நாமார்க்கும் குடியல்லோம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 79 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சங்கொலி’ பத்திரிகை நிறுவனத்தின் முதலாளி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கலாயின. குகையில், சிங்கத்தின் முன்னால் வகையாகச் சிக்கி நிற்கும் ஆட்டுக் குட்டி போலப் பதறிக் கொண்டு ஒடுங்கி உட்கார்ந்திருந்தார், பத்திரிகை அலுவலக மனேஜர்.

‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்ற நெஞ்சு நிமிர்ச்சியோடு உறுதி ஒளிரும் முகமும் கண்களுமாக வீற்றிருந்தார், ‘சங்கொலி’ ஆசிரியர் தமிழ்நெஞ்சன்! அவரைப் பார்த்து அதிகார மிரட்டலோடு பேசினார் முதலாளி.

“என் அண்ணன் மகள் எழுதிய ஒரு விஞ்ஞானக் கட்டுரை, என் மனைவியின் சமையற் கலைக்கட்டுரை, மகள் எழுதின, கவிதை, நான் எழுதிய அரசியற் கட்டுரை இவை எல்லாம் தந்து எத்தனை நாட்கள்? ஏன் இன்னும் போடவில்லை?” 

“ஏன் போடவில்லை?  போட்டேனே குப்பைக் கூடைக்குள்!” என்று நையாண்டி பண்ண ஒரு கணம் எண்ணிய தமிழ்நெஞ்சன் சட்டென்று “பேச வேண்டியதை மனேஜரோடு பேசலாம்” என்று கணீரிடும் குரலில் நறுக்குத் தெறித்தாற்போல் பதில் சொல்லி விட்டார்.

“இதென்னடா சங்கடமாகி விட்டது!” என்று அருண்டு விழித்த தொடை நடுங்கி மனேஜருக்கு “ஒரு கூலிக்காரப் பத்திரிகை ஆசிரியனுக்கு இத்தனை திமிரா? அதுவும் முதலாளிக்கு முன்னால்?” என்று கோபம் வந்தாலும், அந்த மலட்டுக் கோபம் தானாக அடங்கி விட, “சொல்லுங்கள் இன்னுமேன் போடவில்லை!” என்று ஆசிரியர் பக்கம் திரும்பினார்.

”முதலாளிக்கு வேண்டியவர்களின் விடயங்கள் எல்லாவற்றையும் தரமா? தரம் இல்லையா? என்று நான் பார்க்காமல் வெளியிடுவதானால் ஆசிரியன் என்று நான் ஒருவனேன் இங்கு இருக்க வேண்டும்? வாசகர்களை ஏமாற்றி பத்திரிகை உலகில் எனக்கிருக்கும் நல்ல பெயரைப் கொடுத்து, குறுக்கு வழியில் தாங்கள் பிரபலமடைய நினைப்பவர்கள் முதலாளிகளாக இருந்தாலென்ன வேறு யாராக இருந்தாலென்ன நான் அனுமதிக்கவே மாட்டேன்” என்று பேசிச் சென்ற பத்திராதிபர் குடையையூன்றி அந்தரத்தில் எழுந்த முதலாளி சொல்ல வந்ததை தானே முந்தி ஏற்றுக் கொள்வது போல் பட்டென்று “நான் இன்றுடன் வேலையிலிருந்து விலகிக் கொண்டு விட்டேன்!” என்று முழங்கி வெளி முடித்தார்.

மறுகணமே எழுந்து ஏறு நடையோடு வெளியேறினார், அந்தக் கட்டைப் பிரமச்சாரி. 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *