அஞ்சல் நிலைய அதிகாரி

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 21, 2026
பார்வையிட்டோர்: 72 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்

(1831ல் வெளியான ருஷ்யச் சிறுகதை 1981ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அலெக்ஸாந்தர் பூஷ்கின் (1799-1837)

புதிய ருஷ்ய இலக்கியத்தின் தந்தை. ருஷ்ய இலக்கிய மொழியின் விதிகளை முறைப்படுத்தியவர். மாஸ்கோவில் பிறந்தார். தொன்மை வாய்ந்த, ஆனால் வறுமைப்பட்ட உயர் குடியில் தோன்றினார். பீட்டர்ஸ் பர்க் நகர்ப்புறத்தில் ஜார் வம்சக் குடியிருப்பில் இருந்த உயர் குடியினர் பள்ளியில் பயின்றார். அறிவார்ந்த விடு தலை வேட்கையின் பண்புக் கூறுகள் இந்தப் பள்ளியில் அளிக்கப்பட்ட கல்வியிலும் போதனையிலும் இருந்தன. நெப்போலியனுக்கு எதிராக 1812ம் ஆண்டில் நடந்த தேசபக்த யுத்தத்தின் போது தோன்றிய நாட்டுப் பற்றின் ஏற்றம் காரணமாக முளை விட்டிருந்தது இந்த விடுதலை வேட்கை.

1817-1820ல் இயற்றப் பெற்ற பூஷ்கினின் முதல் கவிதைகளிலேயே விடுதலைப் பற்றும் பண்ணையடிமை முறைக்குக் கண்டனமும் ஆவேசத்துடன் ஒலிக்கின்றன. முதல் ருஷ்யப் புரட்சியாளர்களான டிசம்பர்வாதிகளின் சங்கத்தில் பூஷ்கின் சேர்ந்திருக்கவில்லை, ஆயினும் உயர் குடிப் புரட்சியாளர்கள் தலைமுறை அனைத்தினதும் கருத் துக்களுக்குக் குரல் கொடுப்பவராக அவர் விளங்கினார்.

“நம் நாட்டில் எல்லா ஊற்றுக்களுக்கும் தலையூற்று அவரே” என்று பூஷ்கினைப் பற்றி எழுதினார் மக்சீம் கோர்க்கி. மூலச் சிறப்பு வாய்ந்த பாவனை நவிற்சிக் கவிதைகளும் (“காக்கேஷியக் கைதி”, “பக்சிசராய் நீரூற்று’ முதலியன) செய்யுள்களால் இயன்ற “யெவ்கேனி அனேகின்’” என்னும் நடப்பியல் நவீனமும் நெஞ்சை அள்ளும் மெல்லுணர்ச்சிப் பாக்களும் யாத் துள்ளார் அவர். ருஷ்ய மொழியில் முதலாவது மக்கள் நாடகம் (“பரீஸ் கதுனோவ்”) இயற்றியவர் பூஷ்கின். புதிய நடப்பியல் உரைநடையைத் தோற்றுவித்தவர் அவரே. உரைநடையின் “துல்லியமும் சுருக்கமும்’ முதன்மைச் சிறப்புக்கள் என்ற தமது கோட்பாட்டை இதில் அவர் கடைப்பிடித்தார் (“பேல்கினின் கதை கள்”, “துப்ரோவ்ஸ்கி”, “கப்பித்தானின் மகள்”). 

“பேல்கினின் கதைகளில்” ஒன்று இந்தத் தொகுப் பில் வெளியாகிறது. ருஷ்யாவின் வெவ்வேறு சமுதாய வகுப்பினருடைய வாழ்க்கையின் விரிந்த காட்சியை இந்தக் கதைகளில் அவர் தீட்டியிருக்கிறார். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை நாட்டு வரலாற்றின் உள்ளார்ந்த பகுதியாக முதன் முறை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 

பூஷ்கினின் மேதையும் விடுதலை ஆர்வம் பொங்கிய அவரது படைப்புக்களும் ஆளும் வட்டாரத்தினரின் பகை மையைத் தூண்டிவிட்டன. கீழ்மை நிறைந்த அரசவைச் சூழ்ச்சிகள் கவிஞரைத் திணற அடித்தன. ஹலாந்தா நாட்டுத் தூதனின் தத்துப் புதல்வனான தான்தெஸ் என்பவனுடன் நடந்த இருவர் போர் அவருடைய வாழ்வைத் துன்பகரமாகத் துணித்துவிட்டது. 

பூஷ்கினுடைய மேதையின் வீச்சு உலகப் பண்பாட்டின் மாட்சி மிக்க, அசாதாரணமான பெரியோ ரின் வரிசையில் அவரை நிறுத்துகிறது. “பூஷ்கின் மெய் யாகவே தனிப் பெரும் சான்றோர்” என்று எழுதினார் கோகல். “ருஷ்ய உணர்வில் ஊறிய ஒரே தனிச் சான்றோர். இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ருஷ்ய மனிதன் எவ்வளவு வளர்ச்சி ஒருவேளை அடைவானோ, அவ்வளவு வளர்ச்சியை ஏற்கெனவே அடைந்து விட்ட ருஷ்ய மனிதர் அவர். 

அஞ்சல் நிலைய அதிகாரி 

“பிராந்தியச் செயலாளன் எனும் அதிகாரி* அஞ்சல்  நிலையத்தின் சர்வாதிகாரி”. சிற்றரசர் வியாஸேம்ஸ்கிய்** 

அஞ்சல் நிலைய அதிகாரிகளைத் திட்டாதவன் யாரேனுமுண்டா, அவர்களுடன் சச்சரவிடாதவன் யாரேனுமுண்டா? சீற்றம் பொங்கிய கணத்தில், துர்ப் பாக்கியகரமான புகார்ப் புத்தகத்தைக் கேட்டு வாங்கி, அவர்களது தான் தோன்றி நடத்தை பற்றியும், மரி யாதையின்மை பற்றியும், நேரக் கண்டிப்பு இல்லாதது பற்றியும் பயனற்ற குறைகளை எழுதாதவன் எவனாவது உண்டா? அஞ்சல் நிலைய அதிகாரிகளை மனித வடிவங் கொண்ட விகிருதிகள் என்றும், பண்டைய அநியாய அதிகாரிகளை ஒப்பவே மோசமானவர்கள் என்றும், குறைந்த பட்சம் மூரோம்*** கொள்ளைக்காரர்களைப் போன்றவர்கள் என்றும் கருதாதவன் எவனாவது உண்டா? ஆயினும் நாம் அவர்கள் விஷயத்தில் நடுநிலை மை கடைப்பிடிப்போம், அவர்கள் நிலைமையில் நம்மை வைத்துக் கொண்டு பார்க்க முயல்வோம், அப்போது அவர்களை எவ்வளவோ அதிகத் தாட்சண்ணியத்துடன் மதிப்பிட ஒருகால் நமக்கு இயலும்.

*ஜார்கால ருஷ்யாவில் இருந்த பதினான்கு வகை உத்தியோகஸ்தர்களில் கீழ் உத்தியோகஸ்தன்.-ப-ர்.
** அ.பி. வியாஸேம்ஸ்கிய் (17921878)- பிரசித்தி பெற்ற கவிஞர். பூஷ்கினின் நண்பர்.-ப-ர்.
*** மூரோம் காடு ஒக்கா ஆற்றின் வட கரை யோரக் காடு. இங்கே வழிப்பறிகாரர்கள் ஏராளமா யிருந்தார்கள்.-ப-ர். 

அஞ்சல் நிலைய அதிகாரி என்பவன் யார்? பதினாலாந் தரச் சிற்றதிகாரி, கடுந்துன்பம் உழல்பவன்,பிரயாணிகளின் அடிகளிலும் குத்துக்களிலுமிருந்து தன் பதவி ஒன்றினால் மட்டுமே தப்புபவன், அதுவும் எப்போதுமல்ல (வாசகர்களின் மனச்சாட்சி எனக்குப் பிரமாணங் கூறுமாக). சிற்றரசர் வியாஸேம்ஸ்கிய் சர்வாதிகாரி என விளையாட்டாகக் குறிப்பிடும் இந்த அதிகாரியின் வேலை எப்படிப்பட்டது? உண்மையான கடுங்காவல் தண்டனையா அல்லவா? நிம் மதி பகலிலும் கிடையாது, இரவிலும் கிடையாது. அலுப் பூட்டும் பயணத்தின் போது மனதுக்குள் திரண்ட சள்ளை களை எல்லாம் பிரயாணி அஞ்சல் நிலைய அதிகாரியின் தலையில் கொட்டுகிறான். பருவ நிலை மகா மோசம், பாதை ஒரே சீர்கேடு, வண்டியோட்டி அடங்காப் பிடாரி, குதிரைகள் சண்டி ஆக எல்லாவற்றுக்கும் பொறுப் பாளி அஞ்சல் நிலைய அதிகாரிதான். அவனுடைய ஏழைக் குடிலுக்குள் வரும் பிரயாணி அவனைப் பகைவனாகக் கருதுகிறான்; இந்த அழையா வி ருந்தினனிடமிருந்து விரைவிலேயே விடுதலை பெற முடிந்துவிட்டால் அது அஞ்சல் நிலைய அதிகாரியின் நல்ல காலம்; ஆனால் குதிரை கள் தயாராய் இல்லா விட்டாலோ? கடவுளே! என் னென்ன வசவுகளும் திட்டுகளும், என்னென்ன உருட்டல் களும் மிரட்டல்களும் அவன் தலையில் பொழிகின்றன! மழையிலும் உளையிலும் அவன் வீடு வீடாக ஓடிச்சாட வேண்டி வருகிறது; புயலிலும், ஜனவரி மாதக் கடுங் குளிரிலும் அவன் வெளியேறி வாயில் முகப்பிற்குச் செல்கிறான்- கோபாவேசத்திலிருக்கும் வழிப்போக்கனின் கூப்பாட்டிலும், நெட்டித் தள்ளலிலுமிருந்து நிமிட நேரமாவது ஓய்வு பெறுவதற்காக. எவனோ ஜெனரல் வருகிறான்; அஞ்சல் நிலைய அதிகாரி நடுநடுங்கிக்  கொண்டு, தன்னிடம் எஞ்சியிருக்கும் இரண்டே இரண்டு த்ரோய்க்காக்களையும்*- அவற்றில் ஒன்று தபால் எடுத் துச் செல்லத் தேவையானதுஅவனுக்குக் கொடுத்து விடுகிறான். ெ ஜனரலோ, அவனுக்கு நன்றி கூடக் கூறா மல் போய்விடுகிறான். ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் மீண்டும் சலங்கையொலி!.. தபால் வண்டிக்காரன் தடதடவென்று உள்ளே வந்து மாற்றுக் குதிரைகளுக் கான கோரிக்கைச் சீட்டை மேஜை மேல் கடாசு கிறான்!.. இவற்றை யெல்லாம் நன்கு சீர்தூக்கிப் பார்ப் போமானால் நமது இதயம் ஆத்திரத்திற்குப் பதிலாக உள்ளார்ந்த அனுதாபத்தால் நிறைந்து பொங்கும். இது விஷயமாக இன்னும் சில வார்த்தைகள்: இந்த இருபது ஆண்டுகளாக நான் ருஷ்யாவில் எல்லாத் திசைகளிலும் பிரயாணம் செய்திருக்கிறேன்; தபால் வண்டிப் பாதை கள் எல்லாவற்றையுமே அநேகமாக நான் அறிவேன்; வண்டிக்காரர்களின் சில தலைமுறையினர் எனக்குப் பழக்கம்; எனக்கு நேர்முகப் பரிச்சயமில்லாத, நான் அலுவல் தொடர்பு கொள்ளாத அஞ்சல் நிலைய அதிகாரி எவனாவது இருப்பது அரிதே; பிரயாணங்களின் போது என்னிடம் சேர்ந்து குவிந்துள்ள ருசிகரமான அவ தானிக்கைகளை விரைவிலேயே வெளியிடுவேன் என நம்புகிறேன்; ஆனால் அஞ்சல் நிலைய அதிகாரிகள் குழாம் பற்றிப் பொது மக்கள் மனத்தில் மிகமிகத் தவறான கருத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் இங்கே கூறிவிடுகிறேன். மிகுந்த நிந்தைக்கு ஆளாகி யுள்ள அஞ்சல் நிலைய அதிகாரிகள் பொதுவாக அமைதி யுள்ளவர்கள், பிறருக்குத் தொண்டு செய்யும் இயல்புள்ள வர்கள், எல்லோருடனும் சுமுகமாகப் பழகும் போக்குள்ளவர்கள், கெளரவம் பாராட்டுவதில் சங்கோசமுள் ளவர்கள், ரொம்பப் பணத்தாசை பணத்தாசை பிடித்தவர்களல்ல. அவர்களது உரையாடல்களிலிருந்து (பல பிரயாணிக் கனவான்கள் இவற்றைப் புறக்கணித்து விடுகிறார்கள்) அக்கறைக்குரியவையும் படிப்பினை நல்குபவையுமான எத்தனையோ விஷயங்களைக் கிரகித்துக்கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில், அரசாங்க அலுவலாகப் பயணஞ் செய்யும் ஆறாந்தர உத்தியோகஸ்த னின் பேச்சைவிட அஞ்சல் நிலைய அதிகாரிகளின் உரை யாடலை நான் மேலாக மதிக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். 

*த்ரோய்க்கா என்பது மூன்று குதிரைகள் கொண்ட ஜோடி.-ப-ர். 

மதிப்பிற்குகந்த அஞ்சல் நிலைய அதிகாரிகள் குழாத் தில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை எளி தாக ஊகித்துக்கொள்ள முடியும். உண்மையில் அவர் களில் ஒருவனது நினைவு எனக்கு விலைமதிப்பற்றது. நிலைமைகள் காரணமாக ஒரு காலத்தில் நாங்கள் நெருங் கிய அறிமுகம் செய்து கொண்டோம். அவனுடைய கதையைத்தான் வாசக நேயர்களுக்கு இப்போது சொல்லப் போகிறேன். 

1816ம் ஆண்டு மே மாதம், ஒரு மாகாணத்தில், தற்போது அழிந்து போய்விட்ட பாதை ஒன்றின் வழியே பிரயாணம் செய்யும் வாய்ப்பு எனக்கு நேர்ந்தது. அப்போது நான் சின்ன உத்தியோகஸ்தன், வாடகை வண்டியில் பிரயாணம் செய்துவந்தேன், இரண்டு குதிரைகளுக்குப் பணங் கொடுக்கும் நிலையிலிருந்தேன். இந்தக் காரணத்தினால் அஞ்சல் நிலைய அதிகாரிகள் என் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொண்டார்கள் எனக்குச் சேர வேண்டியதென்று எனக்குப் பட்டதை நான் அடிக்கடி சண்டை போட்டு வாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. என் உபயோகத்துக்காகத் தயா ரிக்கப்பட்டிருந்த குதிரைகளை யாராவது பெரிய பெரிய அதிகாரியின் வண்டியில் பூட்டுவதற்காக எவனாவது அஞ்சல் நிலைய அதிகாரி கொடுத்தால் இளைஞனும் முன்கோபி யுமான எனக்கு அவனுடைய கீழ்மையையும் அற்பத் னத்தையும் கண்டு ஆத்திரம் மண்டும். இதே போல, கவர்னர். நுட்பமாகப் அளிக்கும் விருந்தின் போது, பாகுபாடு செய்யும் இழிபிறவிப் பரிசாரகன் ஏதேனும் வெஞ்சனத்தை எனக்குப் பரிமாறாமல் மேலே சென்று விடுவதையும் பொறுத்துக் கொள்ள என்னால் வெகு காலம் வரை பழக்கப் பட முடியவில்லை. இப்போதோ, இரண்டுமே எனக்கு முறையானவையாகத் தென்படு கின்றன. தற்போது வழக்கிலிருந்து வரும், மேல் பதவிக்கு முதல் மரியாதை என்ற, எல்லோருக்கும் சௌ கரியமான விதிக்குப் பதில் உண்மையாகவே வேறொரு விதி, உதாரணமாக, மேலான அறிவுக்கு முதல் மரியாதை என்ற விதி நடப்புக்கு வந்தால் என்ன ஆகும்? எத்தகைய பூசல்கள் விளையும்! பணியாளர்கள் யாருக்கு முதலாவது பரிமாறியிருப்பார்கள்? கிடக்கிறது, நான் என் கதையைத் தொடர்கிறேன். 

*வெர்ஸ்தா—1.06 கிலோமீட்டர்.-ப-ர். 

அன்று ஒரே வெக்கை. அஞ்சல் நிலையத்திலிருந்து மூன்று வெர்ஸ்தா* தூரத்தில் தூறல் தொடங்கியது. ஒரு நிமிடத்திற்கெல்லாம் அடை மழை கொட்டி என்னைத் தொப்பலாக நனைத்துவிட்டது. நிலையம் சேர்ந் ததுமே எனது முதற் கவலை உடைகளை எவ்வளவு சீக் கிரம் முடியுமோ மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது, இரண்டாவது தேநீர் தருவிப்பது. “இந்தா, தூன்யா! ஸமவாரைத் தயார் பண்ணிவிட்டு, க்ரீம் வாங்கிக் கொண்டுவா!” என்று கத்தினான் அஞ்சல் நிலைய அதிகாரி. இந்தச் சொற்களைக் கேட்டதும் சுமார் பதினான்கு வயதிருக்கும் ஒரு பெண் தடுப்புச் சுவருக்குப் பின்னிருந்து வெளிவந்து, வாயில் முகப்புப் பக்கம் விருட்டெனப் பாய்ந்து சென்றாள். அவளுடைய அழகைக் கண்டு நான் மலைத்துப்போய், “இது உன் மகளா?” என்று அதிகாரி யிடம் வினவினேன். “ஆமாம், ஐயா!” என்று ஆத்ம திருப்தி தோன்ற விடையிறுத்தான். “ரொம்பப் புத்தி சாலி, ரொம்பத் துடி, எல்லாம் அவளுடைய காலஞ் சென்ற தாயார் போலவே” என்றான். உடனே எனது கோரிக்கையைப் பேரேட்டில் பதிவு செய்வதில் முனைந் தான். நான் அவனுடைய எளிய, ஆனால் நருவிசும் துப்புரவுமான இருப்பிடத்தை அலங்கரித்த படங்களைப் பார்வையிடலானேன். அவை “ஊதாரி மகன்” என்ற கதையின் விளக்கப்படங்கள். முதலாவது படத்தில், படுக்கைக் குல்லாயும் அங்கியும் அணிந்த மரியாதைக் குரிய முதியவன் சஞ்சலமுள்ள வாலிபனுக்கு விடை யளிப்பதும் வாலிபன் முதியவனின் ஆசியையும் பணப் பையையும் அவசரமாகப் பெற்றுக்கொள்வதும் தீட்டப் பட்டிருந்தன. இரண்டாவது படத்தில் இளைஞனின் துர் நடத்தை விவரமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது: பொய் நண்பர்களும் நாணமற்ற பெண்களும் புடை சூழ அவன் மேஜையருகே அமர்ந்திருப்பது போல. அடுத்த படத் தில் சீரழிந்த யுவன் கந்தை யுடையும் மூன்றுமுக்குத் தொப்பியுமாகப் பன்றிகளை மேய்ப்பதும் அவற்றின் தீனியைத் தானும் உண்பதும் காட்டப்பட்டிருந்தன; இளை ஞனின் முகத்தில் ஆழ்ந்த சோகமும் பச்சாத்தாபமும் துலங்கின. கடைசிப் படம் இளைஞன் தந்தையிடம் திரும்பி வருவதைச் சித்திரித்தது; நல்லியல்புள்ள தந்தை அதே படுக்கைக் குல்லாவும் அங்கியும் அணிந்து மகனை எதிர் கொள்ள ஓடுகிறான்; மகன் முழந்தாள் படியிட்டுத் தந்தை யின் அடி வணங்குகிறான்; சமையல்காரர்கள் கொழுக் கவைத்த கன்றைக் கறியாக்கும் பொருட்டு வெட்டு வதும், இத்தகைய கொண்டாட்டத்திற்குக் காரணம் என்ன என்று மூத்த மகன் பணியாளர்களை விசாரிப் பதும் பின்னணியில் காட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்துக்கும் அடியில் இருந்த அதற்குரிய ஜெர்மன் ஈரடிச் செய்யுட்களை நான் படித்தேன். இவை அனைத்தும், பால்ஸாம் செடித் தொட்டியும், வண்ணக் கட்டம் போட்ட திரையிட்டிருந்த படுக்கையும் அச்சமயத்தில் என்னைச் சூழ்ந்திருந்த மற்றப் பொருள்களும் எல்லாம் என் நினை வில் இன்னும் விவரமாகப் பதிந்திருக்கின்றன. வீட்டுக் காரனையும் நான் இப்போது போன்றே கண்ணெதிரே காண்கிறேன்: சுமார் ஐம்பது வயதினன், நிகுநிகுவென்று களிததும்பும் தோற்றத்தினன்; அவன் அணிந்திருந்த பச்சை நிற நீள்கோட்டு சாயம் வெளுத்த ரிப்பன்களில் தொங்கிய மூன்று பதக்கங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

பழைய வண்டிக்காரனுக்கு நான் வாடகை கொடுத்துக் கணக்குத் தீர்ப்பதற்குள் தூன்யா ஸமவாரை எடுத்துக்கொண்டு திரும்பி வந்துவிட்டாள். தன் அழகு என்னை வசீகரித்துவிட்டது என்பதை இரண்டாவது பார்வையிலேயே கண்டுகொண்டு அந்தச் சின்னஞ்சிறு ஒய்யாரி, பெரிய நீல விழிகளை நாணத்துடன் தாழ்த்திக் கொண்டாள். நான் பேச்சுக் அவளிடம் கொடுத் 3தன்; அவளோ உலக விவகாரங்களில் பழகியவள் போலவே ஒருவிதமான கூச்சமும் இன்றி எனக்கு மறு மொழி பகர்ந்தாள். அவளுடைய தகப்பனுக்கு ஒரு கிளாஸ் பஞ்ச் சாராயம் ஊற்றிக் கொடுத்து விட்டு, தூன்யாவுக்கு ஒரு கோப்பைத் தேநீர் அளித்தேன். பின்பு மூவரும் யுகக் கணக்கில் பழகியவர்கள் போல உரை யாடலுற்றோம்.

குதிரைகள் தயாராகிக் காத்திருந்தன என்றாலும் அஞ்சல் நிலைய அதிகாரியையும் அவனது மகளையும் விட்டுப் பிரிய எனக்கு மனமில்லை. முடிவில் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன்; தகப்பன் சுகமே போய் வாருங்கள் என வாழ்த்தினான், மகள் வண்டிவரை என்னை வழியனுப்ப வந்தாள். வாயில் முகப்பில் நான் நின்று, அவளை முத்தமிடுவதற்கு அவளிடம் அனுமதி கோரி னேன். தூன்யா இணங்கினாள்…

“இவ்விளையாட்டில் ஈடுபட்டபின்”

நான் எத்தனையோ முத்தங்களைக் கணக்கிட முடி யும்; ஆனால், அவற்றில் ஒன்று கூட என் நினைவில் இவ் வளவு நீண்ட காலம், இவ்வளவு இன்பகரமாகப் பதிந்திருக்கவில்லை.

பல வருடங்கள் கழிந்தன. நிலைமைகள் என்னை மீண் டும் அதே பாதையில், அதே இடங்களுக்கு இட்டுச் சென்றன. முதிய அஞ்சல் நிலைய அதிகாரியின் மகளை நினைவு கூர்ந்து, அவளை மீண்டும் காணப் போகிறோம் என்ற எண்ணத்தால் மகிழ்ச்சி அடைந்தேன். வயதான அஞ்சல் நிலைய அதிகாரி ஒருகால் பதவியைவிட்டு நீக்கப் பட்டிருக்கலாம்; தூன்யாவுக்கு மணமாகி யிருக்கலாம் என்ற சிந்தனை எழுந்தது. இருவரில் ஒருவர் காலமாகி யுமிருக்கக் கூடும் என்ற கருத்தும் சட்டெனத் தோன்றி மறைந்தது. கவலை நிறைந்த முன்னுணர்வுகளுடன் அஞ் சல் நிலையத்தை அணுகினேன்.

எனது குதிரைகள் அஞ்சல் நிலைய அதிகாரியின் சிறு வீட்டெதிரே நின்றன. அறைக்குள் சென்றதுமே ‘ஊதாரி மகன்’ கதையின் விளக்கப் படங்களை அடையாளங் கண்டு கொண்டேன். மேஜையும் கட்டிலும் பழைய இடங்களிலேயே இருந்தன, ஆனால் ஜன்னல் குறட்டில் முன்போல மலர்கள் இல்லை; நாற்புறமும் இருந்த வஸ் துக்கள் கவனிப்பின்மையையும் பராமுகத்தையும் பறை சாற்றின. நிலைய அதிகாரி ஆட்டுத் தோல் கோட்டைப் போர்த்துக்கொண்டு படுத்திருந்தான். என் வரவு அவனை உசுப்பி விட்டது, அவன் எழுந்து உட்கார்ந்தான்… அதே சம்சோன் வீரின்தான், ஆனால் எவ்வளவு கிழடு தட்டிப் போய் விட்டான்! எனது கோரிக்கையை அவன் நகலெழுதுகையில் நான் அவனது நரை முடியையும், மழிக்காத கன்னங்களில் இருந்த சுருக்கங்களையும், கூனிய தோள்களையும் பார்வையிட்டேன்–தளதள வென்று களிததும்பிய ஆண்மகனை மூன்று-நான்கு ஆண்டுகள் குடு குடு கிழமாக ஆக்கி விட்டதைக் கண்டு என்னால் மலைப் புறாமல் இருக்க முடியவில்லை. “என்னை அடையாளம் தெரிகிறதா? நாம் ரொம்பக் காலத்துக்கு முன் அறி முகமானவர்கள் ஆயிற்றே!” என்று வினவினேன். “இருக் கலாம். இங்கே பெரிய சாலை. எத்தனையோ பிரயாணி கள் இங்கே வந்து போயிருக்கிறார்கள்” என்று உற் சாகமின்றிப் பதிலளித்தான். “உன் பெண் தூன்யா சௌக்கியந்தானே?” என்று கேட்டேன். கிழவன் முகம் சுளித்து, “ஆண்டவனுக்கே வெளிச்சம்” என்றான். ‘ஓகோ, மணமாகிவிட்டதோ?” என விசாரித்தேன். கிழவன் என் சொற்களைக் காதில் வாங்கிக்கொள்ளாதது போல் அபினயித்து, என் கோரிக்கையை வாய்க்குள் ளாகவே படித்துக்கொண்டுபோனான். நான் கேள்விகளை நிறுத்திவிட்டு, தேநீர் தயாரிக்கும் படி சொன்னேன். ஆவல் என்னை உலப்பியது; பஞ்ச் சாராயம் பருகினால் கிழவனின் வாய்மூடித்தனம் தானே அகன்று விடும் என நம்பினேன்.

நான் நினைத்தது சரியாயிற்று: கிழவன் சாராயத்தை வேண்டாமென்று சொல்லவில்லை. பானம் கிழவனது உற் சாகமின்மையை அகற்றி விட்டது என்பதைக் கவனித் தேன். இரண்டாவது கிளாஸ் பருக ஆரம்பித்ததுமே அவன் வாய்ப்பூட்டு கழன்றுவிட்டது. என்னை அடை யாளங் கண்டு கொண்டான், அல்லது கண்டு கொண்டது போலப் பாவனை செய்தான். அப்புறம் அவன் எனக்குச் சொன்ன கதை அப்போது என்னை மிகவும் ஈர்த்தது, என் உள்ளத்தை உருக்கிவிட்டது.

“அப்படியானால் என் தூன்யாவை உங்களுக்குத் தெரி யும் என்று சொல்லுங்கள்!” எனப் பேச்சைத் தொடங்கினான். “யார்தான் அவளை அறியாதவன்! ஆகா,தூன்யா, தூன்யா! எப்பேர்ப்பட்ட பெண்! வந்தவர்கள் எல்லோ ருமே அவளை மெச்சினார்கள், ஒருவராவது குறை சொன் னது கிடையாது. சீமாட்டிகள் அவளுக்குப் பரிசுகள் கொடுப்பார்கள், தலைக்குட்டை, காதணி என்று. நிலையத் துக்கு வரும் கனவான்கள் சாப்பாட்டுக்குத் தங்குவது போல நடித்து வேண்டுமென்றே தாமதிப்பார்கள்— உண்மையில் தூன்யாவை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக.யாரா வது கனவான் எவ்வளவுதான் கோபமாயிருந்தாலும் அவளைக் கண்டதுமே சாந்தமடைந்து என்னுடன் இனிமையாகப் பேசுவார். ஐயா நம்புவீர்களோ மாட் டீர்களோ, தபால் எடுத்துச் செல்பவர்களும் அரசாங்கச் செய்திச் சேவகர்களும் அரை மணியாவது அவளுடன் பேசாமல் போக மாட்டார்கள். இந்த வீடே அவள் பொறுப்பிலேதான் இருந்தது. வீட்டைத் துப்புரவாக வைத்துக் கொள்ளவும், சாப்பாடு தயாரிக்கவும் அவ ளுக்கு எப்படியோ நேரங் கிடைத்து விடும். முட்டாள் கிழமான எனக்கோ, அவளைப் பார்க்கப் பார்க்கத் தெவிட் டாது, சந்தோஷம் பொங்கிப் பொங்கிப் பெருகும். என் தூன்யா மேலே எவ்வளவு பாசம் வைத்திருந்தேன்!எப் படிக் கண்ணுக்குள் கண்ணாகப் பேணினேன்! அவளுக்கு எதிலாவது குறையுண்டா? எல்லாமிருந்தும் ஆபத்துக்குத் தோத்திரத்தால் அணைபோட முடியுமா? நடப்பது நடந்தே தீரும் அல்லவா?” இவ்வாறு சொல்லிவிட்டுத் தனது துயரக் கதையை விவரமாகக் கூறலானான்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் அவன் புதிய பேரேட்டில் கோடு போட்டுக் கொண்டிருந்தான். அவன் பெண் தடுப்புச் சுவரின் மறு புறம் உட்கார்ந்து உடை தைத்துக் கொண்டிருந்தாள். அப்போது நிலை யத்தின் எதிரே வந்து நின்றது ஒரு த்ரோய்க்கா. செர்க் கேஸியத் தொப்பியும் இராணுவ மேல்கோட்டும் கழுத்தைச் சுற்றிக் கனத்த மப்ளரும் அணிந்த பிரயாணி ஒருவன் அறைக்குள் வந்து குதிரைகள் வேண்டும் என்று கோரினான். குதிரைகளோ, எல்லாம் வெளியே போயிருந் தன. இதைக் கேட்டதும் பிரயாணி குரலையும் சவுக்கை யும் உயர்த்தினான், ஆனால் அதற்குள் இம்மாதிரிக் காட்சிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த தூன்யா தடுப்புச் சுவரின் பின்னிருந்து ஓடிவந்து பிரயாணியிடம் ஏதா வது உண்பதற்கு வேண்டுமா என நளினமாக வின வினாள். தூன்யாவின் வருகை எப்போதும் போலவே நற் பயன் விளைத்தது. பிரயாணியின் கோபம் பறந்து போ யிற்று; குதிரைகள் வரும்வரை காத்திருக்க இணங்கி, சாப்பாடு கொண்டு வருமாறு கூறினான். நனைந்து, பறட் டையாய்க் கிடந்த மென்மயிர்த் தொப்பியைக் கழற்றி, மப்ளரை அவிழ்த்து, இராணுவ மேல்கோட்டையும் அகற்றிய பின் அவன் ஒற்றை நாடி மேனியனான இளம் ஹுஸ்ஸார் – குதிரைப் படை வீரன்-என்பது தெரிந் தது. கறுகறு வென்று சிறு மீசை வைத்திருந்தான். விரைவிலேயே அவன் நிலைய அதிகாரி வீட்டில் சரள மாகப் பழகினான், அதிகாரியுடனும் அவன் புதல்வி யுடனும் மகிழ்வுடன் உரையாடினான். இரவு உணவு பரி மாறப்பட்டது. இதற்கிடையே குதிரைகள் திரும்பி வந்துவிடவே, அஞ்சல் நிலைய அதிகாரி, அவற்றுக்குத் தீனி காட்டாமலே பிரயாணியின் வண்டியில் பூட்டும்படி கட்டளையிட்டான்; ஆனால் அறைக்குத் திரும்பியதுமே இளைஞன் பெஞ்சியில் அநேகமாக உணர்விழந்து கிடப் பதைக் கண்டான். அவனுக்கு உடம்பு சரியாயில்லையாம். தலைவலித்ததாம், பிரயாணம் செய்ய இயலாதாம்.. என்ன செய்வது? நிலைய அதிகாரி தன் கட்டிலில் அவனைப் படுக்கவைத்தான். மறுநாள் காலை பிரயாணியின் உடம்பு நேராகாவிட்டால் ஸ… என்ற இடத்திலிருந்து டாக்டரை வரவழைப்பது என்று தீர்மானமாயிற்று. 

மறுநாள் ஹுஸ்ஸரின் நிலை இன்னும் மோசமா யிற்று. அவனுடைய ஆள் மருத்துவனை அழைத்து வர நகரத்துக்குச் சென்றான். தூன்யா காடியில் தோய்த்த கைக் குட்டையை அவன் தலைமேல் சுற்றிக் கட்டிவிட்டு, அவன் படுக்கையருகிலேயே உட்கார்ந்து தையல்வேலை யைத் தொடர்ந்தாள். நிலைய அதிகாரியின் முன்னிலையில் நோயாளி முனகிய வண்ணமாயிருந்தான், ஒரு வார்த்தை கூடப் பேச அவனுக்கு முடியவில்லை. ஆனாலும் இரண்டு கோப்பை காப்பி பருகினான், முனகியவாறே உணவு கொண்டுவரும்படி கூறினான். தூன்யா அவனைவிட்டு அக லவே இல்லை. அவன் ஓயாமல் தாகம் தாகமென்று தவித் தான். தூன்யா தன் கைப்படத் தயாரித்த எலுமிச்சம் பழ ரசம் ஒரு குவளையில் கொண்டு கொண்டுவந்து கொடுத்தாள். நோயாளி உதட்டை நனைத்துக் கொள் வான், அப்புறம் ஒவ்வொரு தரமும் குவளையைத் திருப்பிக் கொடுக்கும்போது, நன்றி தெரிவிப்பதற்காகத் தன் சோர்ந்த கரத்தால் தூன்யாவின் கையைப் பற்றி அழுத்துவான். சாப்பாட்டு வேளையில் மருத்துவன் வந்து சேர்ந்தான். நோயாளியின் நாடியைப் பிடித்துப்பார்த்து, அவனுடன் ஜெர்மன் பாஷையில் பேசி விட்டு, அவனுக்கு வேண்டியதெல்லாம் ஓய்வுதான் என்றும், இரண்டொரு நாளில் அவன் பிரயாணத்தைத் தொடரலாம் என்றும் ருஷ்ய மொழியில் கூறினான். ஹுஸ்ஸார் வைத்திய பரி சோதனைக்காக மருத்துவனுக்கு இருபத்தைந்து ரூபிள் கொடுத்ததோடு சாப்பிடவும் அழைத்தான். வைத் தியன் அழைப்பை ஏற்றுக்கொள்ளவே, இருவரும் நன்றாக ருசித்துச் சாப்பிட்டார்கள், ஒரு பாட்டில் வயினைக் குடித்துத் தீர்த்தார்கள். பரஸ்பரம் மகிழ்ச்சியோடு அளவளாவினார்கள். 

இன்னும் ஒரு நாள் கழிந்தது.ஹுஸ்ஸாருக்கு உடம்பு முற்றிலும் செளக்கியமாகிவிட்டது. அவன் அளவு கடந்த களிப்புடன் இருந்தான், தூன்யாவோடும் அஞ்சல் நிலைய அதிகாரியோடும் இடைவிடாது வேடிக்கை பேசினான், சீழ்க்கையடித்து இசைத்தான், பிரயாணிகளோடு உரை யாடினான், அவர்களது கோரிக்கைகளைப் பேரேட்டில் பதிவு செய்தான்; கனிந்த உள்ளம் படைத்த நிலைய அதிகாரியை அவன் மயக்கிய மயக்கில் மூன்றாம் நாள் காலை அந்த இனிய விருந்தாளியை விட்டுப் பிரியவே அதிகாரிக்கு மனம் வரவில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை. தூன்யா மாதாகோயில் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். ஹுஸ்ஸாரின் வண்டி வாயிலெதிரே ஓட்டிவரப்பட்டது. சாப்பாட்டிற்கும் தங்கு வசதிக்கும் நிலைய அதிகாரிக்குத் தாராளமாகப் பணம் அளித்து விடை பெற்றுக்கொண்டான் ஹுஸ்ஸார்; தூன்யாவிட மும் பிரிவு சொல்லிக்கொண்டவன், கிராமத்தின் மறு கோடியிலிருந்த மாதாகோயில் வரை அவளைத் தன் வண்டியில் ஏற்றிச்செல்வதாகக் கூறினான். தூன்யா தயங்கித் தயங்கி நின்றாள்… ஆனால் அவள் தகப்பன் எதற்காகப் பயப்படுகிறாய்? ஐயா ஒன்றும் ஓநாயில்லை, உன்னைத் தின்று விடுவதற்கு. ஏறிப்போ மாதாகோயில் வரை!” என்றான். தூன்யா வண்டியில் ஏறி ஹுஸ்ஸா ரின் பக்கத்தில் அமர்ந்தாள். வேலைக்காரன் வண் யோட்டியின் அருகே தாவியேறினான், வண்டிக்காரன் சீழ்க்கையடித்தான், குதிரைகள் துள்ளிப் பாய்ந்தன. 

தூன்யாவை ஹு ஸ்ஸாருடன் போகும்படி அனு மதிக்கத் தன்னால் எப்படி முடிந்தது, இந்தக் குருட்டுத் தனம் தன்னிடம் எப்படி வந்தது, தன் புத்திக்கு என்ன தான் நேர்ந்துவிட்டது என்று பாவம் நிலைய அதி காரிக்குப் புரியவேயில்லை. அரைமணி கழிவதற்குள் அவன் இதயத்தில் வேதனை எடுக்கத் தொடங்கிவிட்டது; கவலை ஒரேயடியாக ஆட்கொண்டு விடவே அவனால் பொறுக்க முடியவில்லை, தானே மாதாகோயில் சென்றான். மாதா கோயிலை நெருங்கும்போதே ஜனங்கள் வெளிவருவதை யும் தூன்யா வளைவிலோ, முகப்பிலோ இல்லாததையும் கண்டான் விடுவிடு வென்று மாதாகோயிலுக்குள்ளே புகுந்தான். பாதிரி பலிபீடத்தருகிருந்து அகன்று விட்டான்; கோயில் வேலையாள் மெழுகுவத்திகளை அணைத்துக் கொண்டிருந்தான்; இரண்டு கிழவிகள் ஒரு மூலையில் இன்னும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்; ஆனால் தூன்யாவை எங்குமே காணோம். பாவம் தகப் பன், தூன்யா பிரார்த்தனைக்கு வந்திருந்தாளா என்று வேலையாளிடம் விசாரித்தான். வரவில்லை என்றான் அவன். அஞ்சல் நிலைய அதிகாரி குற்றுயிரும் குறை உயிருமாக வீடு திரும்பினான். அவனுக்கு எஞ்சியிருந்த ஒரே நம்பிக்கை என்ன வென்றால் இளம் பருவத்துக்குரிய சபலச் சித்தத்துடன் தூன்யா தனது ஞானத்தாய் வசிக் கும் அடுத்த அஞ்சல் நிலையம் வரை சென்றிருக்கலாமோ என்பது தான். ஹுஸ்ஸாரின் வண்டியுடன் அனுப்பி யிருந்த குதிரைகள் திரும்ப வருவதை வேதனையும் பதை பதைப்புமாக எதிர்பார்த்தான் கிழவன். வண்டிக் காரனோ திரும்பக் காணோம். கடைசியில் இரவாகும் போது அவன் தனியாகக் குதிரைகளை ஓட்டிக்கொண் குடிமயக்கத்தோடு வந்து சேர்ந்தவன், “தூன்யா அடுத்த அஞ்சல் நிலையத்திலிருந்து ஹுஸ்ஸாருடன் மேலே சென்றுவிட்டாள்” என்ற, கொல்வது போன்ற செய்தியைக் கொணர்ந்தான். 

கிழவன் தன் துர்ப்பாக்கியத்தைத் தாங்க முடியாத வனாய், கட்டிலில்-இளம் வஞ்சகன் படுத்திருந்த அதே கட்டிலில் – அக்கணமே விழுந்து விட்டான். இப்போது எல்லா நிலைமைகளையும் எண்ணிப்பார்க்கையில், இளை ஞன் அசெளக்கிய முற்றது வெறும் பாசாங்கே என்பதை அஞ்சல் நிலைய அதிகாரி ஊகித்துக்கொண்டான். அப் பாவிக் கிழவனுக்குக் கடுஞ்சுரம் வந்து விட்டது. அவ னுக்குப் பதில் தாற்காலிகமாக வேறு அஞ்சல் அதி காரியை நியமித்துவிட்டு அவனை GY. என்ற இடத் திற்குக் கொண்டு போனார்கள். ஹுஸ்ஸாரைப் பார்க்க வந்த அதே மருத்துவன் அவனுக்கு வைத்தியம் செய் தான். வாலிபன் முற்றிலும் ஆரோக்கியமாகவே இருந்த தாகவும், அவனுடைய தீய நோக்கங்களைத் தான் அப் போதே ஊகித்துக் கொண்டதாகவும், அவனது சாட் டைக்குப் பயந்தே ஒன்றும் சொல்லாதிருந்து விட்டதாக வும் இப்பொழுது அவன் உறுதியாகக் கூறினான். அந்த ஜெர்மானியன் உள்ளதைத் தான் சொன்னானோ அல்லது தனது தூரதிருஷ்டியைப் பற்றி வீண் பகட்டு டு செய் தானோ, எதுவாயிருந்தாலும் தன்னிடம் சிகிச்சை பெற்ற ஏழை நோயாளிக்கு அவன் எவ்வித ஆறுதலும் அளிக்க வில்லை. உடம்பு சரியானதுமே கிழவன் ஸ… நகரிலிருந்த தலைமை அதிகாரிகளிடம் இரண்டு மாத விடுமுறை வாங்கிக் கொண்டு தனது நோக்கம் பற்றி யாருக்கும் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் மகளைத் தேடிக் ஹ கால் நடையாகச் சென்று விட்டான். ஹுஸ்ஸார் காப் டன் மீன்ஸ்கிய், ஸ்மலேன்ஸ்க் நகரிலிருந்து பீட்டர்ஸ் பர்குக்கு யாத்திரை செய்ததாகப் பேரேட்டிலிருந்து தெரிந்து கொண்டான். தூன்யா தானாக விரும்பியே ஹுஸ்ஸாருடன் போனது போலத் தோன்றிய போதி லும் அவள் வழி நெடுகக் கண்ணீர் வடித்ததாக அவர்களை ஏற்றிச் சென்ற வண்டிக்காரன் சொன்னான். “கடவுள் துணை நின்றால் வழி தவறிய கன்றை மீண்டும் வீடு சேர்ப்பேன்’ என நினைத்துக் கொண்டான் அஞ்சல் நிலைய அதிகாரி. இந்த எண்ணத்துடன் அவன் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு வந்து இராணுவச் சேவைக் காலத்தில் உடன் பணியாற்றியவனும் இப்போது ஓய்வு பெற்ற சிற்றதிகாரியுமான ஒருவன் வீட்டில் தங்கினான். இங் கிருந்தபடி தேட்டத்தைத் தொடங்கினான். காப்டன் மீன்ஸ்கிய் பீட்டர்ஸ்பர்க்கில் இருப்பதாகவும் பிரசித்தி பெற்ற தெமூத்தவ் ஹோட்டலில் வசிப்பதாகவும் சீக் கிரமே விசாரித்தறிந்தான். அவனிடம் போவதென்று நிச்சயித்தான். 

அதிகாலையில் அவன் ஹுஸ்ஸாரின் அறை வாயிலை அடைந்து, கிழப் போர் வீரன் ஒருவன் எஜமானைக் காண வந்திருப்பதாகச் சொல்லுமாறு ஹுஸ்ஸாரின் பணி யாளைக் கேட்டுக் கொண்டான். பூட்சுகளைக் கவர்க் கொம் பில் மாட்டிப் பாலிஷ் செய்து கொண்டிருந்த பணியாள், எஜமான் உறங்குவதாகவும், பதினொரு மணிக்கு முன் அவர் யாரையும் பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தான். அஞ்சல் நிலைய அதிகாரி வெளியே போய்விட்டுக் குறித்த நேரத்தில் திரும்பிவந்தான். இந்தத் தடவை மீன்ஸ் கியே நீள் அங்கியும் சிவப்பு மயிர்த்தொப்பியும் அணிந்து அவனை எதிர்கொண்டான். “உனக்கு என்ன வேண் டும், அப்பா?” என்று கேட்டான். கிழவனின் உள்ளத் தில் உணர்ச்சிகள் கொந்தளித்துப் பொங்கின, கண் கள் நீர் மல்கின. “பிரபுவே ஆண்டவன் பெயரால் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், கருணை கூருங்கள், பிரபுவே!” என்று மட்டுமே குரல் தழுதழுக்கக் கூறினான். மீன்ஸ்கிய அவனைச் சட்டென மேலுங்கீழும் பார்த் தவன் முகம் குப்பென்று சிவக்க, கிழவன் கையைப் பற்றித் தனது அறைக்கு இட்டுச்சென்று அறைக் கதவைச் சாத்தி உட்புறம் தாழிட்டான். “பிரபுவே, தவறி விழுந்தது மீண்டும் கைக்கு வராது; என் பேதை தூன்யாவையாவது எனக்குத் திருப்பித் தாருங்கள்! நீங்களோ அவளை வேண்டிய மட்டும் அனுபவித்தாகிவிட் டது. வீணாக அவள் வாழ்வைப் பாழாக்காதீர்கள்’ என்று இறைஞ்சினான் முதியவன். இளைஞன் ஒரேயடி யாக நாணமடைந்து, “செய்ததை மாற்ற முடியாது.நான் உனக்குத் தீங்கிழைத்து விட்டேன், அதன் பொருட்டு உன்னிடம் மனமார மன்னிப்புக் கோருகிறேன். ஆனால் தூன்யாவைத் தள்ளிவைத்துவிடுவேன் என்று மட் டும் நினைக்காதே. அவள் சுகமாயிருப்பாள் என ஆணை யிட்டுச் சொல்லுகிறேன். உனக்கு அவள் எதற்காக? அவள் என்னைக் காதலிக்கிறாள். தனது பழைய நிலைமைப் படி வாழும் பழக்கமே அவளுக்கு விட்டுப்போயிற்று. நீயோ, அவளோ நீங்கள் இருவருமே நடந்ததை மறக்க முடியாது” எனக் கூறினான். பின்பு கிழவனின் கோட்டு மடிப்புக்குள் எதையோ திணித்து விட்டு, கதவுத் தாழ்ப்பாளைத் திறந்தான். அஞ்சல் நிலைய அதி காரி, எப்படி என்று தானே அறியாமல் தெருவுக்கு வந்து சேர்ந்தான். 

நெடு நேரம் அசையாமல் நின்று கொண்டிருந்த பின்பு அவன் தனது கோட்டு மடிப்புக்குள் ஏதோ காகிதக் கற்றை இருப்பதை உணர்ந்தான். அதை வெளியிலெடுத் தவன், ஐந்து, பத்து ரூபிள் நோட்டுக்கள் பல கொண்ட சுருள் என்பதைக் கண்டான். மீண்டும் அவன் விழிகளில் நீர் ஊற்றெடுத்தது — இது ஆத்திரக் கண்ணீர். நோட்டுக் களைப் பந்தாய்ச் சுருட்டித் தரையில் எறிந்து பூட்சுக் குதியால் துவைத்துத் தேய்த்துவிட்டு அப்பால் நகர்ந் தான்… சில தாவடி சென்றபின் நின்று, யோசித்து விட்டு.. திரும்பி நடந்தான். ஆனால் நோட்டுக்களைக் காணோம். நல்லுடையணிந்த வாலிபன் ஒருவன் அவனைப் பார்த்ததுமே ஓடி வாடகை வண்டியொன்றில் சட்டென ஏறி உட்கார்ந்து கொண்டு, “வேகமாய் விடு!” என்று கூவினான். அஞ்சல் நிலைய அதிகாரி அவனை விரட்டிச் செல்லவில்லை. தனது அஞ்சல் நிலையம் திரும்புவதென்று தீர்மானித்தான், ஆயினும் போவதற்கு முன்பு பாவம் தூன்யாவை ஒரு தரமாவது பார்த்து விட்டுப் போக விரும்பினான். ஆகவே, இரண்டு நாட்களுக்கெல்லாம் மீன்ஸ்கியின் இருப்பிடத்துக்கு மறுபடியும் சென்றான். ஆனால் இராணுவச் சேவகன் எஜமான் யாரையும் பார்க்க மாட்டார் என்று கண்டிப்பாகச் சொல்லி, அவனை நடை யிலிருந்து வெளியே தள்ளிக் கதவை முகத்திலறைந் தாற்போலப் படீரென்று சாத்திவிட்டான். அஞ்சல் நிலைய அதிகாரி சற்று நேரம் வெளியே நின்று கொண்டிருந்து விட்டுப் பிறகு அப்பால் போனான்.

அதே தினம் மாலை, மாதாகோயிலில் பிரார்த்தனை செய்து உபதேசங்கேட்டுவிட்டு லித்தேய்னிய் வீதி வழி யாக அவன் வந்து கொண்டிருக்கையில் ஒயிலான வண்டி ஒன்று அவனைக் கடந்து சென்றது. அதில் மீன்ஸ்கிய் உட்கார்ந்திருப்பதைக் கிழவன் அடையாளங் கண்டு கொண்டான். வண்டி மூன்று மாடி வீடொன்றின் வாயி லுக்கு நேரே போய் நின்றது. மீன்ஸ்கிய் வாயில் முகப் பில் குதித்து உள்ளே விரைந்தான். அஞ்சல் நிலைய அதி காரியின் மனத்தில் இன்பகரமான எண்ணம் உதித்தது. அவன் திரும்பி, வண்டிக்காரனை நெருங்கியதும், “யாரு டைய குதிரையப்பா இது? மீன்ஸ்கியுடையதோ?” என்று வினவினான். “ஆம், அவருடையதே தான். எதற்காகக் கேட்கிறாய்?” என்றான் வண்டிக்காரன். “எதற்குத் தெரி யுமா? உன் எஜமானர் தூன்யாவுக்கு ஒரு கடிதம் கொண்டு கொடுக்கச் சொன்னார். ஆனால் அவள், அது தான் தூன்யா, எங்கே வசிக்கிறாள் என்பது எனக்கு மறந்து போய் விட்டது” என்று சொன்னான் முதியவன். ”இதே வீட் டில் தான் வசிக்கிறாள், இரண்டாவது மாடியில். நீ தான் நேரமாக்கிவிட்டாய், கடிதங் கொண்டு வர. இப் போது எஜமானே அவளோடு இருக்கிறார்” எனக் கூறினான் வண்டிக்காரன். அஞ்சல் நிலைய அதிகாரியோ, நெஞ்சம் இனந் தெரியாதவாறு படபடக்க, “அதனால் பரவாயில்லை. சரியான தகவல் கொடுத்ததற்கு நன்றி. எதற்கும் நான் என் வேலையை நிறைவேற்றிவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் படியேறினான்.

கதவு பூட்டியிருந்தது. அழைப்பு மணியை அடித்து விட்டுக் கிழவன் என்ன நடக்கிறதென்று பதைப்புடன் எதிர்பார்த்துநின்றான். பூட்டுத்துளையில் சாவி கிளிக்கிட் டது, பின்பு கதவு திறந்தது.”அவ்தோத்யா சம்சோனவ்னா இங்கேதானே வசிக்கிறார்கள்?” என்று வினவினான் முதி யவன். ”இங்கேதான்” என விடையிறுத்த இளம் பணிப் பெண், “உனக்கு அவர்களிடம் என்ன வேண் டும்?” என்று கேட்டாள். கிழவன் பதில் சொல்லாமல் நடைக்குள் புகுந்தான். “கூடாது, கூடாது. அவ்தோத்யா சம்சோனவ்னாவைக் காண யாரோ வந்திருக்கிறார் கள்’ என்று கத்தினாள் பணிப் பெண். அஞ்சல் நிலைய அதிகாரியோ அதைக் காதிலேயே போட்டுக்கொள் ளாமல் விடுவிடென்று மேலே நடந்தான். அவன் கடந்து சென்ற முதலிரண்டு அறைகளும் இருட்டாயிருந்தன. மூன்றாவது அறையில் மட்டும் வெளிச்சம் தெரிந்தது. திறந்திருந்த அறை வாயில் வரை சென்றவன் அப்படியே நிலைத்து நின்று விட்டான். கவர்ச்சியாக அலங்கரிக்கப் பட்டிருந்த அறையில் மீன்ஸ்கிய் சிந்தனையிலாழ்ந்த வனாக வீற்றிருந்தான். தூன்யா, மிகமிக நாகரிகப் பாங் குடன் உடையணிந்து, அவனது நாற்காலியின் கைமீது, ஆங்கில தோரணையில் குதிரைச் சவாரி செய்வதுபோல உட்கார்ந்து, இரத்தினங்கள் ஜொலித்த விரல்களில் மீன்ஸ்கியின் கேசத்தைச் சுருட்டியவண்ணம் அவனைக் காதல் ததும்ப நோக்கிக் கொண்டிருந்தாள். பாவம் அஞ்சல் நிலைய அதிகாரி! மகள் இவ்வளவு அழகாக அவனுக்கு இதற்குமுன் ஒரு போதுமே தோன்றியதில்லை; தன் வசமின்றியே அவளை வியந்து நோக்கினான். “யார் அங்கே?” என்று தலையை நிமிர்த்தாமலே கேட்டாள் அவள். அவனோ வாயே திறக்கவில்லை.விடை கிடைக்காத படியால் தூன்யா நிமிர்ந்து பார்த்தாள்..கோவென அலறிக் கொண்டு இரத்தினக் கம்பளத்தின் மீது விழுந்து கலவரமுற்ற மீன்ஸ்கிய் அவளைத் தூக்கு விட்டாள். வதற்காகப் பாய்ந்தவன், கிழ அஞ்சல் நிலைய அதிகாரி கதவருகே நிற்பது கண்ணில் படவே, தூன்யாவை விட்டு விட்டு, கோபத்தால் உடல் பதற அவனை அணுகினான். பற்களைக் கிட்டிக்கொண்டு, “உனக்கு என்ன வேண்டும்? எதற்காக வழிப்பறிகாரன் போல என் பின்னேயே வந்து கொண்டிருக்கிறாய்? என் உயிரை வாங்குவதாக உத்தேசமா? போய்த் தொலை இங்கிருந்து!’ எனச் சீறி, வலிய கரத்தால் கிழவனது கோட்டுக் காலரைப் பற்றி வெளியே மாடிப் படிமீது நெட்டித் தள்ளினான். 

கிழவன் இருப்பிடம் திரும்பினான். இதைப்பற்றிப் புகார் செய்யும்படி அவனுடைய நண்பன் யோசனை கூறினான். ஆனால் அஞ்சல் நிலைய அதிகாரி தீர ஆலோ சித்த பின்பு, வேண்டாம் என்று கையசைப்பால் தெரி வித்துவிட்டு, விஷயத்தை அப்படியே விட்டு விடத் தீர் மானித்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் பீட்டர்ஸ்பர்கிலிருந்து புறப்பட்டுத் தனது அஞ்சல் நிலையம் சேர்ந்து பழைய வேலையை மேற்கொண்டான். “ஆயிற்று, அநேகமாக மூன்று வருஷங்களாக நான் தூன்யா இல்லாமலே, அவளிடமிருந்து ஒரு தகவலும் இன்றியே வாழ்ந்துவருகிறேன். உயிரோடுதான் இருக் றாளா இல்லையா என்பதை ஆண்டவனே அறிவான். எதுவும் நடக்கக்கூடும். வழியிலே போகிற பிலுக்கன் கடத்திக் கொண்டு போய்க் கொஞ்ச காலம் வைத்துக் கொண்டிருந்துவிட்டுத் தெருவில் விரட்டி விட்ட முதலா வது பெண் அவளல்ல, கடைசியானவளும் அவளல்லவே. 

இன்றைக்குப் பட்டும் மகமலுமாகப் பகட்டிவிட்டு நாளைக்கே ஆடையற்ற பஞ்சைகளுடன் சந்தி பெருக் கும் மூடப் பெண்கள் இவளைப் போல எத்தனையோ பேர் பீட்டர்ஸ்பர்கில் இருக்கிறார்களே. தூன்யாவும் இதே கதிக்குத்தான் ஆளாவாள் என்று நினைக்கும் போது சில சமயம், அவள் புதைகுழி சேர்ந்து விட்டால் நன்றா யிருக்குமே என்ற பாவச் சிந்தனை தன்னை யறியாமலே உண்டாகிவிடுகிறது… என்று கூறி முடித்தான் அஞ்சல் நிலைய அதிகாரி. 

எனது நண்பனான கிழ அஞ்சல் நிலைய அதிகாரி சொன்ன கதை இதுதான். நடு நடுவே கண்ணீர் கதையை இடைமுறித்து விடும்; அவன் கண்ணீரைக் கோட்டுத் தலைப்பால் நேர்த்தியாகத் துடைத்துக் கொள் வான். கதை சொல்கையில் அவன் குடித்துத் தீர்த்த ஐந்து கிளாஸ் சாராயம் இந்தக் கண்ணீருக்கு ஓரளவு காரணம் என்றாலும் அது என் உள்ளத்தை வெகுவாக உருக்கிவிட்டது. விடை பெற்றுச் சென்ற பின்பும் நெடு நேரம் வரை கிழ அஞ்சல் நிலைய அதிகாரியை என்னால் மறக்க முடிய வில்லை; பாவம் தூன்யாவைப்பற்றி நீண்ட பொழுது சிந்தித்தேன்… 

சமீபத்தில்க… என்ற குப்பத்தின் வழியாகச் செல்கை யில் என் நண்பனை நினைவுகூர்ந்தேன்; அவன் நீண்ட காலம் ஆட்சி செலுத்திய அஞ்சல் நிலையம் இப்போது இல்லை என விசாரித்ததில் தெரிய வந்தது. ‘பழைய அஞ்சல் நிலைய அதிகாரி உயிரோடிருக்கிறானா?” என்ற கேள் விக்குத் திருப்திகரமான பதிலளிப்பவர் யாருமில்லை. பழகிய இடங்களைப் பார்த்து வருவதெனத் தீர்மானித்து, வாடகைக்குக் குதிரைகள் வாங்கிக் கொண்டு ந… என்ற கிராமத்துக்கு வண்டியில் போனேன். 

இது நிகழ்ந்தது இலையுதிர் காலத்தில். வானம் சாம் பல் நிற மேகங்களால் மூடப்பட்டிருந்தது; அறுவடையான வயல்களிலிருந்து வீசிய குளிர் காற்று, சிவப்பும் பழுப்புமான இலைகளை வழியிலிருந்த மரங்களிலிருந்து அடித்துவந்தது. சூரியாஸ்தமனத்துக்குச் சற்று முன்பு கிராமத்தை அடைந்து, அஞ்சல் நிலைய அதிகாரியின் வீட்டெதிரே வண்டியை நிறுத்தினேன். பருத்த பெண் பிள்ளை ஒருத்தி வாயில் முகப்புக்கு (பேதை தூன்யா என்னை முத்தமிட்ட இடம் இதுதான்) வந்தாள். பழைய அஞ்சல் நிலைய அதிகாரி இறந்து ஒரு வருடமாகிறதென் றும், அவன் வீடு சாராயங்காய்ச்சுபவன் ஒருவனுக்கு இப்போது சொந்தம் என்றும், தான் சொந்தக்கார னுடைய மனைவி என்றும் என் கேள்விகளுக்கு விடையளித் தாள் அவள். எனது வீண் பயணத்தையும் ஏழு ரூபிள் வெட்டிச் செலவையும் குறித்து வருந்தலானேன். “அவ னது மரணம் எதனால் சம்பவித்தது?” என்று அவளைக் கேட்டேன். “அபரிமிதக் குடியினால், ஐயா!” எனப் பதிலிறுத்தாள். ”அவனை எங்கே அடக்கம் செய்திருக் கிறார்கள்?” “கிராமத்துக்கு வெளியே, அவன் மனைவி யின் கல்லறை அருகிலேயே. ‘எனக்கு அவன் அடக்க மான இடத்தை யாராவது காட்ட முடியுமா?” “முடி யாமலென்ன? அடே, வான்யா! அந்தப் பூனையோடு கொஞ்சினது போதும், விடு! ஐயாவை இடுகாட்டுக்கு அழைத்துப்போய் அஞ்சல் நிலையக்காரர் கல்லறையைக் காட்டு, போ.” 

கந்தையணிந்து, செம்மயிரும் ஒற்றைக் கண்ணுமாய் விளங்கிய சிறுவன் ஒருவன் ஓடிவந்து என்னைக் கிராமத் தின் கோடிக்கு இட்டுச் சென்றான். 

“அஞ்சல் நிலைய அதிகாரியை உனக்குத் தெரியுமா?” என்று வழியில் அவனிடம் கேட்டேன். 

“தெரியாமல் எப்படி? ஊது குழலுக்குத் துளைபோட அவர்தானே எனக்குக் கற்றுக் கொடுத்தார்! சாராயக் கடையிலிருந்து வெளி வரும் போது (சுவர்க்க சாம்ராஜ்யம் அவருக்குக் கிட்டுவதாக!), நாங்கள் அவர் பின் னோடு ஓடி, ‘தாத்தா, தாத்தா, எங்களுக்குக் கொஞ்சம் கொட்டைப் பருப்பு கொடுங்கள்!’ என்போம். இருப் பதை யெல்லாம் எங்களுக்கே தந்துவிடுவார்” என்றான் சிறுவன். 

பிரயாணிகள் அவரைப் பற்றி விசாரிப்பதுண்டா?”

“இப்போது பிரயாணிகளே கொஞ்சம்; யாராவது பஞ்சாயத்துக்காரர் வந்தால் தான் உண்டு. அவருக்குச் செத்தவர்களைப்பற்றி என்ன கவலை? ஆமாம், இந்தக் கோடையிலே ஒரு அம்மா வந்திருந்தார்கள். அஞ்சல் காரரைப்பற்றிக் கேட்டார்கள், அவருடைய கல்லறை யையும் போய்ப் பார்த்தார்கள். 

“எந்த மாதிரி அம்மா?” என்று ஆவலுடன் வின வினேன். 

“அழகான சீமாட்டியம்மா. ஆறு குதிரை பூட்டிய பெட்டி வண்டியிலே வந்தார்கள்–மூன்று குழந்தைகள், ஆயா, கறுப்பு நாய் எல்லாமாக. அஞ்சல் நிலையக்காரர் காலமாகிவிட்டார் என்று கேள்விப்பட்டதுமே அம்மா அழுதார்கள். ‘நீங்கள் இங்கேயே சமர்த்தாக இருங்கள், நான் கல்லறையைப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று குழந்தைகளிடம் சொன்னார்கள். நான் அவர்களை அங்கே அழைத்துப்போகிறேன் என்று கூறினேன். ‘எனக்கு வழி தெரியும்’ என்று விட்டார்கள். அத்தோடு எனக்கு ஐந்து கோப்பெக் வெள்ளிக் காசு கொடுத்தார்கள். ரொம்ப நல்ல மாதிரி அம்மா!…” 

இடுகாட்டுக்கு வந்து சேர்ந்தோம். வெற்று இடம், சுற்று வேலியே கிடையாது. கட்டைச் சிலுவைகள் விதை தெளித்திருந்தது போலக் காணப்பட்டன. நிழலுக்கு ஒரு மரங் கூடக் கிடையாது. இவ்வளவு அவலம் வழியும் இடுகாட்டை நான் கண்டதேயில்லை. 

“இதுதான் அஞ்சல் நிலையக்காரர் கல்லறை” என்று மணல் மேடு ஒன்றின் மேல் தாவி ஏறியபடியே சொன்னான் சிறுவன். இயேசுவின் பித்தளை உருப்பதித்த கறுப்புச் சிலுவை மேட்டில் நாட்டப்பட்டிருந்தது. 

சீமாட்டியம்மாள் இங்குதான் வந்தார்களா?” என்று கேட்டேன். 

“ஆமாம். நான் தூரத்திலிருந்து அவர்களைப் பார்த்தேன். அவர்கள் இங்கேதான் விழுந்து கும்பிட்டார்கள், ரொம்ப நேரம் எழுந்திருக்காமலே கிடந்தார்கள். அப் புறம் கிராமத்துக்குப் போனார்கள், பாதிரியைக் கூப் பிட்டு அனுப்பி, அவருக்குப் பணம் கொடுத்தார்கள், எனக்கும் ஐந்து கோப்பெக் வெள்ளிக் காசு கொடுத்தார்கள் – ரொம்ப நல்ல மாதிரி அம்மா!” என்றான் வான்யா. 

நானும் சிறுவனுக்கு ஐந்து கோப்பெக் கொடுத்தேன். பயணத்தையோ, அதற்குச் செலவான ஏழு ரூபிள்களையோ குறித்து எனக்கு வருத்தமே உண்டாக வில்லை.

– 1831

– ருஷ்யச் சிறுகதைகள், மொழிபெயர்ப்பாளர்: பூ.சோமசுந்தரம், தயாரிப்புக் கலைஞர்: இ.பரீசவா, முதற் பதிப்பு: 1981, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *