துன்பத்திற்கு இடம் கொடேல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 68
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

துன்பத்திற்கு-கஷ்டம் உண்டாவதற்கு; இடம் கொடேல் – நீ இடம் கொடுக்காதே.
ஒரு காட்டில் ஒரு குள்ளநரி இருந்தது. அது கெட்ட காரியங்களையே செய்யும். மற்றைய மிருகங்களை மதிக்காமல் தாழ்வாகப் பேசும். அதனால் குள்ளநரிக்கு எவ்வளவோ துன்பங்கள் வந்தன.
ஒருநாள் குள்ளநரி ஒரு யானையைக் கண்டது. அதன் தும்பிக்கையைக் காட்டி, நீ மட்டும் ஏன் இந்த உலக்கையைச் சுமந்துகொண்டு திரிகிறாய் என்று கேலி செய்து சிரித்தது. யானைக்குக் கோபம் வந்தது. தும்பிக்கையால் நரியைத் தூக்கி எறிந்தது. குள்ளநரிக் கால் ஒடிந்து நொண்டியாகித் துன்பப்பட்டது.
இன்னொரு நாள் குள்ளநரி ஒரு வரிப்புலியைப் பார்த்தது. அதன்மேல் உள்ள கோடுகளைக் காட்டி, உனக்கு யார் சூடு போட்டார்கள் என்று நையாண்டி செய்து சிரித்தது. புலிக்குக் கோபம் வர ஓர் அடி கொடுத்தது. குள்ளநரி பல் உடைந்து ஒன்றும் தின்ன முடியாமல் துன்பப்பட்டது.
மற்றொருநாள் குள்ளநரி ஒரு சிங்கத்தைப் பார்த்தது. அதன் பிடரி மயிரைக் காட்டி, நீ மட்டும் ஏன் இந்த மயிரைப் புதர்போல் சுமந்து திரிகிறாய் என்று பரிகாசம் பண்ணிச் சிரித்தது. சிங்கத்திற்குக் கோபம் வர ஓர் அறை அறைந்தது. குள்ளநரி கூழ்போல் நசுங்கி, நீண்ட நேரம் துன்பப்பட்டு இறந்தது.(ஆகையால்)
துன்பம் உண்டாக்கும் காரியங்களைச் செய்யக்கூடாது.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கேள்வி முயல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கைவினை கரவேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கொள்ளை விரும்பேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
