அச்சுப் பொறியில் குறள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 93 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சென்னை அரசுக்கு முதன் முதலாக அச்சுப் பொறி வந்திறங்கியது. அப்பொழுது தமிழ்நாட்டு அரசின் தலைவர் ஆங்கிலேயர். முதன் முதலாகத் தமிழில் என்ன நூலை வெளியிடலாம் என்பது அவருக்குப் பெரும் கேள்விக் குறியாயிற்று.

கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரைக் கேட்டால் கட்டாயம் சரியான நூலைக் கூறுவார் என்று அவரை அழைத்தவர் ஆள் அனுப்பினார்.

தேசிகர் சிறிதும் தயக்கமின்றி “திருக்குறள்” என்றார். குறளின் பெருமைப்பத்தி ஆங்கில அதிகாரிக்கு எதுவும் தெரியாது. எனவே ஆங்கிலர் கேட்டார்:

“அப்படி குறளில் என்ன இருக்கிறது?” என்றார். உடனே தேசிகன் “அதில் என்ன இல்லை?” என்று திருப்பிக் கேட்டார். வெட்கம் கொண்ட ஆங்கில அதிகாரி அங்கு இருந்த கல் ஒன்றைக் சுட்டிக்காட்டி, “உங்கள் திருக்குறளில் இந்த கல்லைப் பற்றி எழுதி இருக்கிறதா?” என்று வினவினார்.

கோட்டையூர் புலவர் சட்டென, “ஒருமுறைக்கு இரு முறை கூறி இருக்கிறது. கேளும்” –

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் (38)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (505) 

என்று கணார் கணார் எனக் கூறினார்.

அதன் பொருளைக் கேட்ட ஆங்கிலேயர் ஆச்சரியங் கொண்டு குறளை அச்சு வாகனத்தில் ஏற்ற அனுமதி கொடுத்தார்.

“இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறம் பெற்றதமாயிருக்கிற மூலைக்கல்லை சியோனில் வைக்கிறேன்.” – [1 பேதுரு 2:6]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *