பாதையும் பயணமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 102 
 
 

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே உனக்கான பாதையை நீ தேர்ந்தெடு.

ஜஸ்டின் என்ற ஒரு தொழிலதிபர் இருந்தார். அவர் மிகப்பெரிய ஒரு தொழில் அதிபர் அவர் ஒரு கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கே அவரும் சென்றார் சில நிகழ்ச்சிகள் அங்கே நடைபெற்று முடிந்தது. பிறகு ஜஸ்டினை ஒரு சில வார்த்தைகளை பேசும்படி அழைத்தார்கள். இவரும் மாணவர்கள் முன்னால் பேசத் தொடங்கினார்.

ஜஸ்டின் மாணவர்களிடம், நான் என்னைப் பற்றி சொல்ல விருப்பப்படுகிறேன் நான் என் வாழ்க்கையில் உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றால் காரணம் ஒன்றுதான் அது என்னவென்றால் எல்லோரும் தேர்ந்தெடுத்த ஒரு படிப்பை நான் நிராகரித்து விட்டு எனக்கான ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து மிகவும் கடினமான ஒரு படிப்பை தேர்ந்தெடுத்தேன். கஷ்டப்பட்டு படித்தேன். இப்பொழுது உங்கள் முன்னால் நிற்கிறேன்.

நீங்களும், எல்லோரும் இந்த படிப்பை படிக்கிறார்கள் நாமும் படிப்போம் என்று ஒருவரை பார்த்து பின் தொடராதிருங்கள் உங்களுக்கு என்று ஒரு கனவை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு என்ன படிப்போ அதை தேர்ந்தெடுத்து படியுங்கள் நிச்சயமாக நீங்களும் சாதிப்பீர்கள்.

இப்பொழுது நீங்கள் அனைவரும் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து விட்டீர்கள் இப்பொழுது நான் சொன்னதை உங்கள் முதுகலை படிப்பிற்கு பயன்படுத்துங்கள் என்றார்.

உங்களுக்கான பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள் அனைவரும் உங்களை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வார்கள் என்று ஜஸ்டின் மாணவர்கள் முன்னால் சொன்னார்.

மாணவர்கள் அனைவரும் ஒரு நல்ல செய்தியை கேட்டோம் என்ற மனதுடன் பட்டம் பெற்றனர்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *