பெண் கேட்க வரவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 83 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உன் மகன் மாமனார் கடையில் ஐந்நூறு ரூபாவைத் திருடிவீட்டானாமே?” அடுத்த வீட்டு மீனாட்சியின் விசாரணை கேட்டு, லட்சுமியின் ஏழைநெஞ்சம் பற்றி எரியலாயிற்று. இந்த அபாண்டமான பழியை அவள் மறுப்பதெப்படி? “என்னவோ அக்கா! ஆண்டவனுக்கும் கண்ணில்லாமலா போய் விடும்?” அவள் பொருமினாள். 

தன் பத்தாம் வயதில் தகப்பனைத் தின்னியாகி விட்ட வேலுவை இலட்சுமியின் அண்ணன் கனகலிங்கம் தன் கடையில் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். அவன் சுறு சுறுப்பான உழைப்பால், வாடிக்கையாளரை வசீகரிக்கும் திறமையால், நேர்மையால் அவன் மாமாவுக்கு இலாபம் பெருகி காணி பூமிகள் மாடி மனைகள் பெருவாரியாகச் சேர்ந்து விட்டன.

ஆனால் வேலுவுக்குக் கிடைத்து வந்த தெல்லாம் கடைச்சிப்பந்திக்குரிய சம்பளம் மட்டுமே! கனகலிங்கம் பணத்தால் பெரிதாக, அவர் ஒரே மகள் மங்களம் பருவத்தாற் பெரிதானாள். அப்பொழுது வேலுவுக்குப் பதினெட்டு வயது.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வேலுவுக்கும் மங்களத்துக்கும் முடிச்சுப் போட்டுக் கேலி பண்ணுவது ஒரு நாள் கனகலிங்கத்தின் காதிலும் படவே செய்தது. டாக்டரையோ, எஞ்சினியரையோ, மருமகனாக்கக் கனவு கண்டு கொண்டிருந்த கனகலிங்கத்துக்கு இந்த விளையாட்டுப் பிடிக்குமா?

அவனை வேலையிலிருந்து விரட்டி அவன் குடும்பத்தையே தூரவைக்க அவர் போட்ட திட்டம்தான் இந்த அநியாயமான திருட்டுக் குற்றச்சாட்டு! 

லட்சுமிக்கு எல்லாம் புரிந்து விட்டது, நெஞ்சம் வெந்து குமுறப் பற்றியெரியும் வயிற்றோடு எழுந்தாள். கட்டியிருந்த கந்தற் சேலையோடு கனகலிங்கம் வீட்டுப் படலையைத் திறந்தபோது அவர் முற்றத்தில் திருநீற்றுக் குறிவைத்து அனுட்டானம் பார்த்துக் கொண்டு சிவவேடப் பொலிவோடு குந்தியிருந்தார்.

எதிரில் போய் நின்ற லட்சுமி “இதோ பாருங்கள்!” என்று சீறியபோது, அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

“உங்கள் வீட்டில் பெண் கேட்க நாங்கள் என்றுமே நினைத்ததில்லை. நாங்கள் ஏழைகள்! இனிமேல் உங்களோடு உறவாட வந்து தொல்லைப் படுத்தவும் மாட்டோம். உங்கருக்குப் புண்ணியம் கிடைக்கும். உங்கள் பணக்கார மகளைப் பட்டத்தரசியாக்குவதற்காக, என் ஏழைப் பிள்ளையைத் தற்கொலை பண்ண வைக்காதீர். அநியாயமாக என் பிள்ளையைத் திருடனாக்கிக் கதை கட்டாதீங்க” அண்ணனைச் சிலையாக்கி விட்டு குமுறியழுது கொண்டு பாரங்கரையும் நெஞ்சோடு திரும்பி நடந்துகொண்டிருந்தாள் லட்சுமி.

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *