பதவிப் பரிதாபங்கள்…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: October 18, 2026
பார்வையிட்டோர்: 133
அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4

அங்கு சாலையோரத்தில் சின்ன டீக்கடை. பக்கத்தில் பெட்டிக்கடை. அடுத்து பழக்கடை. மூன்றுமே சுற்றுலா வருபவர்களை நம்பி இருப்பது.
குளிருக்கு இதமான டீ. உடலுக்குக் கதகதப்பாக இருந்தது.
“பழம் வேணுமா மாப்ளெ..?”
“வேணாம் மாமா..”
“பீடி, சிகரெட்..?”
“எனக்குப் பழக்கமில்லே. நீங்க..?”
“கிடையாது…”
பேசிக்கொண்டே நடந்தார்கள். சிறிது தூரம் நடந்துபுல்வெளியில் அமர்ந்தார்கள்.
இளம் ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அமர்ந்து தோளோடு தோள் உரசி அமர்ந்திருந்தார்கள்.
சின்ன சிரிப்பு. வெட்கம், நாணம், கொஞ்சல், குலாவல்… எல்லாமே அந்த ஜோடிகளிடம் கொட்டிக் கிடந்தது.
கவனித்த தன்ராஜ்….
“காதல்ன்னாலே ஒரு கொண்டாட்டம்தான் மாப்ளெ..!” என்றார்.
“ஆமாம் மாமா..”
“நீ காதலிக்கிறீயா விகாஷ்…?”
“இல்லே மாமா..”
“அப்படி யோசனை இருக்கா..?
“இல்லே மாமா…”
“கலியாணம்…?
“வேலைக்குப் போனபிறகு மாமா…”
“சரி. பிலவேந்திரன் கதைக்கு வர்றேன்…” என்று தொடர்ந்தார்.
“அமைச்சர் ஆனந்தவள்ளி மேல் பிலவேந்திரன் ஆசைப்படுவான்னு சொன்னத்துக்குக் காரணம் இருக்கு. ஆள் நல்ல செவசெவன்னு செதுக்கி வைத்த சிலைமாதிரி சிக்குன்னு இருப்பாள் மாப்ளெ. கண்ணு கொஞ்சம் பெரிசு. வாய் கொஞ்சம் நீளம். கண்ணுல மை விட்டு, உதடுகள்ல சாயம் பூசி, நெத்தியில பொட்டு வைச்சு வந்தாள்ன்னா நம்பர் ஒன் நடிகை மாதிரி இருப்பாள். இவ்வளவிற்கும் திருமணம் முடிந்து நாலு வருசம் முடிச்சி.. மூணு வயசுல ஒரு பெண் குழந்தைக்குத் தாய். வயசு 28. வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி இருப்பாள் மாப்ளெ. எவன் ஆசைப்படாமல் இருப்பான்..? அதிலும் இந்த பிலவேந்திரன் நாக்கைத் தொங்கப் போட்டு இருப்பான்..!”
“சரி. அவனை விடுங்க மாமா. பிலவேந்திரன் எப்படி மாட்டினான்..? சிக்கினான்..?” விகாஷ் விசயத்திற்கு வந்தான்.
“அதுவா..?! 40 வயசு விதவை. நெஞ்சு வலின்னு வந்தவளுக்கு உயிர் பொசுக்குன்னு போச்சு. டாக்டர் செவிலியர்கள் மார்பை அழுத்தி முயற்சி செய்தும் சுவாசம் வரலை. உடனடியாய்ப் பிணவறைக்கு அனுப்பிட்டாங்க.
பிலவேந்திரன் ராத்திரி பத்து மணிக்கு மேல் வழக்கம் போல் தன் வேலையைக் காட்ட பிணத்து மேல் படுத்திருக்கான். பிணம் பொசுக்குன்னு முழிச்சிக்கிடுச்சு. அவளுக்கு மூச்சு வந்துடுச்சு. மற்றவர்களென்றால் அலறி அடிச்சு ஓடி இருப்பாங்க. பிலவேந்திரனுக்குக் கஞ்சா போதை, வெறி.
“விடு! விடு!” ன்னு திமிறியும் விடாமல்…
நீ இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை செத்தவள் கணக்கில் பிணக்கொட்டகைக்கு வந்துவிட்டே.. எனக்கும் பிணம்தான் பிடிக்கும். செத்துத் தொலைன்னு கழுத்தைப் பிடிச்சி நெரித்து கொன்று தன் ஆசையைத் தீர்த்திருக்கான்!”
“ஐயோ…!” விகாஷ் அலறினான்.
வேலையை முடித்து நிதானமாய் கதவைத் திறந்தவனுக்கு அதிர்ச்சி!
எதிரே… ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு போலீஸ், ஒரு டாக்டர், இரண்டு செவிலியர்கள். நின்னிருக்காங்க.
ஆள் நடுங்கி வெலவெலத்திருக்கான்.
“உன்னைப் பிடிக்கனும்ன்னுதான் உனக்குத் தெரியாம கண்காணிப்புக் கேமரா பொருத்தி இருக்காங்க. அது தெரியாமல் ஒரு கொலையும் செய்து மாட்டி இருக்கியேடா..!” பொளேர்ன்னு இன்ஸ்பெக்டர் செவிட்டில் அறைந்து அவனை சிறைக்குக் கொண்டு போய்ட்டார்.
விசாரணையில்தான் அவன் இதை வச்சு நாலுபேர்கிட்ட சம்பாதிச்சது எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தது. எல்லாரும் உறைஞ்சு போய்ட்டாங்க.”
விகாசும் கம்மென்றிருந்தான்.
“எவள் இவனோடு குடித்தனம் நடத்துவாள்.. மாப்ளெ…?!”
செய்தி கேள்விப் பட்டு ஓடி வந்த அவன் மனைவி…
“அடப்பாவி! என்னையும் பிணமா நினைச்சிதான் படுத்து பிள்ளைப் பெத்தியா?… உன்னோடு ஒட்டும் வேணாம். உறவும் வேணாம். பிணம் தின்னி நாயே! நாளைக்கு என்னையும் கொன்னு அனுபவித்தாலும் அனுபவிப்பே?! உன்னோடு எனக்கு வாழ்க்கையும் வேணாம். ஒரு மண்ணும் வேணாம்!” சொல்லி குழந்தையோடு பிரிந்து விட்டாள். நிறுத்தினார்.
சிறிது நேரம் அமைதியாக இருந்து விசயங்களை உள்வாங்கி முடித்த விகாஷ்…
“இவன் பிடிபட்டது ஆனந்தவள்ளி கொலைக்கு முன்னாடியா பின்னாடியா மாமா..?” கேட்டான்.
“பின்னாடி..!”
“அந்த கொலைக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லாதவன் கதையையா மாமா இவ்வளவு நேரம் சொன்னீங்க..?”
“ஆமாம். சம்பந்தமில்லேன்னாலும் பிலவேந்திரன் அகப்படாமல் இருந்திருந்தால் அவன் ஆனந்தவள்ளி பிணத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆசைப்பட்டதை அடைந்திருப்பான்.”
“அதுக்காக சம்பந்தமில்லாதவன் கதையைச் சொல்றது சரி இல்லையே மாமா…”
“அப்படி இல்லே மாப்ளெ! இப்படிப்பட்ட ஆட்களும் நாட்ல இருக்காங்க என்பதைத் தெரிவிக்கத்தான் அவன் கதையைச் சொன்னேன். எனக்கு அவள் கொலைன்னா மொதல்ல ஞாபகத்துக்கு வர்றவன் இவன்தான்” என்றார் தன்ராஜ்.
“சரி மாமா. அந்தக் கதைக்குப் போகலாம்.” என்றான் விகாஷ்…
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 18, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 18, 2026
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 15, 2026
