனில் பழம் பாடல் மேற்கோளும் உண்டு.
டி.வி. பார்த்தபடி சீனி அவரைக்காய் ஆய்ந்து கொண்டிருந்த தவசிப்பிள்ளை திடீரெனக் கூவினார்.
“பாட்டா ஓடியாரும்,ஓடியாரும்.”
“இவனுக்கு என்ன தீனம் எளகீட்டு’ என மனதில் எண்ணிய வாறு, குரலில் தெரிந்த பதற்றம் காரணமாக கும்பமுனி எழுத்து போனார். ஃப்ளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. ‘அரசுக்கு நடுசாரிகள் ஆதரவு பின்வலிப்பு, அரசு கவிழும் அபாயம்
“காலறுவானுகோ கெடுத்துப் போட்டானுகளே!” என்று அலறினார் கும்பமுனி.
“ஏம் பாட்டா,கவுந்தா உமக்கு என்னா? நீரு மந்திரியாட்டா இருக்கேரு?”
“நீ என்ன எழவைக் கண்ட? அரசாங்கம் கவுந்தா பார்லி மெண்டைக் கலச்சு மறு தேர்தல் வந்திரும்லாடா? நான் வந்து மூணுமாசம் தானே ஆகிருக்கு. பென்சன் பத்தணும்ணா குறஞ்சது அஞ்சு வருசம் மெம்பரா இருக்கணும். இன்னும் ஒரு வீடு வேங்கல்லே, சொந்தமா காரு வாங்கல்லே, வடக்கு மலையிலே ஒரு தோட்டம் வாங்கல்லே, பேங்கிலே எந்த டெப்பாசிட்டும் கெடையாது. பொறந்த நாளு கொண்டாடி பத்து அறுநூறு குதிரைப் பவுன் சேக்கல்லே, நாக்கா மடத்திலே அஞ்சு ஸ்டார் ஓட்டல் கட்டல்லே…”
“இம்புடு நெனப்பு வச்சிருக்கேரா? அப்பம் எனக்கு என்ன வழி சொல்லப் போறேரு?”
“எலே, கெட்டுன பெஞ்சாதி மாரியில்லா கேக்கே! பெருமாளே பிச்சை எடுக்காராம், குதிரை கோதம்புத் தவிட்டுக்கு கனைக்குதாம்… உனக்கும் ஒரு கணக்கு வச்சிருக்கம் டே. சந்தை வெளையிலே உம் பேருக்கு ஒரு மெடிக்கல் காலேஜ், இறச்சகுளம் வெலக்கிலே ஒரு பெட்ரோல் பங்க், அருமநல்லூல்லே ஒரு பார், என்னா போராதா?”
“போரும் போரும். கூட தாடகை மலை அடிவாரத்திலே பத்து அஞ்ஞூறு ஏக்கர் காடும் பதிச்சு வேங்கீரும்…”
அங்ஙனமே ஆகுக என்றார் கும்பமுனி. ஆம் ஆம் என்றுரைத் தன நான்மறை, பன்னிரு திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்…
இப்போது முதலுக்கே மோசம் வந்துவிடும் போல
“எதுக்கும் டிரைவர் கிட்டே சொல்லி, நாளைக்கு ரெண்டு டிக்கட் பதியச் செய்திரும்.”
“ஏம் பாட்டா அவ்வளவு அவசரம்? சபை கூடுகதுக்கு தேதி குறிக்கட்டுமே!”
“இப்பமே போனாத்தாண்டே சரியாட்டு இருக்கும். இனிமே படை குதிரை யாவாரம் ஆரம்பிச்சிரும்லா?”
“நீரு என்ன பழைய மாணிக்கவாசகர் கதைக்கு வாறேரு என்ன பாட்டா, இதுக்கும் குதிரைக் கச்சவடத்துக்கும் என்ன பெந்தம்?”
“சொன்னா உமக்குக் கோவந்தான் வரும். எனக்கானா ஈரக்கொலை நடுங்குகு… நீரு சொன்னதைச் செய்யும்.”
“தெரியாமத்தாலா கேக்கேன். ரெம்பக் காணிக்கேரே!”
“வே, இப்பமே மூணு மெம்பர்லே நாந்துக்கிட்டுக் கெடக்கப் பட்ட மைனாரிட்டி அரசு. அதுலே நடுசாரி மொத்தம் அம்பத் தொம்பது பேரு கோலை உருவியாச்சு. உடனடியா அறுபது பேரை வளைச்சுப் புடிச்சாத்தான அரசாங்கம் நிக்கும்?”
“அது எப்பிடிப் பாட்டா முடியும்?”
“அதுதான்வே ராஜதந்திரம்! அது தெரிஞ்சுக்கிடத்தானே அவனவன் ஹார்வேட்லே போயிப் படிச்சுக்கிட்டு வாறான்!”
“எப்பிடிப் பாட்டா ஆள் புடிப்பான்?”
“எல்லாம் நடக்கும் வே! நமக்கு இனிதான் சுக்ர தெசை பாத்துக்கிடும். ஒவ்வொரு உதிரிக்கட்சி எம்.பிக்கும் இனி வெலைபட்டிருந்தால், தீர்மானம் கட்சிப் பாகுபாடு இன்றி ஆதரிக்கப் பட்டு வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. Dr. வேணு கோபால் எனும் AIIMS இயக்குனராக தனிமனிதருக்கான ஆறு மாதப் பதவிகாலம் குறித்து இந்தியப் பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றிய முன்மாதிரி இருந்தும் நாவலந் தீபகற்பத் தின் பாராளுமன்றம் கும்பமுனியின் தீர்மானத்தை அனுமதிக்க வில்லை.
வழக்கம் போல, வீட்டுப் படிப்புரையில் வந்து அமர்ந்தார் கும்பமுனி எம்.பி. வாசலில் துவக்குப் பிடித்தபடி ஆயுதப்படை பிரிவுக் காவலர் ஒருத்தர் நின்றுகொண்டிருந்தார் – தான் பிறந்த நாளை, நேரத்தை, நட்சத்திரத்தை, கோளை,ஜன்ம சனியை நொந்தவாறு.
சாலையோரம் அரசு ஜீப் ஒன்று கிடந்தது. டிரைவர், சீட்டில் சாய்ந்து நல்ல உறக்கத்தில் இருந்தார்.
கும்பமுனி அமரும் வராந்தாவில் சில மாற்றங்கள் தெரிந்தன. வாசலின் இடதுவசம் நாலைந்து பிளாஸ்டிக் நாற்காலிகள், பானையில் தண்புனல், கவிழ்க்கப்பட்ட தம்ளர், டீப்பாய், அதன் மீது தினகரன், தினமலர், தினத்தந்தி.
கும்பமுனியின் இடதுபக்கம் முக்காலி மீது கும்பமுனி எம்.பி. என்று அரசு முத்திரையுடன் அச்சடிக்கப்பட்ட லெட்டர் பேட், பேனா, ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவை. எப்போதும் யாராவது கூட்டுறவு வங்கிக் கடன், ரேஷன் கடை சீமெண்ணெய், புன்னை மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே கிடக்கிறது, பத்தரை மணி பஸ் இன்னும் வரவில்லை, முட்டை வரத்து இல்லை என்று பற்பல தகவல்களுடனும் பிராதுகளுடனும் சிபாரிசுக் கடிதம் கேட்டும் வந்து கொண்டிருந்தனர். தலையாயது ஜனநாயகக் கட்மை. எதை யும் கும்பமுனி புறக்கணித்ததில்லை -அவை நடக்கும் போது கை தூக்குவதையும் சேர்த்து கும்பமுனி அறியாதவாறு, சீனி, தேயிலைத்தூள், பால் பாக்கெட், தேங்காய், காய்கறி, கீரைக் கட்டு, வாழைப்பழ சீப்பு என கண்ணுபிள்ளை யாசகம் பெற்று வந்தார். வருகிறவருக்கு ஒரு மடக்கு தேயிலை தரவேண்டாமா?
சபையில் கும்பமுனிக்கு இடைஞ்சல் இல்லாத மூலை இருக்கை. சமச்சீரான 22°C குளிர்பதனம். தோதாக ஒரு சால்வை கொண்டுபோனார். உயர்நிலைப்பள்ளி பாராட்டு விழாவில் போர்த்தியது. கருப்பு, சிவப்பு, காவி, மஞ்சள், நீலம், பச்சை, ஊதா நிறங்கள் அரசியல் சாயம் ஏற்றுவது, அவருக்கு உவப்பானதல்ல.
கும்பமுனிக்கு கம்பன் பாடல் ஒன்று மனதில் முளைத்தது.
“தேறல் மாந்தினர், தேன் இசை மாந்தினர், செவ்வாய்
ஊறல் மாந்தினர், இன் உரை மாந்தினர், ஊடல்
கூறல் மாந்தினர், அனையவர் தொழுது அவர் கோபத்து
ஆறல் மாந்தினர், அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர்”
களிக்கின்றார் அல்லால் கவல்கின்றார் ஒருவரையும் அவர் காணவில்லை.
கண்ணுபிள்ளைக்கு அத்ரக் சாய் போட்டு முடிந்த பாடில்லை. பெரிய பானை ஒன்றில் சற்று இளக்கமாக உளுந் தங்கஞ்சி வைத்து வருபவர்க்கெல்லாம் சின்னக் கும்பாவில் ஊற்றி, கரண்டி போட்டுக் கொடுத்தார். மூர்க்கண்ட், பத்ராஞ்சல் காரர்கள், “பகுத் அச்சா, பகுத் அச்சா” என்று கேட்டு வாங்கிக் குடித்தனர்.
முதல் சுற்று, இரண்டாம் சுற்று எனப் பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருந்தன. ரூபாய்க்குப் பத்து பைசா தரகில், மாநிலங்கள் அவை எம்.பி.க்கள் கச்சவடம் நடத்தினார்கள். உதிரிகளுக்கு ஏகக்கிராக்கி. மூன்றாவது அணி முனைப்பாகத் திரண் டிருந்தது. இரண்டாவது அணி எக்காளம் ஊதியது. ஆளும் முத லணிக்கு இன்னும் ஆறு குதிரைகள் பாக்கி என்றனர். தர்மத்தாய், வெளுத்த கத்ரீனாவுக்கு இராப்பகல் உறக்கமின்றி கட்பைகள் கனத்துக் கிடந்தன. முதன்மை அமைச்சர் இதுவரை ஒரு ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் கூட நின்றவரில்லை. அவருக்கு எல்லாம் விகடமாக இருந்தன.
கொலை, கற்பழிப்பு, களவு, கடத்தல், ஆள்மாறாட்டம், போர்ஜரி, மனித உறுப்புகள் திருட்டு, மணற் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நிலக்கரிக் கொள்ளை, தெய்வச்சிலைகள் கொள்ளை எனப் பல்வகைக் குற்றங்களுக்காகச் சிறையில் கிடந்த சர்வ கட்சிகளின் நூற்று முப்பத்தாறு எம்.பி.களுக்கு பதினைந்து நாட்கள் பரோல் அனுமதித்திருந்தனர், சனநாயகக் கடமை ஆற்ற.
படுத்த படுக்கையாகக் கிடக்கும் எண்பது தாண்டியவர், சமீபத்தில் பைபாஸ் செய்தவர், இடுப்பெலும்பு முறிந்தவர், பார்க் கின்சன் நோய் கண்டவர், அல்சிமர்ஸ் நோய் கண்டவர், பக்க வாதம் வந்தவர், இருபத்தெட்டு எம்.பி.க்கள் கைத்தாங்கல், வீல் செயர், ஸ்ட்ரெச்சர், டோலி ஆகியவற்றில் வந்து வாக்களிப்பர் என்றனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நாள் நெருங்க, ஆளுங் கூட்டணியினர் முகங்கள் பேய்ப்பட்டி கடித்தவர் போல மாறித் தெரிந்தன. அதுவரை அரசியல் அந்தஸ்து ஏதும் இல்லாதிருந்த கட்சித் தலைவர்கள் தேசப்பிதா ரேஞ்சில் நடந்தனர்.
கேட்டது கிடைத்தது, நினைத்ததும் நடந்தது. இந்திரப் பிரஸ்தத்தில் இந்திரியச் சாறும் விலைமாதர் மார்புக் குங்குமக் குழம்பை வழித்தெறிந்த சேறும் சூரியனின் தேர்க்கால்களை வழுக்கச் செய்தன. கண்ணுபிள்ளை நினைத்தார். நல்ல பொன்னி நாற்று கிடைத்தால் பத்து ஏக்கர் நடலாம் என.
கும்பமுனிக்கு ஈனவும் முடியாமல் நக்கவும் முடியாமல் வேவலாதியாக இருந்தது.
பீர்க்கண்ட் விமுக்தி மோர்ச்சா தலைவரிடம் மூன்று எம்.பி.க்கள் இருந்தனர். மூவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடமும் தனது மகள்வழிப் பேரனுக்கு பீர்க்கண்ட் முதலமைச்சர் பதவியும் தேடினார். பையனுக்கோ பதினேழுவயதுதான் ஆகி இருந்தது. பலர் தமது உறவினர்களின் உறவினருக்கு சின்னஞ்சிறு நாடுகளின் தூதுவர் பதவி வென்றெடுத்தனர். ஐ.நா.சபை உறுப்பான 192 நாடுகளில் நுற்றுக்கு மேல் சிறு, குறு நாடுகள் தான். சித்ராஞ்சல் முக்தி சேனா கையில் ஏழு எம்.பி.க்கள் இருந்தனர். அதை இரண்டாக உடைத்து மூன்று பேர்களுடைய மாமனார் களுக்கு தென் பிராந்திய மாகாணங்களின் ஆளுநர் பதவி வாக்களிப் பட்டது.
மீகார் சுயேட்சை எம்.பி. ஒருவர் தனது மகளுக்கு பரசுராமன் மழு எறிந்து மீட்ட நாட்டின் முதலமைச்சர் பதவி கேட்டார். கௌரி அம்மாளுக்கே மறுக்கப்பட்ட பதவி அது. இன்னொரு சுயேச்சை கல்பானி நிறுவனங்களில் பங்குகள் கேட்டார்.
“பாட்டா, என்ன தீர்மானிச்சேரு?” என்றார் கண்ணு பிள்ளை. ஆளும் கூட்டணி இரவு விருந்து முடிந்து அப்போதுதான் திரும்பி இருந்தனர். படுக்கை தட்டிப் போடுகையில் இரவு மூன்று மணி. கும்பமுனியால் சீன செஸ்வான் சூப்பும் இத்தாலியன் கேக்கும் டென்மார்க் ஐஸ்கிரீம் மட்டும்தான் சாப்பிட முடிந்தது. நாலைந்து நாட்களாக டின்னர், லஞ்ச் என்று அலைந்து, கண்ணுபிள்ளைக்கு ஒரே நெஞ்சுக் கரிப்பு. ஒரு கிளாஸ் ஓமத்திராவகம் இருந்தால் போதும். அல்லது முனைக்க எரிவு, உப்பு போட்டு வழுதுணங்காய் மொளவச்சம் வைத்து கொதிக்கக் கொதிக்கச் சாப்பிட வேண்டும். “என்ன வாயே தொறக்க மாட்டங்கேரு?”
“ஆளும் கூட்டணிக்கே போட்ரலாம்ணு இருக்கேன். ” “அதுக்கு உமக்கு தலைமைக் கழக விப் இருக்கே!” “மொத்தம் ரெண்டு பேரு தானடே கட்சி எம்.பி. ஒருத்தன் மாத்திப்போட்டா கட்சித்தாவல் சட்டம் பொருந்தாது. கட்சி உடஞ்சு போச்சுண்ணு அர்த்தம்”.
“சரி, நமக்கு என்ன படி அறும், அதைச் சொல்லும்.’
‘முப்பது கோடி ரொக்கம். அணுசக்தி எரிவாயு கமிஷன்லே உறுப்பினர் பதவி. “
“ஒமக்கு அதுபத்தி என்ன தெரியும்?”
“எலே மூதேவி, கப்பலே பாக்காதவன் கப்பல் மந்திரி, விமானத்திலே ஏறாதவன் விமான மந்திரி, மூணாங் கிளாஸ் தோத்தவன் கல்வி மந்திரி, வட்டிக்கடை நடத்துனவன் சட்ட மந்திரி…நாம் மட்டும் ஆகப்பிடாதா?”
“சரி,சரி… கோவப்படாதேயும். எனக்கு என்ன கெடைக்கும். அதைச் சொல்லும்.”
“அடுத்த மாசம் கலிங்கத்திலே ஆளுநர் பதவி காலியாகு. அதை உனக்குக் கேட்டேன், ஒத்துக்கிட்டாச்சு.”
“அப்பம் நீரு சோத்துக்கு என்ன செய்வேரு?”
“காவேரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கி நக்கித்தான் குடிக்கணும்.”
“எல்லாம் எழுதி வாங்கீட்டேரா? பொறவு பேச்சை மாத்தீருவான்.”
“அதெல்லாம் சொன்ன பேச்சு மாற மாட்டான். கவரிமான் கிட்டே பாலு கறந்து குடிச்ச பயக்களாக்கும்.”
“சரி, படும். இனி நாளைக்காவது நிம்மதியாப் போயி மத்த சினிமா ஒண்ணு பாக்கலாம்.”
சற்று நேரத்தில் இரட்டைப் பாரி நாயனங்கள் அசாவேரி ராகத்தில் ஆலாபனை செய்யும் சங்கீதம் கேட்டது.
– தீராநதி, செப்டம்பர் 2008.
நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மிகச்சிறிய மிருகங்கள்
நீ.பி.அருளானந்தம்
October 12, 2026
நவீன நல்லதங்காள்
இரா.கலைச்செல்வி
October 12, 2026
ஸ்க்ரைப்
ஜூனியர் தேஜ்
October 12, 2026
