வாய்மையே வெல்லும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
இணைய வெளியீடு: November 16, 2026
முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 244 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

கடவுளுக்கு நன்றி -”என்னை எப்படி கொண்டு போக வேண்டும் என்பது என்னை படைத்த கடவுளுக்கு தெரியும்; அந்த வகையில் நான் என் இறைவனுக்கு தினமும் நன்றி தெரிவித்துக் கொண்டு இருக்கிறேன்”.

இப்படியாக கண்ணன் தன் நினைவுகளை அசை போட்டுக்கொண்டு இருந்தான். 

இதற்கான காரணங்கள் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புலப்பட ஆரம்பித்தது. 

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” 

அய்யன் திருவள்ளுவரின் இறைத்தன்மை பற்றிய குரள் நினைவுக்கு வந்தது.

இதில் வள்ளுவர் ‘மெய்வருத்த’ என்று அருளிய வாக்கு அவனுக்கு பல அனுபவங்களை உள்வாங்கியது.

அவனுடைய அனுபவங்கள் அதற்கு சான்றாகவும் இருந்தது. 

புத்தகங்கள் பல படித்து, அறிவுரைகள் பல கேட்டு ,பலரின் அனுபவங்களை உள்வாங்கி தன் நிலையில் இருந்து வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சித்தான். 

இந்த முயற்சி அவனையே உள் முகமாக பார்க்கும் வேலையில் அவனுடைய சிந்தனை புற உலகம் சார்ந்தும் இயங்க தொடங்கியது.

அப்படியாக அவனுடைய அனுபவங்களை குறிப்புகளாக எழுதினான்….

1.நான் ஏன் பிறந்தேன்?  

தெரியாது ; ஒதுங்கி விட்டான்.

2.என் வாழ்விற்கு அர்த்தம் என்ன ? .

தேவையற்ற சிந்தனை;நிராகரித்தான்.

3.என் வளர்ப்பு என்னை எந்த அளவிற்கு 

மனிதனாக ஆக்கியது ?

உண்மை இருக்கிறது.

4.என் குடும்பம், நண்பர்கள்,   

 உறவினர்கள், சமூகம் .        

சமூகம் மறைக்கப்படுகிறது ; மற்றவர்கள் தங்கள். அடையாளங்களை

என் மீது சுமத்துகிறார்கள்.

5.எப்படி வாழ வேண்டும்?   

இதுதான் சூட்சமம்!

இந்த மனக்கணக்கு 

எனக்கு தெரியும்.

இந்த கணக்கு எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று ; அதிலிருந்து நான் செயல்பட விரும்புகிறேன்.

“டேய் மச்சான்! பார்த்து ரொம்ப நாளாச்சு”- இப்படியாக ஒரு குரல் அவனை அலைபேசியில் அழைத்தது.

மணி காலை ஒன்பது. எதிர்புறத்தில் கோவிந்தன் பேச்சை தொடர்ந்தான்….

“என்ன பேச்சு மூச்சியே காணோம்; கட்டிங்லே கரைந்து போய் கிடக்கிறாயா”?

அடிச்சது தலை வரை ஏறிடுச்சா !?

‘இல்ல மாப்ள!! தலைவரையில்

 ஏற்ல ; ஆனால் அன்று கோயம்பேடு பார்ல வாங்கிய அடி என்னை துரத்தி, துரத்தி அடித்தது. அதற்கு பயந்து மெட்ரோ பிடிச்சு ஆலந்தூர் வந்து வீடு சேர்ந்தபோ எனக்கு ஒண்ணுமே புரியல’. 

‘என்ன சொல்றதுன்னு தெரியல, சொன்னா வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு எனக்கு புரியல’. 

ஒரு வகையான பேங்க் பார்ட்டி நடக்கும்போது கலவரம் என்று சொல்லி சமாளிச்சுட்டேன். 

இனி இப்படியாக நான் சமாளித்து வாழ விரும்பவில்லை .

எனக்கு நல்ல வேலை இருக்கிறது; நல்ல வேலையா நான் வீட்ல கேட்டுக்கிட்டு வங்கியில இட மாற்றத்துக்கு எழுதிட்டேன்.

அப்போது தான் எனக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றும் சொன்னேன். 

அப்படியாகவே நம்பி வீட்டிலும் சம்மதித்தார்கள் .

நான் அடுத்த வாரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தலைநகர் டேராடூன் ஆபீஸராக நான் பார்க்கும் வங்கியில் ஜாயின் பண்ண போறேன். 

இன்னும் இரண்டு வருடங்களில் மேலாளர் பதவி கிடைத்துவிடும். 

அதன் பிறகு கல்யாணம் மற்ற காரியங்களை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன். 

இப்படியாக கண்ணன் சொன்னது கோவிந்தனுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது .

வேறு வழி இல்லாமல் அலைபேசியை துண்டித்தான். 

வாழ்க்கை போகப் போகத்தான் புரிகிறது; ஒரேடியாக புரிந்தால் அதில் சுவாரஸ்யம் இல்லை போல ..

எல்லா உறவுகளும் நண்பர்களும் பொய் என்று சொல்லவில்லை; தேவை இல்லை என்றும் சொல்லவில்லை; மாறாக எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் வேண்டும் .அந்த புரிதல் ஆனது நம்முடைய சுயத்தையும் மரியாதையையும் இழக்காமல் இருக்கவும் செய்ய வேண்டும். 

என்னுடைய சிந்தனை என்பது என்னுடைய தொடர்ந்த செயல்பாட்டில் தான் இருக்கிறது. 

அது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். அந்த இயக்கத்திற்கு தான் உண்மையான உயிர் இருக்கிறது. 

மற்றபடி நான் வாழ்வதற்கு அர்த்தம் வேண்டும். அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை என்பது இப்போது எனக்கு புரிகிறது. 

அந்த அர்த்தத்தை நான் தான் கண்டு உணர வேண்டுமே ஒழிய இதை நான் வேறு எங்கேயும் கேட்டுத் பெற முடியாது. 

ஆகவே தான் சொல்கிறேன் எனக்கும் தேவைகள் இருக்கிறது .ஆனால் அது என்னுடைய மனம் சார்ந்து சிறிய அளவில் இருக்கிறது. 

எனக்கும் ஆசைகள் உண்டு. ஆசைகளை நான் அளவிட்டு அதனை ஒரு ஆக்க சக்தியாக மாற்றி எனக்கும், என் குடும்பத்திற்கும் நான் சார்ந்த என் அமைப்பிற்கும் என்னால் ஆன காரியத்தை தொடர்ந்து கொடுத்து பெருகிக்கொண்டே இருப்பேன் .

இந்த பெருக்கம் சமூகத்தில் ஒரு சிறிய மாற்றத்தை யாவது ஏற்படுத்தும் எனில் அதுதான் நான் என் வாழ்க்கைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு. 

என் செயலினுடைய காரணம், காரியம் அறிந்து நான் எதையும் செய்யவில்லை. மாறாக எடுத்தோம் ,தொடுத்தோம், முடித்தோம் என்றும் நான் எந்த செயலிலும் ஈடுபடவும் மாட்டேன் .

எனக்கான போராட்டம் அறம் சார்ந்தது; அதில் உள்ள அர்த்தம் என்னை “மன வலிமை” கொண்ட மனிதனாக ஆக்கும்.

நாம் பிறக்கும் போதே இறக்கும் தேதி இருக்கிறது என்கிற ஒரு உணர்வு என் மெய்யியலை மேலும் மேன்மைப்படுத்துகிறது. 

முடிவாக இப்படி நான் சொல்கிறேன். 

பாலகுமாரன் -எழுச்சி சித்தர்- எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து இதை வாசித்து உணர்ந்தேன். 

அன்று அவர் சுருக்கெழுத்தாளராக 1970 களில் பணிபுரிந்த மெக்நீல் டிராக்டர் நிறுவனத்தின் பக்கத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்களின் உடைய புரட்சி ஏற்பட்டது. 

அதை பார்ப்பதற்கு அங்கு சென்ற பாலகுமாரன் தற்செயலாக அந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டார். 

மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த அக்கறையை அவ்வாறு செய்தது என்றாலும் அங்கு ஏற்பட்ட அடிதடி அவரை தலைதிறக்க ஓடிச் செய்தது. தன் அலுவலகத்திற்கு திரும்ப வந்ததும் தான் தன்னைப் பற்றிய ஒரு முழு புரிதல் அவருக்கு ஏற்பட்டது…

அதுவே அவரை எழுத்தாளராக மாற்றியது. 

அந்த கணம் அவருக்கு ஒரு ஞானோதயம் பிறந்தது. “நமக்கு களத்தில் இறங்கி அடிதடி நடத்தவோ, வன்முறையை எதிர்கொள்ளவோ உடல் வலிமையோ, துணிச்சலோ இல்லை; நாம் அதற்கு லாயக்கற்றவர்கள்” என்பதை அவர் உணர்ந்தார். ஆனால், அந்தப் போராட்டத்தின் வலியையும், சாமானிய மனிதர்களின் குமுறல்களையும் தன் பேனா மூலம் உலகிற்கு உரக்கச் சொல்ல முடியும் என்று நம்பினார்.

இது உண்மை என்றும் பிறகு நிரூபித்தார். எழுத்து உலகின் சித்தரானார்.

‘A Pen Is Mightier Than A Sword’.

அதேபோன்று ஜெயகாந்தனைப் பற்றியும் ஒரு குறிப்பை கண்ணன் கண்டான்…

ஒரு தீவிர வாசகன் J K எப்படியாவது பார்க்க வேண்டும் என்று தன்னுடைய இலக்கிய ஆர்வம் இல்லாத நண்பனுடன் வீட்டை விசாரித்து சென்றடைந்தான். 

இறுதியாக அவருடைய இலக்கியத்தை சிலாகித்து பேசி ” உங்க பேச்சை நேர்ல கேட்கிறப்பவே ஒரு புதுத் துணிச்சல் வருது ஐயா. இந்த ஆலோசனை கூட்டத்துல நாங்க கலந்துகிட்டதே எங்க பாக்கியம்” என்று கூறி தன் நண்பனை அறிமுகப்படுத்தினான். 

அப்போது ஜேகே பதில் எல்லோரையும் சிரிக்க சிந்திக்க வைத்தது. சரிப்பா… இவன் (வாசகர்) தான் என்னைப் படிச்சுட்டு, லூசு மாதிரி என் பின்னாடி சுத்திட்டு இருக்கான்னா… நீ நல்ல புத்திசாலிதானே! நீ ஏன் இவன் பின்னாடி சுத்திட்டு இருக்கே?”

தன்னைத் தேடி வரும் வாசகர்களைக் கொண்டாடுவதை விட, இலக்கிய வெறி இல்லாமல் இயல்பான உலகியல் அறிவோடு இருக்கும் ஒரு மனிதனை ஜெயகாந்தன் கையாண்ட விதம், அவரது அசாத்தியமான நகைச்சுவை உணர்வையும், யதார்த்தமான சிந்தனையையும் காட்டுவதாக அந்த வாசகர் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

முடிவாக வாழ்க்கை பற்றி அவருடைய அறிவுரை….

மனுஷன் தோற்கலாம், ஆனா தன் மனுஷத்தன்மையை விட்டுக்கொடுக்கக் கூடாது. தப்பு செய்யாத மனுஷன்னு யாருமே இல்லை. ஆனா, அந்தத் தப்பை உணர்ந்து, சுயத்தோட நிமிர்ந்து நிக்கிறதுதான் வாழ்க்கை. என் கதாபாத்திரங்கள் வேற எங்கிருந்தும் வரலை, இந்தச் சமூகத்துல இருந்துதான் வந்தாங்க. நீங்க துணிச்சலா இருந்தா, உங்க வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும்.

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். 

அது நான் என்ன வேலை செய்கிறோம் என்பதில்லை. 

அதை எப்படி செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. 

செய்கிற வேலையில் சிறிய வேலை பெரிய வேலை என்கிற பாகுபாடு நம் மனதை பாழாக்கும். 

முழு ஈடுபாட்டோடு செய்யக்கூடிய எல்லா வேலையும் இறைத்தன்மை உடையதாகும். 

பிறருக்காக வாழ்வதை விட நமக்காக நாம் வாழ்வோம். 

இயற்கையில் எறும்புகள் முதல் பறவைகள் வரை செயல்கள் மூலம் தன்னிறைவு கொள்கின்றன.

இந்த தன்னிறைவு மனிதனுக்கு மட்டும் ஏனோ கைகூடவில்லை. 

அப்படியா வாழ காந்தியம் நமக்கு வழி வகுக்கும். 

 

ராமன் செல்வராஜ் கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA, 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *