பாரதமாதா
கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2026
பார்வையிட்டோர்: 121
(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சௌந்தர்யா தலையில் கஞ்சிக் கலயமும் கையில் களை சுரண்டியுமாகக் காட்டுக்குப் போகிறாள். அவனோடு அழகும் செல்கிறது.
ஏறுவெயில் முகத்தில் சுள்ளென்று தைக்கிறது. கண்களைச் சுரித்து நிறைவாயில் அதக்கிய வெற்றிலையின் அடர்சாறு படிந்த உதடுகளால் சிரிப்பை இறுக்கி முகமே புன்னகையாய் களை செதுக்கும் பெண்டுகளைப் பார்க்கிறாள். நிலத்தில் கருத்த பயிர்களைப் பார்த்து அந்த மலர்ச்சி,
அவள் அவர்களோடு இப்பொழுது, சரியாக நிறை பிடிக்க வேண்டும். அவள்போடும் திறையில், அவளை அவர்கள் போட்டியில் தொயரவேண்டும்.
கலயத்தைக் கருவமரத்தடி நிழலில் இறக்கி, காக்கைகள் தவிழ்த்து உருட்டிவிடாமல், பாதிக்கலயம் முங்குகிறாப்போல் மண் தோண்டிப் பதித்து கனமான கல் எடுத்து வைத்தாள்.
சௌந்தர்யாவின் மறுவற்ற செம்மையான முகத்தில் சூர்ய வெப்பம் தாக்கித்தாக்கி மங்கு விழுந்து படர்ந்துவிட்டது.
மங்குவில் “பொங்கு மங்கு.” “மங்கு மங்கு” என்று ரெண்டு வகை உண்டாம். சௌந்தர்யாவுக்கு விழுந்தது பொங்கு மங்கு என்று கிராமத்தில் பேசிக்கொண்டார்கள், அவளுக்கு மங்கு விழுந்த பிறகுதான் அந்தக் குடும்பத்துக்கு செல்வம் கூடியது. அரங்கு வீட்டு அடுக்குப் பானைகளுக்குள் லக்ஷ்மிதேவியின் ஆனந்தச் சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அவளின் தனிர்ப்பிஞ்சு மாறி முகம் முற்றிவிட்டது. உவர் தள்ளிச் சரித்த சுவரின் கற்களைப்போல் பற்கள் இறங்கிவிட்டன. மூக்குநுளி யிலும் மங்கின் கருமை படர்ந்துவிட்டது. கணைசுரண்டியைப் பிடித்த தினால் உள்ளங்கைகனில் காய்த்த காய்ப்புகள், மண்சட்டிகளைத் தேய்த்துச் சுரண்டிக் கழுவுவதால் தேய்த்த சந்திரப்பிறை போன்ற நக விரல்கள், கரிசல் வேளலின் அனல் தாளாமல் குதிங்கால்களில் வெடித்த பித்தவுருக்கள்.
ஆடையின்றி அவள் குளிக்கும்போது மார்பு கைகளில் ரவிக்கை அணிந்திருப்பதுபோல் அந்த இடங்கள் வெண்நிறமாகவும் புற இடங்கள் சூர்யவெப்பம் தைத்ததால் கருப்பாகவும் இருக்கும். இருபது வருஷங்களுக்கு முன்னால் பார்த்த எவரும் அவளை இப்போ அடையாளம் கண்டுகொள்ள முடியாது.
குமாரி சௌந்தர்யா பூத்துக் கன்னிகாத்துக் கொண்டிருக்கிறாள். முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்நின்று ஈர முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள், வாயைத் துடைக்கும்போது உதடுகள் பின்னும் சிவக்கிறது. அதைக்கண்டு இன்புற்று, துடைக்கத் துடைக்க அதன் மிகுதி சிகப்பைக் காணுவதில் தணியாத ஆசை, இக்கண்ணாடி அவளுக்கு ஒரு சகா; பிரிய மனம் வராது. மனம்விட்டு அதனுடன் அந்தரங்க மொழிகள் சிந்துவாள். நெருக்கம்கொண்டு முத்தம் பதிப்பதும் உண்டு!
குயிலின் இறகுகளைப்போல கருத்த கூந்தலை எத்தனை விதமாகத் தான் முடிந்து அழகு பார்ப்பது, பழுத்த கோழிக்கோடுப் பழத்தாருக் குள்ளே பார்த்தால் அவள் உடம்பின் சில இடங்கள் தெரியும். தொலி சீவப்பட்ட குமாளி மாம்பழத்தின் செழுமைகொண்டவன். அவளு டைய கைவிரல்களில் நீண்டு வாய்த்த நகங்களைப் பார்த்தாலே மோகம் எழும்.
இவளுடைய பால்யப் பருவம் ஓர் அமிர்தம்.
தெருவில் குழந்தை சௌந்தர்யா தனக்கு ஒட்டுதலான கூட்டாளி களுடன் சிறுவீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறாள். உளுத்துப் போன மண்சுவர்களிலிருந்து ‘பருத்தி’ சேகரிக்கிறாள். பொறுப்பு மிகுந்த குடும்பப்பெண்ணாய் அதிகாரமிட்டு உத்தரவு களைப் பிறப்பிக்கிறாள். உட்காரும் சிறிய மணையை இரண்டு பிஞ்சுத் துடைகளுக்கு இடையில் வைத்தும் ‘பிரசவம்’ பார்க்கிறாள்!
காட்டிலிருந்து அம்மா வரும்வேளையில் தேன்வாயில் இருந்து சிந்தும் மழலையால் அலுப்பைத் துடைப்பாள்.
வீட்டின் முன்சாய்ப்பில் நார்க்கட்டிலில் பாட்டி சௌந்தர்யா அமர்ந்திருக்கிறாள். நரை பூத்த தலை, மூழ்கிய தியானத்தைப்போல் தலைகவிழ்ப்பு, காய்த்து, பழங்களையும் இலைகளையும் உதிர்த்துவிட்டு கிளைகளை மேல்நோக்கி உயர்த்தி இனி எதையோ வேண்டும் பழமரம் போல் அமைந்தவன். அவள் சம்மந்த உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவேறின, மூட்டை கட்டிக்கொண்டு வண்டியை எதிர்பார்க்கும் பயணிபோல் ஒரு குரலுக்காய்க் காத்துக் கொண்டிருக்கிறாள்.
வீட்டின் உள்ளே ஓர் சௌந்தர்யாதேவி தெய்வமாய் இருக்கிறான். வெள்ளைக் கும்பினி யானை எதிர்த்து நடந்த வீரப்போரில் மரணம் எய்திய இவர்களின் மூதாதையர்களில் ஒருவனுடைய மனைவியாய் இருந்த அவள் வீரமரணம் எய்தியவனோடு விரும்பி உடன்கட்டை ஏறிய “பேரண்ட்டாலு” அவள், குடும்பத்தில் நடக்கும் எந்த நல்லது களுக்கும் அவளை வணங்கியபிள்ளரே தொடங்குகிறார்கள்.
அந்தியில் விளக்குநாச்சியாவைப் பொருத்தியதும் கும்பிடு கிறார்கள். அந்தக் கும்பிடு முதன்முதலில் விளக்கை உண்டாக்கியவ னுக்கு என்பதை அவர்கள் அறியார்கள். தங்கள் வீட்டில் குடி கொண்டிருக்கும் தேவி செளந்தர்யாதான் அவர்களுக்கு விளக்கு நாச்சியா, அன்றைய உணவை அன்றே தருகிறான் அவள். கலத்தின் முன் அமர்த்து அனைவரும் மகிழ்ச்சியுடன் உண்ணுகிறார்கள்.
சௌந்தர்யாக்கள் அனைவரும் ஒருவளே.
– பாலம், பிப்ரவரி 1977.
| கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒரு உறவு ஒரு பிரிவு
இரா.துரைமாணிக்கம்
September 30, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
September 30, 2026
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026