சுற்று – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,660
தீம் பார்குக்குள் நுழைந்ததும் சேகர், ‘அப்பா! ஜயண்ட் வீல்லே ஏறணும்பா’ என்றான்.
அம்மா, ‘’சேகர்! நோ இதுவரைக்கும் நீ ஏறினதில்லை. மேல போகும்போது ஜயண்ட் வீல்லே தலை சுத்தும், வயித்தைப் புரட்டும்’ என்று தடுத்தாள்,
ஆனால் சேகருடைய பிடிவாதமே வென்றது. ஆயிரம் பத்திரம் சொல்லி அம்மா சேகரை அப்பாவுடன் அரை மனதுடன் அனுப்பி வைத்தாள்.
ஜயண்ட் வீலில் ஏறி உட்கார்ந்ததும் சேகர் அம்மாவுக்குக் கை ஆட்டினான். கொஞ்சம் கொஞ்சமாக வீல் சுற்றவும் சேகர் மேலே மேலே சென்றான்.
‘அய்யோ! பயமா இருக்கே! இறக்கி விடறீங்களா’’ என்ற குரல் பயங்கரமாய்க் கேட்டது.
முழு சுற்றும் முடிந்த பின்னரே ஜயண்ட் வீல் நின்றது. ‘தள்ளுங்க! தள்ளுங்க! காத்து வரட்டும். முதல்ல தண்ணி கொடுங்க’ என்ற வார்த்தைப் பரிமாறல்கள்.
அம்மா நடுவில் படுத்திருந்தாள். ஏதும் அறியாதவராய் சேகரும் அப்பாவும் கூட்டத்தில் நுழைந்தார்கள்.
– மு.சிவகாம சுந்தரி (27-10-10)
தொடர்புள்ள சிறுகதைகள்
டேவிட்டின் பெற்றோர்
ஸ்ரீ.தாமோதரன்
September 21, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
September 21, 2026
உறுதி
மா.வீ.தியாகராசன்
September 18, 2026