நாடகம் போட்டுப்பார்
கதையாசிரியர்: மெரீனா
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: October 18, 2026
பார்வையிட்டோர்: 112
(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8

ராம்குமாருக்கு பாங்க்கில் வேலையே ஓடவில்லை. முரளி என்ன செய்தியுடன் வரப்போகிறானோ என்று தவித்துக் கொண்டிருந்தான். லேடி ஆர்ட்டிஸ்ட் கிடைக்காமல் போய்விட்டால்…?
“சும்மாயிருக்காம நாடகத்தை ஏன் இழுத்துப் போட்டுக்கிட்டே..? உன் ஜாதகத்துலே இப்ப ஏதோ போறாத காலம் போலிருக்கு!’- அம்மா காலையில் சொன்னது இப்போது ராம்குமாரின் மண்டையில் உரக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது. ‘சே! பணத்தையும் பாழடிச்சுக்கிட்டு உடம்பையும் கெடுத்துக்கிட்டு’ – நேரில் பேசாமல் ஸைடில் அப்பா முணுமுணுத்தது நினைவுக்கு வந்தது. ‘முன் வைத்த காலைப் பின்னே வைப்பதா?’ மனத்தளர்ச்சியடைந்த நிலையிலும் எங்கோ ஒரு பிரச்னை. ராம்குமாரோ, நினைச்ச லைட் எஃபெக்ட் கிடைக்க வில்லையே என்று கம்ப்ளீட்டாக அப்செட்! அதுமட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மனக் குறைகள் அவனுக்கு.
“ரொம்ப இடத்திலே மியூஸிக் ‘ஓவர்லாப் ஆச்சுப்பா. டயலாக்கே காதுல விழலே” என்று புகார் வந்தபோது, ராம்குமார் வெடித்தான். “நான் ஹரனை ட்ரெயின் பண்ணி டேப் ரிக்கார்டரை ஆப்பரேட் செய்யச் சொன்னேன்.அவன் டிங்குகிட்டேவுட்டுட்டு மேக்கப் ரூம்லே மசால் வடை தின்னுக்கிட்டிருந்தான். நம்ம பசங்களுக்குக் கொஞ்சம்கூடப் பொறுப்பு இல்லை… லதா, மூர்ச்சையாற ஸீன்லே ஷெனாய் போடச் சொல்லியிருந்தேன். சுரேஷ் வேற எதையோ ரிக்கார்டு பண்ணியிருக்கான். ராத்திரி இதை நான் தான் சரிபண்ணியாகணும். யாரையும் நம்பி எந்த வேலையும் ஒப்படைக்க முடியலே, சே…! பாலு, நீங்க ஏன் ஆபீஸ் ஸீன்லே லேட்டா என்ட்டர் ஆனீனீங்க…?”
“மூர்த்தி காட்ச் வேர்டு சரியா குடுக்கலே சார்!”
“சும்மா சொல்லாதீங்க… அவர் சரியாகத்தான் பேசினார். நீங்க ஸைடுலே நின்னுக்கிட்டு வெளி ஆசாமியோட ஏதோ பேசிக்கிட்டிருந்தீங்க… இன்னொரு தரம் எல்லாருக்கும் சொல்றேன். நாடகம் ஆரம்பிச்சிடுச் சுன்னா, எல்லாரும் ப்ளேலதான் கான்ஸன்ட்ரேட் பண்ணணும். டயலாக்கை ஃபாலோ பண்ணணும். நான் நிறைய தரம் சொல்லியிருக்கேன்… டிராமா நமக்கு எண்ட்டெர்டெயின் மென்ட் இல்லே… ஆடியன்ஸுக்குத் தான். நாம் பராக்குப் பார்த்துக்கிட்டிருக்கக் கூடாது. அதுமட்டுமில்லே, ஸீன்லே நுழைஞ்சுட்டா இஷ்டத்துக்கு ஆக்ட் பண்ணக்கூடாது. ரிகர்சல்லே சொல்லிக் குடுத்த மாதிரி செயற்கையாதான் செய்யணும். ஆனா, அது பார்க்கிறவங்களுக்கு இயற்கையா, ரியலிஸ்ட்டிக்கா இருக்கணும். அதான் டிராமா…”
முரளி தலையைச் சொறிந்தான். ராம்குமார் தொடர்ந்தான்.
“போனது போகட்டும். நாளைக்கு எல்லாரும் ரெண்டு மணிக்கே ஸ்டேஜுக்கு வந்துடுங்க. லாஸ்டூ மினிட் ‘டச்சப்’ பெல்லாம் இருக்கு… சில காட்சிகள்ல மைனர் கரெக்ஷன்ஸ் செய்யணும்… லைட், மியூஸிக்கோட முக்கியமான இடங்களைப் பார்க்கப் போறேன். அதுக்கப்புறம்…”
முரளி இடைமறித்தான். “தோ பார் ராம்குமார்… வந்தவங்க நாடகம் நல்லா வந்திருக்கு’ன்னு சொல்லிட் டாங்க… நீ சொல்ற குறையெல்லாம் நமக்குத்தான் தெரியும். அதுகூட நாளைக்கு இனாகுரேஷன்லே சரியாயிடும்…நீ கவலைப்படாம போய்த் தூங்குப்பா!”
எல்லோரும் முரளிக்கு நன்றி கூறுவதற்கு அடையாளமாகக் கைதட்டி ஆரவாரம் செய்தபடியே, விட்டால் போதும் என்று வீட்டுக்குப் பறந்து சென்றனர்.
– தொடரும்…
– நாடகம் போட்டுப் பார், முதற் பதிப்பு: 2010, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
பதவிப் பரிதாபங்கள்…
காரை ஆடலரசன்
October 18, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 18, 2026
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 15, 2026