சுவை
கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 136
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நபிபெருமானார் (ஸல்) வீற்றிருந்தார். தோழர்கள் அருகிலிருந்தார்கள், கிழவி ஒருத்தி வந்தாள். அவளிடம் ஒருகூடை கூடையிலே பேரீச்சம் பழங்கள். அவற்றைப் பெருமானாருக்கு அர்ப்பணித்தாள். உண்ணும்படி வேண்டினாள். ஏந்தல் இரங்கினார். வேண்டுதலை இயற்ற விழைந்தனர். ஒரு பழத்தைப் புசித்தார். பின்னொன்று. தொடர்ந்து ஒன்று. மீண்டும் ஒன்று… கூடை வெறுமையாகியது. கிழவி மகிழ்ந்தாள். நிறைவுடன் திரும்பினாள்.
தோழர்களுக்கு வியப்பு. பெருமானாரின் செயல் புரியவில்லை. பெருமானாரின் வழக்கமே வேறு. எதை யும் பங்கிட்டே உண்பார். தோழர்களுக்குக் கொடுக் காது புசிக்கார். இன்றோ? பழங்களைப் பங்கிட வில்லை· முழுவதையுந் தாமே புசித்தார். ‘காரணம் என்ன?’ தோழர்களுக்கு எழுந்த ஐயம். விளக்கங் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் முறுவலித்தார். வருமாறு சாரப்பட மொழிந்தார்:
தோழர்களே! அப்பழங்கள் புளிப்பானவை. உங்களுக்குத் தந்திருப்பேன். சுவைத்துப் பார்த்திருப் பீர்கள். புளிப்பிலே முகங்கள் கோணும். மாற்றத்தைக் காண்பாள். மனம் புழுங்குவாள். என் முகம் கோணியதா? இல்லை. முழுவதையும் புசித்தேன். எனவே, அவள் மகிழ்ந்தாள். கிழவியின் மனம் நிறைந்தது.
சாந்தி ஒளிர்ந்தது. தோழர்களின் மனங்கள் சிலிர்த்தன.
– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கடைசி பேருந்து
புஷ்பராஜ் கந்தசாமி
October 3, 2026
வேர்கள்
புஷ்பராஜ் கந்தசாமி
September 27, 2026
தடுமாறும் உறவுகள்
இரா.கலைச்செல்வி
September 27, 2026
