ஆனந்தக் கண்ணீர்
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 8
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவிஞர் பாண்டியனின் கவிதைகளில் மயங்கி, அவரின் இலக்கியச் சுவைததும்பும் பேச்சில் நெஞ்சைப் பறிகொடுத்து என்வாழ்வையே பறிகொடுத்த துன்பத்தின் சுவடுமறையாத மனவேதனையோடு அன்றைய தினசரியை மனம் போன போக்கில் புரட்டிக் கொண்டிருந்தேன்.
‘பாண்டியனைப் பாட வைத்தாள்’ என்ற கொட்டை எழுத்துத் தலைப்பைக் கண்டு ஆவேசத்தோடு அச்செய்தியில் விழிகளை ஓட்டினேன்.
”உணர்வையள்ளும் கவிதைத் தொகுதிகளும் உவட்டாதினிக்கும் காவியங்களுமாக இவ்வாண்டில் பத்து அருமையான நூல்களை இயற்றி வெளியிட்டு, இரசிக உள்ளங்களுக்கு இனிய விருந்தளித்து ஈழத்தில் எழுது கோல்பிடிப்போரின் பெருமையை, மதிப்பை உயர்த்திவிட்ட கவிஞர் பாண்டியன் அவர்கள், கடந்த ஐந் தாண்டுகளாக மணமாகி மனைவியாரின் அன்புத் தேனிற் சிறைப்பட்டு மயங்கிப் போலும் இலக்கிய உலகிலிருந்து அஞ்ஞாத வாசம் புரிந்து வந்ததை யாருமறிவர். சந்தித்த இடங்களிலெல்லாம் இலக்கிய அன்பர்கள் கவிதை எழுதுவதை அடியோடு நிறுத்தி விட்டீர்களே! தொடர்ந்தும் பத்திரிகைகளுக்கு உங்கள் பாக்களால் மணமூட்டுங்கள்!” என்று அவரை கேட்டுக் கொண்டபோதும்,
எழுத முடியாமல் துயர் பட்டு வந்தவர், மனித உணர்ச்சிப் போராட்டங்களை பிரச்சினைகளை உற்று நோக்கி பொங்கியெழுந்து பரமழை பொழியத் தவறியவர் இருந்தாற்போல் ஆடிப் பெருக்காக குற்றால நீர்வீழ்ச்சியாகத், தேன்மாரியாகக் கவிதைகள் புனைந்து தள்ளக் காரணமென்ன என்று வியக்கிறீர்களா?” என்று, பாண்டியனாருக்கு இலக்கிய ஆய்வுச் சங்கம் எடுத்த பாராட்டு விழாவில் சொற்பெருக் காற்றிய நொச்சியூர்க் கவிராயர் தொடர்ந்து கூறியதாவது.
“அவர் கவிதைகளைக் கருத்தூன்றிப் படிப்பவர்க்கு ஓர் உண்மை புலனாகும்! அதாவது அவர்மேல் மனத்தை வைத்து நிறைவேறாத ஆசை களின் ஏக்கங்களால், தொலைவில் எங்கோ இருந்து எண்ணும் எண்ண அலைகளால் அவர் சிந்தனையைக் கிளறி, அவர் நெஞ்சில் துக்கப் பூகம்பங்களை அடிக்கடி கிளப்பி, அவற்றைக் கவிதைகள் காவியங்களாக வடிப்பித்து, நாட இலக்கியங் றிந்த உலகறிந்த மகாகவியாக்கி, சிரஞ்சீவிகளின் மூலம் அவர்க்குச் சாகாவரம் வழங்கி விட்ட ஒருத்தி எங்கோ அழுது கொண்டு இருப்பதே இந்த நல்மாற்றத்திற்கு – அரிய சாதனைக்குக் காரணம். எவராலும் செய்ய முடி வாழ்வைப் யாத இலக்கியத் தொண்டினைப் புரிந்து தன் பறிகொடுத்த அந்த மாதரசிக்கு இலக்கிய உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. என்யூகம் பிழையாயிருந்தால், வெளி யிட்ட விதம் தவறாக இருந்தால்கவிஞர் என்னை மன்னிக்க வேண்டும்.” என் கண்கள் அருவிகளாயின. ஆற்றாமை யால்ல்ல ஆனந்தத்தால்! பெருமிதத்தால்!
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நிலவு பேசியது…!
எஸ்.சசிகலா
October 18, 2026
நிஜ மரமும் பண மரமும்
இளையவேணி கிருஷ்ணா
October 18, 2026
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026