சிரிப்புக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 8,435 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மரண பரியந்தம் மகிழ்ச்சியாயிரு, எப்பொழுதும் களிப்பாயிரு என்று விவிலியம் கூறுகிறது.

நகைச்சுவை நடிகர் எனப்படும் என்.எஸ்.கேயின் வாழ்வு அவ்வாறு அமைந்திருந்தது. 1946ஆம் ஆண்டு நாகர்கோவிவில் நடந்த எழுத்தாளர் மாநாட்டின் போது, அவா வீட்டில் தங்கி இருந்த எழுத்தாளர்களாகிய நாங்கள் அவரோடு அதிகம் பழகும் வாய்ப்புப் பெற்றோம். அவர் பேசிக்கொண்டிருந்தால் குடல் குலுங்கச் சிரித்துக்கொண்டே தான் இருக்கவேண்டும். சாதாரண உரையாடலில்கூட அவ்வளவு சொற்சுவை மிக்கவர்.

அவரின் மரணப் படுக்கையின் போதுகூட சுற்றிலும் நின்று அழுது கொண்டிருப்போரைப் பார்த்து ஒரு சிரிப்புக் கதை சொன்னதாக சாவி இதழில் படித்தேன்:

“ஒரு பெரிய திருடன் சந்தர்ப்பவசமாப் பெரிய பதவிக்கு வந்துட்டான். அப்படி வந்த பிறகும் அவனுக்குத் திருட்டுப் புத்தி போகலே.

ஒரு நாள் பொதுக் கூட்டத்திலே பேசிக்கிட்டு இருந்தப்போ..திருட்டுப் புத்தி வந்திருச்சு. எங்கே போய் திருடுறது? கை துருதுருன்னு வருது?

“தன்னுடைய வலது பாக்கட்டிலே இருந்த மணிபர்சை – முதுகுக்குப் பின்னாடி இடது கையைக் கொண்டு போய்… பிக்பாக்கெட் அடிச்சு இடது பக்க பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான்.”

கதையைக் கேட்டு சுற்றி நின்ற யாவரும் சிரித்தார்கள். அதைக் கேட்டு அவரும் சிரித்தவாறு உயிர் பிரிந்தார்.

“நீங்களும் மகிழ்ந்து என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள்.” [பிலிப்பியர் 2:18]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *