கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 90 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் 

“நான் குரு என்ற ஆணவத்திற் பிரசவமான அவா தனி! என் வழி தனி… எனக்கு மட்டும் புரிந்த வழி வழி அதனை வார்த்தைகளிலே பரிவர்த்தனை செய்கின்றேன். மற்றவர்கள் புரிந்த வரையிற் புரிந்து கொள்ளட்டும். புரியாத வரையில், ஏதோ விளங்கிக் கொண்டதாக நடிக்கட்டும். ‘புரி யவில்லை’ என்று முகங் கோணுபவர்களைப் பார்த்து, ‘அஞ்ஞானிகள்… மூடர்கள்…’ என்று எள்ளி நகையாடுவேன். அது என் வழி” – அவா. 

வீங்குசேர் ஏமாப்பின் குதிப்பில் நடை பெறும் கூட்டத்திலே, ‘வாளிலும் பேனாவே வலிமையுடையது’ என்று வாய் கிழியக் கத் தும் எழுத்தாளர் திருக்கூட்டத்தினர் சபை யோராகத் தூவப்பட்டிருக்க, ஈழத்து எழுத் துலகின் ‘இரட்சகர்’ எனச் சுயவிருது வரித் தோர் கூட்டத்தை நடத்துஞ் சூத்திரதாரி களாகச் சுழன்று, கலையென்று சொல்லி, நடுவில் அரசியலிலே தொற்றி,அதையும் மறந்து, இதையுங் குழப்பி, செங்கொடி மர நீழலிற் ‘கலங்கிய குளத்திலே மீன் மெத்தப் பிடிக்கலாம்’ என்ற ஞான ஒளி பெற்று, சுய நாம் விளம்பரத்தையே இலட்சியமாகக் கொண்டு, அந்த அடி மன ஆசா ஏக்கத்தை மறைக்க தத்துவச் சொற்குவியலில் அரண் கட்டி, தங்கள் கலைத் தொண்டால் செஞ் சூரியன் உதிக்கத் தயாராகி விட்டான் என்று தமது அரசியற் பீடாதிபதிகளையும் நம்பச் செய்து, தந்திரோபாயப் பலிதத்திற் சுய உச்சி மோந்து, தமது செயல்களுக்குக் கரகோஷமிட்டு ஆர்ப்பரிக்கச் சீடராம் இராம படையுந் திரட்டி வைத்து, எதிர்க் கருத்துக் கொண்டோர் மீது கதிரைகள்- முட்டைகள் ஆகியவற்றை ஆயுதங்களாக உபயோகிக்கும் மறத் தொழிலும் இயற்றி, ‘முற்போக்கு என்ற வெற்றுச் சொல்லை வேள்விக் குண்டத்தில் ஓதப்படும் யாகமந்தி ரத்தின் அந்தஸ்திற்கு உயர்த்தி, கோஷக் குழப்பம் என்ற வேள்விக் குண்டத்தில் நெய் யூற்றும் பூசாரிகளாகத் தங்களை கற்பித்துக் கொள்ளும் பலருக்கு கலை, வேதம் ஓதியோ னாம் வேதமறிந்த அவனுக்கு இந்தப் போலி யாகம் வேதனையை அளிப்பதை போன்றே, வேறு பலருக்கும் வேதனை அளிக்கவே, அதனைத் தாங்காது வெளிப்படுத்த, அத் துணிவுக்கு அவனே காரணன் என்ற முனி வின் ஏகத்தில், வேதமறிந்த அவனிடந் தாம் கலை வேதம் கற்கவில்லை யென்ற நிலைநாட்டி ‘கற்’பை விட்டால் தாம் தாமாகத் தோன்றித் தவத்தாற் கொடியு யர்த்தியவர்களென்பதை நிறுவி விடலா மென்ற மனத்தவிப்பில், அவன் மீது வசை மாரி பொழிந்தே முற்போக்கு எழுத்தாளர் மகாநாடு நடத்தப்படுகின்றது. அவனுடைய மனத்திலே முனிவுக்குப் பதில், அனுபவ முதுமை மதர்க்கின்றது. ‘மடியில் கட்டாரியும், மனத்திலே நயவஞ்சகமும், உதட்டிலே ‘தோழா’ என்ற நயப்பும் புனைந்து நண்பர்க ளென வேடமிட்டவர்களைப் பிரிந்து செல்லும் நன்னாள் இன்னாளே’ என்ற கணிப்பு வலுப் பெறுகின்றது. பித்தம் தெளிந்த அற் புத நிலை. தனி வழி பிறந்தது. தனி பய ணத்தை மேற்கொள்ளுகின்றான். ‘படுபிற் போக்குவாதி’, ‘பூர்ஷூவாக்களின் கைக் கூலி’, ‘இந்திரிய எழுத்தாளன்”, ‘விளங்கு தில்லை எழுத்தாளன்’, ‘தனி நபர் வாதி’. ‘இயக்கத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி’ என்ற வகையிற் கல்லெறிகளும், பொல்லடி களும்! ‘இயக்கம் அவனைத் துலைத்தே தீரும்’ என்று சூளுரைத்தார்கள். ‘அவன் உதிர்ந்த மலருக்குச் சமம்’ என்று ஏளனஞ் செய்தார்கள். இருப்பினும், கலையையேதன் வாழ்க்கையாகவும் இலட்சியமாகவும் வரித் துக் கொண்ட அவன் தீரா வேதனையுட னும், களி பேருவகையுடனும், அவநம்பிக்கை யுடனும், அதே சமயம் அதுவே பிரசவித்த நம்பிக்கையுடனும், சிலுவைப் பயணத்தை- அல்ல, இரட்சண்ணிய யாத்திரையை- அவன் மேற்கொண்டான். அவன் அநாம தேயனல்லன் அவனை, அவனும் பிறரும் எஸ். பொன்னுத்துரை யென அறிவர். அவ னுடைய பயணத்திலே ஒரு தரிப்பு. தத்துவ. ஜாலக் கனவென்பது படர்கின்றது… 

– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *