மனிதப் பண்புகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 8 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆவியுலகில் கோடி கோடி நிலவுகளின் குளிரொளியில் குளித்துக் கிடக்கும் ஆண்டவன் கொலு மண்டபம். ஒரு புறம் மனித ஆன்மாக்கள். மறுபுறம் மண்ணுலகில் ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, வரும் ஏனைய விலங்குகள். பறவைகள், மீனினங்களின் நலிந்து தளர்ந்த ஆவிகள்!

நடுவில் அமைந்து கிடந்த சுடரொளித் தங்கத் தவிசில் சிவன் திருமால், யேசு, அல்லா, புத்தர் இப்படிப் பல வடிவங்களில் ஏககாலத்தில் காட்சி தந்து வீற்றிருக்கிறார் அனைத்துக்கும் தலைவரான ஆண்டவன், மனித ஆன்மாக்களுக்கும் ஏனைய உயிரின ஆவிகளுக்கும் இடையிலுள்ள பிணக்கைத் தீர்த்து வைக்கத் திருவுளங் கொண்ட பேரொளிப் பிழம் பாய இறைவன்.

விலங்கினங்களின் சபைப்பக்கம் ஆணை நோக்கைத் திருப்புகிறார்.

விலங்கினப் பிரதிநிதி ஒன்று எழுந்து நின்று “எல்லாம் வல்ல இறைவனே! கோடானு கோடி விலங்கின உயிர்களை வதைப்பதிலேயே தம்வாழ்வு, ஆனந்தம் எல்லாம் தங்கியிருக்கின்றன என்று பல்லூழிக்காலமாக அட்டூழியம் செய்து வரும் அகம் பாவக்கார மானிட அரக்கர்களை அழித்து ஒழித்து நம்மை வாழ விடும்படி வேண்டுகின்றோம்!” விலங்கினப் பிரதிநிதி அமர ஆண்டவன் மனித ஆன்மாக்கள் பக்கம் பார்க்கிறார்.

அடக்க ஒடுக்கமாக பணிவுடன் பத்தினி போல் மெல்ல எழுந்து நின்ற இலக்கண மனித ஆன்மப் பிரதிநிதி சாஸ்திரவிதிப்படி, இலக்கிய மணம் வீசப் பேசுகிறது: “பல்லுலகும் படைத்தளித்துப் பரிந்தோம்பும் பரம்பொருளே உயிர்க்குலங்களுக்கு ஒரு தலைவனே! அருட்பெருங்கடலே……!” (ஆண்டவன் அலுத்துக் கொள்வதை அறிந்து) ”நாம் மனித ஆன்மாக்கள்! மனிதப் பண்புடனே எதையும் யாசிப்போம். நாங்கள் வாழ வேண்டும்! விலங்குகள் ஒழிய வேண்டும்! என்று நாங்களும் வேண்டுவது பண்பன்று. எனவே நாங்களும் வாழ வேண்டும். ஏனை விலங்குகளும் பல்கிப் பெருகி… பெருக… பெருக வேண்டும். இதுவே எங்கள் பரந்த மனப்பான்மையிலெழுந்த வேண்டுகோள்” நாவில் ஊறிய உமிழ் நீரை விழுங்கிக்கொண்டு மனித ஆன்மா அமர்கிறது.

பிரபஞ்சப் படைப்பின் நோக்கத்தை இதுவரை எந்த அனுபூதி கண்டு கொள்ளாமல் மறைத்து மானுங்கூடச் சரியாகக் வைத்துக் கொண்டிருக்கும் பெருமிதத்தோடு வீற்றிருக்கும் மனப்பான்மையை, பண்பை கடவுள், மனிதனின் பரந்த நினைந்து அர்த்தப் புஷ்டியோடு சிரிக்கிறார். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *