சரசுவின் சௌந்தர்ய லஹரி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2026
பார்வையிட்டோர்: 135 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

16. பூர்வ கல்யாணி

சுாவவர்கள் நவகோடியை அழைத்துவரப் புறப்பட்டார்கள். 

அபரஞ்சியின் அழகை ரசித்தபடி கையிலே கோப்பையோடு நின்றான் சோழ இளவரசன். 

நீண்ட கூந்தல், அது தவழ்ந்து விளையாடிய அழகு. அந்தக் கூடாரத்தின் பட்டுத்திரைச் சேலைகளுக்குக்கூடக் கிடையாது. 

அளவான கழுத்து; அதிலே மின்னிக் கொண்டிருந்த வைர அட்டிகை, தன் தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தது. 

காதுகளிலே தொங்கிய குண்டலம். வானவில் தங்களிடம் பிச்சை எடுத்துப் போனதாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. 

மூக்கிலிருந்த மூக்குத்தி, அவள் சிரிக்க மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருந்தது. 

வானத்து நட்சத்திரங்கள் கூடாரத்தைக் கிழித்துக் கொண்டு உள்ளேயே இறங்கிவிட்டதாகவே அவனுக்குத் தோன்றிற்று. 

கச்சுக்கும் சேலைக்கும் இடையே தோன்றிய ஆலிலை வயிறும். அதன் அடிப்பாகமும், கார்காலம் போனபிறகு காவிரியாற்றில் வண்டல் மண் போட்ட ஓவியம் போல் காட்சியளித்தன. 

சற்றே பருத்திருந்த பின்னழகு, அவள் நடந்தால்தான் உலகத்தை விலை பேசலாமே என்பது போல் காத்திருந்தது. 

‘இத்தகைய தேவதை அரண்மனையில் இல்லைதான்’ என்று இளவரசனின் வாய் முணுமுணுத்தது. 

அவனுடைய அடக்கத்தைப் போதை அழித்தது. “அபரஞ்சி!” என்று முணுமுணுத்தபடி அருகில் நெருங்கினான். 

“தயவு செய்து நெருங்காதீர்கள்” என்று கெஞ்சினாள் அவள்.

“என்னால் தாங்க முடியவில்லை அபரஞ்சி!” என்று கூறியபடியே அவளை இறுகத் தழுவினான், இளவரசன்.

பயந்து நின்ற அபரஞ்சி நினைத்திருந்த ஆவேச எண்ணங்களெல்லாம் தன் பலவீனத்தில் மறையக் கண்டாள். அப்படியே மூர்ச்சையுற்றாள். 

‘தான் அழைக்காமல் யாரும் உள்ளே நுழையவேண்டாம்’ என்று காவலர்களுக்கு உத்தரவிட்டான் இளவரசன்.

அபரஞ்சியின் சேலையைக் களைந்தான். கச்சையை அவிழ்த்தான். அந்த அழகில் அவனுக்கு மூர்ச்சையாகாமல் இருந்தது அதிசயம்! 

அப்படியே அவளை ஆரத் தழுவினான். முத்தமிட்டான். தன் ஆசைகள் அனைத்தையும் கொட்டித் தீர்த்தான். 

“இது போன்ற இன்ப லயத்தை வேறு எந்தப் பெண்ணிடமும் கண்டதில்லை” என்றபடி, அதே சேலையால் அவள் உடம்பை கழுத்துவரை மூடினான். 

வெளியிலே நவகோடி வந்திருக்கலாம் என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. திரையை விலக்கி எட்டிப் பார்த்தான். 

அங்கே கன்னங்களில் காயங்களோடு இரண்டு வீரர்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்தான் நவகோடி. 

“ஊம்…! அவனும் அழகன் தான்” என்று முணு முணுத்த இளவரசன் அவனை உள்ளே அழைத்துவரச் செய்தான். 

“இந்தத் தங்கச்சிலைக்குச் சொந்தக்காரன் நீதானா? மிகவும் சுகமான உடம்பு. இவளோடு கலந்திருந்தால், பொழுது போவதே தெரியாது. தேவைப்படும்போது மீண்டும் அழைத்துக் கொள்கிறேன். இப்போது தூக்கிக் கொண்டு போ” என்றான். 

அரசன் ஆணையை மறுத்தறியாத வணிகன், கண்களில் நீர்மல்க அப்படியே கைத்தாங்கலாக அவளை அள்ளி எடுத்தான். அவள் நிர்வாணமாயிருப்பதை அப்போது தான் அவன் உணர்ந்தான். கூடாரத்தை விட்டு வெளியேறினான். 

காவிரிக்கரையில் நடக்காமல், ஆற்றுப்படுக்கையில் மெதுவாக நடந்தான். 

சேவகர்களும், கூடாரமும் கண்ணுக்கு மறைந்ததும், அவளை அப்படியே ஆற்றுமணலில் படுக்க வைத்து இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளி அவள் முகத்தில் தெளித்தான். 

சந்திரவில் பனி விழுந்தது போல் அந்த நீர் முத்துக்கள் முகத்தில் நின்றன. 

அவள் கண்ணை விழித்துப் பார்த்தாள்.

உடலின் கொதிப்பினால் கண்கள் சிவந்திருந்தன.

“ஐயா பெருமானே…” என்று மட்டும் அவள் முணு முணுத்தாள். 

அவளைக் கைத்தாங்கலாக உட்கார வைத்து, ஆடைகளை அணிவித்தான். 

சற்று நிதானத்துக்கு வந்த அபரஞ்சி, “மானம் போய் உயிர் காவலா….?” என்றாள். 

“பெரிய இடத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் கடவுள் கூடக் கண்ணை முடிக் கொள்கிறானே அபரஞ்சி! தருமத்திற்குப் பெயர் பெற்ற சோழ நாட்டில், சண்டாளர்களையும் பிறக்க வைத்து வேடிக்கை பார்க்கிறானே அவன்! உன் உடம்பு கறைபட்டாலும், உள்ளம் கறைபடாதது என்பது எனக்குத் தெரியும். அந்த அற்புதமான உள்ளத்துக்கு நானே சொந்தக்காரன்!” என்றான் நவகோடி.

“நாம் துர்க்கையை தரிசிப்போமா? இந்தப் பாபம் தீர அதுதான் வழி!” என்றாள், அபரஞ்சி. 

“இந்த நேரத்தில் தேவி தரிசனமா…? எதற்காக…” என்று கேட்டான், நவகோடி. 

“எந்த தேவி நம்மைக் கவனிக்காமல் விட்டாளோ, அவளை நாமாவது கவனிப்போம். வாருங்கள்!” என்று அவனைக் கையோடு அழைத்துக் கொண்டு, கொங்கு நாடு செல்லும் சாலைக்கு விரைந்தாள் அபரஞ்சி.

அங்கேதான் அடர்ந்த மரங்களுக்கு நடுவே துர்க்கையின் கோயில் இருந்தது. அதில் கம்பீரமாக நின்றாள், துர்க்காதேவி. 

குங்குமம் இடுவதாயினும், குங்குமத்தை அழிப்பதாயினும் அந்த துர்க்கையின் கோவிலுக்குத்தான் இளம் பெண்கள் வருவார்கள். 

அது ஒரு கதைக் கட்டிடம். மேலே சரிவான மண்டபம். முன்னாலே இரும்புக் கதவு. நடுவிலே நிறுத்தி வைக்கப்பட்ட சூலாயுதம். 

வருகின்ற பெண்கள் கற்சட்டியில் இருக்கும் குங்குமத்தை எடுத்து, சூலாயுதத்திற்கு முதலில் இட்டுவிட்டு, பிறகு தங்கள் நெற்றியில் அணிந்து கொள்வார்கள். 

குங்குமம் அழிப்பவர்களை அங்கே உட்கார வைத்து காவிரித் தண்ணீரால் நன்னீராட்டி அதிலேயே குங்குமம் கரைந்து போகும்படி செய்வார்கள். குங்குமம் கரைந்த தண்ணீர் தேவியின் பாதங்கள் வழியாக ஓடும். 

தொட்டியம் போகும் வழியில், கொங்கு நாட்டுச் சாலையில் இருந்த அந்த துர்க்கை கோவிலுக்கு பூர்ண சந்திரன் சரியத் தொடங்கும் நேரத்தில் வந்து சேர்ந்தார்கள் அபரஞ்சியும், நவகோடியும். 

அகல் விளக்குகள் மினுக் மினுக்கென்று எரித்து கொண்டிருந்தன. 

தண்ணீர்த் தொட்டி காவிரித் தண்ணீரால் நிரப்பப் பட்டிருந்தது. 

துர்க்கையின் சக்தியில் இருந்த நம்பிக்கையால் அந்தக் கோவில் பூட்டப்படுவதில்லை. 

பாஞ்சாலியைப்போல் அவிழ்ந்த கூந்தலுடனும், ஆனால் ஆவேசமில்லாமல் அமைதியாகவும் கோவிலுக்குள் நுழைந்து கற்கடவுள் மீது அமர்ந்து கொண்டு, “என் நெற்றியில் குங்குமம் இல்லாவிட்டாலும் உங்கள் கையால் என் தலைக்குத் தண்ணீர் ஊற்றுங்கள்” என்று வேண்டினாள், அபரஞ்சி. 

நவகோடி, பயந்து போய், ”ஐயோ, அபரஞ்சி! என்ன இது…?” என்று அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

“அருள் கூர்ந்து தங்கள் கையால் எனக்குத் தண்ணீர் ஊற்றுங்கள்” என்றாள் அபரஞ்சி. 

காட்டு மரங்கள் ஒரு தடவை குலுங்கி நின்றன. சரசர வென்று ஓடும் பாம்புகளின் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தது. உப்பு வண்டிகள் தூரத்தில் சென்று கொண்டிருந்தன. 

நவகோடி அவள் தலையில் தண்ணீரை அள்ளி ஊற்றினான். 

துர்க்கையின் முன்னால் எழுந்து நின்றாள் அபரஞ்சி. பிறகு உள்ளே ஓடிப்போய் துர்க்கையைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். துர்க்கையின் ஒரு கையில் இருந்த ஆயுதத்தைப் பிடுங்கினாள். 

‘”அபரஞ்சி….” என்று நவகோடி கத்திய சப்தம் காதில் விழும் முன்பே, துர்க்கையின் ஆயுதம் அவள் மார்பைத் துளைத்து முதுகுப்புறமாக வெளியே வந்தது.

நவகோடி, அவளைக் கட்டிப் பிடித்துத் தூக்கி அழுதான். 

அந்த ரத்த வெள்ளத்தில் முகத்தைப் புதைத்துக் குமுறினான். 

பிறகு அவளை அப்படியே தூக்கிக்கொண்டு பின்புற மிருந்த பாதாளக் கிணற்றுக்குச் சென்றான். 

நல்ல இருளில் அவன் காலில் ஒரு கருநாகம் சுற்றிக் கொண்டது… நவகோடி காலை உதறவில்லை. அதை வரவேற்றான். 

அவன் கையிலிருந்த அபரஞ்சியின் சடலம் நழுவி வீழ்ந்தது. அதன் மீது அவன் விழுந்தான். 

பூர்வஜென்ம ஞாபகம் முடிந்து சரசு சுற்றும் முற்றும் பார்த்தாள். தனக்குத் தெரியாத சில விஷயங்க கூட நினைவுக்கு வருவதை, உணர்ந்தாள். 

“என் மரணத்திற்குப் பிறகு பல முறை புதுப்பிக்கப் பட்டும். இந்த வீடு பாழ் வீடாகவே ஆகிவிட்டது” என்று கூவினாள். 

“சரசு…சரசு..” என்று அவளை உலுக்கினார் மாமியார். 

”இவ்வளவு நேரம் பைத்தியக்காரியைப் போல் நின்று விட்டு இப்போது கூச்சலிடுகிறாயே…” என்றார்.

“நானா பைத்தியக்காரி? இங்கே தொட்டியம் போகும் வழியில் ‘அபரஞ்சி மேடு’ என்று ஒரு மேடிருக்கிறது. அங்கே போய்ப் பார்க்கலாம் வாருங்கள்!” என்றாள் அபரஞ்சி.  

17. மாயவ மாளவ கௌளை 

‘குறி சொல்பவள் சொல்லிவிட்டாளே, சரசு கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் போகும்படி? போகாமல் முடியுமா? அபரஞ்சி மேடாமே, அபரஞ்சி மேடு? அதையும் பார்த்து விடலாம்’ என்றுதான் நினைத்தார் மாமியார். 

”அம்மா! பசிக்கிறது” என்றான் மகன். 

“ஓ! சாப்பிடலாமே! தொட்டியம் சாலையில் ஒரு சத்திரம் இருக்கிறது. அங்கு அவ்வப்பொழுது சமைத்துப் போடுகிறார்கள்” என்றாள், சரசு. 

சிங்காரவேலனுக்குத் தலைவலியே வந்துவிட்டது. ஒரு பைத்தியத்தின் பின்னால் தான் நாம் சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்றே அவன் முடிவு கட்டிவிட்டான்.

“இதோ பார் சரசு! நாங்கள் காரைக் கொடுத்து விடுகிறோம். நீ எங்கே வேண்டுமானாலும் போய் வா! எங்ளுக்குத் தலைவலி, கால்வலி, உடம்பு வலி எல்லாம் வந்து விட்டது!” என்று கொஞ்சம் கண்டிப்பாகவே சொல்லி விட்டான், சிங்காரவேலன். 

அவனை சரசு பார்த்த பார்வை ஒரு மகாகாளி கேலியாகப் பார்ப்பது போலிருந்தது. 

”இந்தா தம்பி! சும்மா வா! சரசு, அவன் கிடக்கிறான்; நீ வாம்மா! நீ எங்கெல்லாம் போக விரும்புகிறாயோ, அங்கெல்லாம் போகலாம்!” என்று கொஞ்சலாகச் சொன்னார் மாமியார். 

”வழியில் சாப்பிட்டுவிட்டே போகலாம்” என்று நிதானமாகவே சொன்னாள், சரசு. 

அப்போது அவள் ஒரு சராசரிப் பெண்ணாகக் காட்சி யளித்தாள். 

வழியில் ஒரு உணவு விடுதியில் விடுதியில் இறங்கி மூவரும் சாப்பிட்டார்கள். 

நவீன உணவு வகைகளை சரசு தொட்டுக்கூடப் பார்க்க வில்லை. வெறும் மோரும் சோறும், ஊறுகாயுமாக முடித்துக் கொண்டாள். 

தொட்டியம் சாலையை நோக்கிக் கார் சென்றது.

சிங்காரவேலனுக்கும், அவன் தாயாருக்கும் சரசுவின் நடவடிக்கை வேடிக்கையாக இருந்ததே தவிர காரை ஓட்டும் டிரைவருக்கு அப்படி இல்லை. அவன் ஆழ்ந்த தெய்வ பக்தியுடையவன். கட்டுக் கட்டாக விபூதி பூசி, நடுவிலே சந்தனப் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைத்திருந்தான். ஜாதகம் ஜோசியத்தில் நம்பிக்கை யுள்ளவன். 

காரை எடுக்கும்போது பின்புறமாகப் போக வேண்டி யிருந்தால், ஒரு அடி, முன்னால் போய் விட்டுத்தான் பின்னால் போவான். தப்பான சகுனத்தை எதிரே கண்டால் காரை நிறுத்திவிடுவான். மிகவும் நிதானமாகவே ஓட்டுவான். 

எல்லோரும் ஐந்து மணி நேரத்தில் போக வேண்டிய ஊருக்கு, அவன் ஏழு மணி நேரத்தில் போவான். நல்ல குடும்பத்தில் பிறந்தவன். பெயர் செல்லையா சேர்வை. 

இவ்வளவு அடக்கமிருந்தாலும் அகம்படியருக்கே உரிந்தான ஆண்மையும், வீரமும் அவனிடம் உண்டு. சரசுவை ஒரு தேவதையாகவே அவன் மதித்தாள். 

சோறு தண்ணீர் இல்லாமல் சரசு சொல்லுகின்ற இடங்களுக்கெல்லாம் போக வேண்டும் போல் அவனுக்குத் தோன்றிற்று. 

தொட்டியம் சாலையில் சிறிது தூரம் கார் வந்ததும் ஓரிடத்தில் வலது பக்கமாக ஒரு வண்டிப் பாதை பிரிந்தது. இடது பக்கத்தில் ஒரு மைல் கல் ஊன்றி இருந்தது. அதில் ஒரு அம்பு போட்டு, ‘அபரஞ்சி மேடு போகும் வழி’ என்று எழுதி இருந்தது. 

காரை அதில் திருப்பச் சொன்னாள் சரசு. 

சாலையோ, கார் போகக்கூடியதாக அவனுக்குத் தோன்றவில்லை. வண்டிப்பாதையின் நடுவில் பெரிய பெரிய மேடுகள் இருந்தன. காரின் நடுப்பகுதி எங்கே அதில் இடித்து விடுமோ என்று அவன் அஞ்சினான். ஆனாலும் தைரியமாக நடுப்பகுதியின் மீது சக்கரத்தை ஏற்றியபடி காரைச் செலுத்தினான். 

ஒரு சிறு கிராமம். ஊர் என்று சொல்வதற்கு அடையாளமாக இரண்டே இரண்டு கடைகள். இரண்டும் கூரைக் கட்டிடங்கள். ஒன்று கடை இன்னொன்று பலசரக்குக் கடை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வீடுகள். பத்துப் பதினைந்து கூரை வீடுகளைத் தவிர, மற்றவை யெல்லாம், குடிசைகளே, சில வீடுகளுக்கு முன்னால் கள்ளிச் செடியினால் வேலி போடப்பட்டிருத்தது. 

ஊருக்குள்ளே கார் போகக் கூடிய தடமே கிடையாது. ஆங்காங்கே ஆடுமாடுகள் கட்டப்படுவதற்கான குத்துக் கற்கள் வேறு ஊன்றப் பெற்றிருந்தன. 

குடிசை பிரிக்கப்பட்ட குட்டிச் சுவர்கள் ஏராளமாக இருந்தன. 

தங்கள் ஊருக்கும் ஒரு கார் வருகிறதே என்று எல்லா கிராம ஜனங்களும் அங்கே கூடிவிட்டார்கள். 

‘இங்கே திருப்பு’ ‘அங்கே திருப்பு’ என்று, சரசு உத்தரவிட்டுக் கொண்டே போனாள். 

பரிதாபத்திற்குரிய டிரைவர் காடுமேடுகளில் எல்லாம் காரைச் செலுத்தினான். 

கடைசியில் சரசு குறிப்பிட்டது போலவே ஒரு சிறிய கோவில் வந்தது. 

அது இப்பொழுது கதைக்கட்டிடமாக இல்லை, கற்கட்டிடமாகவே இருந்தது. 

அங்கே எல்லோரையும் இறங்கச் சொன்னாள் சரசு. “யாரோ இதைப் புதுப்பித்திருக்கிறார்கள்” என்றாள்.

”அடே, சூலாயுதத்தைக்கூட மாற்றி இருக்கிறார்களே…” என்று ஆச்சரியப்பட்டாள். 

அம்மனுக்குப் பட்டுச் சாத்தியிருந்தது. அந்தச் சிலையின் கண்களிலும், நெற்றியிலும் வெள்ளித் தகடுகள் பதிக்கப் பெற்றிருந்தன. 

“இங்கே குடியேறியவர்கள் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள்” என்றாள், சரசு. 

அவள் வார்த்தைகளுக்கு மாமியாரும் சிங்கார வேலனும் எப்படிப் பதில் சொல்லார்கள்? ஏற்கனவே அது எப்படி இருந்தது என்று தெரிந்திருந்தாலல்லவா பதில் சொல்ல! 

சரசு, துர்க்கையின் முன் விழுந்து வணங்கினாள். அவள் கணவனும் மாமியாரும் விழுந்து வணங்கினார்கள். அதற்குள் ஊர் மக்கள் அங்கே கூடிவிட்டார்கள். 

அங்கே புல் முளைத்த ஒரு மேடு தெரிந்தது. அதன்மீது விழுந்து திடீரென்று அழுதாள். 

கூடியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

யாரோ ஒரு மூதாட்டி அந்த மேட்டு மண்ணைத் தொட்டு அவள் நெற்றியிலே பூசினாள். 

“இந்த ஊர்லே கன்னிப்பெண்களுக்கு ஒடம்புக்குச் சொகமில்லேன்னா, இந்த மேட்டில் இருந்து மண்ணெடுத்துத் தான் கரைச்சுக் குடுப்போம். நீ ஏம்மா இதிலே விழுந்து அழுவுறே?” என்று கேட்டாள், அந்த மூதாட்டி. 

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாத சரசு, “இந்த இடத்தைத் தோண்டுங்கள். தோண்டுங்கள்” என்று கெஞ்சினாள். 

“ஐயையோ, தோண்டக்கூடாதம்மா. முன்னே தோண்டுனவங்களெல்லாம் ரத்த வாந்தி எடுத்துச் செத்துப் போயிட்டாங்க, இந்த ஊருக்கு வந்த வாத்தியார் ஒருத்தரு துணிச்சலா தோண்டினாரு; அவரும் செத்துப் போயிட்டாரு. ஆனா அவரு தோண்டுனதிலெ ரெண்டு தங்க வளையலும், ஒரு கருகமணியும் கெடைச்சுது. அதைச் சாமி வீட்டிலே வெச்சுப் படைச்சுக்கிட்டிருக்கோம்” என்றாள் அந்த மூதாட்டி. 

“பரவாயில்லை. மண்வெட்டி கொடுங்கள். நான் தோண்டுகிறேன். எனக்கு என்ன நேர்ந்தாலும் கவலை இல்லை” என்று கெஞ்சினாள் சரசு. 

“பெரிய எடத்துப் பொண்ணு கேட்குது. கொடுத்துத் தான் பாருங்களேன்” என்றார் ஒரு கிராமவாசி. 

கிராமத்தில் மண்வெட்டிக்கா பஞ்சம்? 

சரசு ஆவேசம் வந்தவளைப் போல தோண்டினாள். பொழுது அஸ்தமிக்கும் வரை தோண்டினாள். 

பத்துப் பதினைந்து ஹரிக்கேன் விளக்குகள் அதற்குள் அங்கே வந்து சேர்ந்துவிட்டன. 

முதன் முதலில் அவள் கைக்குக் கிடைத்தது ஒரு கால் கொலுசு. 

மண்ணிலே மக்கிப் போய்க் கிடந்த அந்தக் கொலுசை எடுத்ததும், “அத்தை” என்று கத்தினாள், சரசு. 

“என்னம்மா? இதோ இங்கு தான் நிற்கிறேன்” என்று பயத்தோடு சொன்னாள், மாமியார். 

“இதோ! அபரஞ்சியின் கால் கொலுசு” என்று அதைக் காட்டிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் சரசு.

மேலும் தோண்டினாள். வைர அட்டிகை கிடைத்தது. அப்படியே பெரும்பாலான நகைகளை எடுத்துவிட்டாள் சரசு. 

பக்கத்தில் கிடந்த எலும்புகளிலிருந்து இரண்டு மண்டை ஓடுகளை அவள் எடுத்தாள். 

அதுவரை ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த ஜனங்கள், “இது ஏதோ பேய் பிசாசு” என்று பயந்து விட்டார்கள். 

அந்த இரண்டு மண்டை ஓடுகளையும் கண்களில் ஒற்றிக் கொண்டு மீண்டும் பள்ளத்திலேயே போட்டாள் சரசு. 

குழியிலிருந்து எடுத்த நகைகளோடு, அவள் களைப்புற்ற நிலையில் காரில் ஏறி உட்கார்ந்தாள். 

“அம்மா! இந்த நகைகளை நீ கொண்டு போனால் உனக்கும் கெடுதல், ஊருக்கும் கெடுதல்” என்று வழிமறித்தார் ஒரு முதியவர். 

அந்தக் கிராமத்து ஜனங்களைச் சமாதானப்படுத்தி, துர்க்கை கோவிலுக்கென்று ஐநூறு ரூபாய் கொடுத்து விட்டு எல்லோரும் புறப்பட்டார்கள். 

நகைகளை மார்பில் அணைத்தபடி மயங்கியே கிடந்தாள் சரசு. 

இப்போது எங்கே போகவேண்டும் என்றெல்லாம் அவள் சொல்லவில்லை. அதுவே சிங்காரவேலனுக்கும் அவன் தாயாருக்கும் போதுமானதாக இருந்தது. 

கார் மூலங்குடியை நோக்கிப் பறந்து முலங்குடி வீட்டுக்குள் நுழைந்து சரசுவைக் கட்டிலில் படுக்கவைத்து, நகைகளுக்கு மெருகு போடத் தொடங்கினார்கள் சிங்கார வேலனும், அவன் தாயாரும். 

அப்போதுதான் அந்த வைர அட்டிகையை நன்றாகக் கவனித்தார், மாமியார்.

“எல்லாமே வேடிக்கையா இருக்கப்பா. அவள் ஒரு தெய்வப்பெண் தான்! இதெல்லாம் இந்தக் காலத்து நகையில்லே. என்ன அதிசயமோ ஒண்ணும் புரியலே, எல்லா நகையையும் பூஜை அறையிலே வச்சு பூட்டி வை. நாளைக்கு அவளிடம் தான் வெவரம் கேக்கணும்” என்றார் சரசுவின் மாமியார். 

“நாம் இன்னும் கொஞ்ச நாளைக்குக் கதைதான் கேட்போம் போலிருக்கு” என்றான் சிங்காரவேலன். 

“அடுத்த ஊர் எதுவோ, அடுத்த கதை என்னவோ?” என்றார் மாமியார்.

18. தெம்மாங்கு

சிங்காரவேலன் நினைத்ததிலும் தவறில்லை. ஸ்ரீரங்கத்திற்கும் அபரஞ்சிமேட்டிற்கும் போய் வந்ததிலிருந்து, சரித்திர காலத்துப் பெண்ணாகவே காட்சி யளித்தாள், சரசு. அவளது நடை உடை பாவனை அனைத்திலும் மாறுதல்கள் தென்பட்டன. 

அபரஞ்சி மேட்டில் கிடைத்த அட்டிகையைக் கழுத்தில் அணிந்து கொண்டாள். புத்தக அலமாரியிலிருந்து சரித்திரம் புத்தகங்களையே எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள். கட்டிக் கொள்வதும் பட்டுச் சேலையாகவே இருந்தது. 

தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டாள். அவள் செவிகளில் ஏதோ சலங்கைச் சப்தம் கேட்டபடியே இருந்தது. 

பூர்வ ஞாபகம் என்பது மனிதர்களுக்குத் தோன்றுவதில்லை. அப்படித் தோன்ற ஆரம்பித்தால் மனதில் நிம்மதி இருக்காது என்றே ஆண்டவன் அதை மறைத்து விடுவது வழக்கம். ஆனால் அபூர்வமாக அது தோன்ற ஆரம்பித்துவிட்டால், நவீன உலகத்து நடைமுறைகளின் மீது வெறுப்பு வந்துவிடும். 

நல்லவேளையாக சரசுவுக்கு அந்த வெறுப்பு வரவில்லை. 

அன்று இரவு அவள் அபரஞ்சியாகவே பழகினாள். பள்ளி அறையில் கணவனின் காலடியில் அமர்ந்து கால்களை முத்தமிட்டாள். என்றைக்கும் இல்லாத அளவுக்குக் காதல் களியாட்டத்தில் பங்குகொண்டாள். கணவனுக்கு ஒரு சிறுநோய் இருப்பதையே அவள் மறந்துவிட்டாள். 

இது பூர்வ ஜென்மத்தில் விட்டகுறை தொட்டகுறை என்றேதான் சிங்காரவேலன் நினைத்தான். 

அவள் பிறந்த குடும்பத்தை நினைவுபடுத்தினால் அவளுக்கு நினைவு வரவில்லை. 

கூடப் பிறந்த பாமா, பாமாவின் கணவன், யாரைப் மற்றியுமே அவளுக்கு நினைவில்லை. 

மீண்டும் குறிகாரியையே சரண்டைந்தார் மாமியார்.

குறிகாரி கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள், “இதோ பாரம்மா. நானும் இவ்வளவு காலமாகச் சொல்லி வருகிறேன். எதுவும் தப்பியதில்லை, சரசுவுக்கு பூர்வ ஞாபகங்களை ஊட்டுவதற்காகவே ஊட்டியில் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. முக்கியமான சில ஞாபகங்கள் வந்து போன பிறகு, அவள் மிகவும் பயபக்தியுள்ள மருமகளாக இருப்பாள். அதுவரை அவள் விரும்புவதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும்” என்றாள். 

மாமியாருக்கும் அப்படித்தான் தோன்றிற்று. 

ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி அங்கே தோண்டச் சொல்லி நகைகளை எடுக்கிறாள் என்றால், அவள் ஒன்றும் புரியாதவளாகவோ பைத்தியமாகவோ இருக்க முடியாது. தெய்வம் எப்படி விளையாடுகிறதோ பார்க்கலாம் என்று முடிவு கட்டினார், மாமியார். 

மறுநாள் அதிகாலையில், “அத்தை அத்தை” என்று அலறினாள் சரசு. 

ஏதோ மற்றொரு அதிசயம் காத்திருக்கிறதென்றே அத்தையும் அருகில் வந்தாள். 

“நாமெல்லாம் கோபிச்செட்டி பாளையத்துக்குப் போக வேண்டும்” என்றாள் சரசு. 

‘அங்கே என்ன அதிசயம்’ என்று அத்தை கேட்க வில்லை. ஏதும் இல்லாமலா மருமகள் கூப்பிடுவாள்? 

தெய்வம், குழந்தை, சரசு மூவரும் சொன்னால் சொன்னதுதானே? 

கார் புறப்பட்டது கோபிச்செட்டிப் பாளையத்தை நோக்கி. அங்கேயும் ஊருக்குள்ளே காரை விடச் சொல்ல வில்லை; ஊரைத் தாண்டி ஒரு மலைப் பிரதேசத்தில் காரை நிறுத்தச் சொன்னாள். 

ஒரு பெரிய ஏரியின் கரையில் கார் நின்றது. அந்த ஏரி தண்ணீரைக் கண்டு எவ்வளவு நாள் ஆகியிருக்குமோ! 

ஏரிக்கு நடுவிலே கருவேல மரங்கள் முளைத்திருந்தன ஆனால் சரசுவின் கண்களுக்கு அந்த ஏரி நிரம்பி வழிவது போவலே தோன்றிற்று. ஏராளமான வாத்துக்கள் நீந்துவது போல் தோன்றிற்று. ஏரி முழுவதிலும் பாம்புகள் நெளிவது போல் அலை நெளித்து, நெளிந்து செல்லும் காட்சி தென்பட்டது. 

அதோ, அந்த ஏரிக்கரையிலே பஞ்சாயத்துப் பார்த்திபன் மகள் தங்கம் தண்ணீர்க் குடத்தோடு போய்க் கொண்டிருக்கிறாள். 

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சரசுவின் சிந்தனை பறந்தது. அந்த ஏரியின் கரையையொட்டி பன்னாரி மேட்டுப்பட்டி என்றொரு ஊர் அப்போது இருந்தது. கொங்கு நாட்டைப் பல்வேறு மன்னர்கள் மாறி மாறி ஆண்ட சமயம். 

அந்த மேட்டுப்பட்டியில் ஒரு பஞ்சாயத்துச் சபை உண்டு. அந்தச் சபையில் ஐந்து பேர் உறுப்பினர்கள் உண்டு. அவர்களுக்குத் தலைவர் பார்த்திபனார். 

பார்த்திபனுக்கு இரண்டு தாரங்கள், மூத்த தாரத்துக்கு ஐந்து பெண்கள் ஒரு பையன். இரண்டாம் தாரத்துக்கு மூன்று பெண்கள், ஒரு பையன். 

மூத்த தாரத்தின் முதல் பெண்தான் தங்கம். அவள் கொஞ்சம் கருப்புத்தான். ஆனால் சிலை வடித்தது போன்று அழகாக இருப்பாள். 

பார்த்திபனார் முதல் நாரத்தை அதிகம் கவனிக்காததால், அந்த வீட்டில் வேலைக்காரர்கள் இல்லை – வீட்டு வேலைகளைப் பெண் குழந்தைகளே செய்ய வேண்டி யிருந்தது. 

தண்ணீர் எடுப்பதிலிருந்து சமையல் செய்வதுவரை தங்கம்தான் செய்வாள். 

முன்னூறு வீடுகள் கொண்ட அந்தக் கிராமத்தில் தங்கத்தின் திறமை யாருக்கும் வராது என்பார்கள். ‘கருப்பில் அழகியடா’ என்று குறவஞ்சியில் வருவதுபோல கருப்பிலே மினு மினுக்கும் அழகைக் கொண்டிருக்கும் தங்கம், ஊர் மக்களின் கவனத்தைக் கவர்ந்திருந்தாள். 

குனிந்த தலை நிமிரமாட்டாள்; சப்தம் போட்டுப் பேச மாட்டாள். பூமி அதிர நடக்க மாட்டாள்; அடி மேல் அடி எடுத்து வைப்பாள். இவையெல்லாம் அவளுக்கான இலக்கணங்கள். 

ஊரிலே எவனாவது கவிஞன் இருந்தால், அவளைப் பற்றி ஒரு காவியமே பாடி இருப்பான். 

கற்பிலே கண்ணகி என்றும், வனப்பிலே சீதை என்றும் ஊரார் பேசிக் கொள்வார்கள். இவ்வளவிருந்தும் அவளைக் கட்டிக்கொள்ள யாரும் முன்வரவில்லை. 

‘வயது இருபத்தெட்டு ஆகிவிட்டதே. மகளுக்குத் திருமணமாக வில்லையே’ என்ற கவலை அவளது தாய் அன்னபூரணியை வாட்டி எடுத்தது. 

கணவர் இரண்டாம். தாரம் செய்து கொண்டதிலிருந்து அவரது முகத்தையே பாராதிருந்தாள் அன்னபூரணி. அவரோ வசதியாக இருந்தும் கூட மகளுக்குத் திருமணம் செய்வதை இரண்டாம் தாரமான மகேஸ்வரி அனுமதிக்கவில்லை. 

தந்தை மகளைச் சந்திப்பதே அந்த ஏரிக்கு அவள் தண்ணீர் எடுக்க வரும் போதுதான். 

மகளைப் பார்த்தால் கண் கலங்குவார், ஆனால் மனைவிக்குப் பயந்த மழுங்கலாகக் காட்சியளித்தார். 

“பரவாயில்லே அப்பா! திருமணம் ஆகாவிட்டால் என்ன? என் தாய் ஒரு தெய்வம். அந்தத் தெய்வத்தின் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே எனக்குப் போதும். நாளைக்கே திருமணமாகிப் புருஷன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற துடிப்பு ஒன்றும் எனக்கில்லை. கால நேரம் வந்து எல்லோர்க்கும் கருணையும் வந்தால் ஆகட்டும். இல்லையென்றால் மாரியம்மன் விட்ட வழி!” என்றே ஒரு தடவை தந்தையிடம் சொல்லி விட்டாள் தங்கம். 

தங்கத்துக்கு இனிமையான குரல் உண்டு. ஏரியிலே குடத்தை மிதக்க வைத்துவிட்டுக் கொஞ்ச நேரம் பாடிக் கொண்டிருப்பாள். ஆயர்குலச் சிறுவர்களின் புல்லாங் குழலை ரசிப்பாள். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு பழைய சேலையைக் கட்டிக்கொண்டு குளிப்பாள். பிறகு முன்பு கட்டியிருந்த சேலையைவே திரும்பக் கட்டிக் கொண்டு கூந்தவை விரித்துப் போட்டபடி குடத்தை இடுப்பிலே வைத்துக் கொண்டு நடப்பாள். 

மஞ்சள் பூசிய திருக்கோலத்தில் அவள் வருவதைப் பார்த்தால், மாரியம்மனே வருவது போலிருக்கும். 

ஒவ்வொரு நாளும் அவளை எண்ணியே கவலைப்பட்ட அன்னபூரணி, தான் மிதிக்காத சக்களத்தியின் வாசற் படியை மகளுக்காக மிதிக்க முடிவு கட்டினாள். 

“வேண்டாம் ஆத்தா. அங்கே போய் நீ அவமானப் வேண்டாம். அதையிட நான் உன்னுடனேயே இருந்து விடுகிறேன்” என்று கெஞ்சினாள் தங்கம். 

வரிசையாக ஐந்து பெண்கள் முதல் வீட்டிலே காத்துக் கொண்டிருக்கும் போது, பதினாறு வயது கூட நிரம்பாத இரண்டாவது தாரத்தின் மகள் பொற்கொடிக்கு மணம் பேசத் தலைப்பட்டார் தந்தை. 


பொற்கொல்லர்கள் தனியாகவே ஒரு அறையை எடுத்துக் கொண்டு நகை செய்யத் தலைப்பட்டார்கள். வீடு முழுக்கப் பட்டுக் கண்டாங்கிகள் வந்து இறங்கின. 

மாப்பிள்ளை கடலோடும் வணிகனாம். சோழநாட்டுத் துறைமுகத்திலிருந்து ஆறு திங்களுக்கு ஒரு முறை அவனது இரண்டு கப்பல்கள் கடாரத்திற்குச் செல்லுமாம்.

மகேஸ்வரி இதைப் பற்றியே பேசினாள். 

ஊராருக்குத் தெரிந்தால் மட்டும் போதுமா? மூத்தாளின் காது கேட்கவும் பேசினாள். 

எதையுமே பேசி அறியாத அன்னபூரணி அதையும் கேட்டுக் கொண்டாளே தவிர, யாரிடமும் பேசவில்லை. 

அந்த வீட்டில் அவ்வளவு ரகளைகள் நடந்தும், தங்கம் கண்கலங்கவில்லை. தாய் கலங்காமலிருந்தால் போதும் என்பதே அவள் கொள்கையாக இருந்தது. 

தை மாதம் பதினேழாம் தேதி திருமணமாம்! 

”அன்றைக்கு நாம், ஏன் அந்த ஊரிலே தங்க வேண்டும்? இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே எங்கேயாவது போய் விடலாம்” என்றாள் அன்னபூரணி. 

தாயாரைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்களும், பையனும் கண்களைத் துடைத்தவாறே, ‘சரி’ என்றார்கள். 

மூத்தவளிருக்க இளையவளுக்குத் திருமணம் செய்ய முயன்ற மகேஸ்வரி, மேலும் அன்னபூரணியைக் குத்த விரும்பி ‘பாக்கு’ வைக்க வந்தாள். 

சொந்த வீட்டிலேயே பாக்கு வைக்கும் அதிசயத்தை அன்றுதான் கண்ட அன்னபூரணி, பாயெடுத்துப் போட்டு அவளை உட்கார வைத்தாள். ‘கல்யாணத்துக்கு அவசியம் வந்து விடுவதாக’வும் கூறினாள். 

கெட்ட காரியம் நடந்த வீட்டில் கெட்டி மேளத் கொட்டிவிட்டுத் திரும்புவது போல் மகேஸ்வரி திரும்பினாள். 

அன்னபூரணியும், குழந்தைகளும் அன்றிரவு தூங்கவே இல்லை. 

தாயாருக்கு ஏதும் ஆகிவிடக் கூடாதே என்று அகல் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு, கண்விழித்தபடி இருந்தாள் தங்கம். 

மறுநாள் பொழுது புலர்ந்த போது தாயாரை ஆறுதல் செய்ய வேண்டி. “ஆத்தா! இன்று நாம் வெளியூருக்குச் சென்று விடுவோம். ராய கவுண்டன் பட்டியில் உள்ள சித்தி வீட்டுக்குப் போய் விடுவோம்” என்றாள், தங்கம். 

”அதைத்தான் ஆத்தா நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். சித்தி கூட உனக்கு எங்கோ மாப்பிள்ளை பார்த்தாளாம். பத்து நாட்கள் அங்கே தங்கிவிட்டு வரலாம். அவளுக்கும் தோட்டம் நன்றாக விளைந்திருக்கிறதாம்” என்றாள், அன்னபூரணி. 

எல்லோரும் ஒரு பெரிய மாட்டு வண்டி ஒன்ன அமர்த்திக் கொண்டு ராயகவுண்டன் பட்டிக்குப் புறப்பட்டார்கள். 

அந்த ஊர் போய்ச் சேருகிறவரை அதுதான் பொற் கொடிக்குப் பார்த்த மாப்பிள்ளையின் ஊர் என்பது அவர்களுக்குத் தெரியாது. 

வண்டியின் முன்பக்கம் அன்னபூரணியும், பின் பக்கம் தங்கமும் உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் மற்றவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 

ஊருக்குள் வண்டி வந்தபோது குதிரையில் வந்த ஓர் ஆணழகள், தங்கத்தைப் பார்த்துக் கண்களை எடுக்க முடியாதவனானான்.

– தொடரும்…

– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *