கிடைத்தலும் இழந்தலும்
இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இரண்டு முறை தான் அழகாக தெரியும் ஒன்று அடைவதற்கு முன்பு இரண்டு இழந்ததற்கு பின்பு.

இமான் என்ற ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு ஆசை அது என்னவென்றால் BMW கார் வாங்க வேண்டும் என்று எங்கு BMW காரை பார்த்தாலும் அதன் அழகை உற்று ரசிப்பது இவரின் வழக்கம் ஆனால் இவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் மாதம் 20,000 ரூபாய் மட்டும் சம்பாதிப்பவர் ஒருநாள் இவர் தன் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்து, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கத் தொடங்கினான்.
கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் பணம் சேர்த்து வைக்கவும் தொடங்கினான். தன் வீட்டிற்குள்ளே காரை நிறுத்துவதற்கு இடத்தைக் கூட சீர்படுத்தி விட்டான். இப்பொழுது கார் (showroom) காட்சியரைக்கு சென்று விலையை விசாரித்தான்.
அவர்கள் சொன்ன தொகை இவனிடம் இருந்தது உடனே மறுநாளே அந்த பணத்தை கட்டி விட்டு அவன் நினைத்தபடியே BMW காரையும் வாங்கி விட்டான். அதன் அழகை தினமும் ரசிப்பான் ஓட்டவும் தொடங்கினான் அடுத்து இவனுக்கு இன்னொரு ஆசை வந்தது
Rolls-royce கார் வாங்க வேண்டும் என்று ஒரு புது ஆசை வந்தது பிறகு அதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கினான் rolls-royce கார் வாங்க வேண்டும் என்றால் சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணி ஒரு புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தான் அந்த தொழிலில் முன்னேறி விட்டு rolls-royce கார் வாங்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
ஒரு தொழில் தொடங்கினார் முதலீடு வேண்டும் என்பதற்காக தான் ஆசை பட்டு வாங்கிய BMW காரை விற்று விட்டான்.
தன் காரை விற்ற மொத்த பணத்தையும் அந்த தொழில் முதலீட்டில் போட்டான் எதிர்பார்க்காத விதமாக ஆபார தோல்வியை சந்தித்தான். அடுத்த வேலை சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டான். ரோட்டில் ஒரு ஓரமாக நின்று கொண்டு, அருகில் இருந்த ஒரு BMW காரை பார்த்து,
தன் மனதில் “இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இரண்டு முறை தான் அழகாக தெரியும் ஒன்று அடைவதற்கு முன்பு இரண்டு இழந்ததற்குப் பின்பு” என்று நினைத்துக் கொண்டே கடந்து சென்றான்.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 97