சொல்லாமலே யார் பார்த்தது?!

0
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
முதல் வெளியீடு: 2024
இணைய வெளியீடு: November 22, 2026
பார்வைகள்: 44
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

அத்தியாயம் இரண்டு | அத்தியாயம் மூன்று | அத்தியாயம் நான்கு

“இன்னொரு கொலையா?”

தன்னுடைய சியோலோ காரில் ஏறியதும், செல் போனில் மதன் லாலிடம் தொடர்பு கொண்டு “இந்த ஷில்பா செய்திருக்கிற காரியத்தைப் பார்த்தாயா?” என்று கேட்டார் ராஜன் லால்.

“ஏன் பதற்றப் படுகிறாய்” ?

“நம் திட்டம் அவ்வளவையும் தினேஷிடம் ஷில்பா சொல்லியிருக்கிறாள்.”

“என்னது”?

“ஆமாம். வீணாக சுரேஷ் தேவ் கொலையை அவள் பார்த்து விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக அவளை இந்தத் திட்டத்தில் பார்டனராக சேர்த்துக் கொண்டது நமது தப்பு.”

“நீ ஒன்றும் கவலைப் படாதே ராஜன். அவளிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டாயா?”

“கண்டிப்பாக நான் அப்படி சொல்ல வில்லை என்று சாதிக்கப் போகிறாள்”

“ஓ.கே. நான் குப்தாவை அனுப்பி அவளை முடித்து விடுகிறேன்”

“இன்னொரு கொலையா?”

“பின்னே வேலியிலே ஓடுகிற ஓணானை இடுப்பிலே கட்டிக் கொண்டு அலையச் சொல்கிறாயா? வேறு வழியே இல்லை”

“மேலும் மேலும் பிரச்சினைகள் வராமல் இருந்தால் சரி.”

ஷூட்டிங் முடிந்ததும் புவனேஸ்வர் லாட்ஜ் போவதற்காக கார் தயாராக நின்றது.

“சார் உங்களை லாட்ஜில் கொண்டு விடச் சொன்னார்கள் பாஸ்.”

என்று பவ்யமாக வந்து சொன்னான் டிரைவர் இந்தியில்.

“ஓ.கே.” என்று காரில் ஏறியவன் உள்ளே அமர்ந்திருந்த ஷில்பாவை ஆச்சரியமாய் பார்த்தான்.

“என்னை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதா தினேஷ்” ஆங்கிலத்தில் தேன் குழைத்து கேட்டாள்.

“என் மேல் திடீர் ஆர்வம் வரக் காரணம் என்ன ஷில்பா”?

“உன்னை பார்த்த கணமே காதல் கொண்டு விட்டேன் கண்ணாளா”

“போச்சுடா. சரி. நீங்கள் இப்போது எங்கே போகிறீர்கள்?”

“உங்களோடு லாட்ஜிக்கு வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று விரும்புகிறேன். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே”?

“நோ. நோ. காரைப் புறப்படச் சொல்லுங்கள்.”

“டிரைவர் சலோ” என்றவள் “ரெம்பா நெர்வஸா இருக்கிறீர்கள். என்னிடம் பேச தயக்கமா.” என்றாள் தினேஷிடம்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் ஊரிலிருந்து கொண்டு வந்த பணம் எல்லாம் தீர்ந்து விட்டது. ராஜன் சாரிடம் அட்வான்ஸ் பணம் வாங்க மறந்து விட்டேன்”

“இதுதானா விஷயம். இந்தாருங்கள். வைத்துக் கொள்ளுங்கள். திருப்பிக் கூடத் தர வேண்டாம்.” என்ற வாறு பையிலிருந்து ரூபாய் பத்தாயிரத்துக்கான பணக்கட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“நான் சம்பளம் வாங்கியது நீங்கள் இதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் மட்டும் வாங்கிக் கொள்கிறேன்”

“ஓ.கே.” என்றதும் அவன் பணத்தை வாங்கி பையில் வைத்துக் கொண்டு “என்னை அந்த ஜாலி டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் அலுவலகத்தில் இறக்கி விடுகிறீர்களா?” என்று கேட்டான்.

“வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகிறது. நான் உங்களோடு லாட்ஜிக்கு வந்து கொஞ்ச நேரம் பேசி விட்டுப் போகலாம் என்று சொல்லித்தானே கிள்ம்பினேன்”

“ஸாரி எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது. ஒன்று செய்யுங்கள். சாயங்காலம் லாட்ஜிக்கு வாருங்கள். நானும் வேலைகளை முடித்து விட்டு வந்து விடுவேன்.”

“நான் காரில் போய் விட்டால் நீங்கள் எப்படி வரப் போகிறீர்கள். மும்பை உங்களுக்கு புது இடம் வேறு.”?

“லாட்ஜ் அட்ரஸ் கார்டு என்னிடம் இருக்கிறது. எப்படியாவது டாக்ஸி பிடித்து வந்து விடுகிறேன். ஓ.கே”

காரிலிருந்து தினேஷ் இறங்கியதும் நேராக ஜாலி டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் ஆபீஸிற்குள் போய் “மும்பை மெட்ராஸ் பிளைட் ஈ வினிங் எத்தனை மணிக்கு கிளம்புகிறது” என்று கேட்டான்.

அலுவலக கவுண்டரிலிருந்த பெண் “ஈவினிங் நான்கு சர்வீஸ் இருக்கிறது. உங்களுக்கு எப்போது கிள்ம்ப வேண்டும்” ? என்று கேட்டாள்.

“நாளை மாலை ஐந்து நாற்பதுக்கு உள்ள ஜெட்ல புக் பண்ணுங்க” என்றான்.

டிக்கட் கைக்கு வந்ததும் “நாளை மறுநாள் காலை மதுரைக்கு எத்தனை மணிக்கு பிளைட் இருக்கிறது” என்று கேட்டான்.

அவள் “ பதினொன்று பத்துக்கு” என்றாள்.

“ அதிலே சங்கர் என்ற பெயரில் ஒரு டிக்கட் புக் பண்ணுங்கள்” என்று சொல்லி பணத்தை எண்ணிக் கொடுத்து இரண்டு டிக்கட்டுகளையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

வழியில் வந்த டாக்ஸியை நிறுத்தி, ஏறிக்கொண்டு “புவனேஸ்வர் நி யு மும்பை லாட்ஜ் சலோ” என்றான்.


சாயங்காலம் தூங்கி விழித்து முகத்தைக் கழுவிக்கொண்டு ஆர்டர் கொடுத்து வந்த டீயைக் குடித்துக் கொண்டிருந்த போது காலிங் பெல் “டிங் …டாங்…” என்றது.

எழுந்து போய் கதவைத் திறந்த போது ராஜன் லால் நின்று கொண்டிருந்தார்.

“கம் இன் சார்”

“தாங்க்யூ “ என்றவாறு உள்ளே வந்து அமர்ந்தார்.

“ஸார். நான் நாளைக்கு ஈவினிங் ஊருக்குத் திரும்பி விடலாம் என்று எண்ணியிருக்கிறேன்” என்றான் தினேஷ்.

“என்னாச்சு?”

“கொஞ்சம் உள்ளூர பயம். ஊருக்குப் போக விமான டிக்கட் எடுத்துக் கொண்டு விட்டேன். நீங்கள் இன்று நடித்த விளம்பர படத்திற்கு சம்பளம் கொடுத்தால் கொஞ்சம் உதவியாக இருக்கும்”

“பணம் தருகிறோம். மாஜிஸ்திரேட் காட்சி எல்லாம் நாளைக்கு ஷூட் பண்ணி விடலாம் என்று டைரக்டர் சொன்னாரே”

“ஷூட்டிங் முடிந்த பிறகு ஒரு வாரம் விடுமுறை கொடுத்தால் ஊருக்குப் போய் விட்டு வந்தால் பயம் கொஞ்சம் தெளிந்து விடும் என நினைக்கிறேன்”

“அப்படியானால் ஷில்பா சொன்னதை நம்புகிறீர்களா?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார்.”

“மனதை வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள். காரில் வரும் போது அந்தேரியில் இடையிலே இறங்கிக் கொண்டீர்களாமே?”

“ஆமாம். ஷில்பாவிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு ஒரு டிராவலிங் ஆபீஸில் மும்பை மெட்ராஸ் டிக்கட் புக் பண்ணினேன். நீங்கள் பணம் கொடுத்தால் ஷில்பாவிடம் திருப்பிக் கொடுக்க வசதியாக இருக்கும்.”

“……………………… “

“என்ன சார் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்”

“ஒன்றுமில்லை. இதைத் தற்போது செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். நாளைக் காலை அலுவலகத்தில் வந்து இந்த விளம்பர பட சம்பளம் பத்தாயிரம் ரூபாயும் புதுப் பட அட்வான்ஸ் பத்தாயிரமும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஆயிரம் ரூபாய் கொடுத்தார் ராஜன் லால்.

“நான் ஊருக்குப் போகிறேன் என்று சொன்னேனே?”

“நாளைக்கு சூட்டிங் முடிந்ததும் தாராளமாக போய் வாருங்கள். நாங்கள் மற்ற நடிகர்களை வைத்து வேறு காட்சிகளை எடுத்துக் கொள்கிறோம்.”

“சரி சார்” என்றதும் ராஜன் லால் கைக் குலுக்கிக் கொண்டு கிளம்பினார்.”

– தொடரும்…

– சொல்லாமலே யார் பார்த்தது?! (திகில் நவீனம்), முதல் பதிப்பு: டிசம்பர் 2024, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.

இரஜகை நிலவன்

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக...

மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *