கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
வெளியான ஆண்டு: 1924
இணைய வெளியீடு: November 20, 2026
பார்வைகள்: 681
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாரம் 22-24 | அதிகாரம் 25-26

இருபத்தைந்தாம் அதிகாரம்

தெய்வசிகாமணி யுள்ளிட்டார் சகலரும் நான்கு நாள்வரை திருநெல்வேலியில் சாமிதரிசனம் பண்ணிக்கொண்டிருந்து அப்பால் குற்றாலம், பாபவிநாசம், திருப்புடைமருதூர் முதலிய புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் போய்த் தெரிசித்துத் திரும்பினார்கள். மறுபடியும், பத்துநாள் வரை நெல்லையப்பபிள்ளை விருப்பத்திற் கிணங்கி இருந்து விட்டுப் பாப்பையாபுரம் வந்து சேர்ந்தார்கள். கேஸ் அனுகூலத்தைப் பற்றி ஊராருக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் இவர்கள் வந்து சேர்ந்தவுடன் எல்லோருங் கும்பு கூடிக் கொண்டு வந்து சந்தோஷங் கொண்டாடினார்கள், சோமசுந்தரம் பிள்ளை மட்டும் ஒரு தம்பியையும் உயிரோடு இழந்துவிட்டேனே யென்று வருந்தினார். 

நெல்லையப்பபிள்ளை பிரயத்தனஞ் செய்து கொண்டிருந்த படி மதுரைத் தாலூகாவில் வந்து தமது தாசில் வேலையை ஒப்புக் கொள்ளும்படி உத்திரவு வந்து விட்டது, தியாகராஜசெட்டியாருக்கு நாகைத் தேவஸ்தானம் ஆபீஸிலிருந்து கடிதங்களும் உத்திரவுகளும் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களும் வந்து இரண்டு மாஸங்களுக்கு மேலாகிறது, காடாரம்பமான நாடுகளில் ஒரு கிணற்றை நம்பி ஊரெல்லாங் குடிதண்ணீருக்குக் காத்துக் கொண்டிருப்பது போல தெய்வசிகாமணியை விரும்பி அவரவர்களும் ஒவ்வொரு எண்ணத்தை மனசில் வைத்துக் கொண்டு வெளிப்படுத்த முடியாமல் தயங்குகிறார்கள், இவைகளை யெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிற சாமிநாதக் கவிராயர் ஒரு தினம் மாலை 3 மணிக்குச் சோம சுரம்பிள்ளை வீட்டில் உறவினரையும் ஊராரையுங் கூடும்படி செய்வித்துப் பின்வருமாறு சில சொன்னார். 

புண்ணிய சீலர்களே! தெய்வசிகாமணிபிள்ளை இவ்வளவு நாட்கழித்தும் சுகமே வந்து சேர்ந்ததைப்பற்றி அவர்தாய் தந்தையர்களுக்கு எவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறதோ அத்தனை ஆநந்தம் நமக்கு முண்டாயிருக்கிறது. சிற்றறிவனாகிய மனிதனை ஸர்வக்ஞனாகிய கடவுள் அவ்வியக்தனாயிருந்து இரக்ஷிக்கிறான், என் பது உண்மை நூற்றுணிபு, என்றாலும் அது பரோக்ஷம் அக்கடவுளே வியக்தனாப் நெல்லையப்பபிள்ளை வடிவாயிருந்து நமது மிராசுப் பிள்ளை மகனைக் காத்தது அபரோக்ஷம், அல்லவா? பிராணனைக் காப்பாற்றி அவையத்து முந்தியிருக்குந் தன்மைத்தாய கல்வியுங் கற்பித்து அருமைப் புதல்வனாகப் பாராட்டிய தாசில்தாரவர்களுக்கும் “அற்பப்படிப்பு ஆபத்து” என்பது போலில்லாமல் உயர்தரக்கலையும் பயில்வித்துப் புருஷலக்ஷணமாகிய உத்தியோகமும் சம்பாதித்துக் கொடுத்துத் தமது தியாகராஜன் என்னும் இயற்பெயரைச் சிறப்புப் பெயராகக் கொண்ட செட்டியாரவர்களுக்கும், இவர்களின் தர்ம பத்தினிகளான காந்திமதியம்மாள் நீலலோசனியம்மாள் இவர்களுக்கும் தெய்வசிகாமணி பிள்ளை எழுமையும் கடமைப் பட்டிருக்க வேண்டும், தனது சரீரத்தை இவர்களுக்குப் பாதரக்ஷையாகத் தைத்துப் போட்டாலும் செல்லும், இவர்களை யெல்லாம் சாதாரணமாக மக்களென்று மாத்திரஞ் சொல்லி விடக்கூடாது, ஜீவகாருண்யமே ஒரு உருவெடுத்ததென்று சொல்லத்தக்கவர்கள், தெய்வசிகாமணி பிள்ளை காணாமற் போயிரா விட்டால், இப்படிப்பட்ட மேலான உத்தமர்களின் சம்பந்தம் நமக்குத் தான் கிடைக்குமா, இது கேடு போலே கிடைத்த ஆக்கம், சிறு வயதிலேயே கல்யாணசுந்தரமவர்களைத் தெய்வசிகாமணி பிள்ளையோடு சேர்த்து வைத்தது தாசில்தாரவர்கள் அல்லர் நமது நல்வினையே, மாசிலாமணியைப்போல உண்மையுள்ள மனுஷனைப் பார்ப்பதரிது, இவனை மணிமங்கலத்திற் கண்டபோது தெய்வசிகாமணி பிள்ளையைக் குறித்துச் சில கேள்விகள் ஜாடையாக் கேட்டேன். அவன் கொடுத்த மறுமொழியில் தெய்வசிகாமணி பிள்ளையைத் தன் குலதெய்வமாகப் பாராட்டி வந்திருக்கிறானென்று எனக்குத் தோன்றியது இவர் எப்போதும் பிரபு வீட்டுப்பிள்ளையாயிருந்தாலும் மாசிலாமணி காட்டிற் கண்டெடுத்த பிள்ளைதானே அப்படிப்பட்ட குழந்தையின் விஷயத்தில் இவன் வைத்திருந்த அன்பும் கௌரவமும் அவனுடைய அளவு கடந்த யோக்கிறதையைக் காட்டுகிறது, 

கடவுளாற் கூட்டிவைக்கப்பட்ட இந்த அளுமையான உறவினர் களது சம்பந்தம் என்றென்றைக்கும் விலகாமற் செய்துவைக்க வேண்டுமென்பது என்னுடைய மனோபீஷ்டம்.சபையிலிருக்கப் பட்ட கனவான்களுக்கெல்லாம் இவ்வபிப்பிராயம் ஒப்பத் தகுந்ததாக இருக்குமென் றெண்ணுகிறேன். (மிகுந்த கரகோஷம்) உங்கள் உடன் பாட்டைத் தெரிந்து கொண்டேன் நான் செய்ய நினைக்கும் உத்தேசமாவது, சோமசுந்தரம் பிள்ளையவர்களின் ஆஸ்தீயின் மூன்றிலொரு பாகத்தை மாசிலாமணிக்கு நாளைக்கே கொடுத்து அவனைப் பாப்பையா புரத்திலேயே குடியா இருத்தி வைக்க வேண்டும். தாசில்தார்வர்கள் தம் தருமைப்புத்திரர்களில் ஒருவரான கல்யாண சுந்தரமவர்களுக்குத் தமது தங்கை மகளை விவாஹஞ் செய்வித்துத் தமது பாதிச்சொத்தைக் கொடுத்து இவ்வூரிலேயே வசிக்கும்படி செய்யவேண்டும். உத்தியோக விஷயமாகப் பலவிடங்களுக்குப் போகும்படியாக இருந்தாலும், இவ்வூரே அவருக்குச்சொந்த ஊராக வேண்டும். மீதமுள்ள செல்வத்திற் காற்பாகம் மாசிலாமணிக்குக் கொடுக்க வேண்டும். மற்றப் பாகம், நெல்லைமந்திரம் என்னும் ஒரு வாசகசாலை நடைபெறுவதற்கு மூலதனமாக வைக்கப்பட வேண்டும். தியாகராஜ செட்டியாரவர்கள் ஏகபுத்திரி மங்களாம்பாளைத் தெய்வசிகாமணிப் பிள்ளைக்குப் பாணிக்கிரஹணம் பண்ணி வைக்க வேண்டும். (கரகோஷம் ) இவைகளெல்லாம் யுக்தமான காலங்களிற் செய்யப் படவேண்டும் என்பதே. நமது தொடர்புகள் விட்டுப்போகாதிருக்க இந்த ஏற்பாடுகள் சர்வோத்தம முள்ளவைகளா மென்றெண்ணுகிறேன் இதனினுஞ் சிறந்த உத்தேசம் வேறுளதெனினுஞ் சொல்லுங்கள் என்று தமது பேச்சை முடித்தார் கவிராயர். இதுதான் சரியான தீர்மானமென்றார்கள் அங்கிருந்தோரனைவரும். தெய்வசிகாமணி வக்கீல் வேலையை வஹித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்துடன் அவிபக்த குடும்பஸ்தனா யிருக்கவேண்டு மென்பது என்னுடைய நோக்கம் என்றார் தாசில்தார். அதற்கேற்ற ஸ்தானம் மதுரை தான் என்றார் தியாகராஜசெட்டியார். பாப்பையாபுரத்தை வீட்டு வேறெங்கும் போகக் கூடாது, இவர்கள் கிராமங்களை மேற் பார்க்கவே, இன்னம் 4, 5 வேலைக்காரர் நேமிக்க வேண்டியிருக்குமே, வக்கீல் வேலைக்கும் போகணுமோ என்றார்கள்; சபையோர்கள். மதுரையும் சமீபந்தானே அங்கிருந்தாலும் இவிடத்தி லிருந்தது போலதான் என்றார் சோமசுந்தரம்பிள்ளை. கல்யாணத்திற்குப் புஷ்பமும் சந்தனமும் மதுரையிலிருந்து தருவிக்கணும் என்றான் சிறை மீட்டான். வாணக்கட்டுக்கும் மத்தாப்புக்கும் திருநெல்வேலியை விட்டால் வேறே கிடையாது என்றான் ஜெகவீர பொம்மு. கல்யாணத்தை நாகப்பட்டினத்தில் வைத்துச் சிறப்பாக நடத்த வேண்டுமென்று எண்ணுகிறேன், எத்தனை மக்களுக்குச் செய்து பார்க்கப் போகிறேன், ரூபா ஐம்பதினாயிரத்திற்குக் குறையாமல் தாராளமாகச் செலவு செய்ய எனக்கு மனஸுண்டு என்றார் செட்டியார்.சாமிநாதக்கவிராயர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து கேட்டு விட்டு செட்டியாரைப் பார்த்து ஐயா! ஸ்வாமி, தங்களுக்குக் கொடுத்திருக்கிற ஐச்வரியத்திற்கு எவ்வளவானாலும் நீங்கள் செலவு செய்யலாம். ஆனால் அந்தச் செலவு அவஸ்யம் செய்து தீரவேண்டியது தானா? அல்லது வீண் செலவா? என்பதைக் கவனித்துச் செய்யவேண்டும் என்றார். 

கல்யாணத்துக்குச் செலவழிக்காமல் வேறெதுக்குச் செய்கிறது, இவாளைப் போலே பள்ளிக்கூடங் கட்டவும், ஆசுப்பத்திரி வைக்கவும், காயிதமூட்டை (லைபிரேரி ) சேகரிக்கவும் செலவு செய்யணுமாக்கும் என்று சிலர் காதோடு வாயாகப் பேசிக் கொள்கிறார்கள். 

சல்யாணச் செலவைச் சுருக்கினால் பந்துக்கலெல்லாம் லோபி என்று பட்டங்கட்டி விடுவார்களே அந்த நிந்தைக்கு என்ன பரிகாரந் தேடுகிறது. தவிரவும் ஒரு நல்ல விசேஷத்திற்குச் செலவு செய்யாத இந்தச் சம்பத்திருந்து என்ன பிரயோசனம் என்றார் செட்டியார். 

கவிராபர்:- ஐயா! கொஞ்சம் நிதானியுங்கள் வாஸ்கோ டிக்காமா முதல் முதலிலே இந்தியாவைப் பார்த்துவிட்டு இங்கிலாந்து தேசத்திற் போய் என்ன சொன்னான்; இந்தியாவின் தரை யெல்லாம் தங்கமும் பொன்னுந் திரள் திரளாகக் கொட்டிக் கிடக்கிறது. அத்தேசத்தவரில் ஒருவருக்கும் தரித்திரம் என்னும் சொல்லுக்கு அருத்தமே தெரியாது என்றானாம். இந்த செல்வங்களெல்லாம் இப்போது எங்கே சென்று விட்டதையா! 1911-வது வருஷத்தில் எடுத்த ஜனசங்கியைக் கணக்கில் 4 1/2 கோடி இந்து ஜனங்கள் தலைசாய்க்க இட மற்ற ஏழைகள் என்று தெரிகிறது, இந்தியாவிற்குள் இவ்வறுமை எவ்வாறு வந்து நுழைந்தது. கூர்ந்து கவனிப்போமானால் நமது நாட்டவர், விவாஹம், ருதுசாந்தி, பூமி, ஆயுஷ் ஓமம், கன்னவேதனம், உபநயனம், மரணம், சருமத்தி கோகிஷ்டம், அந்தியேஷ்டி, ஊனமாஸிகம், மாஸமாஸிம், வருஷாப்திகம், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், நாகப்ரதிஷ்டை, சர்ப் பஸாந்தி முதலிய கர்மங்களில் அறிவீனத்தாற் செய்யும் மிதமற்ற செலவினாலும், கூத்துப்பார்த்தல், எருதுக்கட்டு, ஜல்லிக்கட்டு வைத்தல், கோழிச்சண்டை, ஆட்டுக்கடாச்சண்டைக் கூட்டமேற் படுத்தல், முந்தின தாம்பூல மரியாதைக்காக கோர்ட்டில் வழக்கில் முதலிய பயனற்றகாரியங்களிற் செய்யும் பாழ்ஞ்சொவினாலும், வியவஸாயம், வியாபாரம், கைத்தொழில் இவைகளில் நம்பிக்கையும் ஒற்றுமையுங் கொண்டு ஜனங்கள் பிரயரசை யெடாமையினாலும் க்ஷாமம் வந்ததென்று தெளிவாகச் சொல்லலாம் அல்லவா? நிற்க. ஒரு ஆஸ்திவந்தன் வீ டுப்பிள்ளைக்குக் கல்பாணம் செய்ய ஏற்பட்டால், முகூர்த்தத்திற்கு 2 மாஸத்திற்கு முந்தியே, கல்பாண வேலை ஆரம்பிக்கப்படுகிறது. கல்யான முடிந்த மறுதினமே பிரித்தெறியுங் கொட்டகைக்கு ரூ 1500, பெண்ணும் மாப்பிள்ளையும் திருமாங்கல்யம் கட்டுகிறபோது மட்டும் குந்தியிருக்கும் மணவறை விதானிப்புக்கு ரூ.500, தம்பதிகள் பல் லக்கேறிக்கொண்டு ஊரிலுள்ள இரண்டு தெருக்களைச் சுற்றிவரு கிற மட்டும் நாகசுரம் ஊதுகிறவனுக்கு ரூ. 500, பட்டுப்பாவாடை யும் புட்டாரவிக்கையும் கட்டி மேளகாரனுக்கு முன்னாலே நின்று சிறிது குறுநடை நடந்துவிட்டுப்போகுங் கொலுத்தாசிக்கு ரூ.300 பெண்ணுக்கு அலங்காரஞ் செய்துவைக்கும் தோழித்தாசிக் குரூ,100, அரைமணி நேரம் பாட்டுக்கச்சேரி நடாத்தும் தெம் பாங்குத் தாசிக்கு ரூ. 500, “காசைக்கரியாக்கா தேசீனிவெடி வாங் இச்சுடுவோ” மென்றதுபோல கரியும் புகையுமாய்த் தொலைந்து போகும் வாணக்காட்சிக்கு ரூ.1000, நாசியுரோமத்தினையும் கருக் கிவிடும் நாற்றத்தினையுடைய மத்தாப்பு வெளிச்சத்திற்கு ரூ 250 பழந்துணியும் பாசிக்கோவையுமாகத் தொங்கும் பல்லக்குக்கு ரூ.150, பாண்டுக்கு ரூ. 5.00, பல்லக்குக்குமுன்னே பாணாத்தடிகளை வீசிக்கொண்டு திரியும் தடிகளுக்கு வேஷ்டிவகையில் ரூ.100, ஆக ரூ.5400 இவ்வாறு ஒழிகிறது. இந்தப் பெருந்தொகையில் ஒரு இம்மியளவாவது சத்விஷயத்திற் செலவாகியிருக்கிறதா? இல் லை. இன்னுங்கேளுங்கள் மாப்பிள்ளை வீட்டார் வந்து பெண் தீர் மானிக்கும் பிரதமதினத்திலேயே முகூர்த்தப்பட்டுச்சேலை ரூ.3110, நிச்சய தாம்பூலச் சேலை ரூ.150, மாமிக்கூறை ரூ.100, மாப்பிள்ளை வீட்டார் வாங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டிலும் பெண்கொடுக்கப்படுமென்று கண்டிப்பாகச் சொல்லி மேற்கண்ட துணிச்செல வையும் நடத்தியே தீர்வார்கள். இதைத்தவிரக் (பரியப்பணம்) கன்னியாசுல்ஹம் ரூ.2000, 3000 கொடுக்கவேண்டும்; அதுவும் பணமாக இருந்து ஏதாவது ஒரு சமயத்திற்கு உதவிசெய்யக்கூடி யநிலைமையில் பெண் வசமாவது இருக்கப் போகிறதா? இல்லை. அப் பணத்தினளவோ அல்லது சற்று ஏறக்குறையவோ பெண் வீட்டாரும் பணம்போட்டு இருபெருந்தொகைக்கும் பெண்ணுக்கு ஆபரணங்கள் செய்விக்கப்படுகின்றன. தங்க நகை செய்தால் தட்டார் தட்டினது போக சமையத்திற்கு அரைவாசியாவது தேரும் கல்நகை கால்வாசியே; இது கல்யாணத்தின் புறச்செலவு. புறப்புறச்செல வுகளும் பலவிருக்கும். இனி அகச்செலவும், அகப்புறச் செலவு மாகச் சேர்ந்து 10000, 12000 ரூபாய்க்குக் குறையாது. இத்தனை அமளிகளும் பணக்காரர் வீட்டில் ஒருவாறு நடந்தாவது தொலை கிறது.நடுத்தர நிலையிலிருக்கிறவர்களின் கதிதான் பரிதபிக்கத்தக் ககாயிருக்கிறது. தனிகரைப்போல தாமும் கல்யாணத்திற் செல் விடக்கூசுவரேல் இனத்தால் இகழப்படுவாரல்லவா? அதற்குப் பயந்து தங்களுக்குள்ள ஆஸ்திகளை ஈடு காட்டி மிதமிஞ்சிய வட்டிக்குக் கடன் கொண்டும், சிலர் அற்ப ஆஸ்தியை விற்றும் செலவழிக்கிறார்கள். மாப்பிள்ளை பல்லக்கிற் பவனி வரும்போது நடக்கும், பாணவேடிக்கையைப் பார்த்து ஐயோ! புன்செய் கீற்ற பணம் புகையாய்ப் போகிறதே! வயல் விற்றபணம் மத்தாப்பாய்த் தொலைகிறதே!! எனச்சிறிது கவனிப்பாகில் இந்தவ் பைத்தியகாரச் செலவு நடக்குமா? 

கல்யாணப்பந்தலில் மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டார் ஒலி சை என்னும் வரிசை கொடுக்கும் வழக்கமொன்றுண்டு, அதற்கு கட்டில், மெத்தை, திண்டு, தலையணை, சமக்காளம் வெற்றிலைபாக்குப் பெட்டி, எழுத்தாணி, சம்புடம், கண்ணாடி, மேஜை நாற்காலி,மைக் கூடு, பேனா, பென்ஷில் இன்னும் பலபண்ட டங்களும் சோமன் ஜோ டிபீதாம்பரங்களும் மாப்பிள்ளையின் தகுதிக் கேற்ற விலையேறப் பெற்றதாகக் கொண்டுவந்து வைத்து நூறோ ஐம்பதோ ரூபாயும் சுருள் வைத்துக் கொடுப்பார்கள். சாமான்களிலாவது பணத்திலா வது குறைவிருக்கிறதாக மாப்பிள்ளைக்குத் தோன்றினால் ஒலிசை யை ஒப்புக்கொள்ளுகிற தில்லை யென்று கடிந்து சொல்லி மணையை விட்டெழுந்து போய் விடுவார்; ஊரிலுள்ள பெரியமனுஷாளைக் கொண்டு சமாதானம் சொல்லித்து மேற்கொண்டு பத்துமுப்பதைச் சுருளில் அதிகப்படுத்தி மாமனார் கொடுத்தவின்பு ஏற்றுக்கொள் வார்கள். இந்தக்கல்பாணக் கடன் நாளுக்கு நாள் வட்டியேறிப் பூர்வீக சொத்தையும் பிடுங்கி அதினுந்தீராமல் அவர்கள் சந்ததி களையும் பிடித்தலைக்கிறது. 

நமது சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிற எட்டுவிதக் கல்யாணங்களில் பெண் வீட்டாரே மாப்பிள்ளையை அழைத்துவந்துபசரித்துப் பெண்ணைத் தானமாகக் கொடுத்தல், பெண்ணை அலகரித்து வரனுக்குக் கொடுத்தல், வரனிடத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு ஜதை பசுக்களை வாங்கிக்கொண்டு வதூவைக்கொடுத் தல், வரன் கரத்திற் கன்னிகையைப் பிடித்துக்கொடுத்து, வைதி க லௌகிக் காரியங்களை விதிப்படி நடத்தி வாழக்கடவீர் என்று வாழ்த்தி விடுத்தல். என்னும் பிராம்ம, தைவ,ஆர்ஷ, பிரஜாபத்ய மணங்களில் இவ்வாறு மத்தாப்பு வெளிச்சம் போடும் படியாகச் சொல்லக்காணோம்; எல்லாவகுப்பினராலும் நித்திக்கப்பட்ட பசாச மணத்தைத் தவிர ஏனைய காந்தர்வ, ராக்ஷஸ, ஆசுரமணங்களும் செலவு சிறிதும் செய்யப்படாததாய், கன்னியா சுல்ஹம் வரசுல ஹம் என்னும் மாமிஸ விற்கிரயத்தைப் பிரஸ்தாபிக்கிறதேயன்றி மனிதரைப் பாம்பின்வாய்த் தேரையாகப் பட்டழுந்த வைக்கும் இந்தப்பாழுஞ் செலவைச் செய்யச் சொல்லவில்லையே. விவாஹத்தில் சத்தபதி, என்னும் ஒரு முக்கியமான சடங்கிருக்கிறது: வதூ வின் கரத்தை வரன் பிடித்துக்கொண்டு ஏழடி நடப்பது: இதில் ஓரடியாவது குறைந்திருந்தாலும் அது கிரமமான விவாஹமாக மாட்டாது, என இந்துலா முதலிய தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகிறது, இதற்காகவே 

இதற்காகவே பலஜனங்களும் அறியச்செய்யப்பட வேண்டு மென்று விவாஹத்திற்குப் பலரும் அழைக்கப் படுகிறார்கள், அதி னாலே செலவும் அதிகரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பண்களது பிரதமருதுவும் சாஸ்திர சம்மதமான ஒரு சடங்கா? அதற்கும் ஒரு கூட்டயா? ஊரூருக்குப் பக்கிரிகைகளும் நுணிவெ ளுக்கும் வண்ணார்களும் தமுக்கடித்துக் கொண்டு திரியவேண்டுமா? அட அறியாமையே! எந்த விசேஷங்களிலும் வைதீக கர்மங் களுக்குச் செலவு செய்யவேண்டாமென்று நான் சொல்வதாக வி வேகிகள் அர்த்தம் பண்ணிவிடக்கூடாது. அவைகளை மந்திரா லோபம் கிரியாலோபமின்றிச் செவ்வனே செய்யட்டும்; நாவினாற் சொல்வதற்குங் கேவலமாகத் தெரிகிற மற்பல அநுசிதமான விஷ யங்களிற் செய்கிற அமிதமான செலவைப்பற்றியே கண்டித்துப் பேக்கிறேன். ஒவ்வொரு சிறியகாரியங்களிலும் நம்மவர்கள் செய் யும் ஆராதூரித்தனத்தைச் சொன்னால் வளரும். 

இப்படி நாம் நடந்து கொண்டால் ஏன் இந்தியாவிற்குள் வறுமை வந்து நுழைபாது? நமது தேசம் முன்னுக் வேண்டுமானால் நமது ஜாதி மேலை காளைப்போல மேன்மை அடை யவேண்டுமென்றெண். ண மிருந்தால், வீண் செலவைக் கட்டோடு நிறுத்த வேண்டும். விவாஹாதிகர்மங்களையும் சர்வஜனங்களும் ஒரே ரீதியாய் நடத்தல் வேண்டும்; அவைகளில் அடியிற்கண்ட சிலவிதிகளை அனுசரிப்பது நல்லமுறையென்று நினைக்கிறேன். நமது உறவின்முறை என்ன முறையிடுமோ தெரியாது. 

  1. வதூவரர்கள் லக்ஷாதிபதியோ அல்லது ஏழையோ எந் தக்குடும்பத்தைச் சேர்ந்தவரானாலும் சரி ஒரேமாதிரியான சிறு விலையுள்ள முகூர்த்த வஸ்திரங்களை உபயோகிக்கவேண்டும். 
  2. கன்னியா சுல்ஹம் ஒரு சிறிய அளவுள்ள தொகையாக நிச்சயப்படுத்திக் கொள்ளல்வேண்டும். 
  3. ஆசாரியப்பிராமணன் அல்லது குருக்கள் முதல் எல்லாத் தொழிலாளிகளுக்கும் ஒரே அளவுள்ள அவரவர் தொழிலின் தகு திக்கேற்ற தக்ஷணை சன்மானம் கொடுக்கப்பட வேண்டும். 
  4. முகூர்த்தம் முற்பகலிலேயே நடை பெற்று மாலை 6. மணிக்குள்ளாகப் பட்டணப்ரவேசம் வரையுள்ள சகல சடங்குகளும் அன்றே நடத்தித் தீரவேண்டும். 
  5. கொண்டார், கொடுத்தார், அந்நியஊர் விருத்தினர் முத லிய சுற்றத்தாரையன்றி ஏனைய கிளைஞர்கள் சந்தன தாம்பூல மரி யாதையோடு தம தில்லம் ஏகல்வேண்டும். 
  6. சுருள் வைப்பதும் பதிலுக்குத் துணி கொடுப்பது மாகிய துர்வழக்கத்தைத் தொலைத்தல் வேண்டும்.என்பனவே, 

இருபத்தாறாம் அதிகாரம்

இத்தனை காலமும் பட்ட துன்பங்காணாதா,இன்னமும் அவதிவரவேணுமா, அடேபாவி! ஒரு நாளாவது ஐயோ சுகமென்றிருந்த துண்டா இந்தப்பிள்ளை பிறந்தது அந்தக்குடும்பத் துக்குப் பற்றாதகாலமும் வந்து சேர்ந்தது. நேற்றுத்தானே எல் வாரும் திருமாலுகந்தான் கோட்டைக்குப் போயிருக்கினார்கள்.அந் தவூரிலுள்ள செஞ்சடைநாதசுவாமி கோவில் மிகவும் புராதன மாம், அந்தக்கோவிற் கற்சுவர் முதலான இடங்களில், என்ன எழுத்தோ எழுதியிருக்கிறதாம். அதிலே நம்முடைய முன்னோர்கள் கதையெல்லாம் தெரியுமாம்; அதைப்பார்க்கவேணுமென்று போயிருகிறார்கள். அதற்குள்ளே இந்த அமடு வந்திட்டுதே. வீட்டிலே ஒரு ஆண்பூடுங் கிடையாதே என்ன ஆபததென்றுந் தரியவில்லையே. என்று புலம்பிக்கொண்டு ஒரு நாள் மாலை 4-ம ணிக்குப், பசப்பையாபுரத்து ஜனங்கள் சோமசுந்தரம்பிள்ளை வீட் டை நோக்கி யோடுகிறார்கள். வாசலில் ஒரு குதிரைவண்டி நிறுத் தியிருக்கிறது. பீட்டுக்குள்ளே எங்கே பார்த்தாலும் ஒரே அழுகைச்சத்தமாயிருக்கிறது மாரைக்கேட்டாலும் ஒன்றுஞ் சொல்லு கிறார்களில்லை. போன போன ஜனங்க களும் ཀྐེ வரைப் பார்த்தொருவர் அழுதுகொண்டே நிற்கிறார்கள். வீட்டுக்குள்ளே விரலடுக்காகப் பெண்கள் கூடிக் கூச்சலிடுகிறார்கள். இந்தச்சமயம் நல்லவேளையாகத் திருமாலுகந்தான் கோட்டைக்குப் போயிருந்த தெய்வசிகாமணி முதலிய சகலரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களும், வீட்டிற்குள் நடக்கும் ரோதனத்துக்குக் காரணந்தெரியாத வர்களாய்க் கை கால் நடுங்கி நின்றார்கள். ஒருவர் விசாரிப்பிலும் இன்னமும் விஷயம் வெளியாகவில்லை. கவிராயர் சந்தடியை விலக் கிக்கொண்டு வீட்டிற்குட் புகுந்தார் முகப்பு வாசலைக் தாண்டி இரண்டாங்கட்டுக்குப் போவதற்குள் அவருக்குக் கண்விழிபிதுங்கி விட்டது கடைசிபாக அழுகைக் கூட்டத்தின் அஸ்திவாரம் நிறைந் திருக்கும் வீட்டு வாசலுக்குச் சமீபத்திற்போய் நின்றுகொண்டு அம்மா! அம்மா! அழாதீர்கள் அழவேண்டாம். சங்கதியைச் சொல்லுங்கள், யாருக்கென்ன நேரிட்டது உடனே சொல்லுங்கள் அம்மா மீனாrநீயுஞ் சிறுபிள்ளையா? காரியத்தைச் சொல்லாமல் அழுதுகொண்டிருக்கிறாப் என்று அதட்டினார். அவரைக்கண்டவு டன் சில பெண்கள் எழுந்து நின்றார்கள் வேறு சிலர் மறைந்து கொண்டார்கள். அழுகையும் ஒரு நறு அடங்குந்தருணமாயிருந் தது. அந்நேரம் ஒரு ஸ்திரி, கரூராயர் காலோரமாக வந்து து தலையைத்தரையில் மோதிக் காண்டு அண்ணா! அண்ணா! நான் ”பெற்றாரிருந்தும் பிறஞ்சாஞ்சு போனேன,உற்றரிருந்தும் உதவி யற்றுப் போனேனே, பெருமையிருந்து பிறப்பிழந்து போனே எனப்பலவாறு சொல்லிப் புலம்பினாள் கொஞ்சநேரம் அவள் தைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த கவிராயர் ஐயோ, தங்காய் குழல்வாய்மொழி!உன்னை யிந்தக்கோலத்தோடு பார்க்கவா நானிருந்தேன் என்று முகத்தில் வேஷ்டியைப் போட்டுக்கொண்ட ழுதார் சிறிது நேரத்தில் அந்தக்கூட்டம் சீனக்காரத்தூளைப் போட் ட பால் போற்குழப்பி நின்றது இதனிடையில் மீனாக்ஷியம்மாளின் தங்கை குழல்வாய் மொழியம்மாள் [சுமார், 15-20 வருஷக் கால மாக அவள் கணவனுக்கும் கவிராயருக்கும் ஏற்பட்டிருந்த மனஸ் தாபத்தினால், சாவு வாழ்வு முதலியவைகளுக்கும் வராதிருந்து இப்போது) வைதவிய நிலையில் வந்திருப்பதே இந்த அழுகைக்குக் காரண மென் வெளியாயிற்று. 

அழுகைகள் எல்லாம் முழு முற்றும் ஒழிந்தது கல்யாண சுந்தர மும் தெய்வசிகாமணியும் வெளியில் நின்று கொண்டு, இந் க் கெட்டவழக்கம், ந ம் மவர்க ளு க் கு ள் அதிகமாயிருக் கிறது என்று பரிகசித்து கொண்டே வீட்டினுட் பிரவேசித்தார்கள். கூட்டமும் பாதிக்கு மேற்கலைந்து விட்டது. அப்பொழுதுதான் கவிராயர் முகத்தைத்து டைத்து கொண்டு தன் தங்கை குழல்வாய்மொழியம்மாளிடத்தில் யோக க்ஷேமங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். உள்ளே வந்த அவ் ளிருவரும் குழல்வாய்மொழியைக் கண்டதும் அம்மா! இந்தச் சந்தடிக்குப் பிறகுகான் வந்து சேர்க்காயோ வென்று கேட்டுக் கொண்டே நமஸ்கரித்தார்கள். தங்கச்சியை உங்களுக்கெப்படித் தெரியு மென்றார் கவிராயர். அதற்குட் குழல்வாய்மொழி, அண் ணாச்சி, இவன்தான் உங்கள் மருமகன் எனக்கு இந்த ஒரு பிச்சை தான் சண்முகநாதன் தந்தது பெரியதம்பி, தாசிலையா அவர்கள் பிள் ளை என்றாள். ஆச்சரியத்தினாலேயோ அல்லது ஆனந்தத்தினாலே யோ ஒன்றும் பேசாமல் பச பச வென்று விழிக்கிறார் கவிராயர். இதுவென்ன கனவா அல்லது (பையாஸ்கோப்) கண்காட்சியா! நம் முடைய மூளைதான் குழம்பி விட்டதா! ஒன்றுந் தெரியவில்லையே. பாரிஸ்டர் கலயாணசுந்தரம் நமது தங்கை மகனா? இது நம்பமுடி யாத சம்பவமாயிருக்கிறதே, உள்ளபடியே நம்முடையபுத்தி ஸ்வா தீனக் குறைவாகவே இருக்கலாம் ஏனென்றால் நாம் கண்ட கண்ட இடங்களெங்கும் அலைந்தும் விவகாரங்களில் அளவுகடந்து முயற் சித்தும் திரிந்ததினாலே எப்படியோ மூளைக்குப்பலவீன முண்டாகி யிருக்கிறது எனத் தன்னை மறந்து இவர் பிதற்றிக்கொண்டிருக் கும் போது தாசில்தார் செட்டியார் முதலானவர்களும் வந்து கூடி னார்கள் அவர்களைக் கண்டதும் குழல்வாய்மொழி மறைவிற் சென்றாள். 

கல்கத்தாவை விட்டு என்றைக்குப் புறப்பட்டாயம்மா என்று தன் தாயைக் கல்யாணசுந்தரம் கேட்டான் குழல்வாய்மொழி புதன்கிழமைப் பகல் 10 மணிக்கு உன்னுடைய தந்தி எனக்குக் கிடைத்தது உடனே வேலைக்காரர்களுக்கெல்லாம் சம்பளங்களை கொடுத்து விலக்கிப் பங்களாக் காவலுக்கு மட்டும் ஒருசிப்பந்தியை யிருக்கும்படி செய்கேன் பின்பு என் வேலைக்காரியைக் கையோடு அழைத்துக்கொண்டு பிரயாணமானேன், முத்துக்கருப்பசெட்டி யார் மகள் அலர்மேலும் அவள் வீட்டு வேலைக்காரியும் என்னை ரயி லேற்றியனுப்பும் பொருட்டு ஸ்டேஷனுக்கு வந்தார்கள். உன் தந்திப் பிரகாரம் மதுரைக்கு டிக்கெட்டு வாங்கிக்கொண்டு வண்டி யேறினோம், சென்னபட்டணத்தில் மட்டும் வண்டிமாற்றும் பரி யந்தாம் இறங்கியிருந்தோம். வண்டியுந் தயாமாயிற்று, மூன்றா நாள் மாலை சரியாய் ஆறுமணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்றுக்காலை 7 மணிக்குத் திருச்சினாப்பள்ளி வந்து சேர்ந்தது. அங்கிருந்து வண்டி புறப்பட ஒரு மணிநேரம் செல்லுமென்று நாங் கள் கேள்விப்பட்டு, தந்தசுத்தி செய்துகொள்ள இறங்கலாமென்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது நம்முடைய அச்சுதனும் அவன் சம்சாரமும் எ எங்களை வந்து சந்தித்து, இறங்கியிருந்து மறு தினந்தான் போக வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்கள். அச்சுதன் சம்சாரம் நம்முடையவூர்,(மணிமங்கலம்) பஞ்சாங்கையர் மகளாகையால் அவளும் வேண்டினாள். நீயும் அச்சுதனுக்கு எங் களை ரயிலில் சந்திக்கும்படி யெழுதியிருந்தாபாம், அவன் அவ்வூ ரில் போலீஸ் இன்ஸ்பேக்டராக இருக்கிறான், அவர்கள் கோரிக் கைப்படி நேற்றுப்பகல் அங்கு தங்கி யிருந்து விட்டு இராவண்டி யேறி இன்று காலை 8 மணிக்கு மதுரையில் வந்திறங்கினோம் இந் தப்பாட்டியம்மாள் வண்டி சகிதம் வந்து எங்களுக்காகக் காத்திருப் பதாகச் சொன்னார்கள் தாமதமில்லாமல் உடனே புறப்பட்டோம். 

அங்குள்ள சில ரயில்வேப் பெரிய அதிகாரிகள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வந்து எங்களைக்கண்டு உபசரித்து ரயிலிலே ரெ டுந்தூரம் பிரயாணஞ்செய்த சிரமம் நீங்கும் பொருட்டு உள்ளது இருந்துவிட்டுப் போக வேண்டுமென்று சொன்னார்கள். அவசரகாரியம் எங்களை மன்னிக்கவேண்டும், இன்னொருமுறை தங்களைப் பார்க்க ஆவலுடையவர்களாயிருக்கிறோம், என்று அவர்களிடம் உத்திரவு பெற்றுக்கொண்டு வெளியேறினோம். நீ கல்கத்தாவிலி ருந்து புறப்படும்போது பெரியதம்பியைப் (தெய்வசிகாமணியை] பார்க்க நாகப்பட்டணம் போய் வருகிறேனென்று சொல்லிவந்தவன் திருநெல்வேலியில் வைத்து எனக்குத் தந்திகொடுத்து இருந்தபடி யால் அதைச்சேர்ந்த ஒரு ஊரில் தாமதிததிருக்கிறாயென்று எண் ணிக்கொண்டு எந்தவூருக்கு வண்டிபோகிறதென்று பாட்டியம்மா ளிடம் கேளாமலை வண்டியேறினோம், காலை 9மணி முதல் 3 மணி வரை அருப்புக்கோட்டைச் சாலைவழி யாக வண்டி வந்து கொண் டேயிருந்தது கடைசியாகச் சித்திராநதியில் வந்து இறங்கிற்று, இது பாப்பையாபுரமா வென்று பாட்டியம்மாளிடம் கேட்டேன் ஆம் என்றார்கள். எந்தபாப்பையாபுரம்? என்றேன் அதற்கு மேல் சொல்ல அவர்களுக்குத் தெரியவில்லை வர வர செண்பகாடவியும் செண்பகத்தடாகமும், ராஜராஜேஸ்வரி செண்பகவல்லியம்மன், சந்நிதியும், வீராம்புஜவிநாயகர், மஹாபலேசுரர் திருக்கோயிற் சொடிக்கம்பமும் ஒன்றொன்றாகத் தெரியக்கண்டேன் நான் குழந் தையாக இருக்கும்போது நீராடியகுளமும்,தினந்தவறாது சேவித் துவந்த திருக்கோவிலும், ஐயா அவர்கள் பூஜைக்குப்பூ வெடுத்த சண்பகாடவியும் தெரியாதா? பார்த்தவுடனே எனக்குத் துக்கம்பெ ருகிவிட்டது, ஆ! நான் பிறந்த மண்ணே, உன்னைப்பார்த்து ஆனந்திக்கும் காலமும் வந்ததேயென்று சிந்தித்துக் கொண்டு வர் தேன் வீட்டோரம் வண்டிவந்து நின்றது வாசலில் அக்காள் [சோமசந்த ம்பிள்ளை மனைவி மீனாக்ஷி ] நிற்பதைக் கண்டேன் கோவென்று கதறினேன், அவளும் அடையாளந்தெரிந்து என் னைக் கட்டிக்கொண்டு பிரலாபித்தாள் அதற்குள்ளே அண்ணாச் சியும் நீயும் வந்து சேர்ந்தீர்கள் என்றாள். 

கவிராயர் தாசில்தாரைப் பார்த்து ஐயா எங்கள் குடும்பம் சிதறுண்டு அலைந்திருக்கிறதைப் பார்த்தீர்களா! பாப்பையாபுரம் எதிர்த்தாரை வெற்றி இராமநாதபிள்ளைக்கு சண்முகம்பிள்ளை வீர வாகுபிள்ளை அமிர்தம் அம்மாள் என மூவர் மக்கள், அவர்களில் சண்முகப்பிள்ளைக்கு நானும் என் தம்வி மாணிக்கவாசகமும், வீர வாகுபிள்ளைக்கு மீனாக்ஷியும், குழல்வாய்மொழியும், அமிர்தம் அம் மாளுக்கு மிராசுப்பிள்ளையும் தங்கச்சாமிபிள்ளையும் கோமதியம் மாளும் சந்ததிகள், என் சிறிய (மீனாக்ஷியின்) பிதா மரணப்படுக் கையிலிருக்கும் பொழுது குழல்வாய்மொழியைத் தங்கச்சாமிபிள் ளைக்கு மனைவி பாக்கி வைத்து விடும்படி எனக்குக் கட்டளையிட்டார் கள். அவ்வண்ணமே நானும் மிராசுப்பிள்ளையும் பிரயத்தனம் செய்தோம் எங்கள் முயற்சி பலிக்கவில்லை தங்கச்சாமிபிள்ளை புத்தூர்ப் பூ மி நாத பிள்ளை மகளை விவாகம் பண்ணிக் கொண்டார். அதன் பின் தூத்துக்குடியில் பெரியவர்த்தகரான மணிமங்கலம் கப்பலோடி ஆறுமுகஞ்செட்டி யாருக்குப் பாணிக்கிரஹணம் பண்ணிக்கொடுத்தோம். கல்பாண முடிந்த சிலதினங்களுக்குப்பிறகு தம்பதிகளை மறுவீட்டுக்கழைத் துக் கொண்டுவரும்படியாகத் தம்பியாபிள்ளையை அனுப்பியிருந் தோம் அவன் போய் அழைத்ததில் அவர் பட்டிக்காட்டுக்கு மறு வீடுவர மாட்டோமென்று சரசமாகப் பரிகசித்தாராம், அதற்கி வன் பட்டிக்காடென்பதென்ன இழிவா? “செட்டிபெருத்தாற் பட் டணம்” என்பதுபோல தங்களைப் போன்ற கப்பல் வர்த்தகாள் வந் திறங்கி விட்டால் எதுவும் நகரந்தான் என்றானாம். இதில் அவரு டைய செட்டியார் என்னும் பட்டப்பெயரைக் குறித்து ஏளனம் பண்ணினதாக மதித்துக்கொண்டு மறுவீட்டுக்கு வர முடியாதென் று நிர்த்தாக்ஷண்யமாகச் சொல்லிவிட்டார். தம்பி போனது போல திரும்பினான் பிறகு பல பெரிய மனிதர்களைக் கொண்டு சொல்வித் துப் பார்த்தோம்: ஒன்று முடியவில்லை அவர் ஒரு பிடிவாதமுள்ள வாலிபனானபடியால் எங்கள் இதவசனம் அவரிடம் செல்லவில்லை, அஃதப்படியிருக்க இரண்டு வருஷத்திற்குப் பின் என் சிறியதா யார் மரணத்திற்குத் தந்திகொடுத்தோம். அதற்காவது வந்திருந் தால், எங்கள் மனம் ஆறிப்போம் வந்தாரில்லை, பேட்டன நடை யார்க்கெல்லாம் பிறந்தகத்தாசைபோமோ” தன் கணவன் மனத்தைத் திருத்தக் குழல்வாய்மொழி பிரயாசைப்பட்டும் அது வீணாயிற்று எனத்தெரிந்தோம், நாங்கள் ஒரு பெண் உயிரோடிறந்த தாகவே எண்ணிக்கொண்டிருந்து விட்டோம். சிறிது நாளைக்குள் அவரிறந்து கப்பல் வியாபாரமும் முழுகிப்போய் விட்டதாகக் கேள் விப்பட்டோம். பின்னடந்தவைகள் ஒன்றும் எங்கள் செவிக்கெட் டவில்லை. 20-வருஷத்திற்கு முன் கல்யாணப்பெண்ணாக அனுப் பிய குழல்வாய்மொழியை இன்று இந்தநிலையிற் கண்டேனென்று கண்ணீருகுத்தார். 

சூரிய குலத்தை ரகுகுலமென்றும் சந்திரகுலத்தைக் குரு குலமென்றும் இதிகாசங்கள் சொல்லுகிறது போல நம் முடைய குலத்திற்கு நெல்லையப்பகுல மென்று பெயர் வைப்பதே தகுதி யென்றார் சோமசுந்தரம்பிள்ளை. 

நீங்களெல்லாம் “விருப்பறாச் சுற்றம் ஆக்கம்பலவுத்தரும்” என்னும் அறத்தைக் கடைப்பிடித்தொழுகிய சாந்த சீலர்கள், நானோ குலப்பழி தேடிய கொடியவன் என்றார் தியாகராஜச்செட்டியார், 

ஏன் அப்படிச்சொல்லுகிறீர்கள், என்றார் தாசில்தார்.

மாணிக்கவாசகம்பிள்ளை கப்பலோடி ஆறுமுகஞ்செட்டியா ரை மறுவீடழைக்க வந்திருந்த போது நாணுங்கூட இருந்து குளறுபடை செய்தவன் என்றார் செட்டியார். 

மாணிக்கவாசகம்பிள்ளை செட்டியாரைக்  கண்ணூன்றிப் பார்த்து ஐயா, தாங்கள் கூட இருந்த ஞாபகம் இப்போதுதான் எனக்கு உண்டாகிறது, அவருடன் தர்க்கமிட்டுக் கொண்டி ருக்கும் பொழுது நீங்கள் என்னைப் பார்த்து “எந்தப்பேச்சுக்கும் அளவுண்டு’ எனக் கடிந்து சொன்னீர்களே ஞாபகமிருக்கிறாதா? கப்பலோடி ஆறுமுகஞ்செட்டியாரை உங்களுக்கு அத்தைபிள்ளை மென்றும் சொன்னீர்களே யென்றார். 

ஆம் என்றார் செட்டியார் கல்யாணசுந்தரமும், தெய் வசிகாமணியும் தங்கை தமக்கைபிள்ளைகளென்றும் தியாகராஜசெட்டியார் கல்யாணசுந்தரத்தின் பிதாவுக்குச் சொந்தமைத்துனனென் றும் தெரிந்தபோது அவர்கள் அடைந்த ஆனந்தத்தை அளவிட யாரால் முடியும் ஊருக்குள்ளும் இந்தக்கதை வெளியாயிற்று எல் லாரும் எல்லையற்ற இறும்பூ துடையாராயினர். 

சூழல்வாய்மொழியை உற்றாரும் மற்றாரும் வந்து வந்து சந்தித்துக் குசலம் விசாரிக்கத் தொடங்கினார்கள். 

இரண்டு மூன்று தினத்திற்குப் பிறகு தெய்வசிகாமணி கல்யாணசுந்தரம் இவர்களுக்கு விவாக நடத்துவிக்கும் விஷயத்தில் தாங்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை மீனாக்ஷியம்மாள் மூல மாகக் குழல்வாய்மொழியம்மாளுக்கு சோமசுந்தரம்பிள்ளை முதலி யோர் சங்க்ஷேபமாகக் கூறினார்கள், அவளும் அகத்துவகையோ டு சம்மதித்தாள். அக்கணமே திருநெல்வேலி நாகபட்டின முக லிய இடங்களுக்குக் கடிதங்களும் ஆட்களும் அனுப்பப்பட்டன முகூர்த்த நாளைக்கு முந்தினதினமே எல்லோரும் வந்துசேர்ந்தார்கள். 

கவிராயர் பிரேரேபனை பண்ணிய பிரகாரம்,தெய்வசிகா மணிக்குத் தியாகராஜ செட்டியாரவர்கள் புண்ணிய புத்திரி சௌ பாக்கியவதி மங்களாம்பாளையும் கல்யாணசுந்தரத்திற்குத் தாசில் நெல்லையப்பபிள்ளை யவர்கள் தங்கை குமாரத்தி சௌபாக்கியவதி மரகதவல்லியம்மாளையும் விதிப்படி திருமாங்கல்யதாரணஞ் செய் வித்தார்கள். பாணிக்கிரஹணமுதலிய சகல சட் பங்குகளும் தத்து வார்த்த விளக்கத்தோடு செய்விக்கப்பட்டன. ஊர்கோலமுதலியவைகள் படாடோபமின்றி வைதீக நடையோடு நடைபெற்றன. கல்யாணத்தின் அபராகத்தில் கவிராஜ சாமிநாதபிள்ளை “விவாஹ மும் வீண்செலவும்” என்னும் விஷயத்தை யெடுத்துப் பிரசங்கித் தார், பெரும்பணக்காரர்களான, இவர்களே இந்தமாதிரி விவாகத் தை நடத்திக்காட்டி விட்டபடியால்,நாங்களும் இந்த அஸ்திவாரத் தைத்துணையாகப் பற்றி நடந்து நல்வாழ்க்கைக்கு வரப்பிரியப்படு கிறோமென்று சபையோரனை வரும் ஆமோதித்தார்கள். 

தாசில்தார் கவிராயர் மிராசுப்பிள்ளை செட்டியார் முதலிய பல கனவான்களும் தம்பதி சமேதர்களாயிருந்து வதூவரர்களை ஆசீர்வதித்தார்கள் இவ்வாறு சாஸ்திரோக்தமாக விவாகம் சம்பூரணமாக நிறை வேறியது. 

கல்யாணமுடிந்து இரண்டுமாஸங்களுக்குள், மறுவீடு எதிர் வீடு முதலிய புறச்சடங்குசளும் செவ்வனே நடந்தேறிற்று. சிகாமணியும் கல்யாணசுந்தரமும் தத்தம், அருமைக் காதலியரோடு மணியும் ஒளியும் போலப் பிரிப்பற்ற இன்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 

தாசில்தார் மதுரைத்தாலூகாவில் தமது உத்தியோகத்தை வஹித்துக் கொண்டிருக்கிறார். 

தெய்வசிகாமணிபிள்ளையும் பாரிஸ்டர் கல்யாணசுந்தரமும் மதுரையிலேயே உயர்தர வழக்கறிஞர் (வக்கீல்)களாக இருந்து வருகின்றார்கள், 

மாசிலாமணி தாசில்தாருடனே வசித்து வந்தாலும் பாப்பையாபுரத்திலுள்ள திரவியவந்தர்களுக்குள் இவனும் ஒருவனாகக் குடும்ப சகிதம் வாழ்ந்து வருகின்றான். 

நெல்லை மந்திரமென்னும் வாசகசாலை மகோன்னதமான நிலையில் வீளங்குகிறது. 

தாசில்தார் செட்டியார், மிராசுப்பிள்ளை, கவிராயர், நால் வரும் பாப்பை, நாகை, மதுரை நசரங்களில் அடிக்கடி சந்திப்பதும் சாஸ்திர சமய விசாரணை புரிவதுமாகத் தங்கள் ஜீவியத்தைப் புனிதப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். 

இச்சரித்திற் குறிக்கப்பட்ட சாதுக்கள் சகலரும் எல்லா இன்பங்களையும் இடையூறின்றித் துய்த்து நெறி தவறாது வாழ்ந்து வருகின்றனர். 

(சுபம்)

ஐயா, 

இப்புத்தகம் மதுரை புதுமண்டபம் புத்தகஷாப் S.முத்தைய பிள்ளையவர்கள் இடத்தும், இ.மா.கோபாலகிருஷ்ணக் கோனார் அவர்களிடத்தும், எம்மிடத்தும் பெற்றுக்கொள்ளலாம். 

M. V. சங்கமுத்துப்பிள்ளை, 
முத்துச்செல்லையாபுரம், 
பெருநாழி P. O. 
இராம்நாட்.

– தெய்வசிகாமணி (ஒரு நவீனகம்), முதற் பதிப்பு: 1924, லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *