தெய்வசிகாமணி
கதையாசிரியர்: மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
இணைய வெளியீடு: November 16, 2026 முதற்பதிப்பு: 1924
பார்வைகள்: 36
(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகாரம் 19-21 | அதிகாரம் 22-24 | அதிகாரம் 25-27
இருபத்திரண்டாம் அதிகாரம்

பைத்தியரோகமுடையவனுக்குப் பிதுரார்ஜிதச் சொத்தில் பாகமில்லையென்ற இந்துலாவை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவன் பங்கை அபக்போட்டு விட்டிருப் போமானால் இத்தனை காலிகள் கூடிக்கொண்டு ஆதாளி போட முடியுமா? சாமிநாதன் எடுத்த காரியத்தை முடித்துப் போட்டானே இந்த வீணாதிவீணன் (பூமிநாதபிள்ளை) பேச்செல்லாம் ஒருகாசும் பெறாமற்போயிற்றே.விராலிமலைப் பறம்புக்குக் கொண்டு வர வேண்டுமென்று நல்லடித்திக்காரன் சொல்லுவானா? இவர் ஆளைச் சரி பார்த்துக் கொள்ளணுமாம் அசடு – இவனைப் போல திருநெல்வேலியிலிருந்து இராமநாதபுரம் வரை ஒரு குட்டிப்பயலுக்குச் செருப்புத் தூக்கிக் கொண்டு திரிந்த மடையனை நான் எங்குங் கண்டதில்லை. கண்ணுச்சாமி மூக்குச் சாமி எல்லாச்சாமியுங் கூடிக் காசைப் பறித்தான்களே தவிரக் காரியத்தி லொன்றும் பண்டமில்லை. இந்தக் கண்ணுச்சாமி யென்கிற சின்னச் சாதிப்பயல், நாகபட்டணம் சப்மாஜிஸ்திரேட்டாபீஸில் கொடுத்த வாக்குமூலத்திற்கு அவனைச் சித்திரவதை பண்ண வேணும். இருக்கட்டும் போக்கழிந்து போனதெல்லாம் போக நேற்றுத் திருவாரூரில் இரண்டாயிரத்தைக் கொட்டிக் கவிழ்க்க இழுத்து விட்டிட்டானே, நாம் செய்த வேலையெல்லாம் வியர்த்தமாய் விட்டதே என்று தங்கச்சாமி பிள்ளை தனக்குள்ளே பேசிக்கொண்டு, பூமிநாதபிள்ளையைப் பார்த்து அம்மான், அந்தச் செட்டி பெரும் பணக்காரனாமே அவன் ஒரு மகளையும் இவனுக்குத் தரப் போகிறானாம். ஏன் அந்தப் பிரஸ்தாபம் உங்களுக்கும் வந்திருக்குமே, கூட வந்திருக்கிற பொடியன் வாஸ்தவத்தில் பாரிஸ்டர் தானா, என்ன ஆகாச வலைவீசி விட்டான் சாமிநாதன் பார்த்தீர்களா? இனி எந்த வகையிலே நாம் தப்பிக்கிறது என்று தன்மாமனாரோடு கவலைப்பட்டுப்பேசினார். புத்தூர்ப் பிள்ளை என் புத்தி ஒன்றிலும் ஓடவில்லை யென்று பதிற் சொல்லி விட்டு இடது காற்பெரு விரல் நகத்தை வலக்கையாற் கிள்ளிக்கொண் டுட்கார்ந்திருந்தார்.
அந்தச் சமயம் ஒரு சிறு துணி மூட்டையைக் கையிற்கோத் பிடித்துக் கொண்டு வேற்றூர் மனிதன் ஒருவன் வீட்டுக்குட் புகுந்தான்.
தங்கச்சாமிபிள்ளை- எந்தவூர்?
வேற்றூரான் – ஐயா நான் கும்பகோணம்.
தங் – இங்கே என்ன அலுவல்?
வே- தங்களைப் பார்க்கத்தான்.
தங் – நீர் பார்க்க வராவிட்டால் நமக்கு நித்திரை கூடவராதே?
வே- அப்படியுத்திரவாகலாமா?
தங் – பின்னை எப்படிக்காணும் உத்திரவாகவே வேணும்?
வே – தாங்கள் தானே மிராசுப்பிள்ளையவாள்?
தங்- மேலவீட்டுப் பயல்களில் எவனும் எதுவும் சொன்னானே
வே – நான் நேரே தங்கள் வீட்டுக்குத்தான் வருகிறேன்.
தங் – சரி, வெளியே போம். எனக்கு அவசரமான வேலை.
வே – நான் வந்த விஷயத்தைக் கொஞ்சம் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.
தங் – இப்போது சமையமில்லை போகலாம். வெளியே.
வே – எந்நேரந்தான் வரும்படி கட்டளையிடுகிறீர்கள்?
தங் – மணிக் கணக்குப்படி சொல்ல முடியாது.
வே – தயைசெய்து சொல்லத்தான் வேண்டும்.
தங்- நீ யென்ன சுத்த அவுரி மனுஷனா இருக்கிறாப் சமைய மில்லை யென்றால் வாலை மடக்கிக் கொண்டு போகிறதா சள் புள் என்று சத்தம் போடுகிறாயே.
பூமிகாதபிள்ளை – இவனாரு தோகைமலைக் காரனோ?
தங் – அவனுக்குங் கூட மனுஷக்குறிப்பு நல்லாத் தெரியும் இவனொரு லாட்ரிச் சாப்பாட்டுக் காரன்.
வே – வாலை மடக்கவா, நல்லதையா? நானா சள் புள்ளென்று சத்தமிடுகிறேன். கொஞ்சம் நாவை அடக்கிப் பேசுங்கள். நீங்கள் பணக்காரர்களா யிருந்தால் உங்கள் மட்டுக்குக் தான் எங்களுக்கு எட்டி வீசாது.
தங் – உனக்கு எட்டி வீசாதே என்ன காரியத்துக்குக் காத்துக் கொண்டிருக்கிறாய்? நீ புத்தி சொல்லி நான் பேசிப் பழகவா? அதிகப்ரசங்கி.
வே – நீங்கள் தான் வாய் வீணாகப் பேசுகிறீர்கள் ஒரு வார்த்தையில் நான் வந்த காரியத்தை முடித்துவிட்டுப் போகலாம்.
தங் – நீ யார் சர்வமுட்டாள்? என்ன ராஜகாரியம் பேசவந்திருக்கிறாய்?
வே – வாயைப்பதனம் பண்ணும் ராஜகாரியமாகத்தான் வந்திருக்கிறேன்.
தங் (கொஞ்சந் திகைத்து) என்ன விசேஷம்.
வே – விசேஷமா உமக்குப் பிடிவாரண்டு கொண்டு வந்திருக்கிறேன், வாரண்டில் கையெழுத்துப் போட முடியுமா முடியாதா?
பேச்சில்லை.
வே – என்ன ஒய் அங்கும் மிங்கும் பார்க்கிறீர் ஒட்டம் பிடிக்கவோ, அந்த நினைப்பை மறந்துவிடும். நான் யார் தெரியுமா, அமீன் மல்லாரி ராவ்.
பூ – ஏனையா அதிகப்பேச்சு வந்த வேலையைக் கிரமமாகப் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதானே.
மல்லாரி ராவ் – ஓய் பூமிநாதபிள்ளை உம்மையும் எனக்குத் தெரியும். தோகைமலை ஆசாமிகளுக்கு முதலாளி யென்று யார் காணும், முதலில் ஒழுங்கு தவறிப் பேசினது. வந்த காரியம் என்னவென்று ஒரு வார்த்தை கேட்டால் இவ்வளவு பிரமாதம் என் காணும் வருகிறது.
பூ – நீங்கள் கும்பகோண மென்று கபடமாச் சொல்லலாமா?
அ.ம – உண்மையாகக் கும்ப கோணந்தான் என் சொந்தவூர் பிழைக்க வந்திருக்கிற திருநெல்வேலியைச் சொல்லச் சொல்லுகிறீரா. எங்களப்பன் காணியோ, வாடகை வீடு.
பூ – அமீனாவென்று உள்ளதைச் சொன்னால் மோச மென்ன.
அ. ம – ஓய் பிள்ளே, அந்த – உடான் இங்கே செல்லாது. இந்த மனுஷனைத் தேடி எத்தனை தடவை காணும் அலைகிறது எங்கள் மேலதிகாரி எங்களுக்கு ஒத்தடங்குடுக்கிறானே நாங்கள் என்ன செய்வோம். பிடியும் வாரண்டை.
பூ – கொஞ்சம் பொறுங்கள் கோபத்தை ஆற்றிப் பேசுங்கள்.
அ.ம – உம்மிடத்தில் எனக்கென்ன கோபம் வேண்டியிருக்கிற து கையெழுத்தைப்போடும்.
தங் – அம்மான் கையெழுத்துப் போட்டு வாரண்டைப்பெற்றுக் கொள்ள வேண்டியது தானோ.
பூ – யோசித்துக்கொள்வோம்.
அ.ம – யோசித்துச் செய்யவா. நல்லது பூமிநாதக் கோர்ட்டார் உத்திரவு பண்ணி விட்டார்கள் யோசித்துக் கொண்டுட்கார்ந்திரும் நான் வருகிறேன்.
தங் – உட்காருங்களையா இப்ப என்ன அவசரம் வேறே யாருக்கும் வாரண்டு நிறைவேற்ற வேண்டியிருக்கிறதோ.
அ.ம – இல்லை, இல்லை இந்தப்பெரிய இழவுக்குத்தான் என்னைப் போட்டார்கள் நான் கோர்ட்டை விட்டே வெளியேற மாட்டேன். கையெழுத்துப் போடுகிறதானாற் போடவேணும், இல்லாவிட்டால் மேல வீட்டிற்குப் போய் அத்தாட்சி முடித்துக் கொண்டு போகிறேன்.
பூமி – பிள்ளையவாள் சொல்லுகிறபடி எழுதுங்கள், எதோ – தாம்பூல் –
அ.ம – ஒய் பூமிநாதபிள்ளை உம்முடைய தோகைமலைக் கெட்டிக்காரத்தனத்தை வேறிடத்திலே காட்டும் இங்கே நடவாது. அழுக்கு வேஷ்டிக்காரன் யாசகத்திற்குத் தான் வந்திருப்பானென்று நினைத்தீர்களே காணும்.
தங் – ஆகட்டும் வாரண்டுத் தொகைதான் எவ்வளவு பார்த்துச் சொல்லுங்கள்.
அ.ம – அப்படிக்கேளும் அது தான் சரியான் மாதிரி 13005-14-9 ஏப்ரல் முடிய.
தங்கச்சாமிபிள்ளை சுவரோடு சுவராய்ச்சாய்ந்து விட்டார். பூமிநாதபிள்ளை ஆகாயததைப் பார்க்கிறார். வாரண்டுக்காரன் மன்னியைப் பிடித்து நெறிக்கிறான். காமாக்ஷியம்மாள் கையை நெளிக்கிறாள். முன்னமே துர்ப்பலம் அதிலுங் கெர்ப்பினி என்பது போல, தெய்வசிகாமணி ஊர் வந்து சேர்ந்த பெருந்துக்கத்தில் ஆழ்ந்து கிடந்த இவர்களுக்கு இதுவுஞ் சேர்ந்து விட்டது என்ன செய்வார்கள் பாவம். தங்கச் சாமிபிள்ளை வீடு நரகமும், சோமசுந்தரம்பிள்ளை வீடு ஒரு சொர்க்கமு மாயிருக்கிறது.
தங்கச்சாமிபிள்ளை – இந்த மத்தியகால நஷ்டம் வக்கீலால் வந்தது.
பூமிநாதபிள்ளை – வைத்தியனிடத்திலும் வக்கீலிடத்திலும் உள் ளதைச் சொல்லவேண்டு மென்பதை நீங்கள் முழுதும் மறந்து விட்டுக் காரியம் பார்த்தீர்கள்.எல்லாங் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. எதிரியின் பலத்தை வக்கீலிடஞ் சொல்லியிருக்க வேண்டாமோ
தங் – அது போகட்டும் இந்த முதுகடிக்கு வகை யென்ன?
பூமி – என்னாலே ஒரு தம்படி கூடச் சேகரிக்க முடியாது பெரிய இடமென்று சம்பந்த பண்ணிவிட்டு நான் பட்டபாடு போதும்.”இட்டகுடியுங் கெட்டு ஏற்றகுடியும் கெட்ட தென்றும்” பழமொழியைப் பரீக்ஷிக்க வேறிடத்திற்குப் போக வேண்டாம். என் குடும்பக் காரியத்தைச் சொல்லப் போனால் வெட்கக்கேடு, வாங்கின ஆசாமிகள் எவனாவது இந்த ஒரு வருஷமாய் வட்டியாவது கொடுத்திருக்கிறானா? இதையெல்லாம் உங்களிடஞ் சொல்லி ஆவதென்ன, வில்லிமங்கலத்து வகைக்கு நீங்கள் வாங்கினதொகை, அகத்தியம் இச்சமையம் வேண்டியிருக்கி றது அதற்காகவே வேலைகளை யெல்லாம் போட்டுவிட்டு அவசரமாய்வந்தேன் நீங்கள், கோர்ட்டுச் செலவுக்கு வாங்கினதொகையிருக்கிறது அதுவுங் கைக்கணக்கின்பே ரில, அதுஎப்படியும் ஒரு கணக்காகிறது. இந்தப்பணத் துக்கு வெகுமுடை அவளவுதான் என்னாலே சொல்ல முடியும்.
தங்கச் – நான் கோர்ட்டாரிடம் நேரிலேபோய் 15-நாள் தவணை கேட்டு வாரண்டை நிறுத்தி வைக்கிறேன் அதற்குள் என்னுடைய எந்தப்பூஸ்தி தியையாவது எந்த விதமான பந்தகமும் பண்ணித் தொகை கொண்டு வந்து சேர்ப்பீர்களா? வீட்டைச்சுற்றிக் கக்ஷிக்காரர்கள் வலைக்கட்டாக நின்று கொண்டிருப்பதினாலே இந்த வாரண்டைச் சரி பண்ணியலுப்ப முடியாது அம்மான், பதினாலாநாட்பகல் முப்பதுக்குள் கோர்ட்டு வாசலுக்குப் பணம் வந்து சேரா விட்டால் என்னை நம்பவேண்டாம். சிறைச்சாலையிலிருந்து விட்டு இந்தச் சரீரத்தைச் சுமந்து கொண்டும் திரியலாமா? ஒரு திடஞ் சொல்லுங்கள் நான் கையெழுத்துப் போட.
அ. ம – அவர் திடஞ்சொல்லா விட்டால் கையெழுத்துப் போட மாட்டீரோ?
தங் – ராகுவேளையாயிருக்கிறது இன்னும் ஒரு நாழிகை பொறுங்கள் கையெழுத்துப் போட்டு விடுகிறேன்.
அ. ம – ஏது தெக்ஷணத்துக் கைவரிசையோ ராகுகாலமா, குளிக்காலமா? இன்றைக்குப் பூராவும், உம்முடைய பேருக்குப் படுபக்ஷியாயிருந்தால் என் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசமாட்டீரோ? எனக்கு நாழிகையாகிறது கையெழுத்தைப் போடும்.
தங் – அம்மான்! சொல்லுங்கள்.
பூ – என்னத்தைச் சொல்லட்டும், நூறா அம்பதா இருபத்தாறு பை ஒரே தேதியிற் கிளப்ப வேணுமே, எவ்வளவு பணக்காரனா யிருந்தாலும் முடியுமா? அதுவும் நகையா நாணயமா ஈடு செய்கிறோம்? ஒன்றுமில்லை. வெறும், மண்ணை நம்பி எவன் சல சலவென் கொட்டப் போகிறான். எதோ என்னாற் கூடியவரையும் பார்க்கிறேன்.
அ. ம – இந்தக்கதை யெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் எனக்கு நேரம் போகிறது, சீக்கிரம்.
தங் – சரி, கடவுளிருக்கிறார் வாரண்டெங்கே.
அ.ம. இதோ இந்த இடத்தில் கைநாட்டுச் செய்யுங்கள்.
இருபத்து மூன்றாம் அதிகாரம்
பாப்பையாபுரத்திற்கு வடமேற்கு மூலையில் ஒரு பர்லாங்கு தூரத்தில் செண்பகவல்லியம்மன் கோவிலிருக்கிறது. அதையொட்டினாற் போல வடகிழக்குத் திசையில் செண்பகாடவி, என்னும், ஒரு இளந்தோப்பு உளது, கோடைகாலத்து வெயிலிலடிப்பட்டு நடுப்பகலில் வந்து அத்தோப்புக்குள் நுழைந்தாலும் கொஞ்ச நேரத்திற்குள் குளிர்ச்சி பிறந்து நடுக்கத்தை யுண்டாக்கி விடும் படியான தட்ப முடையது. மாமரங்கள் செந்நிறத்த தளிரையீன்று பூவும் பிஞ்சும், காயும், பழமும் செறிந்து புதியமணவரைப் பெண் போற் குலுங்கி நிற்பதும் ஆஸ்திக்கு மிஞ்சின கடன் பட்டுத் தத்தளிக்கும் அறிவிலிகளைப் போல வாழைமரங்கள் தாங்க முடியாத குலையைச் சுமந்து நிற்பதும், இலக்கண வித்வான்களது மேலான வசனம் இளங்கல் விமாணாக்கர்களுக்குச் சேர்த்து வாசிக்கத் தெரியாமல் தேடுவாரற்றுக் கிட்ப்பது போல மகிழ விருக்ஷங்கள் நாரிற்றொடுக்க இசையாதமிகு வாசனையுள்ள மலர்களை மண்ணிற் சொரிந்து நிற்பதும், பேய் பிடித்த பெண்கள் தலை விரித்தாடுவது போல கொன்றைச் செடிகள் கரியகாய்களைத் தொங்கவிட்டு அசைந்தாடி நிற்பதும், தன்னைத் தேடி வந்த நேயர்களுக்கு வயிற்றுச் சோறும் போடாமல் வாய் விஸ்தாரம் பேசிக் கடத்தி விடும் பகல் வேஷக்காரனைப் போல, மணமற்ற பூவை மட்டும் புஷ்பித்துக் கொண்டு பாதிரித் தருக்கள் நிற்பதும், எந்த மதஸ்தர் எவ்வெப்பெயரிட்டு எவ்வாறு கருதி வழிபடினும் அவ்வம் மதஸ்தருக்கு அப்பெயரினராய் அவ்வவர் கருதியாங்கு வெளிப் பட்டருள் செய்யும் ஒருவராய எம் பரசிவப்பெருந்தகையார் போல பனைப்பாதபங்கள் தன்னையடைந்தோர் இச்சித்த பொருளை வேண்டியவாறுதவி நிற்பதும், அழகும் குணமும் இல்லாத ஒருவனிடத்தில் கல்வி யமைந்திருப்பது போல இலையற்ற முட்செறிந்த மாதுளஞ் செடிகள் கனிபழுத்து நிற்பதும், வீட்டுப் பொருளை யெல்லாம் விற்றுச்செலவு செய்து படிக்க வைத்த தாய் தந்தையரைக் காடிக்கஞ்சிக்குந் திண்டாடும்படி விட்டுவிட்டு வேறு மதத்திற் புகுந்து தமது வருமானப் பொருளை யெல்லாம் தம் புதிய மனையாட்டிகட்குச் சமர்ப்பித்து நிற்கும் புதிய நாகரீக வாலிபர்களைப் போல உச்சியிற்றாங்கிய இள்நீர்க் காய்களை ஒன்றிரண்டாக வேலிக்கு வெளியிலுதிர்த்துக் கொண்டு முடக்குத் தென்னமரங்கள் நிற்பதும். உலகத்தாரைப் போல உண்டுடுத்துத்திரியும் இல்லற ஞானிகளது நல்லொழுக்கத்தை அறிவாளிகள் அறிந்தடைவது போல வாசனையால், ஈயினங்கள் சென்று சேரும் கனிந்த பழவர்க் கங்ககளை வேரெல்லாம் அடக்கி அங்கொன்றிங் கொன்றாகப் பலாமரங்கள் நிற்பதும், கர்மவசத்தால் வறுமை வந்த காலத்துத் தம்பொருளை யெல்லா மிழந்தும் தமது பெருமைக்குக் குறைவின்றி நிற்கும் தீர்க்க புத்திமான்களைப் போல அரசமரங்கள் இலைகளை யுதிர்த்து கையில் நாலுகாசை விட்டுத் தம் பசுமை குன்றாது நிற்பதும், வைத்துக் கொண்டு சிக்கெனச் சீவனஞ் செய்யும் சிறு பணக்காரனைப் போல கமுக மரங்கள் மட்டான வளர்ச்சியோடு செழித்து நிற்பதும், நெடிய பூமண்டலத்தைத் தனக்குளடக்கி ராஜ்யநிர்வாகதிற்கு ஆங்காங்கு ராஜதந்திரிகளை நியமித்துக் குறுநிலமன்னர்களுக்குப் பயந்து வந்து அபயம் புகுவாரை ஆதரித்து உலகத்திற் றனக்கு மேற்பட்ட பெருமையுடையவர்கள் இல்லை யென்னும் படி வீற்றிருக்கும் சக்ரவர்த்திகளைப் போல பரந்த இடத்தை மறைத்து விரிந்த கிளைகள் தோறும் வீழுன்றிப் பலத்து, அணிதேர் புரவி ஆட்பெரும்படையொடு, வெயிலால் வருந்தி வரும் மன்னர்க்கிருக்க நிழல் கொடுத்துக் காப்பாற்றி விருக்ஷவர்க்கங்களிற்றனக்குப் பெரிய தொன்றில்லை யெனும்படி ஆல விருக்ஷங்கள் தழைத்தோங்கி நிற்பதும், இடையிடையே பல பூங்கொடிகள் நறுமணம் வீசும் புஷ்ப சாலங்களைச் சொரிந்து வண்டின மொய்க்கத் துவுண்டு நிற்பதும், காலைப் போஜனத்திற்குப் போகும் வேளையில் திண்ணைப் பள்ளிக்கூடத்துச் சிறுவர்கள் தம் பல்வேறுபாடங்களைக் கருத்தூன்றி யிரைந்து படிக்கும் தன்மை போல பல ஜாதிப்பறவைக் கூட்டங்கள் அவ்விருக்ஷங்களின் மீது கூச்சலிட்டுக் கொண்டு திரிவதும் பார்க்கப் பார்க்க மனோசரமாயிருக்கும், அத்தண்டலையில், தெய்வசிகாமணியும் கல்யாண சுந்தரமும் ஒரு நாள் மாலை நேரத்தில் உலாவிக் கொண்டு நின்றார்கள்.
தென் பக்கத்திலுள்ள செண்பகத்தடாகத்தில் ஊர்ஜனங் கள் தண்ணீர் எடுக்க வந்து போய்க் கொண்டிருந்தார்கள். கல்யாணசுந்தாம் அங்கொருகமுக மரத்திற் சாய்ந்து நின்று இங்கிலீஷ்விக் வான் ஷேக்ஸ்பியர் செய்த (Merchant of Venice) வெனிஸ் வாணிகன் என்னும் நாடகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். சோலையின் அழகைக் கவனித்துக் கொண்டே சற்று தூரஞ் சென்றான் தெய்வசிகாமணி, பேடையுஞ் சேவலுமான இரண்டு மாடப்புறாக்கள் குங் குங் கென்று சத்தமிட்டு சல்லாபிப்பதைக் கண்டு திகைத்து நின்றான். அக்கொஞ்ச நேரத்திற்குள் அவன் மனம் பற்பல உத்தியோகங்களிற் புகுந்து வேலை செய்து விட்டுக் கடைசியாய் மங்களாம்பாளிடம் போய் நிலையாக அமர்ந்து கொண்டது. தெய்வசிகாமணிக்கு ஏதோ ஒரு ஞாபகம் வந்து சட்டைப்பையிற் கையைப் போட்டு ஒரு கவர்க்கடிதத்தை யெடுத்தான். அது நாகபட்டினத்திலிருந்து அன்று தபாலுக்கு வந்ததாக மேல் முத்திரையால் வெளியாயிற்று கடிதத்தைப் பிரித்து வெகு நேரம் கவனித்துப் பார்த்தான் ஒன்றும் வெளியாகவில்லை. யாரெழுதின கடிதம் இது அமுர்தலிங்கமா, அவனுக்கு நம்மிடத்தில் ஒரு காரியமுமில்லையே? நம்முடைய சிநேகிதர்களில் யாராவது அனுப்பியிருக்கக் கூடுமோ? அப்படியானால் இவ்வளவு சமர்த்தாய் எழுதியிருக்க மாட்டார்களே. நாம் எழுதியிருந்த கடிதத்திற்குப் பதில் மங்களாம்பாள் எழுதியிருக்கக் கூடுமோ, எழுத்தும் அவள் கைப்பட்டது போலவே யிருக்கிறது. மறுபடியும் கவனித்துப் பார்க்கிறான். சரி சரி – மங்களம் போட்ட படுமுடிச்சுத்தான். ஏ மங்களம் என்னிடத் திற்றானா இந்த வேலைமானம், கண்டு பிடித்துவிட்டேன் உன் சாதுரியத்தை, என் அன்பே! “கவலையுறத்தக்க காரியமாயிருக்கிறது” என்றெழுதியிருக்கிறாயே, ஒரு கவலையும் வேண்டாம். “உடலாதிமூன்றையும் மனப்பூர்வமாக அர்ப்பணஞ் செய்திருக்கும் என்னை மீட்டுஞ் சம்மதங்கேட்டெழுகியது” என்ற வுன்வாக்கியம் என்னெஞ்சையீர்கிறது. “ஆருயிர்க்காதல” என்னும், உன் கடிதத்தின் முதல்வரி என்னை கொத்தடிமையாக் கொண்டிருக்கிறது. “தங்கணிருபம் வந்தது” என்று இலக்கணச் சந்தியும் இருபொருளும் பயப்பவரைந்த என் காதலீ! உன் கண் நிருபத்தை நேரிற் பார்க்க என்று கிட்டுமோ, “உத்திரவுப்படி நடந்தும் நடந்துகொண்டும் நடக்கவுமிருக்கும் விதேயை, மங்களாம்பாள்” என்றெழுதி யொப்பமீட்ட உன் செந்தாமரைக் கரத்திற்கு ஒரு முத்தம். எழுதிக் கேட்ட குற்றத்தை ஷமித்துக் கொள், என்ன புத்திசாலித்தனம் என்ன கூர்மை இப்படி யெல்லாம் எழுக எங்கே கற்றாய் உன் அறிவின் பலந்தான் என்னே, எழுத்துக்களைப் பொறுக்கிப் பொறுக்கி அர்ச்சனை பண்ணலாமே. நாளைக்கு இக்கடிதத்திற்குப் பதிலெழுதிவிடுத்தான் கல்யாணசுந்தரத்திற்கு இதைக் காட்டவேண்டும். அவனும் இதோ வந்து விட்டான். கல்யாணம், நேரமாகிறதே வீட்டுக்குப் போவோம் வா என்றான் தெய்வசிகாமணி.
இருபத்து நான்காம் அதிகாரம்
என்னவிதமாய் எதிர்வாதஞ் செய்கிறான்.
தங்கச்சாமிபிள்ளைக்குச் சம்மன் சேர்ப்பிக்கப் பட்டிருக்குமோ எப்படியோ என்றார் கவிராயர் ஜெகவீரபொம்முவிடம்.
ஜெகவீரபொம்மு – ஐயா சந்தேகமில்லாமற் சேர்ந்திருக்கும் ஜயிலிலிருக்கிறவருக்குச் சம்மன் சேர்வது கஷ்டமா.
கவிராயர்- அதென்ன அப்படிச் சொல்லுகிறாய் பூமிநாதபிள்ளை பணத்தைக் கட்டி மருமகனை மீட்டி விட்டாரென்று கேள்வியே?
ஜெ – அவரா-அப்பப்பா புளியம் பூவுக்கு ராசிவட்டி போடுவாரே
கவி – இருந்தாலும் மகள் புருஷன் அவமானப்படப் பணக்கார மாமன் பார்த்துக் கொண்டிருப்பாரா?
ஜெ – நான் ஒரு விதமாகக் கேள்விப்பட்டேன் மிராசுப்பிள்ளை சொத்துக்கள் முழுவதையும் கிரயமா யெழுதி வாங்கிக் கொண்டு பூமிநாதபிள்ளை பணஞ்செலுத்தப் போகிறாராம்.
கவி – அவன் எக்கேடுங் கெட்டு எருக்கு முளைச்சுப் போகிறான். நம்முடைய காரியத்தைப் பார்ப்போம். வில்லிமங்கலம் கொள்ளைக்கேஸ் முடிவாவாகி விட்டதாக வக்கில் கடிதம் எழுதியிருக்கிறார்.
தியாகராஜ செட்டியார் – ஐயா கேஸின் முடிவென்ன?
கவி – மூன்றெதிரிகளை எவ்வேழு வருஷமும் ஒன்பது பேரை நந்நான்கு வருஷமும் சிக்ஷித்தும் ஒருவனை விடுதலை செய்தும் இருக்கிறதாம்.
பாரிஸ்டர் கல்யாணசுந்தரம் – பேஷ் நல்ல நியாயாதிபதி
ஜெகவீர பொம்மு – விராலிமலை வேட்டை பலிதமாயிட்டுதோ?
தெய்வசிகாமணி – மதிப்பான சாக்ஷியம் தெளிவான வாக்கு மூலம் இந்தக்கேஸ் ஏன் தண்டனை யடையாது.
சோமசுந்தர – நம்முடைய கேஸுக்குத்தவனை யென்றைக்கு?
கவி – இன்னும் 13 நாள் இருக்கிறது.
சோ – என்னவிதமாக விண்ணப்பம் தாக்கல் பண்ணியிருக்கிறீர்கள்? .
கவி – பாப்பையாபுரம் வகையறா 12-கிராமங்களின் மிராசு என் பிதாவுக்குப் பூர்வீக சொந்தம் அவர் தனக்குதவியாகத் தன் சகோதரர் தங்கச்சாமிபிள்ளையைக் குபாஸ்தாவாக நியமித்திருந்தார். என் பிதா வியாதியாயிருந்த காலத்தில் அவரை வஞ்சித்து மிராசைத் தன் பேருக்குப் பதிவு செய்து கொண்டு அனுபவித்து வருகிறார். அவருடைய அக்ரம வியாபகம் சட்டப்படி செல்லத்தக்க தில்லை. ஆகையினாலே என் பிதாவின் மிராசை யென்வசம் ஒப்புவிக்கும்படி தீர்ப்புச் செய்யவேண்டு மென்று தெய்வசிகாமணியைக் கொண்டு மனுப் பண்ணியிருக்கிறது.
சோ – நல்லமாதிரிதான் அவனுக்கும் (தங்கச்சாமி) ஒரு கெடுதி வராமலும் நமக்கும் காரியசித்தியாகும் படியாயும் பார்த்துக் கொள்ளுங்கள் என் தம்பி மஹாபேதை இருக்கிற போக்கிரிகளாகக் கூடிக்கெடுத்து விட்டார்கள்.
கவி – அவர் விவரப்பத்திரிகை (ஸ்ட்டேட்டுமெண்டு) கொடுத் திருக்கிற மாதிரியிலேயே ஒரு தீங்கும் அவருக்கு வர மாட்டதே.
சோ – என்ன விதமாக எதிர்வாதஞ் செய்கிறான்?
கவி – வாதி தெய்வசிகாமணிபிள்ளை என் தமையனாருடைய மகனல்ல? என் விரோதிகளான சாமிநாதக் கவிராயர் நெல்லையப்பபிள்ளை யென்ற இருவரும் சித்தஸ்வாதீன மில்லாதிருக்கிற என் தமையனாரைக் கைவசப்படுத்திக் கொண்டு, 16-17-வருஷங்களுக்கு முன், திருச்செந்தூர்த் திருவிழாக் கூட்டத்திற் றிருடர்களாற் சொல்லப் பட்டுப் போன தெய்வசிகாமணியை இன்னமும் உயி ரோடிருக்கிறானென்று நம்பும்படி செய்து, இன்னவூர் இன்னஜாதி இன்னவன் மகனென்றுந் தெரியாத இந்த வாதியை முன்னிட்டுக் கொண்டு என் பரம்பனரப்பாத் தியதையை மோசஞ் செய்யக்கருதி. இந்தப்பொய்யான வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது மிராசை மோசடி யாக நான் அபகரித்துக் கொள்ளவில்லை. யாவத்ஜீவப ரியந்தம் கவர்னமெண்டு வேலைக்கு லாயக்கில்லாதவ ரென்று நீக்கிவிடப்பட்ட என் தமையனாருக்குப் பதி லாக துரைத்தனத்தாரால் நியமிக்கப்பட்டு 16- வருஷம் நிராடங்கமாய் வேலைபார்த்து வருகிறேன். வாதியாற் சொல்லுகிற அக்ரமப் பிரவேசம் மறுக்கப்படுகிறது. என்பதே அவர்கக்ஷி.
சோ – அட சண்டாளா எனக்கா சித்தஸ்வாதீனமில்லை, என்னை வேலை க்குப் யோகமில்லாதவனென்று நீக்கியா விட்டார் கள். இந்தக் கெடுமதி உனக்கெப்படி வந்தது. ஐயோ, பெண்வழிப் பட்ட பேதாய்!
கவி – ஒன்றொன்றாச் சொல்லவா ஒருமிக்கச் சொல்லவா இந்தக் கடிதம் தாசில்தாருக்கு நீங்களெழுதினது தானா பாருங் கள் தெய்வசிகாமணி) ஒரு கடித்ததைக் கொடுக்கிறான்.
சோ – (வாசித்துப் பார்த்துவிட்டு) இதென்ன ஆகாசக்கோட் அட தெய்வமே, என் கையெழுத்தும் கீழேபோட் டிருக்கிறானே! தாசில்தார் எனக்குக் கடிதமெழுதியி ருப்பதாக இந்த லட்டரால் வெளியாகிறதே அப்படிப் பட்ட ஒரு காகிதமும் என் கைக்குக் கிட்டவில்லையே, பெருமோசம்! பெருமோசம்!
கவி – அது அப்படியிருக்கட்டும் இந்தக்கடிதத்தைப் பாருங் கள் (தெய்வசிகாமணி ஒச்சன் கடிதத்தைக் கொடுக்கிறான்.)
சோ- (படித்துக் கொண்டே) அடே பரமசாதகா, கொலைகாரப்பாவி, புலையா, நீசா, பாவ புண்ணியந் தெரியாதபதரே, பெற்ற பிள்ளையைக் கொலை செய்யச் சொல்லிக் கடிதம் எழுத உனக்குக் கையும் வந்ததா, சீ, கடைகெட்ட கழுதை, என் முகத்தில் என்றைக்கும் விழிக்கமாட்டாய் உன் பிறவித்தொந்தம் இன்றோ டொழிந்தது போய் அரு நரகஞ்சேரு ‘கவிராயரைப் பார்த்து’ ஐயா, இந்தச்சண்டாளன் பிரஸ்தாபம் ஒன்றையும் என்காதிற் போட வேண்டாம். சிவ, சிவ. மேல் மேல் நடக்க வேண்டிய வேலைகளை ஒழுங்காகப் பாருங்கள்.
கவி – எல்லாஞ் சரியாய்த்தான் நடந்து வருகிறது தாங்களும் கோர்ட்டுக்கு வரவேண்டியதாய் நேரும் போலிருக்கிறதே.
சோம- இன்றியமையாதென்றேற் பட்டால் வருகிறேன்,
பாப்பையாபுரத்திலுள்ள சோமசுந்தரம்பிள்ளையின் பந்துக் கள் ஒவ்வொருவர் வீட்டிலும் தெய்வசிகாமணி முதலியவர்களுக்கு விருந்து நடந்து கொண்டு வருகிறது.மாசிலாமணிக்கு, ராஜோ பசாரம் நடக்கிறது, அவன் பேரில் ஊரிலுள்ள சகலருக்கும் அத் யந்த பிரியம் அவனிருக்கிற விடத்தில் எப்போதும் பத்துப்பேர் க்கொண்டு தெய்வசிகாமணியின் இலக்ஷு +மிமால் கதையைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டே யிருப்பார்கள். வழக்குத் தவணையும் நெருங்கிவிட்டது உபயக்ஷியிலும் சாக்ஷி ஜாப்தாக் கொடுத்து விட்டார்கள்.
வாதிபக்கத்திற்குப் பாப்பையாபுரம் புரோஹிதம் சங்சர நாராயணஐயர்,தாண்டவராயமுதலியார், சுவிராஜ சாமிநாதபிள்ளை சீரங்கஞ் செட்டியார், முத்துரெகுநாதபிள்ளை, ஜெகவீரபொம்மு நாயக்கர், அழகுமுத்து ராமலிங்கதுரைச்சிங்கத்தேவர், சடாக்ஷரக் கோனார், சூர கோவிந்தரெட்டியார், புகழ்கொண்ட நாமக்கவண்டர், சீனியப்பநாடார், சேதுராமலிங்க பண்டாரம், விருத்தாசல ஆசாரி, குடும்பன் வீரன், வெட்டியான் சித்திரன், திருநெல்வேலி தாசில் நெல்லையப்ப பிள்ளை, மாசிலாமணி, நாகபட்டினம் தியாகரா ஐசெட்டியார், என்ற 18-சாக்ஷிகளும் பிரதிவாதி பக்கத்தில் புத் தூர்ப்பூமிநாதபிள்ளை, திருச்செந்தூர் அம்மணிஐயர், மணிமங்கலம் கருப்பனம்பலம்,உசிலம்பட்டிச் சோணையனம்பலம், என 4-சாக்ஷி களும் ஏற்படுத்தப்பட்டிருந்தார்கள், விசாரணைத்தேதியன்று பகல் 10 – மணிக்குமுன்னமேயே இருக்ஷிக்காரர்களும் கோர்ட்டு வாச லில்வந்து கூடியிருந்தார்கள். வாதிக்கு பாரிஸ்டர் கல்யாண சுந் தரமும், பிரதிவாதிக்கு பாரிஸ்டர் மாட்டின் துரையும் ஆஜரானார் கள். சரியாய் 11மணிக்குத் திருநெல்வேலி ஜில்லாப் பிரதமஜட்ஜ் வந்து சிம்மாசனத்தின் மீதமர்ந்து கேஸுவிசாரணைக்குத்துவக்கி னார். பிரசித்தமான ஒரு பெரியமனுஷன் சம்பந்தப்பட்ட மட்டில் ஒரு அற்பக்கேஸாயிருந்தாலும் பெருங்கூட்டங்கூடி வேடிக்கை பார்ப்பது நாட்டின் ஸ்வபாவம் சோமசுந்தரம் பிள்ளையோ தெக்ஷ ணத்திற் கீர்த்திபெற்ற குடும்பஸ்தர்களில் ஒருவர், அவருக்குத் திருநெல்வேலியிலும் அதைச்சேர்ந்த நாட்டுப் புறங்களிலும் நெ ருங்கிய பந்துக்களும் நேசரும் பலருண்டு. இந்தவழக்கின் பிரஸ்தா பம் எட்டினவுடன் அவ்வுறவினர்பலர் சோமசுந்தரம் பிள்ளைக்குச் சார்பாகவந்து கூடினார்கள். மற்றக்கக்ஷிக்காரர்களுஞ் சேர்ந்து பெ ருங்கூட்டமாயிருந்தது, முதலில் தெய்வசிகாமணிபிள்ளை விசாரிக்கப் பட்டார், அவர் தன்னுடையபிரியாதைச் சொல்லிமுடிக்கவும் பாரில் டர் மாட்டின் துரை கிராஸ் (குறுக்குக்கேள்வி) கேட்டார்.
உம்முடைய சொந்தவூர் எது?
தெய் – பாபபையா! புரம்,
பா.மா. இப்போது எதில் வசிக்கிறீர்?
தெய் – பாப்பையாபுரத்திலேதான்.
ப.மா. கொஞ்சக் காலத்திற்கு முந்தி?
தெய் – மணிமங்கலம் நாகபட்டினம் இவைகளில்,
பா. மா.
நல்லது, தற்சமயம் எதிலிருக்கிறi?
தெய் – திருநெல்வேலியில்,
பா.மா – தாசில் நெல்லைபப்பபிள்ளைதானே உம்முக டைய பிதா?
தெய்- ஆம் போஷகபிதா.
பா.மா. உம்முடைய சொந்தப்பிதாவின் பெயரென்ன?
தெய் – சோமசுந்தரம் பிள்ளை,
பா.மா. – அவர்தான் உமதுபிதாவென்று எவ்வளவு காலமாகத் தெரியும்?
தெய்- சிலகாலமாகத்தான் தெரியும்,
பா.மா. நீர் சொல்லுகிற சிலகாலத்திற்கு முந்தியெல்லாம் நெல்லையப்ப பிள்ளையைத்தானே பிதாவாக நினைத்திருந்தீர்.
தெய் – ஆம் இப்போதும் பிதாவாகவே நான் நினைத்திருக்கிறேன் 2-2 1/2-வயதிலிருந்து கடந்த 4-5-வஷங்களுக்கு முன்வரையும் தாசில்தாரைப் பிதாவாக நினைத்து அவருடைய வீட்டில் வசித்து வந்ததாக வாதியே ஒப்புக்கொள்கிற விஷயத்தைப் பாரிஸ்டர் திருப்பித் திருப்பிக் கேட்பதினால் இந்தக் கேஸுக்கு யாதொரு பயனுமுண்டாகி விடாதென்றும் சோமசுந்தரம்பிள்ளைக்கு வாதி சொந்த மகனல்ல வென்று ரூபிக்கும் விதமான கேள்விகளே கேட்கப்பட வேண்டுமென்றும், கோர்ட்டின் காலத்தை வீணாக செலவிடக் கூடாதென்றும் பாரிஸ்டர் மாட்டின்துரை கோர்ட்டாரால் எச்சரிக்கப்பட்டார். மறுபடியும்,
பா.மா. பிறந்தது முதல் 15-16-வயது வரை எவ்வகையிலுந் தெரியாதிருந்த சோமசுந்தரம்பிள்ளைமை இப்போது தகப்பனாரென்று எந்த ஆதரவு பற்றிச் சொல்லுகிறா?
தெய் – கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் 1-முதல் 5-வசை ரிக் கார்டுகளாலும், என் பெற்றோர்களாலும், தெரிந்து சொல்லுகிறேன்.
பின்பு சோமசுந்தரம்பிள்ளை விசாரிக்கப்பட்டார்,
பா.மா. திருச்செந்தூர் சிவப்பிரகாசக்குருக்களுக்கும் உங்களுக்கும் சிநேகந்தானே?
சோ- ஆம்
பா.மா. இதோநான் காட்டுகிற இந்தக்கடிதம் உங்களுக்குக் குருக்கள் எழுதியதுதானே?
சோ – இதைநான் பார்த்ததே கிடையாது.
பா.மா. மேல்விலாசத்தில் உங்கள் பேர் எழுதியிருக்கிறதா?
சோ – ஆம்.
பா.மா. ஒருவேளை தங்கள் தம்பி கடிதத்தையுடைத்துப் பார்த்துத் தங்களுக்கு அதிலெழுதியிருக்கிற விவரத்தைச் சொல்லியிருக்கவுங் கூடுமல்லவா?
சோ- எப்படியோ ஞாபகமில்லை
பா. மா. இந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்?
சோ – எழுத்துக்கள் மிகச்சிறியவைகளாயிருக்கிற படியால் மூக்குக்கண்ணாடி யில்லாமற் படிக்க முடியாது (கோர்ட்டார் அனுமதியின் பேரில் ஒ ருகிளர்க்கு கடிகத்தைப்பின் வருமாறுபடித்தார்) ஐயா! இவடம் திருவிழாவுக்கு வந்திருக்கும் பொழுது காணாமற் போன தங்கள் குழந்தை தெய்வசிகாமணியைப் பற்றி கடந்த இரண்டு மாஸங்களாகப் பிரயாசைப்பட்டு விசாரித்தேன் இன்று தான் நம்பிக்கையுள்ள என் சிநேகிதன் ஒருவனால் உண்மை வெளிப்பட்டது. அதாவது விசாகத்திற்கு மறுநாளே குழந்தை கொலை செய்யப்பட்டுப் போய்விட்டது. கண்கலக்கப் படவேண்டாம். செந்தூர்க்கந்தன் றிருவருள் செய்வார் கடிதம் ரகஸ்யம்.
இங்ஙனம்.
சிவப்பிரகாசக் குருக்களையா,
திருச்செந்தூர்.
ஆயும் 5 உ
அக்ஷயளு
பா. மா. படிக்கக்கேட்டீர்களா?
சே – கேட்டேன் அவ்வளவும் சுத்தப்பொய் கடிதம் குருக்களையா எழுதியதல்ல,
பா.மா, அவரெழுத்து உங்களுக்குத் தெரியுமா?
சோ – எழுத்தும் எனக்குத்தெரியும் இந்தக்கடிதத்திற் சொல்லுகிற தேதிக்குப் பின்னிட்டுக் குறைந்தது 10- தடவையாவது அவர் என்னைக் கண்டிருப்பார், கண்டபோதெல்லாம் குழந்தையைக் குறித்து ஒன்றும் புலப்படவில்லையோ வென்று கேட்டார் குழந்தை கொலை செய்யப்பட்டுப் போனது அவருக்கு உண்மையாகத் தெரிந்தெழுதியிருந்தால் என்னிடம் இவ்வாறு விசாரித்திருக்கவே மாட்டார், ஆகையினாலே கடிதம் உண்மையுள்ளதல்ல வென்று உறுதியாகச்சொல்லுகிறேன்.
பாரிஸ்டர் கல்யாணசுந்தரம் – இந்தக்கடிதம் இற்றைக்கு 15-வருஷங்களுக்கு முன் எழுதியதாகப் பிரதிவாதியாலும் இதனடியிற் குறித்துள்ள தேதியாலும் தெளிவாகத் தெரிகிறது இந்தக் காகிதத்திலுள்ள நீரெழுத்தைக் கவனித்தால் இந்தப்பேப்பர் உண்டாகி 5-வருஷந்தான் ஆகிறது தயை செய்து கோர்ட்டாரவர்கள் பார்வையிடவேண்டும் (கோர்ட்டார் பார்க்கிறார்).
பா.க. இந்தக்கடிதத்தின் மேற்கவரிலுள்ள தபால்முத்திரைக ளும் வேறெதினாலேயோவட்டமிட்டிருக்கிறதாக விளங்குகிறதே யொழிய, அதில் தேதியாவது தபாலாபீஸின் பெயராவது துலங்கவே இல்லை மறுபடியும் கோர்ட்டார் கவனிக்கிறார் கோர்ட்டில் அக்கடிதம் தாக்கல் செய்து கொள்ளப்பட்டது.
பா.மா. வாதியை உங்கள் மகனென்று யார் மூலமாக அடையாளங் கண்டு பிடித்தீர்கள்?
சோ – என் மகனை நானே கண்டு கொண்டேன்.
பா. மா. மிராசுப்பாத்தியம் உங்களைவிட்டு 15-16-வருஷமாக நீங்கிப்போய் விட்டதோ?
சோ – என் பாத்தியம் என்னைவிட்டு இன்றைக்கும் நீங்கவில்லை,
பா.மா. வேலைபார்த்து வருகிறது யார்?
சோ – என் தம்பி.
பா. மா. எந்தப் பாத்தியதையின் பேரில் பார்க்கிறார்?
சோ – சகோதரனென்ற பாத்தியதையைக் கொண்டு குமாஸ்தா நிலைமையில்.
பா, மா, குழந்தை காணாமற்போன விஷயத்தைக்குமித்து வர்த்தமானப் பத்திரிக்கையிற் பிரசுரப்படுத்தியிருந்திர்ளே, அதற்குத் தன்வசம் பிள்ளை யிருப்பதாகத் தாசில்தார் உங்களுக்குப் பத்லெழுதினாரா?
சோ- ஆம் எழுதியிருக்கிறார்கள்
பின்பு கவிராஜ சாமிநாதபிள்ளை காணாமற்போன தெய் வசிகாமணியைப் பற்றி சோமசுந்தரம்பிள்ளையின் படுக்கையறைத் திண்ணையில் பிரதிவாதி,புத்தூர்ப்பூமிநாதபிள்ளை, காமாக்ஷியம்மாள் கணபதி இவர்கள் பேசிக்கொண்ட குறிப்பை வைத்துக வாதியைப் பலவூர்களிலுந்தேடி மணிமங்கலத்திற கண்டது முதல் பாப்பையாபுரம் வந்து சேர்ந்தது வரையுள்ள சரித்திரத்தைத் தெளிவாகச் சொல்லி யெழுதி வைத்ததுடன், தானும் தாசில்தாரும் ஒன்றாகக் கையெழுத்துப் போட்டு ஒரு லெட்டர் சோமசுந்தரம் பிள்ளைக்கு எழுதியதுண்டென்று C. அடையாளமிட்ட லட்டரை ஆதரித்துச்சொன்னார், மாசிலாமணி, தாசில்தார், தியாகராஜ செட்டியார் தங்களுக்குத் தெரிந்தவைகளைச் சொன்னார்கள். புரோ ஹிதம் சங்கரநாராயண ஐயர் 2 தடவை ஆயுஷ் ஒமம்பண்ணி வைத்த சோமசுந்தரம்பிள்ளையின் புத்திரனே இந்தவாதியென்று சொன்னார். மற்றச்சாக்ஷிகள் யாவரும் வாதிகையிலுள்ள எழுத் தினாலும் தேக அமைப்பு முகத்தோற்றம் நடைநொடி முதலியவை களாலும் சோமசுந்தரம்பிள்ளை மகனென்று நம்புவதாகத் திட்ட மாகச் சொன்னதுடன் ஒச்சன், காளியென்ற இரண்டு கள்ளர்கள் தங்களூருக்கு வந்திருந்ததையும் சொன்னார்கள். மறுதினம் தவணை தள்ளி வைக்கலாயிற்று.
தங்கச்சாமியை இரண்டுதகுதியான மனுஷியாள் ஜாமீன் பேரில் விடவேண்டுமென்று பாரிஸ்டர் கல்யாணசுந்தரம் கேட்டார் அவ்வாறே செய்யப்பட்டார்.
மறுநாள் கோர்ட்டுக்குத் தங்கச்சாமி பிள்ளை ஜாமீன்தார்களுடன் ஆஜரானர். சோமசுந்தரப்பிள்ளை முதலியோர் கோர்ட்டுக்கு முன்னிருக்கிற ஆலமரத்தின் நிழலில் சமக்காளம் விரித்துட்கார்ந்து கோர்ட்டார் வரவை யெதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாரிஸ்டர் கல்யாணசுந்தரம் இளஞ்சிங்கக்குட்டி போல கம்பீரப் பார்வையோ டுட்கார்ந்திருந்தார் கோர்ட்டார் வந்து 5 – நிமிஷத்திற்குள் பிரதிவாகி தங்கச்சாமி பிள்ளைபை விசாரிக்கத் தொடங்கினார். பாரிஸ்டர் மாட்டின் துரை சார்பில் தன்னுடைய விவரப்பத்திரிகைப்படி வாக்குமூலம் ஒப்பிவித்தார். வாதிவக்கில் கிராஸ் செய்யலானார்.
பா. க – வாதியைத் தெரியுமா?
தங் – தெரியாது.
பா. க – எப்போதுங் கண்டதில்லையோ?
தங் – இன்னு கோர்ட்டு வாசலிற் பார்த்ததைத்தவிர வேறெங் கும் கண்டதே இல்லை.
பா. க – உங்கள் தமையனார் மகன், திருடர்கள் களவாடிக்கொண் டு போகும்போது எத்தனை வயதுடைய வனாயிருந்தான்?
தங் – சுமார் 2- 2 1/2 வயஸூ .
பா. க – அப்போது கையில் “தெ” பச்சையிருந்ததா?
தங் – இருந்தது.
பா. க – வாதியின் கையிலுள்ள எழுத்து அதற்கொத்திருக்கிறதா, பார்த்துச் சொல்லுங்கள்?
தங் – (கையைப்பிடித்துப்பார்த்து) அந்த எழுத்தாயிருந்தாலும் இது சற்றுமங்கலாயும் சிறிதாயுமிருக்கிறது.
பா. க – ஒச்சனை உங்களுக்கு எவ்வளவுகாலமாகத் தெரியும்?
தங் – அந்தபெயடூர எனக்குப் புதிதாகத் தெரிகிறது அவனைக் கண்டதே இல்லை.
பா. க – இந்த ஜில்லாவுக்கு அந்தப்பெயர் புதியதுதான் இருக்கட்டும் (பல தஸ்தாவேஜுகளைக் காட்டி) இதிலுள்ள கையெழுத்துக்கள் தங்களுடையது தானே?
தங் – என்னுடைய கையொப்பங்களே.
பா.க – (ஒச்சன் கடிதத்தைக் காட்டி) இதிலுள்ள கையொப்பம் தங்களுடையதுதானா?
தங் – ஆம் என்னுடையதே.
பா.க – நன்றாப் பார்த்துச் சொல்லுங்கள்?
தங் – என் கையெழுத்தேதான் சந்தேகமில்லை.
பா.க – நல்லது அந்தக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது வாசியுங்கள்?
தங்கச்சாமி பிள்ளை கடிதத்தைப் பார்க்கிறார் தன்னையறியா மல் கைகால் உதறலெடுக்கிறது, சரீரமெங்கும் வேர்வைகொட்டுகிறது வாயில் நீர் வறண்டு போகிறது ஸ்தம்பித்து நிற்கிறார்.
பா. க – என்ன! எழுத்துத் தெரியவில்லையா மூக்குக்கண்ணாடி வேண்டுமோ?
தங் – இது எழுதி… நான்… உட…
பா.க – என்ன உழறுகிறீர்?
தங் – (கொஞ்சம் தைரியப்பட்டு) எனக்குப்படிக்கத் தெரிய வில்லை.
பா. க – கோர்ட்டாரவர்கள் தயைசெய்து இதைப்படித்துக்காட்ட உத்திரவு செய்யவேண்டும் (கோர்ட்டாரனுமதியின் பேரில் கிளார்க்கு படித்துக் காட்டினான்) “கணபதியால் உன்னிடம் ஒப்பிக்கும் உருப்படியைக் கொலைசெய்து விடு 500-தருகிறேன் தங்கச்சாமி பிள்ளை”
பா. க – நீங்கள் எழுதியதுதானே?
தங் – இல்லை.
கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது.
பா. க – கணபதியென்பவன் உங்கள் வீட்டுச் சமையற்காரன் தானே?
தங் – ஆம்.
பா. க – அவனை எதற்காகத் தூணிற் கட்டிவைத்துக் கொண்டு உம் தமையனாரடித்தார்?
தங் – குழந்தையின் கையில் பச்சை குத்தினதற்காக
பா. க – கண்ணுச்சாமிக்கும் உமக்கும் சிநேகிதமுண்டா?
தங் – இல்லை சாதாசணப்பழக்கந்தான்.
பா. க – வில்லிமங்கலம் கொள்ளைக்கேஸில் நீரும் ஒரு எதிரி தானே?
தங் – போலீஸ் இனிஸ்பெக்டர் பிரகாசம்பிள்ளைக்கும் எனக்கு முள்ள விரோத…
பா.க – கேட்கிறதற்கு மட்டும் பதிற் சொல்லும் நீர் எதிரியாஇல்லையா?
தங் – ஆமாம் போலீஸ்காரர் விரோதத்தினாற் சேர்த்துவிட்டார்கள்.
பா. க – அந்தக்கோர்ட்டுக்கு சாக்ஷி சொல்லவந்த இந்த வாதியைப் பார்த்திருக்கிறீரா?
தங் – பார்த்திருக்கிறேன்.
பா. க – எப்போதும் பார்த்திருப்பதில்லை யென்று கொஞ்ச நேரத்துக்கு முன்னமே சொல்லி இருக்கிறீரா?
தங் – ஞாபகம் இல்லை.
பா. க – சரி, இப்போது எதை உறுதியாகச் சொல்கிறீர்?
தங் – பார்த்திருக்கிறே னென்பது நிஜம்.
பா. க – பார்க்கவில்லை யென்றது பொய்தானே?
தங் – தவறிச்சொல்லிவிட்டேன் மன்னிக்கவேணும்,
பா. க – கோர்ட்டாரவர்களைப் பார்த்துச் சொல்லும். உங்களூர்ப் போஸ்டு மாஸ்டர் லீவிலே போனால் அவருக்குப் பதிலாக நீர்தானே வேலைபார்ப்பீர்
தங் – ஆம்.
பா.க. – இந்தப் போஸ்டாபீஸ் ரிக்கார்டில் முத்திரை போட்டி ருக்கிற தேதியில் நீர்தானே வேலை பார்த்திருக்கிறீர்?
தங் – என்னுடைய கையெழுத்தும் அதிலிருக்கிற படியால் நான்தான் பார்த்திருக்கிறேன்.
பா. க – இந்தக் கடிதத்தின் மேலே போட்டிருக்கு முத்திரை எந்தத்தேதியைக் காட்டுகிறது?
தங் – நான் வேலைபார்த்த தேதியைத்தான்.
பா. க – கோர்ட்டாரை நோக்கி சாமிநாதபிள்ளையும், தாசில்தாரும், சேர்ந்து வாதி மணிமங்கலத்தி லிருக்கிற விவரத்தைச் சோமசுந்தரம்பிள்ளைக்கு ஒரு லட்டர் மூலம் அறிவித்தார்கள், அதற்குப் பதில் சோமசுந்தரம்பிள்ளை எழுதியதாகப் பிரதிவாதியே போர்ஜரி செய்து தாசில்தாருக்கு அனுப்பப்பட்டது இக்கடிதம்; இதையும் தாக்கல் செய்து கொள்ளவேண்டும்.
அவ்வாறே தாக்கல் செய்து கொள்ளப்பட்டது.
கோர்ட்டு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட பிரதிவாதியின் முதலாவது சாக்ஷி புத்தூர்ப் பூமிநாதபிள்ளை வாதியின் முகத்தைப் பார்த்தவுடனே நடு நடுங்கித் தன் வஞ்சனைகள் ஒவ்வொன்றையும் எண்ணியெண்ணி முகங்கருகி நின்றார். இவரும் கருப் பனம்பலம் சோணையமூப்பன் இருவரும் விசாரிக்கப் பட்டார்கள். முதலாவது சாக்ஷி வாதி சோமசுந்தரம்பிள்ளை மகன் அல்லவென்றும் 2, 3 சாக்ஷிகள் வாதியை நெல்லையப்பபிள்ளையின் சொந்தப்பிள்ளையென்றும் சொன்னார்கள். பாரிஸ்டர் கல்யாணசுந்தர மவர்களின் கிராஸுக் கேள்வியில் முதலாவது சாக்ஷி வாதியைத்திருநெல்வேலியில் ஏமாற்றியதை ஒப்புக் கொள்ளும்படியான சந்தர்ப்பம் நேர்ந்து ஒற்றுக் கொண்டார்.2,3-பேர்கள் நெல்லையப்பபிள்ளை தாசில்தாராக இருக்கிற காலத்தில் அவர் கோர்ட்டில் திருட்டுக் குற்றத்திற்காக 2 தடவை தண்டனை அடைந்தவர்களாக மெய்ப்பிக்கப்பட்டார்கள், 4வது சாக்ஷி அம்மணி ஐயரை பிரதிவாதி பக்கத்திலேயே விசாரிக்க இஷ்டப்படாமல் நிறுத்திக் கொள்ளப்பட்டது. பின்பு வாதி பிரதிவாதி வக்கீல்கள் ஆர்க்யூமெண்டு பேசி முடித்தார்கள்.
கோர்ட்டார்.
வாதியால் A. B, C, D, E அடையாளமிடப்பட்ட 5-ரெக் கார்டுகளும் 18சாக்ஷிகளும் பிரதிவாதியால் ஒரு ரிக்கார்டும் 3 சாக்ஷிகளும் ஆஜர் செய்யப்பட்டன. ரிக்கார்டுகளைப் பார்வையிட்டும் சாக்ஷிகளை விசாரிக்கவும் பட்டன. வாதி வக்கீல் மிஸ்டர் பாரிஸ்டர் கல்யாணசுந்தர மவர்களுடையவும் பிரதிவாதி வக்கீல் மிஸ்டர் பாரிஸ் டர் மாட்டின் துரை யவர்களுடையவும் ஆர்க்கியூ மெண்டுகளையும் கேட்கப்பட்டன.
தங்கச்சாமிபிள்ளை அக்ரமமாய் அபகரித்துக் கொண்டிருக்கும் சோமசுந்தரம்பிள்ளையின் பாம்பரை மிராசை அவர் மகனான தன்னிடம் ஒப்பிக்க வேண்டு மென்பது வாதிக்க்ஷி.
தெய்வசிகாமணிபிள்ளை சோமசுந்தரம்பிள்ளையின் புத்திரனேயல்ல வென்பது பிரதிவாதியின் ஆக்ஷேபனை.
இந்தவழக்கிற் றெரிந்து கொள்ளவேண்டிய முக்யாம்ஸம் – வாதி சோமசுந்தரம்பிள்ளைக்குச் சொந்த மகன்தானா? என்பதே அதை மெய்ப்பிக்க வாதியால் 5 ரிக்கார்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன அவைகளில் A. வாதி காணாமற் போன காலத்தில் வாதியின் பிதாவால் பிரசித்தப்படுத்திய வர்த்தமானப் பத்திரிகை, B. வாதியைக் கொன்றுவிடும்படி பிரதிவாதியால் ஒச்சனுக் கெழுதிய லட்டர்.C.வாதியின் பிதாவால் தாசில்தாருக்கு எழுதியதாகப் பிரதிவாதியாற் சொல்லப்படுகிற கடிதம், D. நெல்லையப்பபிள்ளை அசாத்திய வியாதி யேற்பட்டிருந்த காலத்தில் வாதிக்கு எழுதி நேரிற்கொத்த கடிதம். இவைகளில் முதலிரண்டு ஆதரவுகளும் பிரதிவாதியால் நிராடங்கமாக ஒப்புக்கொள்ளப்படுகின்றன. மூன்றாவது ரிக்கார்டை ஒப்புக் கொள்ளும் விஷயத்தில் பிரதிவாதி ஆக்ஷேபனை சிறிது சொன்னாலும் அவரால் கற்பிக்கப்பட்ட தென்பதற்குப் போதுமான சாக்ஷியம் வாதி பக்கத்திலிருந்து கிடைத்திருக்கிறது. நாலாவது ரிக்கார்டு ஒரு கௌரவமான கவர்னமெண்டுத் தாசில்தாரால் எழுதப்பட்டு அவராலேயே ஒப்புக்கொள்ளவும் படுகிறது.
இவைகள் வாதியை சோமசுந்தரம் பிள்ளை மகன்என்று காட்டுவது மன்றிப் பிரதிவாதியைக் கொலைபாதகம், வஞ்சனை, மோசம்,பேராசைமுதலிய துர்க்குணங்கள் – நிறைந்தவரென்றும் வியக்தமாக அறிவிக்கின்றன. தவிரவும் வாதி பக்கத்திலுள்ள 18, சாக்ஷிகளும் மிகுந்த கண்ணியமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் சாக்ஷியத்தில் அவநம்பிக்கைப் படத்தக்க ஒரு வார்த்தையும் இருக்கிறதாக என் புத்திக்குப்படவில்லை. சாக்ஷிகள் வாய்மொழியில் வாதி சோமசுந்தரம்பிள்ளை மகனென்று தெரிகிறது. மேலும் இந்தப் பிரதிவாதி கண்ணுச்சாமி யென்பவனோடு ஒரு விதமான சிநேகமுடையவ னென்று விளங்குகிறது. இவன் இரண்டு தரம் தண்டனை யடைந்ததும் இந்தப் பிரதிவாதியின் தூண்டுதலினாலேயே என்பது வெளிப் படை, எப்படியெனில் E. அடையாள மிடப்பட்ட லட்டரை R.S. கம்பேனி ஏஜண்டு அனுப்பப்பட்ட தென்று நம்பும்படி இந்தப்பிரதி வாதியே எழுதி இராமநாதபுரம் சத்திரத்தில் வாதிக்கக் கொடுக்கப்பட்ட தென்பதை நான் நம்பமுடியாமலிருக்க ஏதுவில்லை, திருநெல்வேலியிலிருந்து இராமநாதபுரம் வரை வாதியை வஞ்சித்துக் கூட்டி வந்தவன் பிரதிவாதியின் முதலாவது சாக்ஷியே என்பது நிஸ்ஸந்தேகமாகத் துலங்குகிறது. இந்தப் பூமிநாதபிள்ளை பேரில் இது சம்பந்தமாக வேறே குற்றங்களும் ஆயத்தமாயிருக்கின்றன.
ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் போது இருக்கிற உற்சாகமும் முயற்சியும் அக்காரியம் முடிவுபெறும் வரையில் இருக்கிறதில்லை. இது மனிதஸ்வபாவம், எடுத்த காரியம் சிறிது சாதகமாகிக் கொண்டு வந்தாலொழிய மறுபடியும் அவ்விஷயத்தில் தலையிடுவது வெகு அபூர்வம். பால் குடிக்கும் பருவத்திலேயே வாதியை நசுக்கி விடவேண்டுமென்று எண்ணிய தீய நினைப்பை நாளைக்கும் மறந்து விடக் கூடியவனாக இல்லை இந்தப் பிரதிவாதி. இப்படிப்பட்டவனை மனுஷப்புலியென்று சொல்ல வேண்டும். இந்தியன் பீனல்கோட் “இந்தியா தேசத்தின் தண்டனைச்சட்டப் புஸ்தகத்திலுள்ள” எல்லாப் பிரிவுகளையும் இந்தப் பிரதிவாதி தொட்டுத் தொட்டுப் பார்த்திருக்கிறான்.
ஆகையினாலே வாதி கோரிக்கைப்படி மிராசை வாதிக்கு ஸ்வாதீனப்படுத்தி இருக்கிறேன் என்று தீர்ப்பெழுதிப் படித்தார் கோர்ட்டார், சில நாட் கழித்து தங்கச்சாமிபிள்ளையையும் பூமிநாத பிள்ளையையும் கிரிமினல் தரப்பில் விசாரிக்கப்பட்டது. நாகபட்டணம் மாஜிஸ்திரேட்டாபீஸில் கண்ணுச்சாமி கொடுத்த வாக்கு மூலம், வில்லிமங்கலம் கொள்ளைக் கேஸில் அப்ரூவ் சாக்ஷி சொன்ன வாக்குமூலம் இவைகளின் நகல்கள் தெய்வசிகாமணி பிள்ளை தாக்கல் செய்திருக்கிற B, அடையாளமிட்ட கடிதம் முதலிய ஆதரவுகளையும் அனுசரித்துப் பூமிதைபிள்ளை 10-வருஷமும் தங்கச்சாமிபிள்ளை தீவாந்தர சிக்ஷையும் விதிக்கப்பட்டார்கள், அவர்கள் பட்ட பிரபாசைக்கு இம்மட்டாவது வேண்டும். நெஞ்சாலும் நினைப்பரிய நிஷ்டூரக்காரப்பாவிகள் எக்கதியானாலென்ன, ஐயோ வென்று அனுதபிப்பார் ஒருவருமில்லை.
– தொடரும்…
– தெய்வசிகாமணி (ஒரு நவீனகம்), முதற் பதிப்பு: 1924, லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
காயமே இது பொய்யடா!
சிங்கை மா.இளங்கண்ணன்
November 16, 2026
வாசல் தேடி வந்த வசந்தம்
கல்பனா ராஜகோபால்
November 16, 2026
மிஸ்டர் எஸ்.கே.முத்து
நாஞ்சில்நாடன்
November 13, 2026