கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 6,722 
 

பெங்களூர். அன்று சனிக்கிழமை செப்டம்பர் பதினெட்டு.

காலை ஆறரை மணிக்கு எனக்கு திடீரென பயங்கர மூச்சத் திணறல் ஏற்பட்டது. சுவாசிக்கவே மிகவும் திணறினேன் . உயிர் பயம் ஏற்பட்டது.

என் ஒரே மகன் ராகுல் உடனே என்னை அருகிலுள்ள ஆஸ்டர் ஹாஸபிடல் எமர்ஜென்சியில் சேர்த்து விட்டான். அங்கு உள்ள டாக்டர்கள் உடனே என்னை சூழ்ந்துகொண்டு பெரிய விவாதம் நடத்தினார்கள். நிறைய பரிசோதனைகள் மேற்கொண்டார்கள்.

ஏற்கனவே பை பாஸ் சர்ஜரி செய்யப் பட்டவன் என்பதால் என் மீது அதிகக் கவனம் செலுத்தினார்கள்.

என் நுரையீரலில் ஏகப்பட்ட தண்ணீர் சூழந்துள்ளது என்றும், அதனால்தான் மூச்சத் திணறல் எனவும்; அதுதவிர என் உடம்பில் சுகர், பிபி, ரத்தத்தில் கிரியாட்டின் மிக அதிகம் எனவும் தீர்மானித்தார்கள்.

அடுத்த இரண்டு மணி நேரங்களில் என்னை ஐசியூவிற்கு மாற்றி விட்டார்கள். ஆக்ஸிஜன் சுவாசத்திற்காக வெண்டிலேட்டர் பொருத்தினார்கள். அங்கு எனக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது என்னை தினமும் கவனித்துக் கொண்டவள்தான் செவிலியர் முன்னி. எனக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து, ஐவி மூலம் தேவையான இனஜெகஷன் கொடுத்து, ஸபாஞ் பாத் கொடுத்து; மூக்கிலிருந்து வழிந்த சளியை அகற்றி, வாந்தி வந்தபோது அதை ஒரு பாத்திரத்தில் பிடித்து எறிந்தாள். பிறகு எனது வாயை மவுத்வாஷ் கொடுத்து வெந்நீரில் கொப்புளிக்கச் சொன்னாள். அவ்வப்போது என்னுடைய மலஜலங்களை அப்புறப் படுத்தி, என் உடம்பை பேணுவதில் அதிகக் கவனம் செலுத்தினாள்.

முன்னி பார்க்க கெச்சலாக இடுக்கிய கண்களுடன் காணப்பட்டாள். ஆனால் வேலையில் அவ்வளவு கவனம், சுறுசுறுப்பு. முன்னிக்கு அஸ்ஸாமில் உள்ள கெளஹாத்தி சொந்த ஊராம். அவள் காட்டிய அன்பும், பரிவும், அக்கறையும், பொறுமையையும் நான் வேறு எங்கும் கண்டதில்லை. அவள் எனக்கு ஒரு செவிலியராகத் தோன்றவில்லை. ஒரு நடமாடும் தெய்வீக அம்மணாகத் தோன்றினாள். எனக்கு அப்போது இவ்வுலகில் உள்ள அனைத்து செவிலியர்கள் காலிலும் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று தோன்றியது. அவர்களின் தியாக சேவையும், அன்பும், பரிவம், முனைப்பும் என்னை வியக்க வைக்கிறது. பெற்ற தாயினும் ஆயின செய்யும் அவர்களை நாம் அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

நான்கு நாட்கள் தொடர்ந்து ஐசியூவில் முன்னியின் கவனிப்பில் நன்கு தேறினேன். ஐந்தாவது நாள் என்னை வேறு தனியறைக்கு மாற்றி விட்டார்கள். அங்கு வேறு செவிலியர்கள் அவர்களின் வேலை நேரப்படி மாற்றி மாற்றி என்னைக் கவனித்துக் கொண்டார்கள்.

ஆனால் என்னுள் ஏனோ முன்னியின் டெடிகேஷன்தான் அடிக்கடி தோன்றி மறைந்தது. அவளுக்கு நான் ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. டிஸ்சார்ஜ் ஆனபிறகு கண்டிப்பாக செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டேன்.

மொத்தமாக ஏழு நாட்களுக்குப் பிறகு என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள்.

ஆனால் என் மனதில் முன்னியின் தாக்கம் குறையவில்லை. உடம்பு நன்கு தேறி விட்டாலும், என்னுடைய ஆன்ஸ்ஸிலரி யூனிட்டில் கவனம் செலுத்த முடியவில்லை.

ஒருவாரம் சென்றது. ஒருநாள் ஐசியூவிற்கு போன் செய்து முன்னியிடம் பேச வேண்டும் என்றேன். அவர்கள் முன்னி ரிசைன் பண்ணிவிட்டு அசாம் போய்விட்டதாகச் சொன்னார்கள். எதற்காக இப்படி? என்று கேட்டால் தெரியாது என்றார்கள். மிகவும் நைச்சியமாகப் பேசி முன்னியின் மொபைல் நம்பரை அவர்களிடம் கேட்டு வாங்கிக்கொண்டேன்.

உடனே முன்னியை தொடர்பு கொண்டேன்.

“முன்னி, நான் கண்ணன் பேசுகிறேன்.. தங்களுடைய ஐசியூ பேஷண்ட்.. என்னை நினைவில் இருக்கிறதா?”

“இருக்கிறது சார்..”

“எதற்காக ரிசைன் செய்தீர்கள்? பெங்களூரை விட்டு விலகிச் சென்றீர்கள்?”

முன்னி சற்று தயக்கத்துடன், “ஆஸ்டர் ஹாஸபிடலில் மலையாளிகளுக்குத்தான் அதிக உரிமை சார்.. எனக்கு கிடைக்க வேண்டிய பிரமோஷணக்கூட தடுத்து விட்டார்கள் சார்…. எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த அவமானமாகப் போய்விட்டது. அதனால்தான் உடனே கிளம்பி அசாம் வந்துவிட்டேன்.

“என்னை தாங்கள் மிகமிக நன்றாகக் கவனித்துக் கொண்டீர்கள். ஆனால் அவசரப் பட்டுவிட்டீர்கள் முன்னி.. நானே தங்களை என்னுடைய சொந்த ஆன்சிலரி யூனிட்டில் ஒரு சூப்பர்வைசராக சேர்த்துக்கொள்ள காத்திருந்தேன் முன்னி. மாதம் நாற்பதாயிரம் சம்பளம். தங்க இருப்பிடம் எல்லாம் தயார் முன்னி. பிளீஸ் கிளம்பி பெங்களூர் வந்து விடுங்கள்.”

”தங்களுடைய நல்ல மனசுக்கு மிக்க நன்றி சார். எல்லோரையும் போல தங்களையும் நான் கவனித்துக்கொண்டேன். என் கடமையைச் செய்தேன் அவ்வளவுதான் சார்.”

“பிளீஸ் முன்னி எனக்காக ஒரு வாரம் டைம் எடுத்துக்கொண்டு சற்று யோசியுங்கள்.. நல்ல முடிவாகச் சொல்லுங்கள்.”

“சாரி சார். இது நான் எடுத்த திடமான முடிவு. நான் பிறந்த மாநிலமான அசாம்தான் எனக்கு சொர்க்கமாகப் படுகிறது..”

மொபைலை துண்டித்து விட்டாள்.

முன்னியின் முடிவு எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக, அதிரிச்சியாக இருந்தது.

சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தேன். என்னுடைய யூனிட்டில் வேலை செய்யும் 800 பேர்களில் தற்போதைய நிலையில் 750 பேர் தமிழர்கள். அதிலும் கர்நாடகாவில். நான் எம்டி என்பதால் எனக்கு கீழே திறமையான, நம்பிக்கையான தமிழர்களை சேர்த்துக்கொண்டுதான் இந்த பிஸினசை ஆரம்பித்தேன். இது இயல்பானது, இயற்கையானதும் கூட. காலப் போக்கில் அவரவர்கள் அவர்களுக்கு நம்பிக்கையான தமிழர்களை சேர்த்துக் கொண்டார்கள். இதில் ஏதும் தவறில்லை.

இதே கதைதான் ஆஸ்டர் மருத்துவமனையிலும் நடந்திருக்கும். அதன் உரிமாயாளர் டாக்டர் ஆசாத் மூப்பன் துபாயில் மிகப்பெரிய மலையாளி. முரட்டுப் பணக்காரர். இது போதாதா ஆஸ்டரில் மலையாளிகளின் ஆதிக்கம் பெருக? ஆனால் முன்னி தனக்காக போராடவில்லை. முன்னி சிறிய வயது. அனுபவம் போறாது. போராட்டமே வாழ்க்கை என்பது முன்னிக்குப் புரிய இன்னும் சில வருடங்கள் ஆகலாம். அப்போது அவள் போராடி முன்னுக்கு வருவாள்.

ஆனால் முன்னி எப்போதம் என் மனதில் அலையடித்துக் கொண்டிருப்பாள்.

இதம் சரீரம்.

Print Friendly, PDF & Email

1 thought on “முன்னி

  1. Kannan is superb. Even at deathbed, he will find out an interesting story for others. Nicely narrated and it conveys a lot. Congratulations Kannan. Get Well Soon.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *