கோச் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 4,399 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

‘ஷார்ட்ஸுடன்’ தான் செய்யும் உடற்பயிற்சியை, மொட்டை மாடியில் நின்று  கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர் வீட்டு வில்லனைக் கண்டு ஹரிணி அதிர்ச்சி அடைந்தாள்.

‘ச்சீ !  பொறுக்கிப் பயலே, என் புருஷனிடம் சொல்லி உனக்கு வைக்கிறேண்டா ஆப்பு..!’  கருவிக் கொண்டே ஹரிணி கீழே இறங்கி வந்தபோது காலிங்பெல் ஒலித்தது .

‘யாராக இருக்கம்’ யோசித்தபடியே திறந்தவளுக்கு மீண்டும் அதிர்ச்சி. 

மொட்டை மாடியில் பார்த்த அதே முகம், இப்போது எதிரில், மிக அருகில்.

“மேடம்.. என் பெயர் ஹரன். எதிர் வீட்டுக்குக் குடி வந்து ஒரு வாரம் ஆகுது.” 

” …..” பதில் பேசாமல் ‘சுள்’ என முகத்தை வைத்துக்கொண்டு, மௌனம் காத்தாள் ஹரிணி.

“மேடம்…! ஒரு வாரமா உங்க உடற்பயிற்சியை பார்த்துப் பார்த்து , தானும் செய்யணும்னு ஆசை படுறா என் மனைவி. அவளுக்கு நீங்க முறையா உடற்பயிற்சி நுணுக்கங்களைக் கற்றுத் தர முடியுமா ?..” ஹரன் இயல்பாகக் கேட்க, பின்னாலிருந்த ஹரிணி முன்னே வந்து கைகூப்பிளாள்.

‘உடற்பயிற்சிக் கோச்’சாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்ட ஹரிணி,  அவர்களை “உள்ளே வாங்க!!” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.

– கதிர்ஸ் 1-15 மே 2022

ஜூனியர்-தேஜ் இயற்பெயர்: வரதராஜன் அ. புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள், பேத்தி. பணி: ஓய்வு பெற்ற உதவித் தலைமை ஆசிரியர். கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல் சிறுகதை: சிற்றன்னை - குங்குமம், 24.03.1995 பரிசுகள்: 1999 கல்கி சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *