கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2026
பார்வையிட்டோர்: 301 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சர்க்கஸ் பார்க்கப்போக உச்சிமலை தன் குடும்பத்தோடு பஸ்ஸுக்காகக் காத்திருந்தான்.

அந்தக் கிராமத்துக்கு மட்டுமில்லை, பக்கத்துப் பட்டிகளுக்கும்கூட பஸ் நிற்குமிடம் அதுவேதான்.

வருகிற பஸ் ஒன்றுகூட நிற்கவில்லை. இந்த அழகில் கூட்டம்வேறு வந்து சேர்ந்துகொண்டே இருந்தது.

வேகமாக ஒரு பஸ் நிற்காமல் அவர்களைக் கடந்துபோனதும் தனது மகனான நிறைகுனத்தைப் பார்த்து, “எல்லோரும் சருக்கஸு குத்தான் போறாக; அதாள் அம்புட்டுக் கூட்டம் இண்ணைக்கி” என்றான் உச்சிமலை.

நிறைகுளம் தன் அம்மாவைப் பார்த்து புருவத்தை உயர்த்தி “நெசந்தான்” என்பதுபோலச் சிரித்தான், “யானை, புலி, கரடி, சிங்கம் பார்க்கப் பிரியப்படத்தானே செய்வார்கள் யாருமே?” என்று நினைத்துக்கொண்டான் அவன்.

உச்சிமலையின் பெண்டாட்டி புன்னைவனம், பக்கத்தில் தன்னைப்போலவே சில்க் சேலை கட்டியிருந்த ஒரு பெண் பிள்ளையைப் பார்த்து, ‘நீங்களும் சருக்கஸுக்குத்தானா?” என்று கேட்டதும், அவள் உதட்டைப் பிதுக்கி காதுகளிலுள்ள பாம்படத்தை வேகமாய் ஆட்டி, “ஒரு துட்டிக்குப் போறோம் அவசரமா; நாங்க போயித்தான் எடுக்கணும்” என்றாள். அதோடு அவள் அங்குள்ள கூட்டத்தை முகத்தாலேயே வட்டம்போட்டுக் காட்டி “அம்புட்டு சனமும் துட்டிக்குத்தான் வாராக; பெரிய்யதுட்டி” என்றாள்.

அந்தேரம் அங்கே சோலை வந்தான். நீல நிறச் சட்டையின் மேல் மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு குடைமார்க் துண்டை ஏத்தாப்பு போட்டுக்கொண்டு பற்களும் உதடும் சிவக்க, வெற்றிலையைக் குழப்பிக்கொண்டு சிரித்துக்கொண்டே அவர்கள் பக்கம் வந்தான்.

“நீயும் சருக்கஸுக்குத்தானே?” என்று கேட்டான் உச்சிமலை.

“ம் ஹும்; தா ஒழு கழ்யாணத்துக்குப் போழேன்” என்றவன் சுற்றிலும் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மரத்தின் ஓரத்தில் போய் நிறைத்திருந்த எச்சிலைத் துப்பிவிட்டு வத்து “இது கலியாண மாசமில்லா; அதான் கூட்டம்” என்றான்.

“இண்ணைக்குக் காரு கிடைக்கிது ரெண்டாம்பச்சம்தான்” என்றாள் புன்னைவளம், தன் புருசனைப் பார்த்து. அந்நேரம் ஒரு லாரி வந்தது.

“கையை நீட்டிப் பாரு; நீட்டு; நிறுத்தினாலும் நிறுத்துவாள்”,

கூட்டம் பூராவும் லாரியில் போய்விட்டால் சலாவத்தாய், அவள் குடும்பம் மட்டிலும் பஸ்ஸில் போகலாமே என்று உச்சிமலையின் “ரோசனை!”

லாரி நிற்கவில்லை.

“தலப்பறட்டு பிடிச்சவங்க” என்று ஏசினான் அவன்.

பக்கத்துப் புளியமரத்தடியில் ஒரு பெண்குழந்தை வாழைப் பழத்தைத் தின்றுகொண்டே “வெளிக்கு” இருந்துகொண்டிருந்தது. பாவாடையைச் சுருட்டி இடது கையினால் பிடித்துக்கொண்டிருந்த அதன் உச்சிக் கொண்டையில் வட்டமாக கனகாம்பரப் பூ சுற்றி இருந்தது.

“பிறகு; என்ன ரோசனை?” என்று புருசனைக் கேட்டாள். புன்னைவனம். அவள் அவளுக்குப் பதில் சொல்லுகிற சாக்கில் சத்தம் போட்டு எல்லோருக்கும் கேட்கும்படி, “நடந்து போயி நாலட்டம் புத்தூர்லெ போயி காரு ஏர்ரதுதான் விசேசம்; மத்தப்படி இங்கே சும்மா நிண்ணுக்கிட்டிக்கிகுதிலெ பிரசணமில்லை” என்று சொன்னான். அவன் சொன்னதை எல்லோரும் ஆதரித்தார்கள்; ஆனால், யாரும் புறப்படத் தயாரில்லை! “நடக்காமல் இங்கிருந்த மானைக்கே பஸ்ஸில் ஏறிப் போகணும்” என்றுதான் விரும்பினார்கள்.

அப்பொழுது வேகமாக ஒரு பஸ் வந்தது,

‘இப்பொத்தான் நிக்கப் போகிறதைப்போல’ ஒரு பாவலாக் காட்டிவிட்டு, இவர்களைக் கடந்து வேகமாகப் போனது,

“போங்க போங்க; இவுஹெ போய்த்தான் அங்கே எடுக்கணும். அதாள் அவசரமாப் போராக!” என்று ஒரு குரல் சொன்னதைக் கேட்டு கூட்டத்தில் ஒரு சிறிய கலகலப்பு உண்டானது. எழுத்து நின்றவர்களெல்லாம் திரும்பவும் சடைவோடு அவர்களவர்கள் உட்கார்ந்திருந்த, நின்றிருந்த இடத்துக்குத் திரும்பினார்கள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு லாரி வந்தது.

வந்த லாரி சொல்லி வைத்ததுபோல் வந்து அவர்கள் பக்கம் நின்றது. கோயிலுப்பட்டி போறவுக எல்லாரும் ஏறிக்கிடுங்க” என்றாள் கிளீனர். உச்சிமலை தன் பெண்டாட்டியைப் பார்த்துக் கழுத்தை நிமிர்த்தி, “எப்படி; பாத்தியா?” என்பதுபோல ஒரு சிரிப்புச் சிரித்தான். சிரிக்கும்போது பற்களுக்குமேலே போன அவன் மேல்உதடு, பற்களில் போதிய ஈரம் இல்லாததால் கீழே இறங்காமல் அப்படியே பாதியில் வந்து நின்றுகொண்டது! அப்புறம் உதட்டை நமட்டிக் கீழே கொண்டுவந்துவிட்டு, லாரியில் பெண்டுபிள்ளை எல்லாத்தையும் ஏற்றிவிட்டு, அவனும் ஏறத் தயாரான சமயத்தில் திடீரென ஒரு கொச்சை வீச்சம் தள்ளிலிருந்துதான் வருகிறதோ என்று ஒரு கணம் அதிர்ந்தான்.

“லாரியில் போகிறதாவது; கேவலம்” என்று நினைத்த ஒன்றிரண்டு பேர்தவிர எல்லோரும் ஏறிவிட்டார்கள். லாரி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. அதிலிருந்த பயணிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியால் தாங்கள் பறப்பதுபோல ஒரு உணர்வு வந்தது. மனம், உடல் அனைத்தும் பூரித்த உணர்வோடு ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

லாரியிலிருந்து இறங்கி, சர்க்கஸ் டேராவைப் பார்த்து அவர்கள் நடக்கும்போது அங்கே செல்லும் கூட்டத்தைக் கண்டு உச்சிமலை தான் நினைத்தது சரியே என்பதை மனசில் ஊர்ஜிதம் செய்ததோடு வெளியில் சொல்லவும் செய்தான்.

உள்ளே உயர் வகுப்பில் வசதியான இடத்தில் குடும்பத்தோடு சென்று அமர்த்துகொண்டான். அவனுடைய பார்வையிலேயே சொல்வதானால், அங்கே பிரகாசித்த ஒளி வெள்ளம், இசை “தெய்வ கைலாச”மாகக் காட்சி அளித்தது. நகர நாகரிகத்தின் கொடுமுடியில் வசிக்கும் குடும்பங்கள் தங்களுக்கே உரிய அலங்கார ஆடை அணிகளுடன் இவர்களைச் சுற்றிலும் வந்து அமர்ந்தவண்ணமாக இருந்தார்கள்.

எங்கிருந்தோ ஒரு ரம்மியமான வாசனை வந்து பரவியது. அந்த வாசனை சூழ்நிலையின் தரத்தை உயர்த்தியது உச்சிமலைக்கு அது என்ன வாசளை என்று தெரியாது. ஆனாலும் பரவசத்தாலும் ஆனந்தத்தாலும் சொக்கினான். அந்த வாசம் தள்ளிலிருந்தே தனது உடம்பிலிருந்தே வெளிவருவதாக எண்ணினாள்.

காட்சி ஆரம்பமாக மணி அடித்தது.

– சுதேசமித்ரன், தீபாவளி மலர் 1974.

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *