கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 18, 2026
பார்வையிட்டோர்: 113 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

நிலவு நான் ஒரு நாள் கூட வராமல் இருந்து விட்டால் இரவுக்கு அழகு ஏது?

இரவில் பூமியில் பல மின்விளக்குகள் இருக்கலாம். ஆராய்ச்சி என்னை பற்றி நடத்துவதை இந்த மனித இனம் விடுவதாக இல்லை. அவர்கள் கண்டுபிடிக்காத விளக்கின் வெளிச்சத்தையா நான் தந்து விடப் போகிறேன்.

ஆனாலும் நான் வானில் தெரியும் நாளையும் தெரியாத நாளையும் குறித்து வைத்து பூஜை மற்றும் மற்ற சுப காரியங்களுக்கு நாள் நல்லது கெட்டது பார்க்கிறார்கள். ஏன் விண்வெளி அண்டத்தில் இன்ன வெல்லாம் உள்ளது அவை எவ்வாறு நமக்கு பயன்படும் என்னை யோசிப்பதை அவ்வாறு எண்ணுவதை அவர்களால் நிறுத்த முடியாது.

பூமியை அசுத்த படுத்தியது போதாது என்று மற்ற கிரகங்களையும் அதையே செய்ய கூட்டம் கூடி திட்டம் போடுகிறார்கள். ஏன் இந்த வேலை. இந்த பிரபஞ்சம், இறைவன் அழகான பூமியை மனிதன் வாழ அனுபவிக்க கொடுத்து இருக்கிறான். ஆனால் மற்றவரின் மேல் தான் ஆசை ஆர்வம் இந்த மனிதர்களுக்கு.

உலகில் அதாவது நான் பிரபஞ்சத்தில் இருக்கு இடத்தில் இருந்து மனிதனை, பூமியில் வாசிக்கும் மக்களை பார்க்கும் போது, அனைவரும் அவ்வாறு இருக்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. ஆசை, பேராசை போன்றே, பாசம், நேசம், காதலும் இருக்க தான் செய்கிறது. சில மனிதர்கள் என்னை பார்த்து, காவியம், ஓவியம் வரைவது, காதல் செய்வது என நெகிழ்பவர்களும் உள்ளனர்.

என்னை பார்த்து, நிலாவே வா என்றும், வாவெண்ணிலவே என்று, இசை அமைத்து, மெட்டு கட்டி பாடி புகழ்பெறுகிறார்கள். மற்றவர்கள் அதை கேட்டு மயங்குகிறார்கள். அவ்வாறு மயங்கும் மனிதன் நிலாவாகிய என்னை, ஏன் காதலியாகவும், காதலன் ஆகவும் பார்க்கிறார்கள்.

என்னை வா நிலவே என்று நீங்கள் அழைத்தாலும் நான் வர முடியாது. நான் பூமிக்கு வந்தால், அதன் பரப்பில் 6ல் 1 பங்கை காலி செய்து விடுவேன். அதை முதலில் மனதில் வைத்து கொள்ளுங்கள் மனிதர்களே!

விந்தைநலான மனிதர்கள் அதுமட்டுமன்றி, நிலவே, மலரே என்று, நிலா நிலா ஓடி வா என்று தன் பிள்ளைகளை வேடிக்கை காட்டி சோறு ஊட்ட செல்லமாய் அழைக்க என பயன்படுத்திக் கொண்டனர் ஒரு காலத்தில்.

என்னை தன் பிள்ளையாக, காலத்தால் அழியாத காதலாக மட்டுமின்றி இன்னும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் மனிதர்களை எனக்கு பார்க்க வேடிக்கையாய் இருக்கிறது. ஆனால் அவர்களின் கற்பனை சில நேரத்தில் ஆச்சரியப்படவும் வைக்கிறது.

என்னே! வேடிக்கை மனிதர்களோ போங்கள்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *