ஒருமுறை பாடுங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 110 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சினிமா இரண்டாம் ஆட்டம் முடிந்து பரமசிவம் வந்து படுக்கையில் விழுந்த பொழுது நேரம் இரவு ஒன்றரை மணி. திடீரென்று அவன் அறையின் தாளிட்ட கதவு தட தட வெனத் தட்டப் படும் சத்தம். அலுப்போடு எழுந்து வந்து கதவைத் திறந்தவன் முன் பயங்கரமான. அருவருப்பூட்டும் ஒரு பெண்ணுருவம்,! மூச்சே நின்று விடும்போலிருந்தது அவனுக்கு. 

”பரமசிவம்! என்னை மன்னி த்து ஒரு தடவை அந்தப் பாட்டைப்பாடுங்கள்!” அந்த உருவம் அவனைக் கெஞ்சி வேண் டிற்று. ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் நெஞ்சில் அலைமோத, “என்ன? லில்லியா?” என்று அதிர்ந்தவன் கண்முன் பத்து வருடங்களுக்கு முன் ஒருநாள்: ”சார் நாடகத்தில் உங்கபாட்டு ரொம்ப நல்லாயிருந்துது சார்! வேறுபேர்களும் சொன்னாங்க…” 

லில்லிமலர் அவனை வாஞ்சையோடு பார்த்துநிற்கிறாள். பக்கத்து வீட்டிலும், அவனிதயத்திலும் ஒரேகாலத்தில் மலர்ந் திருந்து அடக்கமான நல்நடத்தையால் அவன் கண்களுக் குப் பவித்திர தேவதையாகி, கோடிவகை அழகுகளை, இனிமை களை அவன் நெஞ்சில் நிரப்பி,எக்காலத்து மில்லாதபடி அவள் குரலைக் கனிவித்து அற்புதமாகப் பாடவைத்த லில்லி மலர் முதல்நாள் நாடகவிழாவில் அவனுக்குள் நின்று, பாட்டு என்ற பெயரில் தேன்மழையை ஆயிரமாயிரம் செவிகளில் பொழி வித்த அந்த லில்லிமலர், அவனைப் புகழ்ந்து நிற்கிறாள். 

“நான் பாடினேனா? நீங்கள் பாடினீர்களா?” என்று பரம சிவம் கேட்டதற்கு அவள் அன்பு பொங்கும் விழிகளை அகல விரித்து அவனைப் பார்க்கிறாள். தொடர்ந்தும் அவன் “என் லில்லிக்கு நன்றாயிருந்தாலே போதும்!” என்ற போது அவளுக்கு மகிழ்ச்சிப் போதையில் தலை கால் தெரியவில்லை. அன்று முதல் அந்தச் சோடியின் சிரிப்பொலியால் பூங்காக்கள், ஆற்றங்கரைகள், அருவிப்பாறைகள், கலகலக்கின்றன.

அன்றொரு நாள்! தேவாலய வாசலில், தொழுகையிலிருந்து திரும்ப வேண்டிய லில்லிக்காகப் பரமசிவம் காத்து நின்ற போது, அவள் ஒரு வாலிபனுடன் சிரித்துப் பேசிக் கொண்டே வந்த விதம் அவன் இதயத்தைச் சிதறடித்து அவன் ஆன்மாவின் குரலை அழித்து…… அவன் பித்துப் பிடித்தவனாகித் தன்னை மறந்து வெகுதூரம் எங்கோ ஓடுகிறான். அதன் பின் அவ னால் பாடவே முடியவில்லை. இது நடந்து இன்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. லில்லியின் அந்த ஒரே வேண்டு தலை நிறைவேற்றத்தான், பாடத்தான் எண்ணினான் பரம சிவம். ஆனால் உள்ளத்தில் உருக்கம் பிறக்கவில்லை. 

நாவசைய மறுத்தே விட்டது. வெகுநேரத்தின் பின் “பாடமாட்டீர்களா?” என்று ஏமாற்றத்தோடு கதறிய லில்லி பேய் பிடித்தவள் போலத் திரும்பி ஓடி, சற்றும் எதிர்பாராத வித மாக தெருவில் வந்த லொறி ஒன்றில் மோதுண்டு இரத்த வெள்ளத்திடையே துடிதுடித்து…. அவள் தலை சாய்ந்துவிட் டது. விரக்தியோடு திகைத்துச் சிலையாகி நின்ற பரமசிவத்தின் கண்கள் ஆறாகி வழியலாயின. 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *