கதையாசிரியர் தொகுப்பு: சேஷசாயி

1 கதை கிடைத்துள்ளன.

மது அனைவருக்கும் பொது

 

 ‘இந்த ஷட்டௌன் வடிகட்டின முட்டாள் தனம்!’: சங்கர் எரிச்சலுடன் மனைவி லதாவிடம் அலுத்துக்கொண்டார். லதா, தன்னுடைய ஐ பேட் என்ற மகாநதியில் முழுமையாக மூழ்கியிருந்தாள். முழு அடைப்பின்போது, நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள, சில இன்றியமையாத அழகுக் குறிப்புகளை ஒரு இளம் நடிகை விளக்கிக் கொண்டிருக்க, லதா ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். ‘இந்த ஷட்டௌனினால், எத்தனை பேருக்கு நஷ்டம்! கடையில் விற்பனை இல்லாட்டி, அரசாங்கத்துக்கு, ஏது வருமானம்? வருமானம் இல்லாம, இந்த சவாலை எப்படி சமாளிக்க