அவனும் – அவளும்
கதையாசிரியர்: ஞானரதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2026
பார்வையிட்டோர்: 50
(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவனும், அவளும்.
அழகானவர்கள்; ஏதோ அதுநிலையாக நிற்கக் கூடிய ஒன்று என்ற எண்ணமாக்கும் அவர்களுக்கு.
பிரசித்தபாதையில்; கலைக்கூடத்துப் படக்காட்சியில்; உசாத் துணை நூல்நிலையத்தில்; பெண்கள் மண்டப முன்வாயிலில்; இன்னும் எங்கெங்கோ இரகசியத்தைப் பலர் பார்க்க முடியாத மலைச்சாரல் போன்ற பல இடங்களில்,
இருவரின் இன்பபுரிப் பிரயாணம் நடைபெறும். இவ்விடங் கள் பாடபோதனை அறையைப் போன்று அலுப்புத் தட்டக் கூடிய வையா என்ன. ‘றெஜிஸ்ரர்’ ‘மார்க்’ பண்ணாமலேயே ‘றெகுளர் அற்றண்டன்ஸ்’ இவர்கள் இருவரும் பல்கலைக்கழக மாணவத் தம்- பதிகள். வேறு எந்தக் கல்விக் கூடத்தில் இந்தத் திருவிளையாட லுக்கு இடங்கிடைக்கும். ஏதோ உயர்தரக் கல்வியாம். இவை யெல்லாம் ‘சோஷியலாம். “நாசமாய்ப் போக” என்கின்றான் ஒரு பண்புள்ளவன்.
அன்று ‘சோஷிய’லொன்றிற் கண்டு ஒன்றையொன்று கவ்வி இழுத்துக் கொண்ட கண்ணாடிக் கண்கள் தான் இவை நான்கும்- அல்ல-எட்டும். இந்தக்கண்ணாடி கூட எல்லாம் ‘டூப்ளிக்கேட்’ வேலை என்பதை அறிவித்தது போலும். ஆனால் அவனும், அவளும் ஏதோ ஒரு தீந்தமிழ்ச் சொல்லை அவர்கள் பாட்டில் இந்தச் சம்பவத்திற்குச் சூட்டினர். அதுதான் —
கா…த…ல்
ஒருவேளை உச்சரிப் பதற்கு இனிமையாக இருக்கட்டு மென்றாக் கும். எங்காம் இந்தக் காதல்? பல்கலைக் கழகத்திலாம்.
இவ்வணுக்குண்டு காலத்தைச் சங்ககாலமென நினைத்த தவறு இருவரும் தமிழ் செய்யாததாலோ வென்றால் அவன் பாடமே அது தான் ம்…. ஏதோ ஒன்று இருவர்க்கு மிடையில் வளர்ந்தது: கூடிச் செல்ல, கூட்டிச் செல்ல வைத்தது.
மாணவர் உதடுகளில், மண்டப அறைகளில், மரநிழலில், சிற்றுண்டிச் சாலையில் அங்கே இங்கே எல்லாம் இவ்விரு நடிகர் களின் பெயர்களும் செல்வாக்காயிருந்தன.
ஒரு சுற்றுலா ; ‘சோஷிய’லின் பின் வந்தது. அவனும், அவளும் அதையும் தவற விட்டார்களா என்ன?
அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை அந்தச் சொல்லில். உடை, நடை, பேச்சு இன்னும் எதிலோ எதிலோ எல்லாம் அவனி டத்தில் ஏற்பட்ட மாற்றம்.
அப்பப்பா! நாடக இராச ‘பார்ட்’ வேடம் மாதிரி.
ஒரு ‘ரியூற்ரோறியல்’ அவன்கையில் எவ்விதமோ கிடைத்து விட்டது. அவளைப்பற்றித்தான் அவன் ‘லெக்ஷர்’ இருக்கும். ஓட் டைக் ‘கிராமபோன் ரிக்காட்டு’ மாதிரி.
பின்னேர உல்லாச நடை; தவறாது; அவளும் அப்படியே ; எட்டுக் கண்களும் சந்திக்கும். அறுபத்தினான்கும் தெரியும்.
இடையிற் சிறு சம்பாஷணை. அவர்களது நாடகத்திற்கு ஒத்திகை பார்ப்பது போன்று.
நீண்ட விடுதலை – மூன்று மாதங்கள்.
நான்காம் மாதம்
அவன் தேகத்திற் பயங்கர மாற்றம். ஒருவேளை விடுதலையில் அவளுக்குச் சிறிது ‘பார்சல்’ பண்ணினானோ என்னவோ. இன்றேல் அவள் மாத்திரம் ஏன் அவ்வளவு…………?
சரியாக ஒரு வாரம் – அவள் தரிசனம் இல்லை.
கேவலம் பழைய மாதிரிப் பாதையிற் கூட நிழலாடவில்லை.
அவன் மனம் சுக்கலானது; விரக்தி ஏற்பட்டது. தான் மனத் திற் கொண்ட பெயர் சூட்டிய பதத்தை எண்ணி ஆராய்ச்சி நடாத்தினான். அன்று கலைக் கூடத்தில் நடந்த படக்காட்சிக்குச் சென்றான் சாந்திகிடைக்குமென்று.
அங்கே…
அழகான காட்சி; அருமையான காட்சி; அற்புதமான காட்சி.
அன்று இரா, உண்மையாக இருளை உணர்ந்தானவன்.
அடுத்த நாள்; மற்றை நாள்; அதற்கடுத்த நாள்.
அவன் அகத்திற் புயல்; முகத்தில் அதன் பிரதிபலிப்பு.
அவள் அகத்திற் தென்றல்; முகத்தில் அதன் பிரதிபலிப்பு;
அவன் ஆங்கிலப் பட்டப் படிப்புக் காரனல்லவா.
இவன்…?
முடிவு இது தான் – இந்த முடிவுக்குக் கொடுத்த அர்த்தமற்ற பதந்தான் கா…த…ல்.
இதுதான் பல்கலைக் கழகக் காதலாம்; உயர்படிப்புக் காதலாம்; நாகரிகக் காதலாம்.
(யாவும் கற்பனை)
– இளங்கதிர், 1960-1961, பதிமூன்றாவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழகம், பேராதனை.
தொடர்புள்ள சிறுகதைகள்
புது வாழ்வு
இரா.துரைமாணிக்கம்
October 15, 2026
சொல்லாத முடிவுகள்!
கல்பனா ராஜகோபால்
October 15, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 15, 2026