கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 6, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

கால் கிலோ

 

 அதிகாலையிலேயே அந்த ஆலமர, ஆட்டிறைச்சி கடை கூடிவிடும் ஞாயிற்றுகிழமைகளில், அந்த சிறிய கிராமத்திற்கு இதற்க்காகவே சுற்றியுள்ள நகரங்களில் இருந்துகூட வாடிக்கையாளர்கள் வருவார்கள். அங்குதான் கலப்படமில்லாத, ஊறல்போடத இயற்கை எடையுடன் ஆட்டு கறி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்னும் கிராமத்தார்கள் திறன்பட ஏமாற்ற கற்றுக்கொள்ளவில்லையென நினைக்கும் நகரத்தார்களின் அறியாமைகூட அதற்கு காரணமாக இருக்கலாம். அன்றுவரை சில்லறை வாங்ககூட அந்த கடைக்கு ஒதுங்காத, அதே கிராமத்தை சேர்ந்த ஜான், அன்று முதல் ஆளாக நின்றான். ஆனால் மழைகாலமானதால் அன்று சற்று


காதல் சேஸிங்…

 

 யமுனா ஃபோன் செய்ததில் இருந்து ராஜா சற்று பதட்டத்துடனும், மனக் குழப்பத்துடனுமே இருந்தான். அப்படி அவள் ராஜாவிடம் ஃபோனில் என்ன கூறினாள். அவர்களின் காதல் செய்தி யமுனாவின் தந்தைக்கு எப்படியோ தெரிந்துவிட்டது என்றும், சொல்லாமல் கொள்ளாமல் தன் தந்தை தனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், யமுனா ராஜாவிடம் அழுதுகொண்டே கூறினாள். அதுமட்டுமல்ல, இன்று மாலையே தன் தந்தை தனக்கு அவசர அவசரமாக நிச்சயதார்த்த ஏற்பாடு செய்திருப்பதாகவும்,எப்படியாவது தன்னை வந்து அழைத்து போகும்படியும், அப்படி வரவில்லை என்றால் அவள் தற்கொலை


வாயாடி

 

 வஞ்சனையில்லாத பெரிய உடம்பு அய்யாவுக்கு. மனசும் அப்படித்தேன். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட மீசைய முறுக்கிக்கிட்டு மவராசா கணக்கா அய்யா முன்னால வந்தாகன்னா நாள் முழுக்க வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டே இருக்கலாம். உடம்பு குலுங்க அவக சிரிக்கிற சிரிப்ப பாக்கறதுக்கு கோடி கண்ணுதேன் வேணும்! அய்யாவோட வெடிச்சிரிப்பும்.. செவலக்காள கொம்பு சீவின கணக்கா நிமிந்து நிக்க அந்த கொடுவா மீசையும் இன்னும் எனக்குள்ள படமா பதிஞ்சு கெடக்கு. அவக உசுரோட இருந்தப்ப இந்த வீடு எப்படியெல்லாம்


பயிற்சிமுகாம்

 

 அத்தியாயம் ஒன்று | அத்தியாயம் இரண்டு பயிற்சி முகாமில்.. இரண்டரை, மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பனைமரங்களுடன் ,வடலியும் புதர்களையும் கொண்ட காடு பத்தியக் காணி.நெருக்கமான பனை மரங்களையே தூண்களாக்கி தென்னோலைக்கிடுகினால் கூரையும்,கதவுகளும் ,தட்டிகைகளுமாக வாடி போல அமைக்கப்பட்ட நீளக்கொட்டில். இது தான் பயிற்சி எடுப்பவர்களின் தங்குமடம்.கூரையில் பச்சைப் பனை ஓலைகளும் பரப்பி இருக்கிறார்கள்.மேலே இருந்து பார்ப்பவர்கள் கண்டறிய முடியாமல் இருப்பதற்கான‌ மறைப்பு. இந்த முறை பயிற்சி எடுக்க வந்தவர்களில் பதினான்கு,பதினைந்து பேர்கள் , அராலி அமைப்பைச்


ஒலி

 

 ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ கண்ணன் சொன்னானாம்! தேவர்களுக்கு ஆறு மாதம் பகற்காலம், ஆறுமாதம் இராக்காலமாம்!- தேவர்களுக்கென்ன, துருவ வாசிகளுக்கும் அப்படித்தான்! வெள்ளிக்கோளில் இவர் போய் வசித்தால், இவருக்கும் நூற்றுப்பன்னிரண்டு நாள் இரவும், நூற்றுப்பன்னிரண்டு நாள் பகலுமாய் இருக்கும். இதென்ன பெரிய அதிசயமே? – அந்த ஆறுமாத இரவு முடிந்து விடியும் காலம் மார்கழியாம்! அதனால் அது சிறப்பான மாதமாம்! கண்ணனுக்கு மனச்சந்தோஷமாக இருக்கட்டும்! இவருக்கு இந்த மாதம் முழுதுமே ‘ரென்சனாக’ இருந்தது! உயரமும் அமைதியான கண்களுமாய்


அந்த ஃபோட்டோவில்..!

 

 அன்னிக்கி வெள்ளிக்கிழமை. கிளம்பும்போதே அம்மா சொல்லி அனுப்பினாள். “வெயிட் பண்ற நேரத்துல ஆதித்திய ஹிருதயம் சொல்லிண்டு இரு! படபடப்பு இல்லாம இருக்கும்!” பன்னிரெண்டு மணி இண்டர்வியூவுக்கு பத்தேகால் மணிக்கே ஹோட்டல் கன்னிமரா போய்ச்சேர்ந்துட்டேன். லவுஞ்சிலேயே குளிரிற்று. 49 கிலோ உடபில் ஒட்டின பாண்ட்டும் இன் செய்யப்பட்ட அந்த க்ரே கலர் சட்டை – பையின் ஓரத்தில் லேசாகத்தெரியும் பால் பாயிண்ட் இன்க் கறை – முழங்கால் வரை நீளும் சாக்ஸும் பாட்டா ஷூவுமாய்க்கிளம்பியிருந்தேன். “என்ன எப்பாபாரு இந்த


விநாயக சதுர்த்தி

 

 அன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின் கூடத்தில் நாற்கோணமாகக் கட்டினேன். அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோத்துக் கொண்டிருந்தேன். ஆமாம், பட்டணத்திலே மாவிலை கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். “என்ன, மாவிலைக்குமா விலை?” என்று பிரமித்துப் போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லையென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து, வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள்


விண்ணில் விளையாட ஆசை!

 

 கந்த சஷ்டி கவசம் ரேடியோவில் இசைத்து கொண்டு இருக்க,பத்மா பூஜை அறையை சுத்தம் செய்து இறைவனை வணங்கி கொண்டிருந்தால், இறைவனை தொழுது முடித்தவுடன் கவிதா….கவிதா… என்று கூறிக்கொண்டே அறையில் உறங்கும் தன் மகளை எழுப்புகிறாள், கவிதாவோ அப்பொழுது தான் எழுந்து பள்ளிக்கு செல்ல தயாராகிறாள். பள்ளியில் கவிதா தான் கடைசி மதிப்பெண் எப்போதும் வாங்குவாள். அவள் ஒரே பெண் என்பதால் அவளது பெற்றோர் அவளை செல்லமா வளர்கிறார்கள், கவிதாவின் தந்தை கிருஷ்ணன் அவளை பள்ளியில் இறக்கிவிட்டு அலுவலகம்


பரோட்டாவின் மறுபக்கம்

 

 பரோட்டா, பொரட்டா, பரத்தா, புரோட்டா, ப்ரோட்டா இப்படி நீங்க சொல்ற எதுவா இருந்தாலும் அதுவாவே வச்சுக்கோங்க. யாருடா நீ? எங்க இருந்து வந்த? அப்படின்னு அதுட்ட கேட்காதீங்க, நான் சொல்றேன். இது இலங்கைல தொடங்கின ஒரு மாறுபட்ட ப்ரெட் போன்ற ஒரு உணவா தான் நாட்டுக்கு வந்துருக்கு, அப்புறம் மைதாவையே வீசி ஒரு லேயர் மாதிரி வடிவம் குடுத்து அத பரோட்டாவாக்குனது நம்மாளுங்க தாங்க. சிலர் அதெல்லாம் இல்ல கேரளா உணவுனு சண்டைக்கு வராதீங்க. உண்மையான பிறப்பிடம்


பாஸ்கோம் பள்ளத்தாக்கு மர்மம்

 

 முன்னுரை நீண்ட நாட்களாகவே எழுத்துத் துறையில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். தமிழாக்கம் செய்வதுதான் என் நிலைக்குச் சரியான வேலை என்பதால் என் கன்னி முயற்சியாக ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சாகசங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன். இந்த நூலின் மூலத்தின் ஆசிரியரான சர் ஆர்தர் கானன் டாயில் பற்றித் தெரியாதவர் இருக்கலாம். ஆனால் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது. அவரது சாகசங்கள் பற்றி இன்னும் புதுப் புதுக் கதைகள்