ரத்தம் ஒரே நிறம்
கதையாசிரியர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2026
பார்வையிட்டோர்: 114

தரையில் அமர்ந்து தட்டிலிருந்த தோசையை விண்டுவிண்டு தட்டின் விளிம்பில் வரிசையாய் வைத்துக்கொண்டிருந்தான் குமரவேல்..ஒருவிள்ளளைக்கூட இன்னும் வாயில் போடவில்லை..
கணவன் மிகுந்த வருத்தத்திலும் கவலையிலும் இருப்பது வள்ளிக்குத் தெரியும்தான்.. அவளும் அப்படித்தான் இருக்கிறாள்.. ஏழைகளின் வாழ்க்கையில் வேதனையும் கவலையும் இருப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?..
தன் கணவன் இப்படி வருத்தமும் கவலையுமாய் இருப்பது தன்னால்தான் என்று நினைத்த போது தன்மீதே கோபம் வந்தது அவளுக்கு..நேற்று நடந்த அந்த நிகழ்வுக்குப்பிறகு குமரவேல் வள்ளி இருவருமே மனத்தளவில் காயப்பட்டுத்தான் போயிருந்தார்கள்.
குமரவேல்-வள்ளிக்கு.. இருபது வயதில் செல்வராணி என்ற மகள் உண்டு..ப்ளஸ் டூ முடித்து விட்டு மேற்கொண்டு படிக்க ஆசையிருந்தும் ஏழ்மையின் காரணமாய் படிப்பைத் தொடராமல் பெட்ரோல் பங்க் ஒன்றில் வண்டிகளுக்கு பெட்ரோல் போடுபவளாய் வேலை பார்க்கிறாள்..
குமரவேல் பணக்கார வீடொன்றில் தோட்டக்காரன்..
வள்ளி வேலை எதற்கும் செல்லவில்லை. அவளுக்கும் வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் வேலைக்காவது செல்லலாமே என்று விருப்பம்தான்..
ஆனாலும் இவர்கள்.. பட்டியல் இனத்தவரென்ப தால் பாவம் வீடுகளில் வேலை செய்வதற்கு அதுவே தடையாக இருந்தது.
சாதி இரண்டொழிய வேறில்லை என்பதெல்லாம் ஏட்டளவில்தானோ?
இன்னும் பத்து பெரியார்.. இருபது அம்பேத்கர் அவதாரமெடுத்து வந்தாலும் சாதீய அவலத்திலிருந்து இவர்களை முழுமையாய் வெளிக் கொணர முடியாதோ?
உலகம் தோன்றிய காலத்தில்.. இறைவனோ/இயற்கையோ ஏதோ ஒன்று மனிதனைப் படைத்த காலம் இதுபோல் சாதி பாகுபாடு இருந்ததா என்ன?..
மனிதன் நாகரீகம் கற்க ஆரம்பித்த காலத்திற்குப் பிறகுதான் சாதீயக் கொடுமைகள் தோன்றி யிருக்க வேண்டும்..
மனிதனை மனிதன் சாதிப்பெயரில் அடிமைப் படுத்தி அக்காலத்தில் செய்த கொடுமைகளை அறிந்துகொள்ளும் விதத்தில் கற்பனையாக..
எழுத்தாளர் திரு.ஜெய மோகன் அவர்கள் அறம் என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கும் ‘நூறுநாற்காலிகள்’ என்ற கதையைப்.. படிக்கும் போதும் சரி படித்து முடித்தவுடனும் சரி..
ஐயோ..ஐயோ..எத்தனை கொடுமைகள்..எப்பேர்ப்பட்ட கொடுமைகள் என இதயம் தவிப்பதையும்.. நெஞ்சம் சுடுவதையும்.. கண்கள் கண்ணீரால் நிரம்புவதையும்.. ஆற்றாமையால் வாய் புலம்புவதையும்..ச்சீ என்ன உலகமிது என்று காரித்துப் பத் தோன்றுவதையும் அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது..
அவசரமாய்ப் படிப்பவர்க ளுக்கு நூறுநாற்காலிகள் கதையில் ஆசிரியர் தரும் வர்ணனைகள் அலுப்பைத் தரும்..
ஆனால் ஆழ்ந்து படிப்ப வர்க்கு ஒவ்வொரு வரியும் நெஞ்சைப் பிளக்கும் நன்கு தீட்டப்பட்ட கூரான குத்தீட்டி கள்..மனதை ரணமாக்கி ரத்தம் வடியச் செய்பவை..
உண்மை சுடத்தான் செய்யு மென்பது உண்மைதானோ? என்ன மதமோ?.. என்ன சாதியோ?..
பட்டியலினம் சார்ந்த குமரவேலின் தோட்டக் கார வேலையும்.. மகள் செல்வராணியின் பெட்ரோல் பங்க் வேலையும் பெரிய அளவு வருமானத்தை யொன்றும் கொடுத்துவிட வில்லை..
வீட்டுவாடகை..வருமானத் தில் பெரும் பகுதியை விழுங்கிவிட மீதித்தொகை றெக்கைகட்டிப் பறக்கும் விலைவாசியில் குடும்பம் நடத்தப் போதாமல் ஒரே அல்லாட்டம்தான்..
.
அறிந்தவர்கள்.. தெரிந்த வர்கள்.. உறவுகள் என்று எல்லாமுமாய்.. என்ன.. குமரவேலு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலியா.. காலாகாலத்துல பொண்ண கட்டிக் குடுத்துட்டீன்னா கவலயில்ல பாரு..என்று கேட்க ஆரம்பிக்க..
ஏற்கனவே ..குமரவேல்-வள்ளி மனதில் மகள் செல்வராணிக்குக்குத் திருமணம் செய்யவேண்டு மென்று சிறு கவலையாய் இருந்த பொறி கனன்று வீசஆரம்பித்தது..
ஆனாலும் வெறுங்கை முழம் போடுமா என்ன?..ஒரு பெண்ணின் திருமணத்தை நடத்திமுடிக்க வேண்டு மென்றால் எவ்வளவு செலவு செய்ய வேண்டியுள்ளது.. அதற்குப் பணம்?..
ஒரு பவுன் ஒரு லட்சத்து சொச்சம் விற்கயில்..
மெலிதாய் ஒன்னரை பவுனுக்கு ஒரு தாலி செயின் போடுவதுகூட இயலாத காரியம்.
அப்புறம் பண்டம் பாத்திரம்.. ஜவுளி..கல்யாணசாப்பாடு.. போக்குவரத்து..
மாப்பிள்ளை சீர் என்று குறைந்தபட்சம் ஒரு மூன்று லட்சம் கிட்டத்தில் பணம் வேண்டும்..
குமரவேலுக்கும் வள்ளிக்கும் கவலை இமயமலை அளவுக்கு பெரிதாய் வளர்ந்து மனதை அடைத்துக் கொண்டது..
அந்த சமயத்தில்தான் செல்வராணியைப் பெண்கேட்டு பிள்ளைவீட்டார் வலிய வந்தார்கள்..அதிகம் எதையும் எதிர்பார்க்க வில்லை என்றார்கள்..
பையனுக்கு கவர்மென்ட்டு ஆபீஸில் வேலை..பார்க்கவும் லட்சணமாய் இருக்க குமரவேலுக்கும் வள்ளிக்கும் வரனை விட்டுவிட மனமே இல்லை.. பிள்ளைவீட்டார் எதையும் எதிர்பார்க்க வில்லையென்றாலும் அதற்காக ஒன்றுமே செய்யாமலிப்பது அழகா?.. மரியாதையா?
ஒரு பதினைந்துநாள் பிள்ளைவீட்டில் டயம் கேட்டுவிட்டு பணத்துக்கு முயற்சிசெய்ய ஆரம்பித்தார்கள்..
அப்போதுதான் வள்ளிக்கு ஒரு யோஜனை தோன்றியது.
நம்ம புருசன் அந்த பணக்கார ஐயா வூட்டுல கிட்டத்தட்ட இருவத்ரெண்டு வருசமால்ல வேலபாக்குது..
இப்பதா நாலாயிரம் சம்பளம் கொடுக்குறாங்க அவுங்ககிட்ட கணிசமா கொஞ்சம் பண ஒத்தாச கேட்டா என்ன? சும்மால்லாம் குடுக்க வேண்டாம்..
மாசாமாசம் சம்பளத்துலேந்து ரெண்டாயிரம் புடிச்சிக்கிட்டம் ..யோசனையை கணவனிடம் சொன்ன போது குமரவேல் சோகமாய் சிரித்தான்..
வள்ளி நம்ம கதிரேசு அண்ண வேலபாக்குராறே அவரோட எசமாம்மாரி நினைைக்கிறியா இவர.. பாராங்கல்லுலேந்து கூட நார் உரிச்சிரலாம்..
ஆனா இவர் கிட்டேந்து பத்துரூபா கூட வாங்குறது முடியாத காரியம் என்றான்.
இருந்தாலும் வள்ளி சொல்வது போல் கேட்டுத்தான் பார்ப்போமே என்ற நப்பாசையும் ஏற்பட்டது மனசுக்குள்.
ஃபார்ம் ஹவுஸின் வாசல்புற புல்வெளியில் குடையைப் பிரித்து நட்டுவைத்தாற் போன்ற ஷேப்பில் உயரமாய் சிமென்ட் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டிருந்த கூரையோடு நின்றிருந்த அந்த அமைப்பிற்குள் கிடந்த ஃசோபா ஒன்றில் அமர்ந் திருந்தார் கிருஷ்ணராஜ்..
முகத்தில் தானென்ற அகந்தையும் பணக்காரச் செருக்கும் விரவிக்கிடக்க..
இடது கையில் த்ரிபிள் ஃபைவ் சிகரெட் புகைந்து கொண்டிருக்க வலது கையில் பிஸினெஸ் மேகஸீன் பிரித்தபடி இருந்தது..
அவரின் காலின் கீழ்.. நாக்கைத் தொங்கப் போட்டபடி கோரைப்பற்கள் வெளியே தெரிய.. பழுப்புநிற உருண்டைக் கண்களால் வெறித்த பார்வையோடு..
பெரிய சைஸில்..பார்ப்பவர்களை திகிலடையச் செய்யும் தோற்றத்தோடு அமர்ந்திருந்தது அல்சேஷன் நாய்.
கிருஷ்ணராஜின் வலப்புறம் பவ்யமாய் காரியதரிசி பிறைசூடன் நின்றிருக்க..
ஏற்கனவே பிறைசூடன் தந்திருந்த யோசனைப்படி மனைவி வள்ளியோடு அங்கு வந்து நின்றான் குமரவேல்.
இருவர் முகத்திலும் கவலையும் எதிர்பார்ப்பும்.
ஐயா கும்புடறேனுங்க..குரல் கேட்டு மேகஸீனிலிருந்தது பார்வையைத் உயர்த்தினார் கிருஷ்ணராஜ்.. பார்வையில் அலட்சியம் தெரிந்தது..
ம்..என்றார்..
ஐயா..நா தோட்டக்கார குமரவேலு.. இது எம் பொஞ்சாதி வள்ளி.. இருவரும் கும்பிட்டார்கள்.
ம்..அதற்குமேல் வார்த்தையில்லை கிருஷ்ணராஜிடமிருந்து..
கேட்டுடலாமா என்பதுபோல் பிறைசூடனைப் பார்த்தான் குமரவேல்..பிறைசூடன் மிக லேசாய்க் கையாட்ட..
கும்பிட்டகைகளை எடுக்காமலேயே மிக பவ்யமாய் விபரங்களைக் கூறி மகளின் திருமணத்திற்கு பண ஒத்தாசை செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொண்டான் குமரவேல்..
மாச சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாமென்றும் தாழ்மையாய் தனது எண்ணத்தைச் சொல்ல..என்ன பேச்சு பேசிவிட்டார் பணக்கார கிருஷ்ணராஜ்..
ஏ..கவர்மென்ட் வேலக்காரனுக்குதா பொண்ண கட்டிக் குடுப்பியோ.. ஒன்னமாரி ஒரு தோட்டக்காரனையோ.. செப்டிக் டேங்க் சுத்தம் பண்ணுறவனையோ பாக்க வேண்டியது தானே?..
வெரலுக்குத்தகுந்த வீக்கம்தான் இருக்கணும்.. தகுதிக்கு ஏத்த ஆசதான் படணும்..நீ யாரு?.. கேவலம்.. அந்த… சாதீல பொறந்தவன்.
ஒனக்கு ஏ..பெரிய ஆசை யெல்லாம்?.. ஒன்ன நம்பி எவ பணங் குடுப்பான்?
பணத்த வாங்கின கையோடு நீ செத்துட்டீன்னா..யாரு பணத்த திருப்பி கொடுப்பா?
நாக்குல நரம்பில்லாமலும்.. வார்த்தையில் வரம்பில்லாமலும் பணக்கார திமிரிலும்.. தான் உயர்சாதிக்கார னென்ற செருக்கிலும் கிருஷ்ணராஜ் பேசிய போது அவமானத்தால் துடித்துப் போனார்கள் குமரவேலும் வள்ளியும்.
எப்டீல்லாம பேசிட்டாரு.. என்னவோ தோட்டவேலயும் செப்டிக்டேங்க் சுத்தம் பண்ற வேலையும் கேவலம் போலன்னா பேசுறாரு..
நியாயமா செய்யுற எந்தவேலையும் ஒசத்தி தானே?
அம்மாம் பணத்திமிரு..
சாதிய சொல்லி எவ்வளவு கேவலப் படுத்திட்டாரு.. வெரட்டாத கொறையால்ல போபோன்னு வெரட்டி விட்டாரு..
ஏதோ பட்டியல் சாதிக் காரங்ககிட்ட பேசினாலே தீட்டு ஒட்டிக்கும் போல பார்வையிலேயே எத்தனை கேவலம் காட்டுனாரு..
மனதில் பட்ட காயத்தோடு வீடு திரும்பும் போது கணவன் பட்ட வேதனையை எந்த ஆறுதல் வார்த்தையாலும் அழிக்க முடியவில்லை வள்ளியால்..
நேற்று நடந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நெஞ்சில் நிழல்படமாய் விரிந்தது..
நா இனிமேலும் அங்கிட்டு வேலைக்குப் போவுல வள்ளி..என்றான் குமரவேல்..
மாசம் முடிய இன்னும் ரெண்டுநாளு தானே இருக்கு.. ரெண்டு நாளு போய்ட்டு சம்பளத்த வாங்கிக்கிட்டு நின்னிடு மச்சான் என்றாள் வள்ளி..
நம்மாட்டம் ஏழபாழைங்களுக்கு மாரியாத்தா எதுனாச்சும் வழிகாட்டுவா..
பையன் வூட்டுலயும் சொல்லீடுவோம்.. கல்யாணம் பண்ண இப்ப வசதிப் படாதுன்னு..
நம்ம மவளுக்கு எது விதியோ அதும்படி நடக்கட்டும்.. வள்ளியின் குரலில் விரக்தியும் வருத்தமும் நிரம்பி வழிந்தன..
தோட்டத்தைப் பெருக்கி குப்பையைக் கூடையில் அள்ளித் தள்ளு வண்டியில் சரித்துக் கொண்டிருந்தான் குமரவேல்..
முகம் வேதனையில் வாடிக் கிடந்தது..
வீட்டின் உள்ளிருந்து ஒரே சத்தமும் அழுகையுமாய் கேட்டது..
மனைவி பின் தொடர அழுதுகொண்டே பரபரப்பாய் வெளியே ஓடி வந்தார் கிருஷ்ணராஜ்..
அவர்களுக்குப் பின்னே பிறைசூடன்..
மூவரும் காரிலேற.. கார் பறந்தது.. ஒன்றும் புரிய வில்லை குமர வேலுக்கு..
உள்ளிருந்து சமையல்காரம்மா வெளியேவர.. அந்தம்மாவின் அருகில் சென்று விபரம் கேட்டான்..
என்னாது சின்னையா சதீஷ்க்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சா.. பேச்சுமூச்சு இல்லியா.. ரத்தம் கெடக்கிலியா.. படபடத்தான் குமரவேல்..
ஆமா..என்னவோ சொன்னாங்களே.. ஆங்..AB நெகடிவ் வக ரத்தமாம் சின்னையா சதீஷ்க்கு..
அரிய வகை ரத்தமாம் அது.. இது சாமானியத்துல கெடைக்கவே கெடைக்கா தாம்..
ப்ளட்பேங்குலயும் இந்த ரத்தம் இல்லியாம்.. கவர்மென்ட் ஆஸ்பத்திரி லேந்து ஃபோன் வந்திச்சு..
சமையக்காரம்மா சொல்லி முடிப்பதற்குள் கேட்டைத் திறந்து கொண்டு வெளியே ஓடினான் குமரவேல்..
குமரவேல் ஏறியடாக்ஸி வெகு வேகமாய் ஜிஹெச்சை நோக்கி விரைந்தது..
தனக்கு O negative ரத்தவகை என்பதால்..த ன் ரத்தவகை சின்னையா சதீஷின் AB negative வோடு ஒத்துப்போகும் என்பதை அவன் அறிந்திருந்தான்..
அதோடுகூட தன் தோழர்கள்.. உறவினர்களில் சிலபேர் A- B- ரத்தவகையைச் சேர்ந்தவகள் அவை AB- வோடுசேரும் என்பதைத் தெரிந்திருந்ததால் இவனிடமிருந்து ஐந்தாறு பேருக்கு போன் மூலம் அழைப்புசென்றது..
கால்மணி நேரத்தில் குமரவேலோடு சேர்த்து ஐந்து பேர் GH ல்.. கிருஷ்ணராஜின் மகன்..அவரின் ஒரே வாரிசு சதீஷ்க்கு ரத்தம் கொடுக்க தயாராய் நின்றார்கள்.
அனைவரும் குமரவேலின் சொந்தங்கள் மற்றும் நண்பர்களான பட்டியல் இனத்தவர்கள்..
உடனடியாய் வேறு தொற்று எதுமில்லை என்பதற்கான டெஸ்ட் எடுக்கப்பட்டு நெகடிவ் என வந்த பிறகு அனைவரிடமிருந்தும் ரத்தம் பெறப்பட்டு தேவையான அளவு சதீஷ்க்கு செலுத்தப்பட்டு அவனின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டது.
மீதம் ரத்தவங்கியில் சேமிக்கப்பட்டது.
இதோ.. உயர்சாதி என்ற அகங்காரம் கொண்ட கிருஷ்ணராஜின் ஒரே வாரிசின் உடலில்..
பட்டியலினத்தவரென்றும் கீழ்சாதியினரென்றும் கேவலமாய் ஒதுக்கித் தள்ளப்படும் மனித இனத்தின் ரத்தம்.. உடல் முழுதும் ஓடி ஒவ்வொரு செல்லிலும் சேர்ந்து அவனை உயிர்ப்பித்து விட்டது..
இந்துவோ.. முஸ்லீமோ.. கிறிஸ்டியனோ..எந்த மதமோ எந்த ஜாதியோ..ஒருமனிதன் இவற்றில் எந்தப் பிரிவி னைச் சார்ந்தவனாக இருந்தாலும்..
அவனின் ரத்தத்தில் அவனின் மதம்..இனம்..ஜாதி குறிக்கப்பட்டிருப்பதில்லை..
இந்த இனத்திற்கு இந்த நிறம் என்று ரத்த நிறத்தில் எவ்வித நிறப் பிரிவினையு மில்லை..
உலகத்தின் அத்தனை மனிதர்களின் ரத்தமும் ஒரே நிறம்தான்.. சிகப்பு நிறம் தான்..இதில் ஏற்றத்தாழ்வு எங்கிருந்து வந்தது?..
மருத்துவமனையில் மகனின் நிலை கண்டு மயங்கி விழுந்த கிருஷ்ணராஜ் விழித்துக் கொண்ட போது..
யாரை சாதியின் பெயரால் அசிங்கப்படுத்தினாரோ அந்த பட்டியலின குமாரவேலும் அவனைச் சார்ந்தவர்களும் அளித்த ரத்தத்தினாலேயே தன் மகன் தன் வம்சவாரிசு உயிரோடு பிழைத்திருப்பது அறிந்து தன் உயர்சாதி திமிரும் பணக்கார மமதையும் அழிந்து போனவராய்..
தானே குமரவேலின் மகள் திருமணத்திற்கான எல்லா வேலைகளையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்..
இதோ..கல்யாண மண்டபத்தில் ஓடியாடி அனைவரையும் விசாரித்துக் கொண்டிருக்கிறாரே பணக்கார கிருஷ்ணராஜ்.. அவர் திருந்திவிட்டார்..
அவரைப் போல் திருந்த வேண்டியவர்கள் மிக அதிகம்பேர் உள்ளனர்.
அவர்கள் என்று திருந்துவார்கள்?..
![]() |
பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன். நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன். கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தானியங்கி பண இயந்திரம்
ரா.நீலமேகம்
October 18, 2026
அமைதியின் குரல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 18, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 18, 2026
