பதவிப் பரிதாபங்கள்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 24, 2026
பார்வையிட்டோர்: 86 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6

மறுநாள்.

“இங்கதான் மாப்ளெ. நிறைய படங்கள் படப்பிடிப்பு நடந்திருக்கு!” சொல்லி அந்த மரங்கள் அடர்ந்த இடத்தின் மத்தியில் அமர்ந்தார் தன்ராஜ்.

விகாசும் அவர் அருகில் அமர்ந்தான்.

‘நான் ஆண்ட்ருசோடு வாழப்போறேன். மூன்று மாதம் கர்ப்பம். தேட வேண்டாம்!’ என்று கட்டிலில் கடிதம்.

கடித்ததைக் கைப்பற்றிய ஐயப்பனுக்குப் பயங்கர இடி..! உறைந்தார்.

வெளியே தெரிந்தால் மானம், மரியாதை எல்லாம் போய் செல்வாக்கெல்லாம் சிதறி சின்னாபின்னமாகிவிடும். பயம். நெஞ்சைக் கவ்வ செய்வதறியாமல் திகைத்தார்.

‘எவருக்கும் தெரியாமல் கூலிப்படையை விட்டு இருவரையும் கொன்று புதைத்து விடலாம்!’ என்று நல்ல புத்திக்குள் கோணல் புத்தி குதித்தது. நிதானித்தார்.

செய்வது சுலபம். ஆனால்.. உண்மை என்றைக்கும் வெளியில் வராமல் போகாது. அப்படி வரும்போது…பதவி, நல்ல பெயர்கள் எல்லாம் காணாமல் போய் கொலைக்காரன் பெயரில் சிறையில் அடைபட்டு மொத்த வாழ்க்கையும் பாழ்! தண்டனை பெற்று வெளியே வந்தாலும் ஒருத்தன் மதிக்க மாட்டான். தலை நிமிர்ந்து நடக்க முடியாது. உயிருள்ள புழுவாய், மனிதனாய் வீட்டுக்குள்ளேயே அடைந்து, இருந்து மடிய வேண்டும்! நிலைமை நிதர்சனமாய் தெரிந்தது.

‘ஒழியட்டும்!’ என்று விட்டாலும் அசிங்கம், களங்கம். இதுவும் சரிவராது! புரிந்தது.

தான் எல்லாவற்றிலும் இருந்து தப்பிக்க ஒரே வழி…? வெளியேறியவளை மன்னித்து அழைத்து வந்து குடும்பம் நடத்துவதுதான் சரி! தெளிவாய்த் தெரிந்தது.

இதுவும் வெளியே தெரிய.. தன் வாழ்வில் கரும்புள்ளி. செல்வாக்கில் சிதைவு என்றாலும் அந்த அளவிற்குப் பாதிப்பு இல்லை! புரிந்தது.

துணிந்தார்.

விசயத்தை வெளியில் விடாமல் தன் நெருங்கிய சொந்தக்காரர்கள், நண்பர்கள் சிலரிடம் மட்டும் செய்தியைக் கசிய விட்டு அவர்களைத் தேடி கண்டுபிடிக்கச் சொன்னார்.

இரண்டு நாட்களில் அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும்…

புனிதவதி ‘வீட்டுற்கு வரமாட்டேன்! ஆண்ட்ருசோடு குடும்பம் நடத்துவேன்!’ என்று பிடிவாதம், அடம்!

அப்புறம் ஐயப்பனே அவளை நேரில் சந்தித்து…….

“இது என் பெயர், புகழுக்குக் களங்கம். விசயம் வெளியே தெரியாமல் நீங்க எப்படி வேணுமின்னாலும் இருந்துவிட்டுப் போங்க. வீட்டுக்கு வந்து குடும்பம் நடத்தி மானம், மரியாதையைக் காபந்து பண்ணு” சொல்லி கெஞ்சி கூத்தாடி ஆளை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்.

விசயம் வெளியில் கொஞ்சமாய்க் கசிந்ததையும் அப்படியே அமுக்கி சரி செய்துவிட்டார்.

அந்த குழந்தைதான் இந்த அமைச்சர் ஆனந்தவள்ளி. கதையை நிறுத்தினார் தன்ராஜ்.

இது விகாசுக்குத் தெரியாத உண்மை!

“அப்படியா…?” என்று கேட்டு “ஆனந்தவள்ளிக்குத் தம்பி, தங்கைகள் உண்டா…?” கேட்டான்.

“ஒன்ன்ன்னும் கிடையாது!”

“ஏன்…”

“இதுக்கு மேல தொடர்பு இருந்தாலும் கருத்தரிக்க வேணாம்ன்னு குழந்தை வயிற்றில் வளரும்போதே ஐயப்பன் மனைவியிடம் பேசி… பிரசவத்தின் போதே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அந்த வழியை அடைச்சாச்சு.”

‘அட! என்னென்ன சிக்கல்கள். எப்படி எப்படி அடைப்புகள்!’ விகாஷ் ஒன்றும் பேசத் தோன்றாதவனாய் இருந்தான்.

“அப்புறம் குழந்தை மூணு வயசு வரை வீட்டில் வளர்ப்பு. அடுத்து….அது பட்டப்படிப்பு முடிக்கும்வரை ஊட்டி, கான்வென்ட், கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பு. படிப்பு முடித்து வீடு வந்ததுமே… நல்ல சொந்தக்காரப் பையனை வரனாய்த் தேர்ந்தெடுத்து திருமணம்.

அடுத்து… அவர்கள் வாழ்க்கை, வளர்ச்சி, வேலைக்கு பெண்ணை முதலாளியாய் ஆக்கி, கணவனை பங்குதாரராய்ச் சேர்த்து…. ஒரு கம்பெனியை ஆரம்பித்து தனிக்குடித்தனம் வைத்துவிட்டார் ஐயப்பன் .

ஆனந்தவள்ளிக்கும் அவள் கணவன் அம்பிகாபதிக்கும் அடுத்த வருசமே குழந்தை பிறந்தது.

“என்ன ஆனந்தவள்ளிக்குக் குழந்தை இருக்கா..!?” நம்ப முடியாமல் திடுக்கிட்டுக் கேட்டான். விகாஷ்

“அது பொறந்து மூணு வருசம் ஆகுது.”

“அப்படியா..?!” இப்போதும் அவன் வாயைப் பிளந்தான்

“இந்த நேரத்துலதான் ஆனந்தவள்ளி அப்பா ஐயப்பன் இறப்பு!” நிறுத்தினார் தன்ராஜ்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *