பாடாத தேனீ! 

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2026
பார்வையிட்டோர்: 51 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேவகி புரண்டு படுத்தாள்! துயில் அவளை அணைத்துக் கொள்ள மறுத்துவிட்டது. அமைதியற்ற மனம் எங்கேனும் துயின்றதுண்டா? ‘நான் செய்துள்ள முடிவு சரியானதா……; முறையானதா……?’- என்று ஆயிரம் முறை அவளது மனத்தைக் கேட்டுக் கொண்டாள். பதில் தான் கிடைக்கவில்லை. படித்தவள் தான்! பண்புள்ளவள்தான்! ஆணுக்குப் பெண் சமானமாக வாழ வேண்டும். ஆணுக் கொரு நீதி, பெண்ணுக் கொரு நீதி – என்ற முறையை எதிர்க்கும் புதுமைப் பெண் தான் அவள்! அவளுக்கே ஒரு தடுமாற்றம்! 

‘நான் செய்யப் போவது பெண்குலத்திற்கு பெருமையளிக்குமா?’ படுக்கையில் துவண்டாள் ! புரண்டு படுத்தாள்! மாயத்தி ரையொன்று கண்ணை மறைப்பது போன்ற ஓர் உணர்வு! கனவுக் கும் நனவுக்குமிடையிலே ஒரு மாயலோகத்தில் சஞ்சரிப்பது போன்ற ஒரு நிலை… 

“தேவகி” – எங்கிருந்து வருகின்றது இந்த அழைப்பு! கனிவும் பாசமும் தோன்ற அழைக்கும் குரல் யாருடையது? புரிய வில்லையே? மீண்டும்- 

”தேவகி” – முன்னை விடக் கனிவு கூடியிருந்தது! தேவகி புரிந்து கொண்டாள். ஒருவேளை ஒருவேளை அவருடைய தாக இருக்குமோ? நினைப்பு உடலை ஊடுருவி மேனியைச் சிலிர்க்கச் செய்தது. மேனி வியர்வை வெள்ளத்தில் மூழ்கலாயிற்று! 

“தேவகி இது தானா உன் பதிபக்தி? கேவலம் இந்த உடலுற வைக் கொண்டு தானா நாம் எமது காதல் கோட்டையை எழுப்பி னோம்? உடம்பு அற்றுப் போய் விட்டால் காதலும் அற்றுப் போக வேண்டுமோ? நாம் ஒன்று சேர்ந்து கூடிக்குலாவி, உயிருடன் உயி ராக ஒன்றியிருந்த நாட்களின் நினைப்பில் நீ வாழ்ந்து விட முடி யாதா? நாம் கொண்டிருந்த அன்பு என்ன சாதாரணமானதாக உன்னுள்ளத்திலே இன்னொருவனுக்கு இடமா? ஐயோ! என்னால் இதைத் தாங்கமுடியவில்லையே…… 

”க்ரீச்!” என வீரிட்ட வாறு எழுந்தாள் தேவகி ! அவள் உடம்பு வெட வெடத்துக் கொண்டிருந்தது! 

தன்னை ஒருவாறு சுதாரித்துக் கொண்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள் அவள். 

நெஞ்சிலே மீண்டும் புயல்! 

“நான் மறு மணம் புரியலாமா?” 

“ஏன் கூடாது?” – என்றது ஆசாபாசங்களினால் உந்தப் பட்ட மனம். 

“இது தான் உனது பதிபக்தியா’ அறிவு கேட்டது! “ஏன் கூடாது? தாரமிழந்த ஆண்கள் மறுமணம் புரியலாம். பெண்கள் புரியக்கூடாதா? பெண்ணுக் கொரு நீதியா? – பகுத்தறிவு இடித்துரைத்தது! 

”என்றாலும் நீ ஒரு பெண். ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டவள்! எச்சல் இலை நீ!” இன்னொருவனுக்கு அன்னம் படைக்க வளைகிறாயே? உனது மனம் என்ன இரும்பா?”- அறிவு

“நான் ஏன் மகிழ்ச்சியற்று வாழவேண்டும். என் துணைவன் மறைந்துவிட்டான்! நான் வாழவேண்டியவள். மலர்ந்து நீண்ட நேரம் மணம் வீசாதவள்! அதற்குள் வாடிவிடவேண் டுமா? காட்டில் எறித்த நிலாவாகவேண்டுமா?” 

“தேவகி! என்ன கூறுகிறாய் நீ! அம்மி மிதித்து அருந்ததி காட்டியவன் மறைந்த பின் இன்னொருவருடன் வாழநினைக்கிறாயா? வாழவேண்டியவள் நீ! மறுக்கவில்லை. அதற்கு ஒரு ஆண் துணை வேண்டியுள்ளதா! உனது ஆசிரியத் தொழில் எங்கு போய் விட்டது? நீ இன்னமும் உடலுறவை விரும்பு கிறாய்? இல்லாவிட்டால் பாடசாலையில் அந்தச் சின்னஞ் சிறு உள்ளங்களின் பயன்கருதா அன்பைவிட இந்த ஆசாபாசத்தில் உழல விரும்புவாயா? சொல் தேவகி! சொல்… 

“நாளை சேகர் வருவானே? என்ன செய்வது?” 

“தயங்காமல் கூறு! உள்ளத்தை எடுத்துரை! தன் துணை பிரிந்த இடத்து உயிர் நீங்குமாம் பெண் புறா? நீ இறக்கவேண் டாம். உன்னை இந்தப் பரந்த உலகம் அழைக்கிறது! அதற்கு உழை! நீ போற்றப்படுவாய்i இன்னுமா தயக்கம் ! என்ன? சேகருக்கு ஏமாற்றத்தை அளிப்பதா? பெண் உரிமை பாராட் டும் என் அன்பனுக்கு – அவன் இலட்சியத்திற்கு நான் இடை யூறு விளைவிப்பதா? அவனுக்கு ஆவலை யூட்டி ஏமாற்றம் அளிப்பதா? அவன் நெஞ்சம் வெடித்து விடுமே! ஐயோ. நான் என் செய்வேன்?’ 

“தேவகி அன்றிரவு உன் முதலிரவு உன் கணவனின் அரவணைப்பில் கிடந்தபோது கூறினாயே” அன்பே! நீங்கள் என் தெய்வம் ! நீங்களில்லாவிட்டால் இந்தப் பரந்த உலகில் எனக்கு ஒன்றுமேயில்லை, என்று மறந்துவிட்டதா ? நீ இன்று வாழ விரும்புகிறாய் இன்னொரு ஆடவன் துணையுடன். இது நீதியா? நியாயமா? நீ சேகருடன் நிம்மதியாக வாழ்ந்து அவனுக்கு இன்பமளிக்கமுடியுமா? சொல்..! சொல்! “ஏன் முடியாது? என்னால் முடியும்! அவனை இன்பத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்வேன்!’ 

“தேவகி உன் மனம் இன்றே இப்படி அலைக்கழிக்கும்பொழுது, மணம் புரிந்த பின் மனம் உன்னைச் சும்மா விடுமா? நீ நிI டத்திற்கு நிமிடம் மனவேதனையில் இறந்துகொண்டிருப்பாய். நீ மட்டுமல்ல சேகரையும் கூட, ! 

“என்ன சேகரையா? ஏன் ? எப்படி?” 

”ஏனா ? நீ உன் மனதுடன் போராடும் வேளையிலே உன்னைச் சேகர் நெருங்குவான்! நீ பிணங்குவாய்! சாட்டுகள் பல கூறு வாய்! ஆவல் மிகப்பட்ட சேகர் மனவேதனையால் பின் வாங் குவான்.” ஏன் இவளை மணந்தோம் என்று ஏங்குவான்? அவ னையும் ஏங்கவைத்து, அவன் இலட்சியத்தின் மீதும் கோபம் வரச் செய்வாய் தேவகி! இதுதான் சேகருக்கு செய்யும் உதவியா?” 

”ஐயோ! என் மனமே விட்டு விடு ! எனக்குப் புனர் வாழ்வு வேண்டாம்! வேண்டவே வேண்டாம் ! என்னால் ஒருவரும் துன்புற வேண்டாம். வேண்டவே வேண்டாம். வேண்டாம்! 


மறுநாள் காலை சேகர் அவள் அறைக்குள் “தேவகி என்ன ரெடியா? எல்லா ஆயத்தமும் செய்தாகிவிட்டது! ரெஜிஸ்டர் ஆபீசில் நண்பர்கள் காத்திருக்கிறார்கள் புறப்படு” என்று கூறிக் கொண்டு நுழைந்தவன் திகைத்து நின்றான். தேவகி 

‘மீளா நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். அவள் முகத்தில் எதனு டனோ போராடி வெற்றிகண்ட பெருமிதம் காணப்பட்டது! என் னதான் இருந்தாலும் அவள் கண்ணகி மரபில் உதித்தவளல்லவா? சேகரின் கண்ணிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர் அந்த ‘பாடாத தேனீ’க்காக உகுந்தன. 

– இளங்கதிர், 1960-1961, பதிமூன்றாவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழகம், பேராதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *