ஞாயிறும் திங்களும்…
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,710
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
கதிரவன் எழுகின்றான், வெம்மையைச் சொரிகிறான், சுடுகின்றான். கோடை நாளல்லவா? அவன் கொடுமையைக் கேட்கவா வேண்டும்.
அரசே, நீயும் அத்தகையவன்… கோடைக் கதிரவன் போல் சுடுகின்றாய்…
ஆனால் ஒன்று-குடிகளை அல்ல! கொடும் பகையை!
உன் கொடிய கைகளை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்: ஏனெனில், எங்களிடம் இரவில் எழும் திங்கள் போல் வருகின்றாய்!
சுட்ட கைகள், குளிர்கின்றன; வெம்மை சொரிந்த கண்கள், அருள் சொரிகின்றன….
ஆதலின், ஞாயிறும் நீ, திங்களும் நீ.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
பாட்டி சொல்லைத் தட்டாதே!
வளர்கவி
September 24, 2026
தீயவை தீய பயத்தலால்…
வளர்கவி
September 9, 2026
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே….
கே.என்.சுவாமிநாதன்
September 3, 2026