கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 21, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

புதிய போதை

 

 அந்த வீடு முழுவதையும் அசைவற்றதாய் ஆட்டிப் படைத்த நிசப்தம், பல கூக்குரல்களில் கலைந்து ஒப்பாரியாய் ஓலமிட்டது. கட்டிலில் கிடந்த கன்னையாவின் கைகால்கள், அங்கு மிங்குமாய் வெட்டின. ஆனாலும், வலக்கையை வலுக் கட்டாயமாக , லேசாய் முகம் சுழித்துத் தூக்கி, அங்குமிங்கு மாய் ஆட்டினார். கண்களை அவர் பக்கம் படரவிட்டு வாசல் படியில் நின்ற சொர்ணம்மா , அலறியடித்து அவர் பக்கம் ஓடி வந்தாள். சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த மோகனா , பாத்திரத்தை அப்படியே கீழே போட்டிருக்க


ஆறடிக்கு மேல் நிலமேன்?

 

 உலகில் துன்பம் இல்லாமல் வாழவேண்டு மானால் ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசை குறையக் குறையத் துன்பம் குறையும் என்பது அறிஞர்கள் கருத்து. ஆனால் உலகில் மக்களுட் பெரும்பாலோர் ஆசைக்கு அடிமையாவதால், தந்நலக்காரர்களாகவும், பல பாதகச் செயல்களுக். குரியவர்களாகவும் மாறி உலக வாழ்க்கையைக் கெடுப்பதுடன், தாங்களும் கெட்டு ஒழிகின்றார்கள். ஆசையினால் ஏற்படும் அழிவை விளக்கவே உருசிய மூதறிஞர் தால்ஸ்தாய் பின்வரும் சிறு கதையைத் தீட்டியுள்ளார். பாலூர் என்பது தஞ்சை மாவட்டத்தில் உள்ள வளம் நிறைந்த ஒரு சிற்றூர். அதில்


சோதோம் பட்டணம்

 

 நிலா வெளிச்சம் ஊருக்குள்ள நுழைய முடியல. பனிமூட்டமும், தூசும் சோதோமை போர்வையா போர்த்திகிட்டு இருக்கு. ஊர் முழுக்க கும்பல், கூச்சல், குடியாட்டம். உடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம செலர் ஓடுறாங்க. அவங்கள துரத்திக்னு இன்னொரு கும்பல். மரத்தடியில, கூடாரத்துல அய்யோ… இன்னாது… கீழே கெடத்தி அவுங்க மேல ஏறி உட்கார்ந்துக்னு வலிக்குதே.. அம்மா… வுடுங்கடா என்னை வுடுங்கடா வலிக்குதுடா… +2, காலேஜ் பசங்க இங்க எப்படி வந்தாங்க? என்தொடை வழியா ரத்தம் வழியுதே… சதை மரம் ஒன்னு


அற்புதச் செடிகள்

 

 முன்னொரு காலத்தில் ஓர் ஏழைக் கிழவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மூன்று பேரு மாகச் சேர்ந்து காலையிலிருந்து மாலைவரை மூங்கிலைக் கிழித்து ஒழுங்கு செய்து, கூடை, முறம் முடைவார்கள். அவற்றை விற்றுக் கிடைக்கும் பணத்தைக்கொண்டு அரிசி பருப்பு முதலியவை வாங்குவார்கள். உணவு சமைப்பார்கள். ஆனால் அந்த உணவு மூன்றுபேருக்கும் போதுமான அளவு இருக்காது. அதனால் அவர்கள் இரவிலும், நீண்டநேரம் கூடை, முறம் முடைந்து இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டிய


இறுமாப்பு

 

 பூந்தோட்டத்தில் நிற்கின்றேன். பூஞ்செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டு. இதைப் பூந்தோட்டம் என்று குறிக்கலாமா? என்னும் நினைவு என் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. றோட்டுக்கும் வீட்டுக்கும் இடையிலான இந்தச் சிறிய நிலப் பரப்பில், வீட்டுச் சுவரோரங்களைச் சுற்றி, கிளை பரப்பி நிற்கும் ஒரு மாமரம், வேப்பமரத்தினடிகளில் வகை வகையான பூஞ்செடிகள்… பூஞ்செடிகள்… பூஞ்செடிகள்..! சின்னதான இந்த நிலத்துண்டில் பூஞ்செடிகள் வளர்க்கின்றோம் என்பதற்காக, இதைப் பூந்தோட்டம் என்று கூறலாமா என்னும் சந்தே கம் என்னுள் அடிக்கடி எழுகின்றது. மாதத்துக்கு இவ்வளவு என்று


மேக ரேகை

 

 தூய பொன்னிறத்துடன் பிறந்து கொண்டிருக்கும் உதய சூரியனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். இருசாரியிலும் சப்தவர்ணங்கள் விதவிதமாய்க் குவிந்து வழிந்தன. நீலக்குன்றுத்தொடர் வானை அளாவியது. நீலக்குன்றுகள் மேல் மஞ்சள் மேகங்கள் தவழ்ந்தன. பிஞ்சும் பூவுமாய்ப் பச்சைப் பயிர் , சுற்றிப் பொங்கியது . நான் செல்லும் நடைபாதை பச்சை நடுவில் செம்பட்டைத் தீட்டி, பாம்பின் ‘சொரே ‘லுடன் சூரியனை நோக்கி வளைந்து வளைந்து சீறி விரைந்து செம்மணல், பொடிந்த கண்ணாடி யென இளம் வெய்யிலில் பளபளத்தது. ஊதா வானில்


மௌனப் பிள்ளையார்

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில்


மனம் எனும் தோணி பற்றி…

 

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் கடற்கரையில் அமர்ந் திருக்கிறான். இன்று அவன் வாழ்க் கையின் கடைசி தினம். இன்று அவன் தற்கொலை செய்துகொள்ள இருக்கிறான். உங்கள் ஊகம் சரிதான். அவன் ஒரு கலைஞன். உங்களுக்கு நிச்சயம் தெரிந் திருக்கும், உன்னதக் கலைஞர்கள் யாரும் நோய்வாய்ப்பட்டு சாவ தில்லை என்று. அவர்கள் தற் கொலைதான் செய்து கொள்வார்கள். அவன் அப்படி ஒன்றும் உன்னதக் கலைஞன் இல்லை. என்றாலும், தற்கொலை


திடீர் மாப்பிள்ளை

 

 “ஏங்க, நாம் பார்த்த மாப்பிள்ளைகளிலேயே, இதுதான் வாட்ட சாட்டமாகவும், முகம் லட்சணமாகவும், நடையும் உடையும் பார்த்தால், நம் சொந்தக்காரர்களே கண் போட்டுவிடும் அளவுக்கு சூப்பர் மாப்பிள்ளை .” “தொழில் அதிபர் என்ற உங்கள் அந்தஸ்துக்கும், ஆஸ்திக்கும் குடும்ப கௌரவத்துக்கும் ஏற்ற மாப்பிள்ளை இதுதான். நம்ம பொண்ணு ஆனந்தி மீனாவுக்கு அச்சில் வார்த்ததுபோல் சூப்பர் ஜோடி பொருத்தம்.” “பி.ஏ. படித்த நம்ம பொண்ணுக்கு பி.எ.. மாப்பிள்ளை எதிர்பார்த்த நமக்கு, எம்.ஈ. மாப்பிள்ளை கிடைத்தது நம்ம பொண்ணு யோகம்தான். சும்மா


அணைந்த விளக்கு

 

 (1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அப்பான்னா ஆரம்மா?” “அடுத்த வீட்டுக் கிருஷ்ணனுடைய அப்பா இருக்கிறார் அல்லவா? அவரைப்போல உனக்கும் ஓர் அப்பா இருக்கிறார்.” “அவர் எங்கே அம்மா?” “அவர் ஊருக்குப் போயிருக்கிறார்.” “எப்போ வருவாரம்மா?” “சீக்கிரத்திலே வந்து விடுவார்.” அப்படிச் சொல்லும் போது லக்ஷ்மியின் கண்களில் நீர்த்துளிகள் ததும்பின. துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டது. “வரும்போது எனக்கு என்னம்மா கொண்டு வருவார்?” “எல்லாம் கொண்டு வருவார், கண்ணே! பெப்பர்