வாசல் தேடி வந்த வசந்தம்
அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5
கண்ணீரில் கரைந்த இடைவெளி

“பல வருடங்களாகப் பிரிந்த உறவுகள்… ஒரே அணைப்பில் மீண்டும் இணைந்த தருணம்…”
காரை நிறுத்திவிட்டு இறங்கிய கவிதாவைப் பார்த்ததும், வெங்கட்ராமனின் கண்கள் கலங்கின.
பல வருடங்களாக மனதுக்குள் அடைத்து வைத்திருந்த ஏக்கம், கோபம், வலி எல்லாமே அந்த ஒரு நொடியில் கரைந்து போனது.
கைகளை விரித்தபடி நின்றார்.
அதைப் பார்த்த கவிதாவால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.
“அப்பா…” என்ற ஒரு வார்த்தை மட்டும் அவள் வாயிலிருந்து வந்தது.
அடுத்த நொடி…
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதனர்.
பல வருடங்களாகச் சொல்ல முடியாமல் போன அத்தனை வார்த்தைகளும் அந்தக் கண்ணீரில் கலந்து போனது.
லஷ்மியோ தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓடி வந்து கவிதாவைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
“என் பொண்ணே…”
என்று கதறியபடி அவளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.
தாயும் மகளும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு அழுத காட்சி அங்கிருந்த அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.
“வாங்க மாப்பிள்ள…”
என்று கவிதாவின் கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்து வந்தார் வெங்கட்ராமன்.
அருகில் நின்ற ரவியும், வெங்கட்ராமனும் அவரை அன்போடு வரவேற்றனர்.
உள்ளே வந்த கவிதாவின் பார்வை பூரணியைத் தேடியது.
பூரணியைப் பார்த்ததும் அவளின் கண்கள் மீண்டும் கலங்கின.
“பூரணி… என்னை நீ மன்னிச்சுடு…”
என்றாள் கவிதா.
உடனே பூரணி அவளது கையைப் பிடித்துக் கொண்டு,
“அட… எதுக்கு இப்ப மன்னிப்பு எல்லாம்?
உட்காருங்க மொதல்ல…”
என்று அன்போடு அழைத்தாள்.
அந்த ஒரு வார்த்தையே கவிதாவுக்கு பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த நிம்மதியாக இருந்தது.
ராகவியும் தன் பெற்றோருடன் வந்து அமர்ந்து கொண்டாள்.
அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த வீட்டில் அழுகையும், அமைதியும் மட்டுமே நிறைந்திருந்தது.
யாருக்கும் பேச வார்த்தைகள் வரவில்லை.
இறுதியாக அந்த அமைதியை உடைத்தது கோபியின் குரல்.
“என்ன அத்தை… உங்களுக்கு பசிக்கலையா?”
என்று கேட்டான்.
அனைவரும் அவனைப் பார்த்தனர்.
“எனக்குப் பிடிச்ச கோலா உருண்டை குழம்பு பாட்டி செஞ்சிருக்காங்க.
நான் போய் ஒரு புடி புடிக்கப் போறேன்.
அம்மா… நான் சாப்பிட ரெடி.”
என்றதும் ராகவி சிரித்தாள்.
“ஏய்… உனக்கும் பிடிக்குமா அது?
அது என்னோட பேவரிட் டிஷ்.
நான் அடிக்கடி செய்வேன்.
ஆனா எங்கம்மா கைப்பக்குவம் மட்டும் வரமாட்டேங்குது…”
என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.
“அம்மா… மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொடேன்.”
என்று லஷ்மியிடம் கேட்டாள்.
“சரி சரி… பேசிக்கிட்டே இருக்காதே.
போய் மாப்பிள்ளையை அழைச்சுட்டு வந்து சாப்பிட உட்காரு.”
என்றார் லஷ்மி.
அந்த நேரத்தில்,
“அம்மா பூரணி…”
என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.
“அத்தே… அப்பளம் பொரிச்சாச்சு.
எல்லாம் ரெடி.”
என்று பூரணி பதில் கொடுத்தாள்.
சாப்பாட்டைப் பார்த்துப் பார்த்து பரிமாறினார் லஷ்மி.
பல வருடங்களுக்குப் பிறகு, அந்த வீட்டில் மீண்டும் ஒரு குடும்பத்தின் சத்தம் கேட்டது.
அனைவரும் முன்னறையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்.
கவிதா, தன் தம்பி ரவியின் அருகில் அமர்ந்து கொண்டு மெதுவாகச் சொன்னாள்.
“ரவி…
முறைப்படி நீங்கதான் ராகவியை பொண்ணு கேட்டு வரணும்.
ஆனா அதுக்கு மாறா…
நான் செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா…
நான் என் மருமகனை என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுன்னு கேட்கிறேன்.”
அந்த நேரத்தில் பூரணியின் பெற்றோர் உள்ளே வந்தனர்.
“பொண்ணுக்கும் பையனுக்கும் மனசுக்குப் பிடிச்சிருந்தா…
யாரும் யாரையும் கேட்க வேண்டாம் மருமகளே…”
என்றனர்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.
“அப்புறம் என்ன…
ரெண்டு பேரும் சேர்ந்து தாத்தா பாட்டியை அன்பால கட்டிப் போட்டுட்டாங்க.
சீக்கிரம் கெட்டிமேளம் தான்!”
என்று உரக்கச் சிரித்தார் வெங்கட்ராமன்.
அவருடன் சேர்ந்து லஷ்மியும்,
“ஆமாம்… ஆமாம்…”
என்று தலையாட்டியபடி சிரித்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு தன் பெற்றோர் மனம் விட்டு சிரிப்பதைப் பார்த்த ரவி மனம் மகிழ்ந்தார்.
அந்த நேரத்தில்…
கோபியின் போனில் ரிங்டோன் இசைத்தது.
“கண்ணான கண்ணே…” என்ற அந்த இனிமையான மெலடி, அந்த வீட்டின் அமைதியை மெதுவாகக் கலைத்தது.
பல வருடங்களாக அழுகையையும், பிரிவின் வலியையும் மட்டுமே கேட்ட அந்த வீட்டில், அந்த இசையும் ஒரு புதிய தொடக்கத்தின் அறிகுறியாக ஒலித்தது.
அந்தச் சத்தம் கேட்டதும் ராகவியின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.
தலை குனிந்து மெதுவாகச் சிரித்தாள்.
அந்த வீட்டில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாசமும், சிரிப்பும், சந்தோஷமும் குடியேறியது.
(முற்றும்)
November 22, 2026