வெற்றியும் தோல்வியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2026
பார்வையிட்டோர்: 77 
 
 

வெற்றி ஒருபோதும் இறுதியல்ல தோல்வி ஒருபோதும் உறுதியல்ல

ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய மைதானம் இருந்தது அந்த மைதானத்தில் தடைகள போட்டியில் பயிற்சி பெற்று வந்தவன் திரு.அன்புமணி. தன் நண்பன் ராமதாசும் கூடவே பயிற்சி பெற்று வருவான்.

இருவரும் நல்ல நண்பர்கள். ஒவ்வொரு போட்டி வரும்போதும், அன்புமணி கண்டிப்பாக ஜெயித்து விடுவான். ஆனால் அவன் நண்பன் ராமதாசோ விடாமல் முயற்சி செய்து கொண்டே இருந்தான், ஆனால் தோற்றுவிடுவான்.

அன்புமணி படி படியாக வெற்றி பெற்று தடைகளப் போட்டியில் ஒரு பதிவை ஏற்படுத்தி விட்டான். அன்புமணிக்கு ஒரே சந்தோஷம் அதனுடன் தலைகனமும் ஆரம்பமாக தொடங்கி விட்டது. தன் நண்பனை தள்ளி வைக்க தொடங்கினான். இப்படியே நடந்து கொண்டு இருந்தது.

ராமதாஸ் முதன் முறையாக ஒரு மாநில போட்டியில் வெற்றி பெற்றான். அதன் பிறகு அவன் விடாமல் ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் பயிற்சி பெற்று தேசிய அளவு போட்டிக்கு பங்கு பெற்றான். அந்த போட்டியில் படுத்தோல்வி அடைந்தான். ஆனாலும் விடாமல் ராமதாஸ் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் ஒரு மிகப் பெரிய தனியார் நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தடைகள போட்டியை நடத்தினது. உலக அளவில் அது ஒளிபறப்பாக்கப்பட்டது. இந்தியாவில் நடக்கிற IPL போல் இருந்தது. அதில் ராமதாஸ் பங்கு பெற்றான் கூடவே அன்புமணியும் பங்கு பெற்றான். போட்டி ஆரம்பமானது.

வீரர்கள் ஆர்வத்துடன் தடைகளை கடந்தார்கள் போட்டி சுவாரசியமாக போய்க் கொண்டிருந்தது கடைசியில் ராமதாஸ் உலக சாதனை செய்து விட்டான். அவனுக்கே ஆச்சரியம், அரங்கம் ஆச்சரியத்துடனும் உற்சாகத்துடனும் ராமதாஸ் பெயரை கத்திக்கொண்டே இருக்க தொடங்கினது.

ராமதாஸ் உலக சாதனை செய்து சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டான். இப்பொழுது பின்னால் இருந்த அன்புமணி தன் மனதில் “வெற்றி ஒருபோதும் இறுதியல்ல தோல்வி ஒருபோதும் உறுதி அல்ல” என்று எண்ணி அரங்கத்தை விட்டு வெளியேறினான்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *