தங்கக் கிண்ணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 79 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கன்னன், துரியோதனன் நண்பன். துரியோதனனுக் காகத் தன்னுயிரையே கொடுத்த உத்தமன்; நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவன்; இல்லை எனத் தன்னிடம் வந்தவர்கட்கெல்லாம் ‘இல்லை’ எனச் சொல்லாது கொடுத்த பெருவள்ளல்; நன்றிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவன். பாண்டவர் தன் தம்பியர் எனத் தெரிந்த பின்னரும் நன்றிமறவாத நல்லியல்பினால் பாண்டவர் பக்கம் செல்லாதவன். 

இத்தகைய பெருமை வாய்ந்த கன்னன் அங்க நாட்டின் அரசனாக விளங்கியவன். அவன் பிறக்கும் போதே கவசத்துடனும் காதில் குண்டலத்துடனும் பிறந்தான். அவையிரண்டும் அவன் உயிரைக் காக்க இறைவனால் அளிக்கப்பட்டவை. அவற்றையே இந்திரனுக்குக் கொடுத்துவிட்டான். கொடுப்பதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவன் கன்னன். 

அந்த வள்ளலிடம் ஒரு நாள் ஏழை ஒருவன் உதவி தாடி வந்தான். ‘அப்போது கன்னன் எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தான். உதவி நாடிச் சென்ற ஏழை. கன்னனைப் பார்க்க வந்திருப்பதைக் காவலரிடம் கூறினான். உதவி நாடி வருபவர் எவரா யினும் அவரைத் தடுக்காமல் தன்னிடம் அனுப்ப வேண்டும் எனக் கன்னன் கூறியிருந்தான். எனவே. காவலர் அந்த இரவலனை நேரே கன்னனிடம் அழைத்துச் சென்றனர். கன்னன், “ஐயா! நீங்கள் என்னைத் தேடி வந்த காரணம் என்ன? உங்களுக்கு என்னால் இயன்றதைச் செய்வேன். உங்களின் தேவை என்ன?’ எனக் கேட்டான். 

வந்தவன், “வள்ளலே! நான் ஓர் ஏழை. என் மகளுக்குத் திருமணம் நடைபெறவேண்டும். என் வறுமையினால், எவரும் என் மகளை மணந்து கொள்ள இசையவில்லை. உங்களிடம் பொருளுதவி பெற்று என் மகள் திருமணத்தை நடத்த விரும்பியே உங்களிடம் வந்தேன். என் மகளுக்கு வாழ்வுதரத் தேவையான பொருளைக் கொடுத்துதவ வேண்டுகிறேன்” எனப் பணிவுடன் வேண்டினான். 

அவன் கூறியதைக் கேட்ட கன்னன் மனம் இரங்கி னான். உடனே அந்த ஏழைக்குதவ முடிவு செய்தான். ”ஐயா! கவலையை விடுங்கள். உங்கள் மகள் நல்வாழ்வு பெறத் தேவையான பொருளைத் தருகிறேன். மகிழ்ச்சி யாகத் திரும்பிச் சென்று மகளின் திருமணத்தை நிறை வேற்றுங்கள்” எனக் கூறினான். உடனே முன்னே இருந்த தங்கக் கிண்ணம் அவன் கண்ணில் பட்டது. எண்ணெய் இருந்த தங்கக் கிண்ணமே அது. தன் இடக்கை அருகே இருந்த அக் கிண்ணத்தை இடக் கையால் எடுத்து வறிஞனிடம் கொடுத்தான். “ஐயா இந்தத் தங்கக் கிண்ணம் விலை மதிப்புடையது. இதனை விற்றால் உங்கள் மகள் திருமணத்திற்குத் தேவையான பொருள் கிடைக்கும். பெற்றுச் செல்லுங்கள்” எனக் கூறினான். 

வறியவன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டு ”வள்ளலே! நீங்கள் எண்ணெய் வைத்துக்கொள்ளப் பயன்படும் கிண்ணத்தை ஏன் கொடுக்கிறீர்கள்? உங்கள் அரண்மனையில் வேறு பொருள் இல்லையா? அலு வலரை அழைத்துப் பொன்னாகவே எனக்குக் கொடுக்கு மாறு சொல்லியிருக்கலாமே? எப்பொருளையும் வலக் கையால் கொடுப்பதுதானே சிறந்தது? அப்படியிருக்க நீங்கள் இடக்கையால் கொடுக்கக் காரணமென்ன? எனக் கேட்டான். 

கன்னன் வறியவனைப் புன்னகையுடன் நோக்கி னான். “ஐயா! என் அரண்மனையில் நிறையப் பொருள் உண்டு. அலுவலரை அழைத்துப் பொருள் கொடுக்கச் சொல்வதற்குள் என் மனம் மாறிவிட்டால். என்ன செய்வது? எனவேதான், உங்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடனேயே அதனை நிறைவேற்ற முடிவு செய்தேன். எனக்கு முன்னே இருந்த தங்கக் கிண்ணத்தை உங்களுக்குக் கொடுத்தேன். அக் கிண்ணம் என் இடக்கை அருகில் இருந்தது. அதனை வலக்கை யால் எடுத்துக் கொடுக்கலாமே என்று எண்ணினால். அதற்குள் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மாறிப் போகலாம். கிண்ணத்தை ஏன் கொடுக்கவேண்டும்? பணம் கொடுத்துவிடலாமே என்ற எண்ணம் வரலாம். காலம் நீட்டித்துக் கொடுக்கலாம் எனவும் தோன்றலாம். மனம் மாறுவதற்குள் கொடுத்துவிடவேண்டும் என்பதற் காகவே இடக்கை அருகில் இருந்த கிண்ணத்தை இடக் கையாலேயே கொடுத்துவிட்டேன். நீங்கள் தவறாக நினைக்கவேண்டா’ எனக் கூறினான். 

கன்னனின் கொடைச் சிறப்புப்பற்றிக் காதால் கேட்டிருந்த அந்த வறியவன் நேரில் கண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்தான். கன்னனைப் பாராட்டி வணங்கி மனநிறைவுடன் சென்றான். 

நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க. – ஒளவையார் 

“வாளிரவி சுதன்வலக்கை யாலெடுத்துக் கொடுக்கு முன்னே
மணம்வே றாமென்(று) 
ஏழைமறையோர்க்கிடக்கை யாலெண்ணெய்க் கிண்ணம் எடுத்து
சந்தான் அன்றே.” – செயங்கொண்டார் வழக்கம். 

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *