பல் போன ரகசியம்
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 6,534
அப்புசாமி பல் வலி தாங்க முடியாமல் பல் மருத்துவரைப் பார்க்கச் சென்றார்.
“டாக்டர், என் வலது பக்கப் பல் ரொம்ப வலிக்குது. அதை எடுத்துவிடுங்கள்!” என்றார்.
மருத்துவர்: “கண்டிப்பாக. கொஞ்சம் வாயை திறந்து காட்டுங்கள்.”
அப்புசாமி வாய் திறக்க, மருத்துவர்: “ஐயோ! உங்களது இடது பக்கப் பல்லும் ரொம்ப மோசமாக இருக்கே, பயங்கரமா ஆடுதே. இதையும் எடுத்து விடலாமா?” என்று கேட்டார்.
அப்புசாமி அவசரமாக: “வேண்டாம் டாக்டர்! வலது பக்கப் பல்லை மட்டும் எடுங்கள்.” என்றார்.
சிகிச்சை முடிந்ததும், மருத்துவர் சிரித்துக்கொண்டே: “இவ்வளவு ஆடுகிற நிலையில் இருந்த இடது பக்கப் பல்லை ஏன் எடுக்க வேண்டாம் என்று சொன்னீர்கள்? சாப்பிடும் போது பல்லையும் சேர்த்து முழுங்கி விட வாய்ப்புக்கள் அதிகம்” என்று கேட்டார்.
அப்புசாமி கண் சிமிட்டிய படி: “அதுதான் என் மனைவியின் பிரியமான பற்கள் டாக்டர். அவளே எடுத்து விடுவாள். எதற்கு இதற்குப் போய் உங்களுக்கு ஃபீஸ் கொடுத்துக்கொண்டு..?” என்றார்.
“உங்க மனைவி பல் டாக்டரா..?”
“இல்ல டாக்டர். அவளின் அன்பான கை…” டாக்டர்.
“என்ன கை டாக்டரா..? எனக்கு புரியலையே..?”
“ஒவ்வொரு முறையும் என்னுடன் சண்டை போடும் போது, அவள் என் இடது பக்கக் கன்னத்தில் தான், தன் கையால் ஓங்கி குத்துவாள் . அந்தப் பல் அவள் குத்தும் போது தானாகவே விழுந்து விடும். அப்போ வெளியே துப்பி விடுவேன்”.
மருத்துவர் அதிர்ந்து போனார். மருத்துவர் சிரித்துக் கொண்டே “அடுத்த சண்டை எப்போது?” என்றார்.
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மறக்கப்பட்ட போட்டிக்கு AI கொடுத்த உயிர்
நஞ்சப்பன் ஈரோடு
August 10, 2026
இலாபத்தில் பங்கு
எஸ்.மதுரகவி
August 10, 2026
அட, என்னடா பொல்லாத வாழ்க்கை?
வளர்கவி
August 7, 2026
